எம பயம் நீக்கும் நவ நரசிம்மர்!

ஆலய தரிசனம்
ஆர்.வி.பதி‘நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை’ என்பர். திருவண்ணாமலை மாவட்டம்,

சேத்துப்பட்டு வட்டத்தில் அமைந்த, ‘தட்சிண அஹோபிலம்’ என்று அழைக்கப்படும் ஆவணியாபுரத்தில் நரசிம்மர் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

திருவரங்கம், திருப்பதி, சோளிங்கர், காஞ்சிபுரம் மற்றும் ஆவணியாபுரம் ஆகிய ஐந்து நரசிம்ம மூர்த்திகளும் ஒருசேர இங்கு அருள்பாலிப்பதால் இத்தலம், பஞ்சகே்ஷத்ர தலமாக விளங்குகிறது. இத்தலம் தட்சிணா சிம்மாசலம், தட்சண சிம்மகிரி, பஞ்ச திருப்பதி, ஆவணி நாராயணபுரம் என்றும் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

பக்தன் பிரகலாதனுக்காக சிம்ம உருவம் தாங்கி இரண்யகசிபுவை வதம் செதார் நரசிம்மர். அந்த ஆக்ரோஷத் திருவுருவை பிருகு முனிவருக்கு மீண்டும் காட்டி அருளிய திருத்தலமே ஆவணியாபுரம். அப்போது தேவர்களும், முனிவர்களும் நரசிம்மரை வணங்கி, ‘அந்தத் திருக்கோலத்தை ஈரேழு உலகத்துக் கும் காட்டியருள வேண்டும்’ என வேண்டினர்.

அதற்கு நரசிம்மர், நீங்கள் ஒரு உத்தமமான இடத்தில், குளிர்ச்சி தரும் வெப்பாலை மரங்களா நின்று தவம் செது வாருங்கள். உங்கள் விருப்பத்தை உரிய நேரத்தில் நிறைவேற்றுகிறேன்" என்று கூறினார். இதன் பொருட்டு பூலோகம் வந்த தேவர்கள் இத்தலத்தில் வெப்பாலை மரங்களாகத் தோன்றி தவ மிருந்தனர். அங்கு வந்த பிருகு முனிவர் வெப்பாலை மரத்தடியில் தவமியற்றினார். ஒரு சுவாதி திருநாளில் தேவர்களுக்கும், பிருகு முனிவருக்கும் லட்சுமி நரசிம்மரா காட்சி தந்து அருளினார் பெருமாள்.

அப்போது பிருகு முனிவர், இத்தலத்தில் தாங்கள் நின்ற, கிடந்த கோலத்தையும் காட்டியருள வேண்டும்" என்று நரசிம்மரிடத்தில் விண்ணப்பிக்க, நரசிம்மர், மலை உச்சியில் திருப்பதி வெங்கடேசப் பெருமாளாகவும், காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாளாக வும், திருவரங்கம் ரங்கநாதப் பெருமாளாகவும்,

சோளிங்கர் யோக நரசிம்மராகவும் எழுந்தருளி காட்சி தந்தார். பெருமாளின் பஞ்ச திருக்கோலங்களை ஒருசேர தரிசித்த பிருகு முனிவர், அம்மூர்த்திகளை பூஜிக்க தீர்த்தம் ஒன்றினை அருளுமாறும் வேண்ட, ஸ்ரீ லஷ்மி நரசிம்மர் தனது வலக்கரத்தினால் ஒரு தீர்த்தத்தினை உண்டாக்கினார். பெருமாளின் திருக்கரத்திலிருந்து தோன்றிய அத்தீர்த்தம், ‘பாகூ நதி’ எனும் பெயர் பெற்றது.

ஏரண்ட முனிவர் இத்தலத்துக்கு வந்து நரசிம்மரை தரிசித்து அட்டமாசித்திகளைப் பெற்றார். நாரதரும், தும்புருவும் இத்தலத்து நரசிம்மரை வணங்கி, விரும்பிய உலகங்களுக்குச் செல்லும் பேற்றினை அடைந்தனர்.

தேவர்கள் இத்தலத்தில் வெப்பாலை மரங்களாக தவமியற்றியபோது ஒவ்வொரு பௌர்ணமி தினத் தன்றும் தங்களின் சுய வடிவம் பெற்று ஸ்ரீ லஷ்மி நரசிம்மரை பூஜித்து வந்தார்கள். இதன் காரணமாக ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் இத்தலத்தில்

சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும்,

சுவாதி நட்சத்திரத்தன்றும், சனிக்கிழமைகளிலும் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இத்தலத் தில் ஸ்ரீ லக்ஷ்மி தேவியும் நரசிம்மரைப் போன்றே

சிங்க முகத்தோடு காட்சியளிப்பது சிறப்பு. மேலும், கருடாழ்வாரும் நரசிம்மரின் முகத்தை பிரதிபலிக் கும்விதமான சிங்க முகத்தோடு காட்சியளிக்கிறார்.

‘ஆவணி’ என்றால் சிங்கம் என்று பொருளுண்டு. இத்தலத்தில் திருமகளும், கருடனும், மலையும்

சிங்க முகத்தில் காட்சியளிப்பதால் இத்தலத்துக்கு, ‘ஆவணி நாராயணபுரம்’ என்று பெயர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அதுவே மருவி, ஆவணியாபுரம் என்று அழைக்கப்படுகிறது.

இத்தலத்தில் மூலவர், உத்ஸவர், சிறிய உத்ஸவர், தெற்கு நோக்கிய ஐந்து நரசிம்மர் மற்றும் மலை மீது ஒரு நரசிம்மர் என நவ நரசிம்ம மூர்த்தங்கள் அமைந் துள்ளன. எனவே, இத்தலத்து பெருமாளை தரிசித் தால், அகோபிலத்துக்குச் சென்று தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மலையடிவாரத்தில் அலங்கார வளைவு வரவேற் கிறது. சிம்ம முகத்துடன் கூடிய திருமகளை மடியில் இருத்திய கோலத்தில் சுதைச் சிற்பமாகக் காட்சி தருகிறார் நரசிம்மர். அறுபத்தியிரண்டு படிகளைக் கடந்து ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஆலயத்தை தரிசிக்க வேண்டும். வழக்கமான இடத்தில் பலி பீடமும், கொடிமரமும் அமைந்திருக்கின்றன. கருவறையில் அபூர்வமாக சிம்ம முகத்தோடு கூடிய மகாலட்சுமி தாயாரை மடியில் இருத்திய கோலத்தில் காட்சி தருகிறார் லட்சுமி நரசிம்மர்.

நரசிம்ம அவதாரம் முடிந்த சமயத்தில் தட்சிணப் பகுதியில் அமைந்த இம்மலையில் கருவறையில் சுயம்பு மூர்த்தியாகத் தோன்றினார் நரசிம்மர். ஆதி காலத்தில் உக்கிர மூர்த்தியாக இருந்த ஸ்வாமியின் கோபத்தைத் தணித்து அவரை சாந்தப்படுத்த பிரம்மா இங்கு யாகம் ஒன்றை நடத்தினார். அப்போது எழுந்த யாகத் தீயினால் நரசிம்மரின் திருமுகம் பின்னமானதாக வும், இதனால் பதறிய திருமகள் நரசிம்ம ஸ்வாமியின் திருமுகத்தைத் தான் ஏற்று ஸ்வாமியின் மடியில் அமர்ந்து பக்தர்களுக்கு அருளத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.

மூலவர் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஸ்வாமிக்கு முன்பு இடது புறத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக ஒரு நரசிம்ம மூர்த்தியும் அவருக்கு முன்பாக சிம்ம முக பிராட்டியை மடியில் இருத்திய கோலத்தில் அமர்ந்த நிலையில் மற்றொரு நரசிம்மரும் அமைந்து அருள்கின்றனர். கருவறையில் ஒரே சமயத்தில் மூன்று நரசிம்ம ஸ்வாமிகளை தரிசிக்கக்கூடிய அற்புதத் தலம் இது ஒன்றே. இத்தலத்தில் இரண்டு கருடாழ்வார்கள் அமைந்துள்ளனர். ஒரு கருடாழ்வார் சிம்ம முகத்

துடனும், மற்றொரு கருடாழ்வார் வழக்கமான திருவடிவத்துடன் காட்சி தருகின்றனர்.

ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமியை வணங்கி, கருவறையை வலம் வரும்போது தனி சன்னிதியில் அலர்மேல் மங்கை தாயார் சேவை சாதிக்கிறார். இதற்கு அருகில் ஒரே சன்னிதியில் வீர நரசிம்மர், ஹிரண்ய நரசிம்மர், உக்கிர நரசிம்மர், பிரகலாத நரசிம்மர், மங்கள நரசிம்மர் என்று பஞ்ச நரசிம்ம மூர்த்திகள் தெற்கு நோக்கிக் காட்சி தருகின்றனர். பொதுவாக, தெற்கு திசை எம பயத்தைப் போக்கும் என்பார்கள். தெற்கு திசை நோக்கி அருளும் பஞ்ச நரசிம்மர்களையும்

தரிசித்தால் எம பயம் விலகும் என்பது ஐதீகம். அருகில் இரண்டு நாகர் சிலைகள் அமைந்துள்ளன. இவர்களை வழிபட்டால் ராகு-கேது தோஷம் விலகும்.

அடுத்து அமைந்துள்ள சன்னிதி யில் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் மற்றும்

சுதர்சன மூர்த்தி ஆகியோரின் உத்ஸவ மூர்த்திகளை தரிசிக்க லாம். கருவறை வெளிச்சுற்றில் ஆஞ்சனேயர் அமைந்துள்ளார். இவரை வசிஷ்ட மஹரிஷி பிரதிஷ்டை செததாகக் கூறப்படுகிறது. ஆலயத்தின் விமானம் புண்ணிய கோடி விமானமாகும்.

ஆவணியாபுரத்தின் நடுவில் அமைந்துள்ள ஒரு

சிறிய குன்றின் மத்தியில் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை வணங்கி, மேலும் 117 படிகளைக் கடந்தால் மலை உச்சியில் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் தனிச்சன்னிதி யில் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இச்சன்னிதிக்கு எதிரே உள்ள மலை சிம்ம முகத்தோடு அமைந்திருப்பது அபூர்வக் காட்சியாகும். இக்கோயிலின் வலதுபுறம் முறையே சோளிங்கர் யோக நரசிம்மர், திருவரங்கம் ரங்கநாதர், ரங்கநாயகி தாயார், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள், பெருந்தேவித் தாயார் என மூன்று சன்னிதிகள் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன.

இது திருமணம் மற்றும் குழந்தைப் பேறு அருளும் தலமாகவும், எம பயம் நீக்கும் தலமாகவும் திகழ் கிறது. இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் நல்ல விளைச்சல் வேண்டி நரசிம்மரிடம் பிரார்த்திக்கின்றனர். அதோடு, விளைச்சலின் ஒரு பகுதியை ஸ்வாமிக்கு நேர்த்திக்கடனாகவும் சமர்ப்பிக்கின்றனர். சனிக் கிழமைகளில் விரதம் இருந்து இத்தலத்தில் தங்கி நரசிம்மரிடம் பிரார்த்தித்துக்கொள்ள குழந்தைப் பேறு கிடைக்கிறது. குழந்தை பிறந்த பின்னர் துலாபாரம் மூலமாக நரசிம்மருக்கு நேர்த்திக்கடன் செலுத்தி மகிழ்கின்றனர். அதேபோல், நெ தீபமேற்றி

ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மரை வழிபடுவோர் தோஷங்கள் அனைத்தும் நீங்கப்பெற்று, பகைவர் பயம் இன்றி, வாழ்வில் ஏற்றம் பெறுகிறார்கள்.

தை மாத காணும் பொங்கல் விழா, மாசி மகம், பங்குனியில் உத்திரம், சித்திரை மாத பௌர்ணமியில் பத்து நாட்கள் பிரம்மோத்ஸவ விழா நடைபெறு கிறது. மேலும், சித்திரை சுவாதி அன்று நரசிம்மர் ஜயந்தி, ஆவணி மாதத்தில் ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி, புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை கருட சேவை, ஐப்பசி மாத தீபாவளியன்று திருமஞ்சனம், கார்த்திகை மாத தீபத் திருவிழா, மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி என இத்தலத்தில் விழாக்கள் நடை பெற்றவண்ணம் இருக்கின்றன.

திருப்பதியை போலவே, இத்தலத்திலும் சித்திரை மற்றும் புரட்டாசி மாதங்களில் பிரம் மோத்ஸவம் நடைபெறுவது

சிறப்பு. புரட்டாசி மாதம் வெங்கடேசப் பெருமாளுக்கு பிரம்மோத்ஸவமும் பங்குனி மாதத்தில் நரசிம்ம ஸ்வாமிக்கு பிரம்மோத்ஸவமும் கொண்டா டப்படுகிறது. ஆனி மாதம் ஒன்பதாம் நாள் தாயார் சிம்ம முகம் பெற்ற நாளாகும். இந்த நாளை அறுபது வருடங்களுக்கு ஒரு முறை,

‘சர்வதாரி ஸம்பத்ஸரம்’ என்று இத்தலத்தில் உத்ஸவமாகக் கொண்டாடப்படுகிறது.

வைகானச ஆகமப்படி தினமும் இருகால பூஜைகள் நடைபெறுகின்றன. வெப்பாலை தல விருட்சமாகவும் பாகூ நதி தல தீர்த்தமாகவும் விளங்குகிறது. வெப்பாலை மரங்கள் மிகுந்த குளிர்ச்சியுடையவை. இதனால், பௌர்ணமி தினங்களில் இம்மலையைச் சுற்றிக் கிரிவலம் வருவதால் மனமும் உடல் நலமும் வளம் பெறும் என்பது நம்பிக்கை.

அமைவிடம் : ஆரணி-வந்தவாசி சாலையில் ஆரணி யில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும் வந்தவாசியிலிருந்து 25 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

தரிசன நேரம் : காலை 6 முதல் 1 மணி வரை. மாலை 3 முதல் இரவு 7 மணி வரை. சனிக்கிழமைகளில் மட்டும் காலை 5 முதல் 1 மணி வரை. மாலை 3 முதல் இரவு 11 மணி வரை.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :