அவமானமே மூலதனம்!

படித்ததில் பிடித்தது!
ஸ்ரீஞானரமணன்மன்னர் நவாப்பின் அரசவை - தான் ஆரம்பிக்க இருக்கும் கல்லூரிக்கு நிதி கேட்டு வந்தார் ஒருவர். ஆனால் மன்னரோ, இந்துக்கள் என்றாலே கோபப் படுபவர். நிதிதானே வேண்டும்... இந்தா!" எனக் கூறி தனது காலில் அணிந்திருந்த ஷூவை கழற்றி வந்தவர் மேல் வீசி எறிந்தார்.

எதிர்பாராத இந்த நிகழ்வால் நிதி கேட்டு வந்தவர் அவமானத்தால் நிலைகுலைந் தாலும், அதை சமாளித்துக் கொண்டு, ‘ஒரு நல்ல விஷயத்துக் காகத்தானே அவமானப்படு கிறோம்’ என மனதைத் தேற்றிக் கொன்டு மன்னருக்கு நன்றி

சொல்லிவிட்டு ஷூவோடு வெளியே கிளம்பினார்.

மன்னருக்கு ஒன்றும் புரிய வில்லை. ‘என்ன இது...? நாம் அவரை அவமானப்படுத்த ஷூவை கொண்டு வீசினோம். ஆனால் அவரோ, நன்றி சொல்லிவிட்டுச் செல்கிறாரே’ என நினைத்தார்.

ஒருவரை எப்படி அவமானப் படுத்த முயன்றாலும், எதிரி லிருப்பவர் தனது நோக்கத்தில் உறுதியா இருந்தால் யாராலும் ஒன்றும் செய முடியாது. மேலும், தன் மேல் நம்பிக்கையில்லாத வர்கள்தான் அதை அவமானமா உணர்ந்து உணர்ச்சிவசப்படுவார்கள் என்பதை பின்னர்தான் உணர்ந்தார் மன்னர்.

சற்று நேரத்தில் அரண்மனைக்கு வெளியில் ஒரே சத்தம். கூச்சலைக் கேட்ட மன்னர், அமைச்சரை அழைத்து, என்ன அங்கே சத்தம்?" என்றார்.

அதற்கு அமைச்சர், மன்னா, சற்று நேரத்துக்கு முன் வந்தவரின் மேல், தாங்கள் வீசி எறிந்த ஷூவை அவர், ‘கல்லூரி கட்ட மன்னர் நன்கொடையாக அளித்த ஷூ’ என்று கூறி ஏலம் விடுகிறார்" என்றார்.

அதற்கு மன்னர், அந்த ஷூ எவ்வளவு தொகைக்கு ஏலம் போகிறது?" என்றார்.

பத்து நாணயத்துக்கு மேல் ஏலம் போகவில்லை மன்னா" என்றார் அமைச்சர்.

அதைக் கேட்ட மன்னர், ஐயயோ... அப்படியா? என்ன விலையானாலும் அந்த ஷூவை ஏலத்தில் எடுத்துவிடு" என்றார்.

அமைச்சரும் அந்த ஷூவை ஐம்பது லட்சம் கொடுத்து ஏலம் எடுத்தார்.

நிதி கேட்டு வந்தவர் மீன்டும் மன்னரிடம் வந்து, மன்னா, உங்களது ஷூ மூலம் பாதி கட்டடம் கட்ட நிதி கிடைத்து விட்டது. அடுத்த ஷூவை எப்போது என் மீது வீசுவீர்கள்" என்றார்.

அதைக்கேட்ட மன்னர், வந்தவர் சாமர்த்தியத்தை. சகிப்புத்தன்மையை எண்ணி, தாமே அந்தக் கல்லூரி கட்டுமான செலவு முழுவதையும் ஏற்றுக்கொள்வதாகக் கூறினார்.

அந்தக் கல்லூரிதான் தற்போதைய காசி பனாரஸ் இந்து பல்கலைக்கழகம். மன்னரிடம் நிதி கேட்டு அவமானப்பட்ட வர்தான் மதன் மோகன் மாளவியா. இவர்தான் பனாரஸ் பல்கலைக் கழகத்தை நிறுவியவர்.

அவமானத்தை யார் ஒருவர் அவமானமென உணர்கிறார்களோ, அவர்கள் ஒருநாளும் எதையும் வெற்றிகொள்ள முடியாது. எப்போதும் நோக்கம் நிறைவேறுவதுதான் முக்கியம். மான, அவமானங்கள் அல்ல. நாம் செவது நல்லதா இருக்க வேண்டும். ஒவ்வொரு அவமானமும் வெற்றிக்கான படிக்கட்டுக் கள் என எண்ணுவோம். எந்தவொரு வளர்ச்சியையும் நீண்ட நாட்கள் யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அவமானம் என்பது ஒருவித மூலதனமே!

- ஆர்.வி.ராமானுஜம்

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :