கண்ணபிரான், நெல்லை
? முதல்வர் இ.பி.எஸ்.ஸை எம்.ஜி.ஆர். வேடத்தில் சித்திரித்து வைக்கப்படும் ‘பிளக்ஸ் பேனர் ’ பற்றி?
! ‘கான மயிலாட கண்டிருந்த வான்கோழி
தானு மதுவாகப் பாவித்துத் - தானுந்தன்...’
என்ற அவ்வையின் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.
ஆ.மாடக்கண்ணு, பாப்பன்குளம்
? காங்கிரசின் 18ம் நூற்றாண்டுச் சிந்தனை களின் அடிப்படையில் 21ம் நூற்றாண்டில் வேளாண் சவால்களைச் சந்திக்க முடியாது" என்று பிரதமர் மோடி கூறியுள்ளது பற்றி?
! முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விவசாயத் துறையில் சீர்திருத்தங்கள் அவசியம் என்றார். அதைத்தான் நாங்கள் செது இருக்கிறோம்" என்பதையும் அவர் தான் சொல்லுகிறார்.
ஓ.இ.சுந்தர்ராஜன், மதுரை
? தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் அரசியல் தலைவர்களின் மனநிலை எப்படி யிருக்கும்?
! ஸ்டாலின் - நம்பிக்கை. எடப்பாடி - பதற்றம், முருகன் - குழப்பம், ராமதாஸ் - ஏமாற்றம், கமல் - கனவு, சசிகலா - ஆசை, பிரேமலதா - விரக்தி.
மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி
? நெருக்கடியான சூழ்நிலையைச் சமாளிக்க வழி சொல்லுங்களேன் தராசாரே?
! அடுத்தவருக்கு அப்படியான சூழ்நிலை யாக இருந்தால் புரிந்துகொண்டு உதவலாம். நமக்கே அப்படியான சூழ்நிலையானால் நண்பர்களின் உதவியை நாடலாம்.
நெல்லை குரலோன், பொட்டல் புதூர்
? ‘பெரிதினும் பெரிது கேள்’ என்பது சரியா?
! தவறில்லையே. கல்கி இதழ்களின் முகப்பில் அந்தப் பெயருக்குக் கீழே இருக்கும் வார்த்தைகளைக் கவனித்திருக் கிறீர்களா? புதுமையை விரும்பிய பாரதி பழைய, பல காலம் கடந்துபோன கருத்து களை நிராகரித்தான். புதிய ஆத்திசூடியை எழுதியதே அந்த நோக்கத்தில்தான். போதுமென்ற மனமே பொன் செயும் மருந்து என்பது பழைய வாக்கு. அதை மறுத்து ‘பெரிதினும் பெரிது கேள்’ என்று கூறினான். உங்கள் கனவுகள் பெரிதாக இருக்க வேண்டும் எனச் சொல்லும் பாரதி, அவை உங்களுக்கானதாக மட்டு மில்லாமல், உங்களைச் சுற்றியிருப்பவர் களின் உரிமைகளுக்கானதாகவும் இருக்க வேண்டுமென்பதற்காகப் பெரிதாகக் கேளுங்கள் என்கிறான்.
மஞ்சுதேவன், பெங்களூரு
? பெட்ரோல் விலை ரூ. 90ஐ தாண்டி
100 ஐ தொட்டுவிடும் போல் இருக்கிறதே?
! தேர்தல் அறிவிப்புக்குள் சதமடிக்கும். தேர்தல் காலத்தில் சற்றுக் குறைந்து முடிவுகள் அறிவிக்கும் வரை அது நிலைக்கும். பின்னர் மீண்டும் சதம் அடித்து மேலும் தொடரும்.
தமிழ்ச்செல்வி, தூத்துக்குடி
? ஏன் பட்டாசு ஆலைகளில் அடிக்கடி விபத்து கள் நிகழ்கின்றன? தவிர்க்க முடியாதா?
! சாத்தூரில் நிகழ்ந்த பரிதாபத்துக்குக் காரணம், ஃபேன்ஸி ரகப் பட்டாசு தயாரிக்கும் மருந்து கலப்புகளில் அரசால் தடைசெயப் பட்ட சில மருந்துகளும் கலக்கப்படுவதுதான். வீரியம் மிக்க இந்த மருந்துகளைத் தொழிலாளர் கள் சரியாகக் கையாளாததுதான் விபத்துக்குக் காரணம் என்கிறது முதல் தகவல். ஆனால் முறையான அனுமதியில்லாமல் விரைவாக அதிகளவில் உற்பத்தியைப் பெருக்கி, கொள்ளை லாபம் பெறத் துடிக்கும் பேராசைக் காரர்களும், அவர்களின் முயற்சிகளைத் தடுக்கத் தவறும் அரசுத்துறை அதிகாரிகளும்தான் உண்மையான காரணம். பட்டாசு தயாரிப்பை குறுந்தொழிலாக அனுமதிக்காமல் பாதுகாப்பு களுடன் கூடிய தொழிற்சாலைகளில் மட்டுமே தயாரிக்க வேண்டுமென்று விதிகள் மாற்றப் படும் வரை இந்தத் துயரங்கள் ஆண்டுதோறும் தொடரும்.
கே. இந்து குமரப்பன், விழுப்புரம்
? ‘நாட்டின் மீது அக்கறை கொண்டவர் குலாம் நபி ஆசாத்’ என்று அவரைப் பாராட்டி மக்களவையில் பிரதமர் மோடி கண்கலங்கியுள்ளாரே?
! கடந்த நாற்பது ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் குலாம் நபி ஆசாத். காஷ்மீரின் சுதந்திரம் பறிக்கப்பட்டபோது அங்கு போ மக்களைச் சந்திக்க விரும்பிய அவரை ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்துத் திருப்பி அனுப்பியது மோடியின் அரசு. 2006ல் ஆசாத் ஜம்மு, காஷ்மீர் முதல்வராக இருந்தபோது, காஷ்மீரில் குஜராத் சுற்றுலாப் பேருந்து ஒன்று தாக்கப்பட்டது. அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த மோடியிடம் ஆசாத் வருத்தம் தெரிவித்திருந்தார். இப்போது அவருடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவி முடிந்து விடை பெறும் தருணத்தில் அந்தக் கதையைக் குறிப்பிட்டு, ‘உங்களை நான் ஓவுபெற விடமாட்டேன், தொடர்ந்து ஆலோசனைகள் கேட்பேன், உங்களுக்காக என்னுடைய வீட்டின் கதவுகள் எப் போதும் திறந்திருக்கும்’ என உருக்கமாகக் கூறி கண் கலங்கினார். உடனே மோடி பக்தர்கள் ஆசாத் பா.ஜ.க.வில் இணையப் போகிறார் என்று வாட்ஸாப் பிரசாரத்தை ஆரம்பித்துவிட்டார்கள்.
த.சுஹைல் ரஹ்மான், திருச்சி
? ம.நீ.ம. பொதுக்குழுக் கூட்டத்தில் நாட்டில் ஜனநாயகத்தை வலிமைமிக்கதாக்குவோம் என்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்களே?
! அதே பொதுக்குழுவில்தான் கட்சியின் நிரந்தரத் தலைவர் கமல்ஹாசன் என்ற தீர்மானத்தையும் நிறைவேற்றியிருக்கிறார்கள். வாழ்க ஜனநாயகம்.
திருவரங்க வெங்கடேசன், பெங்களூரு
? உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் அண்மையில் பிரதமர் மோடியைப் புகழ்ந்திருக்கிறாரே?
! இத்தகைய செயல்கள் உச்ச நீதிமன்றத்தின் மாட்சிமையைப் பாதிக்கும் என்பதை உணராத இவர்கள், எப்படி நீதிபதிகளாகியிருப்பார்கள் என்று சிந்திக்க வைக்கிறது.
காளிதாஸ், சிதம்பரம்
?ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். கொடுக்கும் விளம்பரச் சண்டையைப் பார்க்கும்போது என்ன தோன்றுகிறது?
! ஒரு கட்சியின் இரண்டு ஒருங்கிணைப் பாளர்கள் எப்படி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று தெரிகிறது.
என்.பாலகிருஷ்ணன், மதுரை
? பா.ஜ.க. அரசால் தமிழ்நாட்டுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்று தவறான குற்றச்சாட்டை, கனிமொழி பரப்பி வருவதாக முதல்வர் பழனிசாமி கூறுகிறாரே?
! தமிழ்நாட்டுக்கு என்பதை அவருடைய அரசுக்கு என்று புரிந்துகொண்டிருப்பாரோ?
நிர்மலாதேவி, புதுக்கோட்டை
? குஷ்பு, காயத்ரிதேவி, கராத்தே தியாக ராஜன் மூலம், காங்கிரஸின் கோஷ்டி விவகாரம், காலை வாரும் கலாசாரம், செல் வாக்கு இல்லாத தலைவர்கள், தி.மு.க. தலையீடு உள்ளிட்ட விஷயங்களை அம்பலப்படுத்த பா.ஜ.க. திட்டமிட்டிருக்கிறதாமே?
! இப்படிக் காலை வாருபவர்களை எல்லாம் எங்கள் கட்சியில் சேர்ப்பதுதான் எங்கள் கலாசாரம் எனக் காட்டுகிறார்கள்.
மு. மதிவாணன், அரூர்
? வரும் சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க. தனித்துப் போட்டியிட்டா லும், 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்" என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளாரே?
! அவரும் தங்கள் கட்சிக்குத் தனிச்
செல்வாக்கு இருப்பதை இப்படித் திரும்பத் திரும்ப கடந்த இரண்டு மாதங்களாகச்
சொல்லி அதிக இடங்கள் வாங்கிவிட வேண்டும் எனத் துடிக்கிறார். ஆனால், தனித்து நின்று அவர்கள் பலத்தைக் காட்ட ஒரு வாப்பு கொடுக்க நினைக்கிறது அவர்கள் கூட்டணியின் தலைமை.
வண்ணை கணேசன்,
? கட்சி, கழகம், கார்பரேட்... என்ன வித்தியாசம்?
! தோழமைக் கட்சியிடமிருந்து நிதி உதவி பெற்றால் அது கட்சி. ஆட்சி
யில் ஊழல் செது நிதி சேர்த் தால் அவை கழகம். தேர்தல் பத்திரங்கள் மூலம் அடையாளம் சொல்லாதவர்களிடமிருந்து அதிக நிதி பெற்றால் அவர்கள் கார்பரேட்.
Post Comment