ஆஹா! ஓஹோ!ZOHO


எஸ்.சந்திரமௌலிஸ்ரீதர் வேம்பு (53) தஞ்சை மண்ணின் மிடில் கிளாஸ் மைந்தர். அரசுப் பள்ளியில் தமிழ் மீடியத்தில் பள்ளிப் படிப்பை முடித்து விட்டு, சென்னை ஐ.ஐ.டி.யில் இன்ஜினீயரிங் படிப்பு. பிறகு அமெரிக்காவில் மேற்படிப்பு. 1996ல் தமிழ்நாட்டில் தென்காசி அருகே ஒரு கிராமத்தில்

சாஃப்ட்வேர் கம்பெனியை ஆரம்பித்து, அது பின்னர் ZOHO என்று பரிணாம வளர்ச்சி பெற்று, உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது, இவர் நடத்திவரும் ஙூˆஏˆ பள்ளிகள்.

கிராமப்புறங்களில் ஓர் அமைதிப்

புரட்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாப்புகளை உருவாக்குவதில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இவரது சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த ஆண்டு மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவித்துள்ளது. அண்மையில், இந்தியப் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். தென்காசியில் ஸ்ரீதர் வேம்பு கல்கிக்கு அளித்த எக்ஸ்குளூசிவ் பேட்டி:தஞ்சை கிராமத்து எளிமையான குடும்பப் பின்னணி கொண்ட நீங்கள் தொடங்கிய ZOHO நிறுவனத்தின் இன்றைய மதிப்பு சுமார் ரூ. 2500 கோடி. கடந்து வந்த வாழ்க்கைப் பாதையைத் திரும்பிப் பார்க்கிறபோது உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது?

இந்தியாவைப் பொறுத்தவரை கிராமப் புறங்களில் வேலை வாப்புகளை அதிகரிப் பது, கிராமத்து இளைய தலைமுறையினருக்குத் தேவையான பயிற்சி கொடுத்து, வேலைக்கு அவர்களைத் தயார் செவது என்ற இரண்டு விஷயங்களிலும் நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த இரு விஷயங் களுமே எனக்கு முழு திருப்தியை அளிக் கின்றன. நம் நாட்டிலேயே இது ஒரு புது முயற்சி என்று சொல்லலாம்."

உங்கள் வாழ்க்கையின் திருப்புமுனை என்று எதைக் குறிப்பிடுவீர்கள்?

திருப்புமுனை என்று குறிப்பிட்டுச்

சொல்லும்படியான நாள் அல்லது நிகழ்வு என்று எதையும் என்னால் சொல்ல முடியாது. அமெரிக்கா சென்று, பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் எம்.எஸ். முடித்துவிட்டு, அங்கேயே பிஹெச்.டி. செதுகொண்டிருந்த சமயத்தில், பல்கலைக்கழகத்தில் மற்றவர்கள் ‘யூ ஆர் டூயிங் வெல்’ என்று சொன்னாலும் கூட, எனக்கு அதில் முழுமையான ஈடுபாடு ஏற்பட வில்லை. ‘இந்தப் படிப்பு எனக்கானது அல்ல; நாமே சொந்தக் காலில் நின்று வேலை வாப்பு களை உருவாக்க வேண்டும்’ என்ற உத்வேகம் அடிக்கடி என்னுள்ளே தோன்றியது. அப்போது எனக்கு 24-25 வயது இருக்கும். எனக்கு எது திருப்தியையும், மகிழ்ச்சியையும் தருகிறதோ அதைத்தான் செய வேண்டும் என்று தீர்மானித்தேன்."

சுய திருப்தி, மகிழ்ச்சி தருவதைச் செவது என முடிவெடுத்த பின்னரும், எதைத் தேர்வு செவது என்பதில் தடுமாற்றம் இருந்ததா?

நான் செதுகொண்டிருந்த பிஹெச்.டி. ஆராச்சிக்கும் யதார்த்தத்துக்கும் தொடர்பு இல்லை என்பதால்தான், மனசுக்குப் பிடித்ததைச் செய வேண்டும் என்று நினைத்தேன். சமூகத்துக்கு நேரடியாகப் பயன்படக்கூடிய விஷயத்தைச் செய விரும்பினேன். எனவே, எனக்குப் பரிச்சயமான, இந்த உலகத்தின் எதிர்காலத் தேவைகளுக்கு அவசியமான

சாஃப்ட்வேர் துறையை நான் தேர்ந்தெடுத்தேன்."

இருபது, இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு, இந்தியர்களின் கனவு தேசமாக இருந்தது அமெரிக்கா. வேலை வாப்புக்கு கனவுக்களமாக இருந்தது சிலிக்கான் பள்ளத்தாக்கு. ஆனால்,

நீங்கள் அங்கிருந்து புறப்பட்டு, தென் தமிழ்நாட்டின் குக்கிராமமான மத்தளம்பாறையில் கடை விரித்து, சாஃப்ட்வேர் உலகத்தின் கவனத்தை உங்கள் பக்கம் ஈர்த்திருக்கிறீர்கள்! இந்த மேஜிக் சாதனை எப்படி சாத்தியமானது?

என்னைப் பொறுத்தவரை, சிலிக்கான் பள்ளத்தாக்கு என்பதை பூகோள ரீதியாக அமெரிக்காவில் இருக்கும் மிகப் பிரபலமான ஓர் இடமாகப் பார்க்கவில்லை. அங்கே இருக்கக்கூடிய தொழில் முனைவோர்களின் ‘மைண்ட் செட்’டைத்தான் பார்க்கிறேன். அந்த மைண்ட் செட்தான் எனக்கு முக்கியம். அங்கிருந்து அதை எடுத்துக்கொண்டு வந்து இங்கே தென்காசியில் அதற்கு நான் செயல் வடிவம் கொடுக்கிறேன். சொந்தக் காலில் நிற்பது, இந்தச் சமூகத்துக்கு உருப்படியாக ஏதாவது செவது என்று வேட்டியை வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கி, எதிர்வரும் சவால்களை, சிக்கல்களைச் சமாளித்து, தடுக்கி விழுந்தால், மீண்டும் சுதாரித்துக் கொண்டு எழுந்து, ஜெயிக்கவேண்டும் என்ற அணுகுமுறை ரொம்ப முக்கியம். நிறுவனத்தில் பணியாற்றும் அனைவரும், தங்களுக்கு இடையிலான வேறு பாடுகளை, தடைகளைப் புறந்தள்ளி, ஒருங் கிணைந்து உழைக்கும் ஸ்பிரிட்டைத்தான் நான் சிலிக்கன் பள்ளத்தாக்கிலிருந்து எடுத்துக் கொண்டு வந்தேன். அது உலகத்தின் எல்லா இடங்களுக்கும் பொருத்தமான ஓர் அணுகு முறை. சென்னையிலும் சரி, மத்தளம் பாறை யிலும் சரி அதுதான் ஜெயித்திருக்கிறது."

சிலிக்கன் பள்ளத்தாக்கு அணுகுமுறையோடு தமிழ்நாட்டுக்கு வந்த நீங்கள், தென்காசிக்கு அருகில் மத்தளம்பாறை என்ற பெயர் தெரியாத கிராமத்தைத் தேர்ந்தெடுத்ததன் பின்னணி என்ன?

மத்தளம்பாறையைத் தேர்ந்தெடுத்ததற்கு ஸ்பெஷலான காரணம் எதுவும் இல்லை; அங்கே நிலம் வாங்கினோம். கம்பெனியை ஆரம்பித்தோம். அவ்வளவுதான்! இதுபோன்ற கிராமப்புறங்களில் கம்பெனி ஆரம்பிக்கும் போது, ஆரம்பக் காலத்தில் சிற்சில கஷ்டங்கள் இருக்கலாம். ஆனால், நாளாவட்டத்தில் அவை பழகிவிடும்; அந்த இடம் நமக்குப் பிடித்துப் போவிடும்."

அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்த

நீங்கள் மத்தளம்பாறையைத் தேர்ந்தெடுத்திருப் பதைப் பார்க்கிறபோது, டாக்டர் அப்துல் கலாம் கூறிய ‘கக்கீஅ‘ திட்டம் செயல்படுத்தப்படுவது போல இருக்கிறது. இது அப்துல் கலாமின் இன்ஸ்பிரேஷனா?

ஆமாம்! கிராமப்புற வளர்ச்சிக்காக டாக்டர் கலாம் காட்டிய வழிதான்Provision of Urban Amenities to Rural Areas GßÝ® PURA திட்டம். சாலை வசதி, தொலைத்தொடர்பு வசதி, கல்வி நிறுவன வசதி போன்ற நகர்ப் புறங்களில் இருக்கக்கூடிய வசதிகளை, கிராமப்புறங்களில் ஏற்படுத்துவதன் மூலமாக கிராமங்கள் வளர்ச்சி அடையும்; கிராமப் புறங்களில் வேலை வாப்புகள் பெருகும்; நகரங்களுக்கு மக்கள் இடம்பெயர்வது கட்டுப்படும் என்பது அவரது திட்டம். அவருடைய தாக்கம் எனக்கும் உண்டு."

Small Office - Home Officeஎன்ற தத்துவத்தின் அடிப்படையில் உருவானதுதான் என்று

சொல்லி இருக்கிறீர்கள். உலகமெங்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் கொரோனா தொற்று காலத்தில் சாஃப்ட்வேர் கம்பெனிகள் மட்டு மில்லாமல், பல்வேறு நிறுவனங்களுமே ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ முறையைச் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால், அந்த அடிப்படை யிலேயே ஒரு நிறுவனத்தை உருவாக்கும் எண்ணம் பல வருடங்களுக்கு முன்னதாகவே உங்களுக்கு வந்துள்ளது. எப்படி வந்தது இந்தத் தீர்க்க தரிசனம்?

2005ல WORK ONLINE‘ என்பதுதான் எங்கள் நிறுவனத்தின் ணாச்ஞ் டூடிணஞு ஆக இருந்தது. நீங்கள் உங்கள் அலுவலகத்துக்குப் போத்தான் உங்கள் வேலையைச் செயவேண்டும் என்ற கட்டாயம் இல்லாமல், எங்கே இருக்கிறீர்களோ அங்கிருந்தபடியே, அலுவலகம் சென்றால் என்ன செவீர்களோ அந்த வேலையைச் செய முடியும் என்பதைத்தான் வலியுறுத்தி, அதற்கான சாஃப்ட்வேர் தயாரிப்பில் ஈடுபட்டோம். அதுவே எங்கள் கனவாக இருந்தது. இன்று காலத்தின் கட்டாயமாக எல்லோரும் அதைத் தான் செதுகொண்டிருக்கிறார்கள். எங்களுடைய கனவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு நீண்டகாலத் திட்டம் அவசியம்; அதை உறுதிப் பிடிப்புடன் செயல்படுத்த வேண்டும். அதில் எதிர்கொண்ட பல்வேறு வகையான சவால்களுக்கும் வெற்றிகரமாகத் தீர்வு கண்டு, இன்று பெரிய அளவில் வளர்ச்சி அடைந் திருக்கிறோம் என்பதைப் பெருமையோடு சொல்லிக் கொள்ளலாம். இது தொழில் துறையில் ஈடுபட்டுள்ள அனைவருக்குமே பொருந்தும்."

* சாஃப்ட்வேர் உலகில், சர்வதேச அளவில் மைக் ரோசாஃப்ட் போன்ற உலகளாவிய ராட்சச நிறுவனங் களோடு போட்டி போடுவதற்கு ஆரம்பத்தில் நீங்கள் பயப்பட்டீர்களா?

* நீங்கள் பில்கேட்ஸை சந்தித்திருக்கிறீர்களா? அந்த அனுபவம் பற்றி?

* மற்ற சாஃப்ட்வேர் கம்பெனிகள் எல்லாம், பிரபல மான இன்ஜினீயரிங் கல்லூரிகளிலிருந்து புத்திசாலி மாணவர்களை கேம்பஸ் ரெக்ரூட்மென்ட் மூலம் வேலைக்குத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கும்போது,

நீங்கள் தென்காசி பகுதியில் பிளஸ் 2 படித்த மாணவர் களைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சி கொடுத்து வேலைக்கு எடுத்துக் கொள்கிறீர்களே? இந்த அணுகுமுறை சரியா?

* நீங்கள் அநியாயத்துக்கு எளிமையான மனிதராக இருக்கிறீர்களே? போன்ற கேள்விகளுடன் அடுத்த இதழிலும் ஸ்ரீதர் வேம்பு பேட்டி தொடர்கிறது...

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :