பித்ரு தோஷம் தீர்க்கும் மாசி மகம்!

கடலாடும் நன்னாள் (26.2.2021)
பா.கண்ணன்பிறவி எனும் ஆழ்கடலில் வீழ்ந்து மீளா துன்பச் சாகரத்தில் மூழ்கித் தத்தளிக்கும் ஆன்மா இறைவனது அருட்கடலாகிய இன்ப வெள்ளத்தில் அமிழ்ந்துத் திளைக்கச் செயும் நன்னாளே மாசி மகக் கடலாடு தினமாகும். இன்று தீர்த்தமாட இயலாதவர்கள் விரதமிருந்து கோயிலுக்குச் சென்றும் இந்நாளைக் கொண்டாடலாம்.

அலைகடல் ஓரம் அன்று அருள்பாலித்துக் கொண்டிருந்த மயிலை கபாலீஸ்வரரை ஏற்றியும், அவரது கும்ப மாத தீர்த்தவாரி விழாவைப் போற்றியும்

‘மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்

கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்

அடலானே றூரும் அடிக ளடிபரவி

நடமாடல் காணாதே போதியோ பூம்பாவா’

எனப் பாடுகின்றார் ஞானக்குழந்தை சம்பந்தர் பெருமான்.

சங்ககாலம் தொடங்கி இவ்விழா நடைபெற்றது தொடர்பான செதிகள் இலக்கியங்களிலும், செப்பேடுகளிலும், கல்வெட்டுகளிலும் காணப்படு கின்றன. சங்க நூல் மதுரைக் காஞ்சியின் ஆசிரியர் மாங்குடி மருதனார், ‘கழுநீர் கொண்ட எழுநாள் ஆந்தி ஆடுதுவன்று விழா’ என்று குறிப்பதன் மூலம் ஏழாம் நாள் இறுதியில் நீராடல் விழா அமைந்ததை அறிகிறோம். சங்ககாலப் பாண்டிய மன்னன் முதுகுடுமி (குடுமியான்மலை) பெருவழுதி பஃறுளி ஆற்றில் முந்நீர் விழா நடத்திய நெடியோன் என்று அழைக்கப்படுவதாகப் புலவர் நெட்டிமையார் ஒன்ப தாவது புறநானூற்றுப் பாடலில் எடுத்துரைக்கிறார்.

மகம் என்றவுடன் அதன் சிறப்பை விளக்குவது ‘மகத்தில் பிறந்தவர்கள் அரசாள்வார்கள்’ என்பது தான். மக நட்சத்திரத்தை, ‘பித்ருதேவதா நட்சத்திரம்’ என்றழைப்பார்கள். உலகத்தை இறைவன் உருவாக்கு வதற்கு முன்பு, பித்ரு தேவனை உருவாக்கிய பிறகே தேவர்களையும், மனிதர்களையும் மற்ற ஜீவராசிகளை யும் உருவாக்கினார் என்கிறது சாஸ்திரம். இதனால் முதல் மரியாதை மக நட்சத்திரத்துக்கு உரிமையுடைய பித்ரு தேவனுக்குத்தான்.

இந்த பித்ரு தேவதாதான் முன்னோர்களுக்கு ஆத்ம சாந்தியைத் தருகிறது. முன்னோர்கள் ஆத்ம

சாந்தியுடன் இருந்தால்தான் அவர்களுடைய வம்சம் சுபிட்சமாக இருக்கும். அதனால்தான் மாசி மகம் தினத்தன்று பித்ருக்களுக்கு பூஜை செய வேண்டும். அன்று புனித நதிகளில் நீராடுவதை, ‘பிதுர் மஹா ஸ்நானம்’ என்கிறது சாஸ்திரம். மகாபாரதத்தில் வரும் ஒரு சம்பவம் இதை உணர்த்துகிறது.

பாண்டவர்களின் தா குந்திதேவி, பஞ்சபூதங்களி னால் குழந்தை பெற்றாள் என்பதாலும், பிறந்த குழந்தையை (கர்ணன்) கைவிட்டு அநாதையாக்கி னாள் என்பதாலும் அவளுக்கு தோஷம் ஏற்படுகிறது. இந்த தோஷம் நீங்க, குந்தி தேவி நாரதரிடம்

யோசனை கேட்கிறாள். ‘ஏழு கடல்களில் நீராடினால் தோஷம் நீங்கும்’ என நாரதர் கூற. ‘நான் பெண், என்னால் எப்படி ஏழு கடல்களில் சென்று நீராட முடியும்? எனவே, வேறு ஏதாவது வழி கூற வேண்டும்’ என்கிறாள் குந்தி.

‘அப்படியானால் குடமூக்கு (கும்பகோணம்) அருகிலுள்ள நல்லூர் சென்று, கல்யாண சுந்தரேஸ் வரரை வழிபடு. அதற்குள் நான் வழி சொல்கிறேன்’ என்கிறார் நாரதர். குந்தி வழிபாடு செது வருவதற்குள் நல்லூர் தலத்திலுள்ள குளத்தில் ஏழு கடல்களின்

நீரையும் நாரதர் ஈசனிடம் கோரிக்கை வைத்து அவர் அருளால் குளத்தில் சேர்த்து விடுகிறார். மகம்

நட்சத்திரத்தில் பிறந்த குந்தி, தமது தோஷம் நீங்க நல்லூர் குளத்தில் நீராடுகிறாள்.

மகம் நட்சத்திரத்துக்குரியது நல்லூர் (தஞ்சை- குடந்தை-வலங்கைமான் வழி) ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில். ‘குடந்தை மகாமக குளத்துக்கு ஈடாக திருநல்லூரில் உள்ள சப்தசாகரம் என்னும் திருக்குளம் மிகவும் சிறப்புடையது’ என்று புராணங்கள் கூறுகின்றன. ஒவ்வொரு மாசி மகத்தன் றும் இந்தத் தீர்த்தம் சிறப்பு பெற்று விளங்குவதை, ‘மகம் பிறந்தது நல்லூரில், மகாமகம் பிறந்தது கும்பகோணத்தில்’ என்ற பழமொழியே உணர்த்தும்.

முன்னொரு காலத்தில் வருண பகவானை பீடித்த பிரம்மஹத்தி அவரை கடலுக்குள் ஒளித்து வைத்திருந் தது. வருண பகவான் சிவபெருமானை வேண்ட, அவரும் அவரைக் காப்பாற்றினார். அவரை விடுவித்த தினம் மாசி மகம் ஆகும். அப்போது வருணன், அன்றைய தினத்தில் புண்ணிய தீர்த்தமாடுவோரின் பாவங்களை நீக்கி அவர்களுக்கு வீடு பேற்றை அருளுமாறு சிவபெருமானிடம் வேண்டினான். அவரும் அவ்வாறே வரமளித்தார்.

மக நட்சத்திரம் பெருமாளுக்கும் உகந்த நாள். இப்படி மாசி மக தீர்த்தவாரிக்கு பெயர் பெற்ற 108 திவ்யதேசங்களில் ஒன்று கடல்மல்லை எனும் மகாபலிபுரம். இங்கு மாசி மகத்தன்று நீராடுவது ராமேஸ்வரத்தில் நீராடிய பலனைத் தரும். இதற்குக் காரணமானவர் புண்டரீக மகரிஷிதான். திருப்பாற் கடலில் பள்ளிகொண்டுள்ள பெருமாளின் காலடியில் அன்றலர்ந்த தாமரை மலரை வைத்து வணங்க வேண்டும் என்ற ஆவலில் இவர் மாமல்லை கடற்கரையில் மலரை வைத்துவிட்டு, பாற்கடலுக்கு வழி செய முயற்சித்தார். அதற்காக கடல்

நீரை தொடர்ந்து இரைத்துக் கொண்டிருந்தார். இவரின் தளரா முயற்சியையும் தாளாத பக்தியையும் கண்ட திருமால், ஒரு முதியவராக உருக்கொண்டு வந்து, எனக்கு பசியும் களைப்புமாக உள்ளது. ஊருக்குள் சென்று உணவு வாங்கி வாருங்கள். அதுவரை நானே கடல் நீரை உமக்காக இரைக்கிறேன்" என்று அனுப்பினார்.

முனிவரும் உணவு கொண்டு வந்து பார்த்தபோது கடல் உள்வாங்கி இருந்தது. முதியவரை காணோம். அப்போது ஒரு குரல் கேட்டது. முனிவர் அவ்விடத் தைப் பார்க்க, தான் வைத்த மலரை பாதங்களில் வைத்துக்கொண்டு திருமால் தரையில் பள்ளிகொண்டு ரிஷிக்கு காட்சி தந்தார். ஸ்ரீமன் நாராயணனே தன் திருக்கரத்தால் நீர் இறைத்த இந்த அர்த்தசேது கடலில் மாசி மகத்தன்று நீராடுவது பெரும் புண்ணியம்.

ஒரு மாசி மக நாளில் தட்சபிரஜாபதி தனது மனைவி வேதவல்லியுடன் யமுனை நதியில் நீராடிய போது, அங்கு தாமரை மலரில் சிவனாரின் அறிவுரைப்படி வலம்புரிச் சங்கு வடிவில் தவமியற்றிக் கொண்டிருந்த குழந்தை உமாவை கண்டெடுத்து, தாட்சாயணி என்று நாமகரணம் சூட்டினான் என்று கந்த புராணம் கூறுகின்றது. அதனால் இத்தினம் மிகவும் புண்ணிய நாளாகக் கருதப்பட்டு, பெண் களுக்குரிய விரத தினமாகவும் போற்றப்படுகிறது. பாதாளத்தில் இருந்த பூமி பிராட்டியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிக்கொணர்ந்த நாளும் மாசி மகத்தன்றுதான். இந்நாள் முருகப் பெருமானுக் கும் உகந்த நாளாகும். ‘அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பன்’ என்ற பெயரும் முருகனுக்கு உண்டு. இதற்குக் காரணமான தந்தை மகேசனுக்கு முருகன் மந்திர உபதேசம் செததும் ஒரு மாசி மக நாள்தான்.

ஸ்ரீரங்கத்துக்கு எவ்வளவு சிறப்புண்டோ அத்தனையும் கொண்ட சிறப்பான திவ்யதேசம் திருக் கோஷ்டியூர். இந்திரனே அளித்த தூமையான வெள்ளியால் ஆன பேரழகு கொண்ட உத்ஸவர் விக்ரஹம் என்பதால் இங்குள்ள பெருமாளுக்கு,

‘சௌமிய நாராயணர்’ என்பது திருநாமம்.

இப்பெருமாளை திருமங்கையாழ்வார் ‘வெள்ளியான் கரியான் மணிநிற வண்ணன்’ என்று போற்றுகிறார். புதனின் மகன் புரூரவஸ் சக்கரவர்த்தி இத்தலத்தைத் திருப்பணி செதபோது மகா மகம் பண்டிகை வந்தது. அப்போது பெருமாளை தரிசிக்க விரும்பினார் புரூரவஸ். அவருக்காக இத்தலத்தின்

ஈசான்ய (வடகிழக்கு) திசையில் உள்ள கிணற்றில் கங்கை பொங்க, அதன் மத்தியில் பெருமாள் காட்சி தந்தார். பிராகாரத்தில் உள்ள இந்தக் கிணறை, ‘மகாமகக் கிணறு’ என்றே அழைக்கிறார்கள். மகாமக விழாவின்போது, சௌமிய நாராயணர் கருடன் மீது எழுந்தருளி இங்கு தீர்த்தவாரி காண்கிறார். இக் கிணற்றில் மாசி மகத்தன்று நீராடி, பெருமாளை

சேவித்தால் நைமிசாரண்யத்தில் தவமியற்றிய பலனும், கங்கையில் நீராடி முக்தியடையக்கூடிய பலனும், புண்ணிய குருகே்ஷத்ர தலத்தில் கடுகளவு தங்கம் தானம் செத பலனும் கிட்டும் என்கிறது கோயில் தல புராணம்.

மாசி மகத்தன்று இங்கு தெப்பத் திருவிழா நடைபெறும். சௌமிய நாராயணரிடம் ஏதாவது வேண்டுகோள் வைத்து அது நிறைவேறியவர்கள், தெப்பக்குளத்தில் தீபமேற்றி வழிபடுவது சிறப்பாகும். அந்த விளக்கை புத்திர பாக்கியம், திருமணம் போன்ற கோரிக்கைகளை வைப்பவர்கள் வீட்டுக்கு எடுத்துச்

சென்று பூஜையறையில் வைத்துக்கொள்ளலாம். வேண்டுதல் நிறைவேறியதும், அடுத்த மாசி மகத்தன்று மீண்டும் அந்த விளக்குடன் மேலும் மூன்று அல்லது ஐந்து அகல் விளக்குகளை ஏற்றி வைப்பது மரபாகும். திருக்குளத்தில் பக்தர்கள் விளக் கிட்டு வழிபட்டால், குலம் தழைக்கும்; சிறக்கும்; செழிக்கும் என்பது ஐதீகம். அந்த விளக்குகளை எடுத்து வந்து, வீட்டில் தினமும் வழிபட்டு வந்தால், ஒளிமயமான எதிர்காலம் நிச்சயம் என்பது அசையாத நம்பிக்கை!

சிவன், பார்வதி, விஷ்ணு, முருகன் என்ற தெவங் களுக்கு உகந்த இந்த நன்னாள், தோஷம் தீர்க்கும் புண்ணிய நாளாகக் கருதப்படுகிறது. இந்நாளில் புண்ணியத் தலங்களை தரிசிப்பதும், புண்ணிய நதிகள், தீர்த்தங்களில் நீராடுவதும் பாவங்களைப் போக்கும் என்பது ஐதீகம். நதி, கடல், குளம், புண்ணிய தீர்த்தங்கள், கும்பகோணம், ராமேஸ்வரம் போன்ற இடங்களில் தர்ப்பணம், பிதுர் கடன் செவது நன்மை தரும். மாசி மகம் அன்று சிவ பெருமானையும், ஸ்ரீ மகாவிஷ்ணுவையும் பித்ருக்களையும் வணங்குவதால் சகல நலன்களையும் பெற்று வளமான வாழ்க்கை பெறலாம் என்பது நம்பிக்கை.

‘அன்ய கே்ஷத்ரே க்ருதம் பாபம் புண்யகே்ஷத்ரே

வினஸ்யதி

புண்யகே்ஷத்ரே க்ருதம் பாபம் வாரணாஸ்யாம்

வினஸ்யதி

வாரணாஸ்யாம் க்ருதம் பாபம் கும்பகோணே

வினஸ்யதி

கும்போகேணே க்ருதம் பாபம் கும்பகோணேவ

வினஸ்யதி’

என்று விவரிக்கிறது பவிஷ்யோத்ர புராணம்.

அதாவது, ‘ஒருவர் எங்கெங்கெல்லாமோ செயும் பாபங்களை ஏதேனும் ஒரு புண்ணிய கே்ஷத்ரத்துக்குச் சென்று போக்கிக்கொள்ளலாம். அப்படியான புண்ணியத் தலங்களில் செயும் பாபங்களை

காசிக்குச் சென்று கரைத்துக்கொள்ளலாம். காசியில் செயும் பாபத்தைக் கும்பகோணத்துக்கு வந்து களையலாம். ஆனால், கும்பகோணத்தில் செயப் படும் பாபங்களுக்கு விமோசனம் அந்தத் தலத்தி லேயே, (மகாமக தீர்த்தவாரியில்) கிடைத்துவிடும். வேறு எங்கும் செல்லத் தேவையில்லை’ என்பது பொருள். அத்தகைய புண்ணியம் பெற்றது கும்பகோணம். இத்தலத்தின் மகாமக குள மகிமைக்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா என்ன?!

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :