அபவாதம் நீக்கும் பிரம்மலிங்கேஸ்வரர்!

ஆலயம் கண்டேன்
சென்னிவீரம்பாளையம் செ.சு.சரவணகுமார்‘படைப்புத் தொழிலைப் புரிவதால், தானே உயர்ந்தவன்’ என்று

ஆணவம் கொண்டிருந்தார் பிரம்ம தேவன். பின்னர், அனைவரை விடவும்

உயர்ந்தவர் சிவபெருமானே என்பதை உணர்ந்த பிரம்மா, தாம் கொண்டிருந்த

சிவ அபவாதம் தீர, பல்வேறு திருத்தலங்களில் லிங்கப் பிரதிஷ்டை செது

வழிபாடு செயத் தொடங்கினார்.

ரம்மதேவர் வழிபட்ட சுயம்பு சிவலிங்கத் தலங்களுள் ஒன்று கொங்குவள பூந்துறை நாட்டில் அமைந்த முருங்கத்தொழுவு எனும் திருத்தலமாகும். சிவ வழிபாட்டுக்குப் பிறகு பிரம்ம தேவர் ஈசனை நோக்கி தியானித்தார். பிரம்மனின் தவத்துக்கு மனமிரங்கிய ஈசன், சிவ அபவாதத்தை

நீக்கி அருளியுள்ளார். சிவ அபவாதம் நீங்க பிரம்ம தேவனால் பூஜிக்கப்பட்டதால் இத்தல ஈசனுக்கு பிரம்மலிங்கேஸ்வரர் என்பது திருநாமம்.

இந்தக் கோயிலின் எதிரே அமைந்த பிரம்ம தீர்த்தக் குளத்தில், சென்னிமலையில் அருளும் முருகப் பெருமான் நீராடி ஈசனை தொழுததால் இவ்வூர், ‘முருகதொழுவு’ என வழங்கப்பெற்று, தற்போது அப்பெயர் மருவி முருங்கத்தொழுவு என அழைக்கப்படுகிறது.

தொன்மையான வரலாற்றுப் பெருமையுடைய இக்கோயில் கல்வெட்டில் கி.பி.1291ஆம் ஆண்டு சுந்தரபாண்டிய மன்னனால் ஆலயத் திருப்பணி செயப்பட்டதாகக் காணப்படுகிறது. பிரம்ம தேவனும், முருகப்பெருமானும் வழிபட்ட சிறப்பு வாந்த இந்தப் புண்ணியத் தலம் பிற்காலங்களில் பல்வேறு திருப்பணிகள் கண்டு ஆலயம் விரிவடைந்து இறைவனும் இறைவியும் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலித்து வருகின்றனர்.

மேற்கு நோக்கிய இவ்வாலயத்தைச் சுற்றி நான்கு பக்கமும் பெரிய மதில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. கருவறையில் இறைவன் பிரம்மலிங்கேஸ்வரர் ருத்ராட்ச பந்தலுக்கு கீழ் சுயம்பு லிங்கத் திருமேனிய ராக மேற்கு நோக்கி எழுந்தருளி அருள்பாலிக்கிறார். தம்மை நாடி வரும் பக்தர்கள் அறிந்தும், அறியாமலும் தெரிந்தும், தெரியாமலும் செத பாவங்களையும், தவறுகளையும் உணர்ந்து வருந்தி வேண்டினால் அவர்களின் பாவத்தைப் போக்கி அருள்பாலிக்கிறார்.

அர்த்த மண்டபத்தில் சன்னிதி விநாயகர் வீற்றிருக் கிறார். மகா மண்டபத்தில் அதிகார நந்தி, நால்வர் பெருமக்கள் வீற்றிருக்கின்றனர். பிரதோஷ நாயகர்கள் உத்ஸவ மூர்த்தங்களாக அருள்பாலிக்கின்றனர். ஷோபன மண்டபத்தில் பிரதோஷ நந்தியெம் பெருமான் வீற்றிருக்க, அவருக்குப் பின்னே பலிபீடம் அமைந்துள்ளது. கோஷ்டத்தில் துர்கை, பிரம்மா, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, நர்த்தன கணபதி ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள். கருவறை

சன்னிதிக்கு இடப்புறம் உள்ள தனிச் சன்னிதியில் இறைவி வடிவுள்ளமங்கை மேற்கு நோக்கி அருள் பாலிக்கின்றார். பெண்கள் தங்கள் குறை நீங்க இந்த தேவியின் முன் நின்றால், அவர்களுக்கு குறைவில்லாது வரங்களை வாரி வழங்கும் அன்னையாக இவள் திகழ்கிறாள். வெள்ளிக்கிழமைகளில் இந்த தேவியை வழிபட்டால் வறுமை நீங்கி, சகல வளங்களும்,

செல்வங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

வெளிச்சுற்றில் கன்னிமூல கணபதி, சிவசூரியன், சந்திரன், வள்ளி-தெவானை சமேத முத்துக்குமார சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், நவக்கோள்கள், கால பைரவர், சனீஸ்வரர் ஆகியோர் தனித்தனி

சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர். ஈசான்ய மூலையில் பிரம்மத் தீர்த்தக் கிணறு உள்ளது. ஆலயத்தின் வெளியே தீபஸ்தம்பமும், பிரம்ம தீர்த்தக் குளத்தில் எழுப்பப்பட்டுள்ள அழகிய மண்டபத்தில் நந்தியெம்பெருமானும் வீற்றிருக்கிறார். தல விருட்சம் வில்வ மரம்.

இரண்டு கால பூஜை நடைபெறும் இக்கோயிலில் திங்கட்கிழமைதோறும் சோமவார பூஜை விமரிசை யாக நடைபெறுகிறது. இந்த வழிபாட்டில் தங்களின் ஜாதகத்தை சுவாமி பாதத்தில் வைத்து வணங்கி ஐந்து தீபம் ஏற்றி, வில்வம், தாமரை போன்றவற்றால் அர்ச்சனை செது பதினொரு முறை சிவபெருமானை வலம் வந்து வழிபட்டால் எண்ணிய காரியங்கள் விரைவில் நடந்தேறும் என்பது நம்பிக்கை. குறிப்பாக, தொழில் மற்றும் திருமணத்தடை விலகும். குழந்தை பாக்கியம் கைகூடும். வாழ்வில் ஏற்றம் ஏற்படும் என பலன் பெற்ற அன்பர்கள் கூறுகின்றனர். தவிர, சங்கட ஹரசதுர்த்தி நாளில் இக்கோயில் விநாயகப்பெரு மானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

பிரதோஷ நாளில் நந்தியெம்பெருமானுக்கும்,

ஸ்ரீ பிரம்மலிங்கேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்ற பின்னர், உத்ஸவ மூர்த்தங்களான சிவபெருமானும், பார்வதி தேவியும்

சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி திருக்கோயிலைச் சுற்றி மூன்று முறை உலா வந்து தரிசனம் தருகின்றனர்.

குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி விசேஷங்கள் இக்கோயிலில் சிறப்பாக நடைபெறுகிறது. மார்கழி திருவாதிரை, புரட்டாசி நவராத்திரி, ஆடி வெள்ளிக் கிழமைகள், ஆடி அமாவாசை, கார்த்திகை சோம வாரம், பங்குனி முதல் சோமவாரம், கடைசி சோம வாரம், சித்திரை வருடப் பிறப்பு, ஐப்பசி அன்னாபி ஷேகம் போன்ற விசேஷங்களும் சிறப்பாக அனுஷ் டிக்கப்படுகிறது. மஹா சிவராத்திரியன்று நான்கு கால பூஜை சிறப்பாக நடைபெறுகிறது. இந்த வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு இறையருள் பெறுகின்றனர். இவை தவிர, கிருத்திகை, ஷஷ்டி போன்ற முருகப்பெருமானுக்குரிய விரத தினங்களில் வள்ளி தெவானை சமேத முத்துக் குமார சுப்பிரமணியருக்கு விசேஷ பூஜைகள் நடை பெறுகின்றன.

சென்னிமலையில் அருளும் முருகப்பெருமான் இக்கோயில் பிரம்ம தீர்த்தக் குளத்தில் நீராடி பிரம்ம லிங்கேஸ்வரரை வழிபட்டதால் இத்தலத்தில் வள்ளி-தெவானை சமேதராக வீற்றிருக்கும் முத்துக்குமார சுப்பிரமணியர் திருமண பாக்கியம் தருவதிலும், குழந்தைப்பேறு நல்குவதிலும் மிகச்

சிறந்த வரப்ரசாதி என இக்கோயிலுக்கு வந்து வரம் பெற்ற பக்தர்கள் கூறுகின்றனர். தேபிறை அஷ்டமி நாளில் காலபைரவருக்கு யாகம் வளர்த்து அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்ற பின்னர், அவருக்கு வடமாலை சாற்றி தீபாராதனை காண்பிக்கப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் 20ஆம் தேதியிலிருந்து 24ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு மாலையில் சூரிய ஒளி இத்தல இறைவன் மீது விழுவது சிறப்பு. இக்கோயில் பிரம்ம தீர்த்தக் குளத்தில் முழுமையாக நீர் நிரம்பிய காலத்தில்

சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில், மலை, ராஜகோபுரம் ஆகியவை பிரதிபலிக்கும் அற்புதம் சிலிர்ப்பைத் தருவதாகவும், இந்நிகழ்வினை இப்பகுதி பக்தர்கள் சென்னிமலை முருகப்பெருமான் ஒளி வடிவில் பிரம்ம தீர்த்தக் குளத்தில் வந்திறங்கி சூட்சும மாக பிரம்மலிங்கேஸ்வரரை வழிபடுவதாகக் கூறுகின்றனர்.

கார்த்திகை தீப தினத்தன்று சென்னிமலைக் கோயிலில் ஏற்றப்படும் தீப ஒளி, பிரம்ம தீர்த்தக் குளத்தில் பிரதிபலிப்பதைக் காண்கையில், பிரம்ம லிங்கேஸ்வரரை முருகப்பெருமான் ஒளி வடிவில் தொழுவதாகவே இப்பகுதி மக்களால் சொல்லப்படு கிறது. பிரம்மதேவரும், முருப்பெருமானும் வழிபட்ட ஸ்ரீ பிரம்மலிங்கேஸ்வரரை வழிபட்டால் வாழ்வும் வளமும் மேன்மை பெறுவது நிச்சயம்.

அமைவிடம் : ஈரோடு மாவட்டம் சென்னிமலை - அரச்சலூர் செல்லும் வழியில் முருங்கத்தொழுவு பிரிவு என்ற பேருந்து நிறுத்தத்தில் இறங்கி 1 கி.மீ. தொலைவு நடந்தால் கோயிலை அடையலாம். சென்னிமலையிலி ருந்து ஆட்டோ, கால் டாக்ஸி வசதி உள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :