உன்னை நீ அறிந்தால் 8

இன்றியமையாதவனாக மட்டுமின்றி இணக்கமானவனாகவும் இரு
ஜெயராமன் ரகுநாதன்நேத்து நாலு பேரை வேலைய விட்டு தூக்கிட் டாங்க!"

எங்க கம்பெனியில நாப்பது பேருக்கு பிங்க் ஸ்லிப் போன வாரம்!"

மேற்சொன்ன செதிகள் உங்களைக் கலவரப்படுத்தக்கூடும். எப்போது வேண்டு மானாலும் நிறுவனம் நம்மை வீட்டுக்கு அனுப்பிவிடுமோ என்னும் பயம் வயிற்றைக் கவ்வும். சம்பளம் இல்லேன்னா வீட்டு வாடகை, கரண்ட் பில், ஸ்கூல் ஃபீஸ், ஸ்கூட்டர் ஈ.எம்.ஐ. எல்லாத்துக்கும் என்ன பண்ணுவது என்னும் பயம் தலைதூக்கும்.

இதுதான் நிதரிசனம்! இதுதான் உண்மை நிலவரம். ஆனால் நிச்சயம் கலவரப் பட வேண்டிய விஷயமில்லை. ஏனென்றால் நீங்கள் உங்கள் நிறுவனத்துக்கு இன்றியமை யாதவராக இருக்கும்போது என்ன கவலை!

ஆம், உங்களின் முதல் குறிக்கோள், வேலையில் சேர்ந்தவுடன் எப்படி அந்த நிறுவனத்துக்கு நான் இன்றியமையாதவனாக மாறுவது என்பதுதான்!

நிறுவனத்துக்கு இன்றியமையாதவன் என்றால் உங்கள் மேலதிகாரிகள் உங்களின் மீது அபார நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அதோடு நீங்கள் இல்லாவிட்டால் நிறுவன வேலை பாதிக்கப்படும் என்று நம்புகிறார்கள். கூடவே ஒரு சிக்கல் என்றால் உங்களிடம் வந்து உதவி பெற்றால் சிக்கல் தீரும் என்று ஸ்திரமாக நம்புகிறார்கள். இந்த நம்பிக்கையை உங்களால் சம்பாதிக்க முடிந்தால் நீங்கள் இன்றியமையாதவராக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இதனுடைய இன்னொரு பரிமாணம் என்ன தெரியுமா?

நீங்கள் இன்றியமையாதவராக இருக் கிறீர்கள் என்றால் உங்களிடம் நிறுவனத்துக்கு மிக முக்கியமான அறிவோ, அனுபவமோ அல்லது திறமையோ இருக்கிறது என்று தானே அர்த்தம்!

‘இன்றியமையாத’ என்பது ‘ஈடு செய முடியாத’ என்பதிலிருந்து வேறுபட்டது என்பதை உணர வேண்டும். இன்றியமையாத ஒரு ஊழியரை நிறுவனம் நிச்சயம் விரும்பும். ஆனால் அதே சமயம் தம்மைவிட்டால் நிறுவனத்துக்கு வேறு கதி இல்லை என்று நினைத்துக்கொண்டால் அவ்வளவுதான். எல்லா நிறுவனங்களிலும் தவறாமல் கடைப் பிடிக்கப்படும் கொள்கை என்னவென்றால் ‘ஒரு தனி மனிதரைவிட நிறுவனம் மேலானது’ என்பதுதான். ஆகவே இன்றியமையாத என்பது ஆணவத்துக்கு வழி வகுக்கக்கூடாது.

ஆனால் இன்றியமையாதவராக இருக்கிறீர் கள் என்பதில் உள்ள பெருமிதத்தை நீங்கள் கொண்டாடத்தான் வேண்டும். தம்மால் நிறுவனத்துக்கு நல்ல மதிப்புமிக்க சேவை செய முடிகிறது என்பது போற்றி வளர்த்துக் கொள்ளப்பட வேண்டிய ஒரு பெருமித உணர்ச்சிதான்.

அப்படி உங்களை இன்றியமையாதவராக மாற்றிக்கொள்ள நீங்கள் சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

1. முக்கியமான வேலைகளைச் செயுங் கள், சுலபமான வேலைகளை மட்டுமில்லை.

2. உங்களுக்கான தனித்திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள். அது நிறுவனத்தில் யாருக்கும் இல்லாத திறமையாக இருப்பது முக்கியம்

3. Be willing to go the extra mile- அதாவது உங்கள் வேலையின் எல்லையைத் தாண்டியும் உழைக்க முற்படுங்கள். முன்பொரு அத்தியா யத்தில் கமல்ஹாசனின் உழைப்பு பற்றிச்

சொன்னதை மீண்டும் படியுங்கள்.

4. உங்கள் மேலதிகாரியின் வேலையைச் சுலபமாக்குங்கள். உங்கள் மேலதிகாரி அடுத்த வாரம் நிறுவனத்தின் விற்பனை பட்ஜெட்டை நிர்வாகிக்குச் சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் அந்த பட்ஜெட்டுக்கான அடித்தள வேலை களைச் செது அவர் பட்ஜெட் எண்ணிக்கை களைத் தயாரிக்க உபயோகப்படும் தகவல் களைத் திரட்டி அனுப்பினால் அவர் பட்ஜெட் போடுவது சுலபமாகும்.

5. இன்னொரு மொழியைக் கற்றுக் கொள்ளுங்கள். உடனடி பயன்பாட்டை எதிர் பாராமல் இன்னொரு மொழியைக் கற்பது உங்களின் மதிப்பைக் கூட்டும். ஹிந்தி ஒழிக, நான் ஏன் ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்ப தெல்லாம் அரசியல் கோஷங்கள். அது அவர் களின் பிழைப்பு. நீங்கள் உங்கள் பிழைப்பைக் கவனிக்க இன்னொரு மொழி அவசியம். பல மொழி அறிந்தவர்களை எந்த நிறுவனமும் விரும்பும்.

6. மற்றவரை விட அதிக ஊக்கத்துடனும் வேகத்துடனும் உழையுங்கள். ஆனால் ஓட்டப் பந்தயம் வேண்டாம். இதை ஆங்கிலத்தில் எலிகளின் பந்தயம் (கீச்ணா கீச்ஞிஞு) என்பார்கள். ஏனென்றால் வெற்றி பெற்றாலும் நீங்கள் எலியாகத்தான் இருப்பீர்கள்!

7. நிறுவனம் சம்பந்தப்பட்ட தொடர்பு களைப் பேணுங்கள். சில தொடர்புகளில்

நீங்கள்தான் அதிமுக்கியமானவராக இருக்க முயற்சி செயுங்கள்.

8. ஒரு பிரபல டூத்பேஸ்ட் கம்பெனி தன் விற்பனையாளர்களைக் கூட்டி டூத்பேஸ்ட் விற்பனையை அதிகரிக்க யோசனைகள் தருமாறு கேட்க, பலர் பலவித யோசனைகள் சொன்னார்கள். ஒருவர் சொன்ன யோசனை அபாரமானது என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.

அவர் சொன்னது டூத்பேஸ்ட் ட்யூபின் வா அகலத்தை அதிகரிக்குமாறு சிபாரிசு செதார். அப்படிச் செதால் ஒவ்வொரு முறையும் ட்யூபைப் பிதுக்கும்போது அதிக பேஸ்ட் வெளிவரும், ட்யூபும் சீக்கிரம் காலி யாகும். வாடிக்கையாளர் மறுபடி டூத்பேஸ்டை வாங்க கடைக்கு வருவார்கள்! நீங்கள் அலுவ லகத்தில் சிந்தனைத் தலைவராக இருக்க முயலுங்கள். அதாவது அலு வலக பிரச்னைகளைத் தீர்க்க வித்தியாசமாக யோசித்துத் தீர்வு காண முயலுங்கள்!

9. மற்றவர்களுடன் இயைந்து வேலை செயுங்கள். எந்த நிறுவனத்திலுமே யாருமே தீவாக இயங்க முடியாது. நிறுவனம் என்பதே பலர் சேர்ந்து தேர் இழுப்பதுதான். தேர் இழு பட வேண்டும் என்னும் ஒற்றைக் குறிக் கோளுக்காகவே எல்லோரும் உழைக்கிறார் கள். ஆகவே நீங்களும் குழுவுடன் சேர்ந்து ஒன்றிணைந்து வேலை செய வேண்டும்.

10. எப்போதும் பொறுப்புணர்வோடு இருங்கள். சின்ன வேலையாக இருந்தாலும் அதைச் செவ்வனே முடிக்கும் பொறுப்புணர்வு தேவை. உன்னதம்என்பதுதான் நிறுவனங்களின் வெற்றிக்குக் காரணமாக இருந்திருக்கின்றன. எந்த வேலையிலும்

சிறப்பாகச் செவதையே முனைப்பாகக் கொண்டு செவதுதான் உங்களை இன்றி யமையாதவராக ஆக்கும்.

நான் வேலை செத ஒரு கம்பெனியின் எம்.டி. எந்த வேலையிலும் இந்த உன்னதத்தை எதிர்பார்ப்பார். கம்பெனியிலிருந்து பிரிண்ட் செது அனுப்பப்படும் லெட்டரில் ஒரு திருத்தம் கூட இருக்கக்கூடாது என்பார். அப்படித் தவறு நேர்ந்துவிட்டால் அதைக் கிழித்து எறிந்துவிட்டு புதியதாக வேறொரு பேப்பரில் பிரிண்ட் எடுத்து அனுப்ப வேண்டும் என்று நிர்பந்திப்பார். அதுபோல சின்னச் சின்ன விஷயங்களில் உன்னதத்தைக் கைகொண்டால் பெரிய விஷயங்களிலும் அந்த வழக்கம் கைகூடும் என்பது அவரின் எண்ணம்.

11. நீங்கள் செயும் வேலையை நேசியுங் கள். சிறப்பாக வேலை செதாலும் கடுகடு வென முணுமுணுப்போடு வேலை செப வரை எவரும் விரும்பமாட்டார்கள்.

12. நாட்டு, உலக நடப்புகளை எப்போதும் அறிந்து வைத்திருங்கள். முக்கியமாக உங்கள் நிறுவனம் சம்பந்தப்பட்ட தொழில் பற்றிய செதிகளில் உங்களின் அறிவு லேட்டஸ்டாக இருத்தல் அவசியம்.

13. உங்களின் பேச்சுத் திறனையும் மொழி அறிவையும் தொடர்ந்து மேன்மையாக்குவ தைக் கடமையாகச் செயுங்கள். தொடர்பு கொள்ளுதலுக்கு மொழி மிக அவசியம். ஆகவே மொழி ஆளுமைக்கு உங்களை நிறு வனத்தில் இன்றியமையாதவராக ஆக்குவதில் பெரும் இடம் உண்டு என்பதை மறவாதீர்கள்.

14. பேச்சுத் திறமை போலவே எழுத்துத்திறமையும் மிக முக்கியம். அலுவலக நிமித்தம் பல ஈமெயில்களும் ரிப்போர்ட்டுகளும் எழுத வேண்டிவரும். உங்களின் எழுத்து என்பது சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதா இருத் தல் வேண்டும். சொல்ல வரும் சிக்கல், அதன் உட் பொருள், அதனால் ஏற்படும் சாதக பாதகங் கள், அதைத் தீர்க்க உங்களின் ஆலோசனை என்று கச்சிதமாக எழுதுவதில் நீங்கள் விற்பன்னராக வேண்டும். பிரபல எழுத்தாளர் சுஜாதா வேடிக்கையாக, எழுத்தில் கச்சிதம் இல்லா விட்டால் அவன் கையை ஒடி" என்பார். இது அலுவலக எழுத்துக்கும் மிகவும் பொருந்தும்.

மேற்சொன்ன விஷயங்களைக் கடைப் பிடித்தால் நீங்கள் நிறுவனத்தில் இன்றியமை யாதவராக ஆக முடியும். ஆனால் ஒருபோதும் உங்களின் இன்றியமையாத நிலைமைக்கு கர்வம் கொள்ளாதீர்கள். அது உங்களின் நிறு வன பர்ஸனாலிட்டியைப் பாதித்துவிடும். இன்றியமையாதவராக இருப்பதைப்போலவே இணக்கமானவராகவும் நீங்கள் இருப்பது அவசியம்.

யாரிடம் இணக்கமாக இருக்கவேண்டும்?

மேலதிகாரி, சக ஊழியர், உங்களின் மேலாண்மையில் பணிபுரிபவர், வாடிக்கை யாளர், உங்கள் நிறுவனத்துடன் தொடர்பு கொண்ட எவரிடமுமே, ஏன் உங்களிடமுமே கூட நீங்க இணக்கமானவராக இருத்தல் அவசியம். எல்லோரிடமும் நல்ல உறவில் இருப்பது எப் போதுமே நல்ல விளைவுகளையே ஏற்படுத் தும். உங்களை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அப்படியே நீங்களும் மற்றவரை நடத்த வேண்டும். ஆகவே மரியாதையுடன் இருப்பது மிக மிக முக்கியம். உற்ற நண்பராக இருந்தா லும் அலுவலக நேரத்தின்போது வாடா போடா என்று விளிப்பது சரியல்ல.

சக ஊழியரிடம் உண்மையான அக்கறை காட்டுங்கள். அவரின் வேலை பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். உங்களால் எப்படி யாவது உதவமுடிந்தால் அதை அவருக்குத் தெரியப்படுத்துங்கள். இனிமையான பர்சனா லிட்டியாக இருப்பது நிறுவனத்தில் மிகவும் மதிக்கப்படும் குணமாகும்.

யார் பேசினாலும் கவனமாகக் கேளுங்கள். ஓர் உரையாடலில் நீங்கள் ஆர்வமின்றி இருந் தால் அது எதிராளிக்கு உடனே புலப்பட்டு விடும். வேண்டா வெறுப்பாகப் பேசுவது நல்ல எண்ணங்களைத் தோற்றுவிக்காது. உங் களுக்கு உண்மையாகவே நேரமில்லை என்றால் அதை அவருக்குத் தெரியப்படுத்தி விட்டு இன்னொரு சமயம் பேசுவதாகச் சொல்லி விடுங்கள். அதேபோல ஓவு கிடைக்கும் போது அவருடன் பேசி உங்கள் உண்மைத் தன்மையைத் தெரியப்படுத்துங்கள்.

பாராட்டத் தயங்கவே தயங்காதீர்கள். பணம் செயாத வேலையைப் பாராட்டு செ யும். உண்மையாகப் பாராட்ட நல்ல மனம் மட்டுமின்றி தன்னம்பிக்கையும் தேவை. சக ஊழியர்களைப் பாராட்டும் நிர்வாகிகளை மேலதிகாரிகளுக்கு மிகவும் பிடிக்கும்.

புன்னகையை மறக்காதீர்கள். கடுமையான வேலைக்கு நடுவிலும் ஒரு சின்ன அர்த்தமுள்ள புன்னகை உங்களை மதிக்க வைக்கும். அந்தப் புன்னகை செயற்கையாக இல்லாமல் உள்ளார்ந்த அன்போடு புன்னகைத்தால் அது பார்ப்பவரிடம் நேசத்தைக் கொண்டு செல்லும்.

எதிரிலிருப்பவரைப் பற்றி அதிகமாகவும் உங்களைப் பற்றிக் குறைவாகவும் அவர் மனதில் எண்ண வைக்க முடிந்தால் உங்களிடம் ஈர்க்க வைப் பது சுலபமாக நடக்கும் என்பதை மறவாதீர்கள்.

திறமை என்பது முக்கியமானதுதான். ஆனால், திறமை மட்டும் போதுமா?

ஒரு தொழிற்சாலையில் ஒரு பொருளைத் தயாரிக்கும் கலையில் ஒருவர் மிகத் தேர்ச்சிபெற்றவரக இருக்கிறார். ஆனால், அவர் கோப மும் அசூயையும் மிகுந்தவராக இருப்பின் என்ன சாதிக்க முடியும்? அலுவலகம் என்பது ஒரு குழுவாக இருந்து செயல்பட வேண்டிய இடம். Teamwork matters என்பார்கள். அப்படி ஒரு டீமில் செயல்பட முடியாதவர் என்ன திறமை பெற்றிருந்தால் என்ன? அவரால் நிறுவனத்துக் குப் பயன் உண்டா? எனவே ஒருவர் திறமை யானவராக இருந்து அதன் மூலம் சாதிக்க முடிந்தவராகவும் இருப்பினும் சக ஊழியர் களுடன் ஒத்துழைத்து வேலை செயவில்லை என்றால் ஒரு பயனும் இல்லை. இணக்கமான பர்சனாலிட்டி என்பதும் வெற்றிக்கு ஒரு முக்கியமான யோக்கியதாம்சம் ஆகும்.

உங்களின் திறமையாலும் கடுமையான உழைப்பாலும் உண்மைத் தன்மையோடும் நிறு வனத்தில் இன்றியமையாதவராக இருங்கள். கூடவே இணக்கமானவராகவும் இருங்கள். பிறகென்ன, வெற்றி உங்களுடையதுதான்!

தொடரும்...

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :