அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி - 2020ல் பிரசுரத்திற்குத் தேர்வான சிறந்த சிறுகதை - 10


இருநூறு ரூபாய் நோட்டு
சாரதா - விஜய்டாலிநான் சுகந்தி செல்வம். செல்வம்ங்கறது என் கணவர். ஒரு கல்யாணத்துக்காக, பல்லவன் எக்ஸ்பிரஸ்ல திருச்சியில் இருந்து சென்னை போட்டு இருந்தோம் நானும் கணவரும்.

ட்ரெயின் விழுப்புரம் ஸ்டேஷனுக்குள் நுழையும்போதே பிளாட்பாரத்தில் இந்த ‘இட்லி வடே... இட்லி வடே... பூரி...’ ஆரம்பித்துவிட்டது.

சுகந்தி உனக்கென்ன வேணும்? இட்லியா, பூரியா? இங்கயே வாங்கிடலாம். இப்போவ ஒன்பதேகால் ஆச்சு" என்ற கணவரைப் பார்த்தேன்.

‘எப்பவும் உள்ளயே கொண்டு வருவாங் களே. உள்ளயே வாங்கிக்கலாமே"ன்னு

சொன்ன என்னைப் பார்த்து ‘சுத்திப் பாரு

ரிசர்வ்ட் கம்பார்ட்மெண்ட்னு பேருதான்... எவ்வளவு கூட்டம்... இதுக்கு நடுவுல வாங்க றதுக்கு இப்போ டக்குனு வாங்கிடலாம்

சொல்லு..." என்றார்.

சனிக்கிழமை அல்லது வேறேதோ விடுமுறைனாலே இப்படித்தான். ரிசர்வ்ட், அன்-ரிசர்வ்ட் வித்தியாசமில்லாம எல்லாப் பெட்டிகளும் கூட்டம் நிரம்பியிருக்கும். கதவுக்கருகில், நடக்கும் வழியில், டாலெட் டுக்கு அருகில்கூட பைகளை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார்கள்.நின்று கொண்டேகூட வருவார்கள். இன்றைக்குச்

சனிக்கிழமை. பெட்டி முழுவதும் மனித முகங்கள். காபி, டீ, டிபன்னு ட்ரெயினுக் குள்ளேயே அத்தனையும் கிடைப்பதுன்னா லும், நடக்கும் வழியை அடைத்திருப்பதால் அதைக் கொண்டு வருபவர்களிடம் இருந்து வாங்குவது கொஞ்சம் இம்சையாத்தான் இருக்கும். சீக்கிரம் சொல்லு. இட்லி வடையே வாங்கிறவா?" என்று என்

யோசனையைக் கலைத்தார்.

அப்போதுதான் கவனித்தேன், ஜன்னலுக்கு வெளியில் கையில் இட்லிப் பொட்டலங்கள் அடுக்கிய டிரேயை வைத்துக்கொண்டு நின் றிருந்த அந்தப் பெரியவரை, மங்கியதா இருந்தாலும் சுத்தமாக இருந்த காக்கிச்

சட்டை, மடித்துக் கட்டிய வேட்டி, குளித்து நெத்தியில் குங்குமம் வச்சிக்கிட்டு, தலையைப் படிய சீவிய பெரியவர்.

ரெண்டு இட்லி வடை கொடுங்க..."ன்னு சொன்னவுடனே பெரியவர் நீட்டிய ரெண்டு பொட்டலங்களை வாங்கிக்கொண்டேன்.

செல்வம் பர்ஸைத் திறந்து அதிலிருந்த ரூபா நோட்டுக்களை ரொம்பக் கவனமா பாத்து எடுத்துட்டு இருக்கும்போதே புரிஞ்சிடுச்சு.ரொம்ப கவனமா ‘இருக்கறதுலயே’ அந்த ஒரு இருநூறு ரூபா நோட்டை எடுத்து நீட்டினார்.

அந்தப் பெரியவர் டக்குன்னு ரெண்டு இட்லி வடை அம்பது ரூபா தான். சில்லறை இல்லயே" அப்படின்னாரு.

என்கிட்டயும் சேன்ஜெல்லாம் இல் லயே..." என்றார் இவர். நான் எதிர்பார்த் ததுதான்.

என்ன பண்ணறது... சில் லறை மாத்தறதுக்குள்ள ட்ரெயின் வேற கிளம்பிட்டா"ன்னு முழித் தார் அந்தப் பெரியவர்.

அப்போ சரி, இந்தாங்க, இதை நீங்களே வெச்சுக்கோங்க... சில்லறை இல்லன்னுதான சொல் றேன்..."னு படக்குன்னு சொல் லிட்டு எங்கிட்ட இருந்த பொட்ட லத்தைப் பிடுங்கி அவரிடம் நீட்ட, சட்டுன்னு பதறினார் அந்த பெரியவர்.

வேணாங்க. சாப்பிட வாங் கினதைத் திருப்பி எல்லாம் தரா தீங்க... இருங்க கடையில சில் லறை மாத்திட்டு வந்துர்றேன்"னு

சொல்லிட்டு அந்த இருநூறு ரூபா நோட்டோட வேகவேகமா போனாரு.

ஏன்ங்க இப்படிப் பண் றீங்க... பாவம் வயசானவரு. வேகமா போறாரு பாருங்க... உங்ககிட்ட அம்பது ரூபா நோட்டு இல்லயா என்ன?"ன்னு சொன் னேன்.

அதெல்லாம் ஒண்ணுமில்ல... இருக்கற சில்லறையெல்லாம் கொடுத்துட்டா அப்பறம் டவுன் பஸ்ஸுக்கு ஷேர் ஆட்டோவுக் குன்னு எல்லாம் என்ன பண்றது... இப்படி மாத்தினாத்தான் உண்டு... நீ சும்மா இரு"ன்னு அதட்டினார்.

அது மட்டும் காரணமில்லன்னு எனக்குத் தெரியும். எனக்குத் தெரியும்னு அவருக்கும் தெரியும். பேசாமல் அமைதியானேன்.

டிரெயின் க்ரீன் சிக்னல் விழுந்த ஹார்ன் சவுண்ட் வந்தது. அந்தப் பெரியவரைக் காணோம். ஜன்னல் வழியா எட்டிப் பார்த் துட்டு இருந்த இவர் ‘என்னவோ பாவம்னியே... இப்போ பாரு... எதுத் தாப்லயே கடை இருக்குது... அங்க மாத்தாம எங்கேயோ போட்டாரு... இனி மீதியை மறந்துற வேண்டிதுதான்... ஆளப் பாத்து எடை போடவே கூடாது தெரிஞ்சுக்கோ..." அப்படின் னார்.

டிரெயின் மெதுவா நகர ஆரம் பிச்சது. பெரியவரைக் காணோம். ‘இவர் சொன்ன மாதிரிதானா? இல்லயே, அந்தப் பெரியவர பாத்தா அப்படித் தெரிய லையே...’ன்னு தோன்றியது. ‘இவர் பண்ணது மட்டும் சரியா என்ன... அதான் இப்படி ஆச்சு..’ன்னு நினைச்சிக்கிட் டேன். இவர்தான் ரொம்ப நேரத்துக்கு பொருமிக்கிட்டே வந்தார். ஒரு கட்டத்துல அந்த நோட்டத்தானே அன்னைக்கு சூப்பர் மார்க்கெட்ல திருப்பித் தந்தாங்க..." அப்படின்னு நான் சொன்னப்பறம்தான் பொருமலை நிறுத்தினார்.

நான் வேலுத்தம்பிங்க. ரயில்வே ஸ்டேஷன்ல சாப்பாடு பொட்டலம் விக்கறதுதான் தொழில். வருமானம்கறது ரொம்பப் பெருசா இல்லைனாலும் சாப்பாடு இல்லீங்களா அதனால திருப்தி அதிகம். இந்த அம்பத் தாறு வயசு வரைக்கும் ஒரு பைசா கூட யாரையும் ஏமாத்தாம நேர்மையா சம்பாதிச்ச பெருமை இருந்தது. ஆனா இன்னைக்கு அது உடைஞ்சு சுக்குநூறா போனதுதான் தாங்கிக்கவே முடியலை.

எப்பயும் போலத்தான் இன் னைக்கும் வியாபாரத்துக்காகப் போனேன். பல்லவன்ல எப்பயும் நான் போற ஈ4 பெட்டிக்குப் போனேன். அந்தப் பெட்டில முதல் ஜன்னல்ல உக்காந்து இருந்தவர் ரெண்டு இட்லி வட வாங்கினாரு... அம்பது ரூபாக்கு, இருநூறு ரூபா நோட்ட நீட்டினாரு... காலையில இருந்து அதான் முதல் போணி... மிச்சம் கொடுக்க எங் கிட்ட இருபது ரூபாதான் இருந்தது. மீதி இல்லைன்னு சொன்னவுடனே வாங்கின இட்லி பொட்டலத்த திருப்பி நீட்டிட்டாரு. எனக்கு ஒரு மாதிரி ஆகிப்போச்சு. சரின்னு வேகமா அந்தப் பெட்டிக்கு நேராவே இருந்த ரத்தினம் கடையில கேட்கலாம்னு போனேன். கடையில ஒரே கூட்டம். டிரெயின் கிளம்பிடுமேங்கற பதற்றம் எனக்கு. சரின்னு அடுத்து புக்குக்கடை ராகவன்கிட்ட கேப்போம்னு போனேன். கடை யில அவன காணோம். அதுக்குள்ள ட்ரெயினு ஹாரன் சத்தம் கேட்டுது.

‘அயயோ, கிளம்பறதுக்குள்ள அந்த இருநூறு ரூபா நோட்டையாவது திருப்பிக் கொடுத்துடலாம்னு’ வேகமா ஓடினேன். வய

சாயிடுச்சு முடியல. ராஜாதான் நான் ஓடி வர்றத பாத்துட்டு ‘வேலுண்ணே என்ன இப்படி ஓடி வறீங்க. விழுந்தா என்ன பண்றது’ன்னு திட்டினான். ‘இல்லடா, ஒருத்தர் ரெண்டு இட்லி வாங்கிட்டு இருநூறு ரூபா தந்தாரு. மீதி தரணும்’னு அந்த இருநூறு ரூபாயக் காட்டிச்

சொன்னேன். அதை ஒரு பார்வை பாத்தவன், ‘அட, போங்கண்ணே... பரவால்ல... ட்ரெயினு கொஞ்ச நேரந்தான் நிக்கும்னு அந்த ஆளுக்குத் தெரியாதா? அம்பது ரூபாவா தரவேண்டிது தான... வேணும்னே தந்திருக்காண்ணே...

இதுக்காகப் போ இப்படி ஓடி வர்றீங்க... விட்டுத் தள்ளுங்க’ன்னு சொன்னான். எனக்குத் தான் மனசே ஆறலை.

வீட்டுக்குள்ள நுழைஞ்சவுடனே லட்சுமி கண்டுபிடிச்சிட்டா. ஏங்க என்னமோ மாதிரி இருக்கீங்க?"ன்னு கேட்டா.

நடந்த கதையைப் பூராவும் சொன்னேன். சரிங்க... இப்போ என்ன பண்ண முடியும்? மீதி யில்லனா நீங்க அந்த ரூபாவ வாங்காம, அம்பது ரூபாயா கொடுக்கச் சொல்லி கண்டிசனா

சொல்லி இருக்கணும். இப்ப பாருங்க நீங்கதான இவ்வளவு வருத்தப்படறீங்க..." அப்படின்னா.

அவங்க வாங்கின இட்லிப் பொட்டலத் தைத் திருப்பி நீட்டிட்டாரு லட்சுமி. எனக்கு ஒரு மாதிரியா போடுச்சு... ஆனா நீ சொன் னதுதான் சரி... இப்போ என்ன பத்தி ஏமாத்திட் டேன்னு நெனச்சிருப்பாங்க இல்ல..." அப்படின்னு விடாம புலம்பவும் சரி, நீங்களே பொலம்பி அப்பறமா சரியா வுங்க"ன்னு போட்டா.

ரொம்ப நேரம் அதையே நெனச்சு வருத்தப் பட்டுட்டு இருந்தப்போதான் பேசாம அவங் களுக்குக் கொடுக்க வேண்டிய மீதிய தனியா ஒரு பொட்டலமா கட்டி எப்பவுமே பாக்கெட்ல வெச்சுக்கலாம். என்னைக்காவது அவங்கள திரும்பப் பாத்தா கொடுத்துறலாம்’ன்னு தோணிச்சு. சட்டைப் பாக்கெட்ல இருந்த அன் னைக்கு வித்த காசையெல்லாம் எடுத்து அதுல நூத்தம்பது ரூபாவை ஒரு காயிதத்துல பொட் டலமா கட்டிக்கிட்டேன். அந்த இருநூறு ரூபா நோட்டை பிரிச்சப்போ டர்ர்னு நடுவுல கிழிஞ்சி போச்சு... இதுவும் சரிதான் அவங்களுக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டியத தரல அப்படின் னதும் இதுவே கிழிஞ்சி போச்சுன்னு நெனச்

சிக்கிட்டே கொஞ்சம் சமாதானம் ஆயிட்டேன்.

ரெண்டு நாளு போடுச்சு. திங்கட்கிழமை அன்னைக்கு

சாயங்காலம் சென்னைல இருந்து பல்லவன் எக்ஸ்பிரஸ் வந்தது. நான் பெஞ்சுல உக்காந்து பிளாட் பாரத்துக்குள்ள நுழைஞ்சு மெதுவா நகந்துட்டு இருந்த ட்ரெயின பாத்துட்டே இருக்கும் போதுதான் அந்தப் பெட்டில ஜன்னலோரத்துல அவங்கள பாத்தேன்.

சரிதான் அது அவங்களேதான். அவ்ளோதான் வேகமா எழுந்து அந்தப் பெட்டியோட ஓடினேன். கூட உக்காந்து இருந்த ராஜாக்கு ஒண்ணும் புரியல. ட்ரெயினு நின்னவுடனே அவங்க உக்காந்து இருந்த ஜன்னல்கிட்ட போனேன். ஒண்ணும் புரியாம என்னைப் பாத் தாங்க. ‘அன்னைக்கு சில்லறை மாத்தறதுக்குள்ள ட்ரெயின் கௌம்பிடுச்சு. நீங்க என்ன பத்தி ஏமாத்திட்டேன்னு நெனச்சிருப் பீங்கள்ல... உங்களுக்குத் தர வேண்டிய மீதி இந்தாங்க’ன்னு சந்தோஷமா நீட்டினேன். ஒண் ணுமே பேசாம என்னையே பாத்தாரு. அப்பறம் வாங்கிக் கிட்டாரு. அப்போதாங்க போன நிம்மதி வந்தது. எதுக்கு இப்படி ஓடினேன்னு புரியாம பின்னாடியே வந்த ராஜாதான் அப்படி வந்ததுக் குத் திட்டினான். ஆனாலும் நிம்மதியாச்சு பாருங்க. வாழ்க் கையே அதாங்க. படுத்தா அடுத்த நிமிஷம் நிம்மதியா தூங்கற அளவு நேர்மையா வாழணும்.

நான் செல்வம். எனக்கு எப் பவுமே ஒரு விஷயம் ரொம்ப கோபம் வரும். இந்தச்

சின்னச் சின்னப் பூ வியாபாரிங்க கா வியாபாரிங்க, இவங்களை யெல்லாம் பாத்தீங்கன்னா திருப் பித் தர்ற மீதி ரூபா நோட்டு எல்லாம் எப்பவுமே கசங்கி நைஞ்சுப் போ ரொம்பப்

பழசாத்தானிருக்கும். ‘என்னம்மா இப்படித் தர்ற. இதெல்லாம் செல் லுமா?’ன்னு எரிச்சலா கேட்டா, ‘என்னா சார் இப்டி சொல்றீங்க. எங்களுக்கே இப்டிதான கெடைக்குது. நாங்க என்ன பண்றது’ அப்படிம்பாங்க. அத னால நானும் எப்பவுமே இப்படி சின்ன வியாபாரிங்கக்கிட்ட வாங்கும்போது என்கிட்டே இருக்கற நோட்டுலயே பழைய நோட்டதான் தருவேன், அது எவ்ளோ நைஞ்சு இருந்தாலும்.

சுகந்திதான் சொல்லுவா, ஏங்க இப்படி பண்றீங்க. அவங்க யெல்லாம் சின்ன வியாபாரிங்க. பெரிய கடைங்க மாதிரி நூறு ஐநூறுன்னா வெச்சிருப்பாங்க. அவங்ககிட்ட இருக்கற இந்த மாதிரி பத்து இருபதுன்னுதான் அவங்க அன்றாட வருமானமே.அதையும் இப்படி பழைய நோட்டா குடுத்தா பாவங்க. இதே இந்த மாதிரி நோட்டை பெரிய சூப்பர் மார்க்கெட்ல குடுத்தா வாங்கிக்கறானா. அவனுக்கு எவ்ளோ வருமானம் வருது. அப்டியே பேங்க்லதான் போக் கட்டுவான். அதுக்கே கொஞ்சம் கசங்கி இருந்தாலும் வாங்க மாட்டான். அதுமில்லாம இவங்க யெல்லாம் வியர்வை சிந்தி வெயில்ல ரோட்லன்னு அலைஞ்சு வியாபாரம் பண்ணறாங்க.துணி மூட்டைல வெக்கற நோட்டெல் லாம் இன்னும் நைஞ்சு, கசங்கித் தான் போகும். சின்ன வியா பாரிங்ககிட்ட நீங்க தரும் போதாவது முடிஞ்ச அளவு நல்ல ரூபா நோட்டையேதான் தாங்களேன். ஏதாவது நோட்டு செல்லுமான்னு டவுட் இருந்தா பேங்க்ல போ மாத்திக்கலாம் இல்ல. இவங்க கிட்ட ஏன் தள்ளறீங்க" அப்படின்னு.

அன்னைக்கு அப்படித்தான் எங்கிருந்தோ ஒரு இருநூறு ரூபா நோட்டு கைக்கு வந்துடுச்சு. தண்ணில விழுந்து காயவெச்சு நைஞ்சு போன மாதிரி இருந்தது. சூப்பர் மார்க்கெட்ல அதைக் கொடுத்தப்போ ‘இதெல்லாம் தராதீங்க

சார்’ன்னு மூஞ்சில அடிச்ச மாதிரி திருப்பித் தந்துட்டான். அதுக்கப்பறம்தான் ட்ரெயின்ல சென்னை போகும்போது விழுப்புரத்துல இட்லி வாங்க றதுக்கு அந்த நோட்டை கொடுத்தேன்.ரெயில்வே ஸ்டேஷன்ல எல்லாம் நிறைய வியா பாரம் நடக்கும் ஒவ்வொரு நோட்டையும் யாரும் உத்து உத்து பாத்து வாங்க மாட்டாங்க. ஈஸியா செலவழிஞ்சுடும்னு நினைச்சு மெனக் கெட்டு அதை எடுத்துத் தந்தேன். அந்த ஆளு மீதி சில்லறையை மாத்திட்டு வரேன்னு

சொல்லிட்டுப் போக ட்ரெயின் கிளம்பிடுச்சு.என்ன பண்றது அவ்வளவுதான்னு விட்டுட் டேன். ‘நீங்க மட்டும் வேணும்னே அந்த நோட்டை தந்தீங்க இல்ல. அதான்’ அப்ப டின்னு சுகந்தி இடிச்சா. அது சரி, நான் என்ன பண்ணேன்.

ஆனா பாருங்க, இன்னைக்குத் திரும்ப ட்ரெயின்ல வந்துட்டு இருக்கும்போது, விழுப்புரம் ஸ்டேஷன்ல அந்த ஆளே ஓடிவந்து மீதியைத் தந்துட்டாரு. ‘பாத்தியா நாம நேர்மையா உழைச்சா அந்த காசு வேறெங்கே யும் போகாது’ன்னு பெருமையா சுகந்திகிட்ட சொல்லிட்டு இருக்கும்போதுதான் அந்த ஆளுக்குப் பின்னாடியே வந்த இன்னொரு பையன் அவரைத் திட்டினது காதுல விழுந்தது.

ஏண்ணே... நான்தான் அன்னைக்கே

சொன்னேன்ல, அந்த நோட்டை வேணும்னே அந்த ஆளு கொடுத்துருக்காருன்னு. அந்த நோட்டு செல்லாதுன்னு எனக்குத் தோணிச்

சுண்ணே, அதான் அப்படிச் சொன்னேன். உங் களுக்குப் புரியலை. சரி, ட்ரெயினே போடுச்

சுன்னு விட்டுட்டேன். நான் தெளிவா சொல் லிருக்கணும். நீங்க என்னடான்னா இப்போ வந்து மீதிய கொடுத்துட்டீங்க. அட போங் கண்ணே."

அதுக்கு,ராஜா உனக்கொண்ணு தெரியுமா? அந்த இருநூறு ரூபா நோட்டு அன்னைக்கு பாக்கெட்ல இருந்து எடுத்தப்போவே கிழிஞ்சிருச்சு. ஆனாலும் அது என்கிட்டே வந்தப்பறம்தான கிழிஞ்சது. அதுக் காக நான் தரவேண்டிய மீதிய தராம இருக்க முடியுமா? அப்படின்னு சொல்லிட்டு நடந்து போயிட்டு இருந்த அந்த ஆளை, இல்லை பெரியவரை ஜன்னல் வழியா பிரமிப்பா பாத் தேன். சுகந்தி என் தோளை ஆதரவா தட்டிக் கொடுத்தா. அவளுக்குத் தெரியும், இப்போ நான் என்ன கத்துக்கிட்டேன்னு.

அடுத்த நாளு வீட்டு வாசலுக்கு வந்து பூவை நீட்டினவங்களுக்கு ‘இருக்கறதுலயே’ நல்ல அம்பது ரூபா நோட்டை நீட்டின என்னை ஆச்சர் யமா பாத்தாங்க பூக்கார காமாட்சி பாட்டி. தி

Post Comment

Post Comment