கற்பூரநாயகியே..!

நீயல்லால் தெய்வமில்லை! 16
ஆத்மார்த்திகோயிலுக்குச் செல்லும் வழிகள் அபாரமானவை. எந்த ஊரிலும் கோயில் வீதிகளில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள், அங்கே பணிபுரிபவர்கள்

கடுஞ்சொற்கள் பேசுவதைப் பெரும்பாலும் தவிர்ப்பார்கள். அப்படித்தான் பலருடைய வாழ்வின் பின்புலத் திரையாக ஆன்மிகம் விளங்குகிறது. காட்சிகள் மாறி மாறி வாழ்க்கை நகர்கிறது.

சிறுவயதில் அடிக்கடி திருப்பரங்குன்றத்துக்கு

சென்று வழிபடுவதற்கு வாத்தது. முருகன் மீது பக்தியைத் தாண்டிய பித்தே உண்டு என்பதுதான் நிஜம். கோயில் அமைந்திருக்கும் சன்னிதி தெருவின் சித்திரங்கள் இன்றைக்கும் மனதில் மாறாப் பசுமை யுடன் வீற்றிருக்கின்றன. அங்கே நடைபாதையில் வீட்டோடு இணைந்த ஒரு தின்பண்டக் கடை ஒன்று இருக்கும். கோயிலுக்குச் செல்லும்போது அங்கே காலணிகளை விட்டுவிட்டுப் போவோம். தரிசனம் முடிந்து திரும்பி வரும்போது குன்றத்தின் பேர் பெற்ற சில ஓட்டல்களில் சிற்றுண்டி அருந்திவிட்டுத் திரும்புவோம்.

அம்மாவிடம், நாம் எப்போதும் காலணிகளை விட்டுச் செல்கிற இந்தக் கடையில் ஒரு நாளாவது

சாப்பிடலாமா?" எனக் கேட்டேன்.

இது எனக்குத் தோன்றாமல் போயிற்றே" என்று அம்மா அன்றைக்கு அந்தக் கடை நடத்துகிற அம்மாளிடம் தோசை வாங்கித் தந்தார். அத்தனை

சுவையான பண்டத்தை அதுவரையில் நான் சாப் பிட்டதே இல்லை. அதன் பிறகு கேட்பானேன், எப்போது குன்றத்துக்குச் சென்றாலும் ரஞ்சிதம்மா வீட்டோடு இணைந்த கடையில் டிஃபன் சாப்பிடாமல் வந்ததே இல்லை என்கிற அளவுக்கு ஆயிற்று.

ரஞ்சிதம்மாவின் மகன் செந்தில் எனக்கு நண்பன் ஆனான். ஒரு முறை கோயிலுக்குச் சென்று திரும்பி யதும் மழை கொட்டத் தொடங்கியது. என்னையும் அம்மாவையும் தங்கள் வீட்டுக்குள் அழைத்து அமரச்செதார்கள். சின்னஞ்சிறிய வீடு என்றாலும் நேர்த்தியாகப் பராமரிக்கப்பட்டிருந்தது. நானும் செந்திலும் நிறையப் பேசினோம். ரஞ்சிதம்மா வீட்டில் டேப் ரிகார்டர் ஒன்றில் அம்மன் பாடல் ஒன்றைக் கேட்டேன். அந்தக் குரலும் பாடலும் மனத்தின் அடிவரை சென்று தன்னை இருத்திக் கொண்டது. அப்புறம் அந்தப் பாடலை எங்கே கேட்க நேர்ந்தாலும் அதனை முதன் முறை கேட்ட அந்தக் காட்சியின் ஞாபகத்தைத் தன்னோடு சேர்த்தே அழைத்து வந்து தருகிறது. சில பாடல்கள் வாழ்வெலாம் தளும்புகிற நினைவின் அலைகள். இந்தப் பாடல் அவற்றில் ஒன்று.

‘கற்பூரநாயகியே! கனகவல்லி

காளி மகமாயி கருமாரியம்மா...

பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா

பூவிருந்தவல்லி தெவானையம்மா...

(கற்பூரநாயகியே)

விற்கோல வேதவல்லி விசாலாட்சி

விழிகோல மாமதுரை மீனாட்சி...

சொற்கோவில் நானமைத்தேன் இங்கு தாயே

சுடராக வாழ்விப்பா எம்மை நீயே அம்மா...

(கற்பூரநாயகியே)

புவனம் முழுதும் ஆளுகின்ற புவனேஸ்வரி

புரமெரித்தோன் புறமிருக்கும் பரமேஸ்வரி

நவநவமா வடிவாகும் மஹேஸ்வரி

நம்பியவர் கைவிளக்கே சர்வேஸ்வரி

கவலைகளைத் தீர்த்துவிடும் காளீஸ்வரி

காரிருளின் தீச்சுடரே ஜோதீஸ்வரி

உவமானப் பரம்பொருளே ஜகதீஸ்வரி

உன்னடிமைச் சிறியவளை நீ ஆதரி...’

(கற்பூரநாயகியே)

பக்தி என்பதன் உள்ளர்த்தம் என்ன? இந்த உலகில் நம்பிக்கை, விசுவாசம், அர்ப்பணிப்பு, ஒப்புக்கொடுத் தல் பின்தொடர்வது, வழிபடுவது, ஆராதிப்பது,

சரணடைவது என பற்பல சொற்கள் உண்டு. அவை எல்லாம் மனிதர்களுக்குள் நிகழ்வது. மனிதர்களுக் கிடையே இத்தனை சொற்களைக் கொண்டு அர்த்தங் களாப் பெருக்கெடுக்கும் எல்லாவற்றையும் தொகுத் தெடுத்து ஒரே சொல்லாக்கினால், அதுதான் இறை வனுக்கான ஒற்றைச் சொல்லாக மாறுகிறது. அந்த ஒரு சொல்தான் பக்தி!

எல்.ஆர்.ஈஸ்வரி இந்தப் பாடலை மிக அழகாகப் பாடுகிறார். தன் உயிரை அகழ்ந்து ஆன்மாவின் துளிகளைக் குரலாக்கினால் ஒழிய, இத்தனைப் பாங்கு சாத்தியமாகாது. இசையும் வரிகளும் இருபுறம் பயணிக்கிற புரவிகளாக மாறுகின்றன. நடுவே தோன்றுகிற நாயகமாகிறது ஈஸ்வரியின் குரல். கண்களைக் கலங்கடித்துக் கரைய வைத்துவிடுகிறது.

‘நெற்றியில் உன் குங்குமமே நிறையவேண்டும்

அம்மா

நெஞ்சினில் உன் திருநாமம் வழியவேண்டும்

கற்றதெல்லாம் மென்மேலும் பெருகவேண்டும்

பாடும்

கவிதையிலே உன் நாமம் உருகவேண்டும்

சுற்றமெல்லாம் நீடூழி வாழவேண்டும்

ஜோதியிலே நீயிருந்து ஆளவேண்டும்

மற்றதெல்லாம் நானுனக்கு சொல்லலாமா

மடிமீது பிள்ளையென்னை தள்ளலாமா...’

(கற்பூரநாயகியே)

இசையின் அலாதித்தன்மை ஒன்று உண்டு. அது மற்ற எல்லா கலைகளிலிருந்தும் இசையைத் தனித்தும் உயர்த்தியும் வைத்துவிடுகிறது.

எந்தக் கலையை எடுத்துக்கொண்டாலும் அதை நிகழ்த்துபவர்க்கும் நுகர்பவருக்கும் இடையிலான வித்தியாசம் இருந்தே தீரும். ரசிப்பவர்கள் அண்ணாந்து பார்க்கும் எந்தக் கலையிலும் அவர்களால் ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டி ஒன்றுவது சாத்தியம் இல்லை. ஆனால், இசைக்கு மட்டும் என்ன சிறப்பு தெரியுமா?

இசையின் சகல நுட்பங்களையும் அறிந்த ஒருவர் படைக்கிற இசைக்கோர்வையை அல்லது பாடலை இசை என்றால் என்னவென்றே அறியாத இன்னொரு வரால் முழுவதுமாகப் பெற்றுக்கொள்ள முடியும். அதனை துளியும் விலக்கம் இன்றி ரசிக்க முடியும். மேதமையும் பேதமையும் கரைந்து கலப்பது இசையில் மட்டுமே சாத்தியம்.

‘காற்றாகி கனலாகி கடலாகினா

கயிறாகி உயிராகி உடலாகினா

நேற்றாகி இன்றாகி நாளாகினா

நிலமாகி பயிராகி உணவாகினா

தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினா

தொழுதாலும் அழுதாலும் வடிவாகினா

போற்றாத நாளில்லை தாயே உன்னை

பொருளோடும் புகழோடு வைப்பா என்னை...

(கற்பூரநாயகியே)

இந்தப் பாடலின் ஒவ்வொரு வரியும் மலைப் பயணத்தின் திருப்பங்களைப் போல் வந்து

போகின்றன. பயமும் ஆர்வமும் விருப்பும் பரபரப்பும் எனக் கலவையான உணர்வுகள் மேலிடக் கிளம்பிய தலத்திலிருந்து சென்றடைகிற இடம் வரையிலான அத்தனை நகர்தல்களையும் உடலைப் போலவே மனத்தாலும் உணர முடிவதல்லவா பயணத்தின்

சிறப்பு? அப்படியான பயணித்தலின் அதே நகர்தலைத் தான் இந்தப் பாடல் நிகழ்த்துகிறது.

‘அன்புக்கே நானடிமை ஆகவேண்டும் உன்

அறிவுக்கே என் காது கேட்கவேண்டும்...

...

என்னோடு நீ என்றும் வாழவேண்டும்

என்னோடு நீ என்றும் வாழவேண்டும்...’

(கற்பூரநாயகியே)

இவை வெறும் கோரிக்கைகளா, வாக்குமூலமா, எதிர்பார்த்தலா, விண்ணப்பமா...? எல்லாவற்றையும் தாண்டிய கரைதல். அவிநாசி மணி காகிதத்தில்

மை கொண்டு எழுதிய பாடல் அல்லவே அல்ல. இது தன் மனத் தோட்டத்தில் விளைந்த பக்தியின் மலர் களைப் பார்த்துப் பார்த்து எடுத்து அடுக்கிக் கட்டிக் கோர்த்த பாடற்பெருமாலை. அவினாசி மணியின் புகழை ஆயிரம் ஆண்டுகளுக்குக் கொண்டு செலுத்தக் கூடிய வல்லமை மிகுந்த பக்திமழை.

(மேலும் வலம் வரலாம்)

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :