ஆகாயம் என்பது என்ன?

வாழ்க வையகம்... வாழ்க வளமுடன்! 23
ராஜ்மோகன்சராசரி மனிதனின் வாழ்க்கையில் நிகழும் இயல்பான செயல்கள் மகான்களின் வாழ்க்கையிலும் நிகழ்கிறது. ஆனால், அவர்கள் இந்தத் தருணங்களை அணுகும் விதம் மிகவும் வித்தியாசமானது.

மனித ஆன்மாவும் விலங்கு ஆன்மாவும்!

கேள்வி : சுவாமிஜி! விலங்கினங்களுக்கு ஆன்மா உண்டா? உண்டு எனில், மனித ஆன்மாவில் இருந்து அது எங்ஙனம் வேறுபட்டது?

பதில் : சீவகாந்தக் கருமையம்தான் ஆன்மாவாகும். மரபு வழியாக வந்த பதிவுகள் அனைத்தும் ஒவ்வொரு சீவனின் கருமையத்திலும் அடங்கியுள்ளன.ஒவ்வொரு சீவனிலும் இனத்திலும் மரபுவழிப் பதிவு கள் வேறுபடும். இந்த வேறுபாடே மனிதனுக்கும் மற்ற உயிர்களுக்கும் ஆன்மாவில் உள்ள வேறுபாடு.

‘ஆன்மா’ என்பதும், கருமையம் என்பதும் ஒன்று தான். ஈரறிவிலிருந்து ஆறறிவு வரை உள்ள எல்லா உயிரினங்களுக்கும் அதன் கருமையமே ஆன்மா வாகும். ஓரறிவுள்ள தாவரங்களுக்கு மட்டும் பூ உண்டாகின்ற பகுதியில் காந்தச் சுழற்சி ஏற்பட்டு அதன் வித்திலேயே அதன் கருமையம் அமையும்.

பரிமாண வளர்ச்சியில் விலங்குகளிடமிருந்து வந்துள்ள மனிதன், தன்னுடைய ஆறாவது அறிவைக் கொண்டு தன்னுடைய ஆன்மாவை, அதாவது மறைபொருளான மனம், உயிர், சீவகாந்தம், மெ பொருள் என்கிற அளவில் அறிந்து வாழ்கின்ற அறிவை பெற்றுள்ளான். விலங்கினங்களோ, புலன் அளவிலேயே நிற்கின்றன. ஆனால், மனித ஆன்மாவோ ஒழுக்கத்தை ஏற்படுத்தி அதைக் கடைப்பிடித்தும் பிறகு அதைத் தாண்டியும் போகின்றது. விலங்குகளோ, ஒழுக்கத்தைக் கற்கவும் இல்லை. அதைத் தாண்டிச் செல்வதும் இல்லை.

திருமணம் ஆகி 32 வயதாகியும் குழந்தையில்லை என்ற வருத்தம் அன்னை லோகாம்பாளுக்கு இருந்தாலும், சுவாமிஜி மிகத் தெளிவாக தனது பிறவியின் நோக்கத்தை அறிந்தே இருந்தார்.

அன்னைக்கு பலவிதங்களில் இதனை அவர் எடுத்துக் கூறினாலும்

சுற்றமும் நட்பும் பேசும் ஏச்சுக்களால் அன்னைக்கு வருத்தம் தொடர்ந்து கொண்டேயிருந்தது. இதுகுறித்து சுவாமிஜி அவர்கள் இப்படி கூறுகிறார்...

எனது வாழ்வின் அமைப்பே விசித்திரமானது. ஒருபுறம் குடும்பத்தில் சிக்கல்கள் மாறி மாறி உருவாகிக்கொண்டே இருக்கும். இது இயல்பான மனிதனாக என்னை வருத்தமடையச் செயும். வருந்துவேன். ஆனாலும், இந்த வருத்தம் நீண்ட நேரம் தொடராது. இதற்கான காரணம் என்ன என்பதை குறித்து சிந்திப்பேன். சிந்தனையில் எழும் எண்ணங்களை ஆவு செவேன். இதன் மூலம் ஒரு தெளிவு உண்டாகும். அந்தத் தெளிவு ஒரு துணிவைத் தரும்.

இப்படி, குடும்பச் சூழல்கள் ஓடிக்கொண்டிருக்க, மற்றொருபுறம் எனது மனம் தத்துவ ஆராச்சியில் ஆர்வமுடன் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. அதுகுறித்தும் சிந்தனை தொடரும். ஒவ்வொரு நிகழ்ச்சியிலும், செயலிலும், விளைவிலும், இயற்கையின் ஒழுங்கமைப்பைக் கூர்ந்து ஆராந்து தெளிவு பெறுவேன். இத்துறையில் எனக்கு நாளுக்கு நாள் இன்பம் பெருகிக்கொண்டே வந்தது.

இப்படி, ஆன்ம ஆராச்சி என்னை அக அளவில் மிகப்பெரிய பேரானந்தப் பரவெளியில் ஆழ்த்திக் கொண்டிருந்தாலும் எனது வாழ்க்கைத்துணை எனக்கு இரண்டாவது திருமணம் செது வைப்பதில் ஆர்வமாக இருந்தார். இது எனக்கு மிகப்பெரிய

சிக்கலாக உருவெடுத்தது. எந்தவொரு சிக்கல் எழுந் தாலும் அதனை அப்படியே ஒதுக்கிவைத்துவிட்டால் அது காலத்தால் தீர்ந்துவிடும். அதனை பற்றிக்கொண்டு திரிந்தால் மட்டுமே அது நம்மைத் தொடரும். இது எனது புலனறிவுக்கு புரிந்ததால்நான் அதனை ஒதுக்கி வைத்துவிட்டு எனது மற்ற கடமைகளை ஆற்றி வந்தேன்" என்கிறார் மஹரிஷி.

இப்படி, ஒருபுறம் குடும்ப வாழ்க்கை சிக்கல்கள் அழுத்த, அதனை ஆன்மிக ஈடுபாட்டின் மீது சமன் படுத்தினார் மஹரிஷி. அவருக்குள் நிகழும் ஒவ்வொரு செயல் குறித்தும் ஒரு ஆராச்சி ஓடியது. பஞ்ச பூதங்கள் என்றால் என்ன? அதனைத் தாண்டி என்ன இருக்கிறது? பிரபஞ்சவெளி எப்படி இயங்குகிறது? இவை யாவற்றுக்குள்ளும் ஒரு தொடர்பு இருக்கிறது. அந்தத் தொடர்பு மனித குலத்துக்குள்ளும் தொடர் கிறது. அது எப்படி? என்பது குறித்து சிந்தித்து

வந்தார் மஹரிஷி.

இதனால் அவரின் அறிவு நாளுக்கு நாள் மென்மேலும் ஒளி பெற்று வந்தது. காணும் ஒவ்வொரு காட்சியிலும் பஞ்சபூதத்தின் கூட்டுக்

கலவையை கண்டார். முதலில் சில நாட்கள் வரை வெறும் ‘ஆகாயம்’ அதாவது, வானம் மட்டுமே தெரிந்தது. அதுவும் ஆரம்பத்தில் புரியாமல் இருந்தது. நாளடைவில் அதுபற்றியும் முழுமையான விளக்கம் கிடைத்து விட்டது. அணுவைப் பற்றிய சிந்தனை ஓடியது. பின்னர் அது குறித்தும் தெளிவு பெற்றார். ஆரம்பத்தில் சில கட்டுரைகளைப் படிக்கும்போது அணுத்துகள் பற்றி அறிந்துகொண்டார் மஹரிஷி. சில பல இயக்கத் துகள்கள் ஒன்று சேர்ந்து இயங்கும் ஒரு கூட்டமைப்பே அணு என்று உணர்ந்திருந்தார்.

விஞ்ஞானிகள் கூறும் அமைப்பில் சிந்தனை ஓடியது. ஒவ்வொரு அணுவிலும் கரு அணு (நியுட்ரான்) துணைக்கரு அணு (புரோட்டான்) மின்னணு (எலக்ட்ரான்) என்று ஒரு கூட்டு உள்ளதல்லவா? அவற்றைத் தனித்தனியாகப் பிரித்தால் என்ன ஆகும்? கூட்டு இயக்கம் ஒன்று உள்ளது எனில் அந்தக் கூட்டு அமைப்பு தனித்தனியாக இருக்கத்தானே வேண்டும்? இந்த மூன்று வகைத் துகள்களும் அவ்வமைப்பில் பெற்ற இயக்கச் சிறப் பால் பெற்ற பெயர்களே கருவணு, துணைக் கருவணு, மின்னணு என்பதெல்லாம் என்ற விளக்கம் கிடைத்தது. அத்தகைய தனித்த இயக்க மூலக்கூறு தான், ‘ஆகாசம்’ எனப்படும் நுண்ணியக்க நிலை என விளங்கிக் கொண்டேன்" என்கிறார் சுவாமிஜி.

இப்படி எழுந்த சிந்தனை ஆகாயம் பற்றிய ஒரு தெளிவைத் தந்தது அவருக்கும். அது கவியாகவும் மாறிற்று. மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே முறையான பள்ளிக் கல்வி பயின்ற அவர் பின்னர் பெற்றதெல்லாம் அவரின் சுய ஆர்வத்தின் மூலம் கற்றதே. அவர் சுமார் மூவாயிரம் கவிதைகளை எழுதி யுள்ளார். உள்ளத்தில் எழும் அகக் காட்சிகளை பரபர வென்று ஏதோ ஒரு இயற்கை உந்துதலுக்கு கட்டுப் பட்டதைப் போன்று எழுதுவார் சுவாமிஜி. இந்த இயற்கை புரிதலைப் பற்றி அவர் இயற்றிய கவி,

‘ஆதியெனும் மெப்பொருளோ கடல்

போலன்று:

அதிலெழுந்த இயக்கமெல்லாம் அலைகள்

போலாம்

பேதமுடன் அலைகளவை விரிந்தபோதும்

பிரியாது கடலை விட்டுக்கடல் ஒன்றேனும்

வாதமிடும் பலகோடி அலைகளூடும்

வழுவாது நிறைந்த நின்று முடிவில் தன்னுள்

நீதமோடு இணைத்துகொள் தன்மை போன்று

நிலையற்ற இயக்கமெலாம் முடியும் மெயில்’

சுவாமிஜியின் இந்த இயற்கைத் தத்துவம் பற்றிய கவிதை பிரபஞ்ச பரிமாணத்தின் தத்துவத்தினை மிகவும் எளிமையாக விளக்குகிறது. இன்று உலக மெங்கும் மதம், கடவுள், இனம், மொழி என பலவாறு மாறுபட்டு நின்றுகொண்டிருக்கிறோம். அதெல்லாம் மாயை. நாமெல்லாம் ஒன்றே என்பதற் கான ஆதாரமாக இந்தக் கவிதையின் உட்பொருள் பேசுகிறது. இதுவரை பரம ரகசியமாகப் பொத்தி பொத்தி வைத்து வந்த ஒன்றை பாமரர்களும் புரிந்து கொள்ளும் வகையில் வைக்கிறார்.

இப்படி அவரின் தத்துவ ஆராச்சி ஞானத்தை நோக்கிச் சென்றாலும் குடும்ப வாழ்க்கையின் இறுக்கம் மேலும் அதிகரித்தது. அதனை எப்படி சமாளித்தார் மஹரிஷி?

(குருத்துவம் தொடரும்)

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :