வேலிமீனா சுந்தர் - தமிழ்உச்சிவெயில் மண்டை யைப் பிளந்து கொண்டிருந்தது. வெக்கையின் ரணம் திகுதிகு வென உடலெங்கும் பரவிப் படர்ந்தது. வியர்வை நசநசத்த உடம்பில் அப்படியொரு

சொல்லமுடியா எரிச்சல். வழிகிற வியர்வை யின் ஓட்டம் உடம்பில் ஒரு பூச்சி ஊர்வதைப் போல அவளுக்குத் தோன்றியது.

‘இந்தக் காத்தும் புழுக்கம் தாங்காம எங்கா வது ஓடி ஒளிஞ்சிடுச்சோ என்னவோ?’ என்று அலுத்துக் கொண்டாள் அஞ்சலை. பேருந்து நிலைய இடது ஓரம் வாங்கி வைத்திருந்த காகறிப் பையுடன் நின்று முந்தானையை விசிறியாக்கிச் சமாளித்துக் கொண்டிருந்தாள். புழுக்கத்தில் வியர்க்கிறதா? அல்லது மனப் பதற்றத்தில் வியர்க்கிறதா என்று கண்டறிய முடியாத நிலையில், அவள் ஊர் வழியாகச் செல்லும் மன்னார்குடி பேருந்தை எதிர் நோக்கிக் காத்திருந்தாள்.

காலையில் திருத்துறைப்பூண்டி சந்தைக்கு வந்த பிறகுதான் அவளுக்குச் செதி தெரிந் தது. இல்லையெனில் வந்திருக்கவே மாட்டாள். பிள்ளைகளைவிட அவளுக்கு எதுவும் முக்கியமில்லை. சந்தையில் காகறிகளை வாங்கிக் கொண்டிருந்தபோதுதான் ஒரு கடை யில் கூட்டமாக நிற்பதைக் கண்டு என்ன வென்று விசாரித்தாள்.

விவரம் அறிந்து இவளும் கூட்டத்தை விலக்கி எட்டிப் பார்த்தாள். அடுத்த நொடி அதிர்ச்சியில் ஆடிப்போவி ட்டாள். உறைந்து போன நெஞ்சில் கைவைத்தபடி பதற்றத்

துடன் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஆழ்குழாக் கிணற்றில் விழுந்திருந்த

சிறுவன் கைகளை உயர்த்தி ஆட்டி முனகியபடி அழுதுகொண்டிருந்தான். அழுகையினூடே அம்மா... அம்மா..." என்ற அவனின் குரல் இரண்டடி அகலமுள்ள கிணற்றுக்குள் இரு நூறாவது அடியில் சிக்கிச் சிதறிக் கொண் டிருந்தது. குழந்தைக்குத் தைரியமூட்ட அவனின் அம்மாவைப் பேச வைத் திருந்தார் கள். அம்மா வின் குரல் குழந்தைக்குக் கேட்கும்படி ஏற் பாடுகள் செதிருந் தனர்.

அம்மா நிதானமில்லாமல் தலைவிரி கோல மா யாரோ கைத்தாங்க, நின்று கொண்டிருந் தாள். அவள் வா அனிச்சையாக உளறிக் கொண்டிருந்தது. நான் அம்மா இருக் கேன்ம்மா உன்னயக் காப்பாத்திடுவேன்டி" என்று கிழிந்த தொண்டையில் அந்தத் தா சோல்லிக் கொண்டேயிருந்தாள்.

அஞ்சலை வாவிட்டுக் கதறிவிட்டாள். இனி ஒரு நிமிடமும் அவளால் அங்கு நிற்க முடியாது என்ற நிலைமையில் வாங்கிய கா கறிகள் போதுமென்று பேருந்து நிலையம் நோக்கிப் பதற்றத்துடன் நடக்கத் தொடங்கி விட்டாள்.

இன்றைக்குப் பார்த்து இந்தப் பேருந்தும் எங்கே போத் தொலைத்தது என்று தெரிய வில்லை. அஞ்சலைக்கு வீட்டில் தனியாக விட்டு வந்திருந்த தன் பிள்ளைகள் நினைவு படுத்தத் தொடங்கிற்று. ஆழ்குழாக் குழந் தையின் அழுகையொலி பேருந்து நிலைய இரைச்சலையும் தாண்டிக் காதில் ஒலித்துக் கொண்டேயிருந்தது. தன் குழந்தையே கிணற் றில் விழுந்து தத்தளிப்பது போன்று அவளுக்கு ஏனோ கற்பனை ஓடியது. அவள் நடுநடுங்கிப் போவிட்டாள்.

ஏற்கெனவே தான் சிதைந்து சின்னாபின்ன மாகி நிற்பதாகவும் இதுபோன்ற துன்பத்தைத் தாங்கும் மனநிலை தனக்கு இல்லையே என்றும் அவள் வேண்டாத தெவங்களை யெல்லாம் வேண்டிக்கொண்டு நின்று கொண் டிருந்தாள்.

அஞ்சலையின் கணவன் செம்மணி ஒரு வருடத்திற்கு முன்புதான் இறந்து போயிருந் தான். எதிர்பாராத இழப்பு. அஞ்சலையால் இன்றும் அந்தப் பாதிப்பிலிருந்து வெளிவர முடியவில்லை. பல நேரங்களில் அவனுடன் வாழ்ந்த பதினொரு வருட வாழ்க்கை நினைவு களில் படுத்திக்கொண்டிருந்தது. செம்மணி யோடு அவள் பகிர்ந்துகொண்ட அன்பின் விளைவா விளைந்து நிற்கும் இரண்டு குழந்தைகளையும் அணைத்தபடி தனக்குள் கதறுவாள்.

செம்மணி தன் மனைவியின் மீது அப்படி யொரு அன்பைச் செலுத்திக் கொண்டிருந் தான். அவளைத் தாங்கு தாங்கென்று தாங்கு வான்.

ஒரு வகையில் அஞ்சலை அவனுக்கு மாமன் மகள்தான். செம்மணி அம்மா லோகாம் பாள் அவள் பெற்றோருக்கு ஒரே பிள்ளை. லோகாம்பாளின் பெரியப்பா மகன்தான் அஞ்சலையின் அப்பா திருவேங்கடம். லோகாம்பாளும் திருவேங்கடமும் ஒன்றாப் பிறந்த அண்ணன் தங்கைகளை மிஞ்சுமள விற்கு அவர்கள் இறக்கும்வரை வாழ்ந்திருந் தனர். அண்ணன் தங்கை பாசத்தில் யாருக்கும் அவர்கள் சளைத்தவர்களில்லை.

லோகாம்பாள் திருமணத்திற்குப் பிறகு அண்ணன் வீட்டில் சென்று வாரக் கணக்கில் தங்கிவிட்டு வருவாள். அப்போதெல்லாம் செம்மணியும் கூட வருவான். தன் மாமன் மகளுடன் சிறு பிள்ளையா இருக்கும் தருணத்திலிருந்தே ஓடியாடி விளையாடுவான். அஞ்சலைக்குச் செம்மணியுடன் விளையாடு வதில் கொள்ளைப் பிரியம். அவர்கள் விளை யாடுவதைப் பார்த்து அண்ணனுக்கும் தங் கைக்கும் அத்தனை பேரானந்தம். அண்ணியும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு பேச்சுப் பழக்கம் போடுவார்கள். ஒரே கிண்டலும் கேலியுமாப் பொழுது கழியும்.

வளர வளர செம்மணியும் அஞ்சலையும் ஒருவரையொருவர் விரும்பத் தொடங்கினர். இதையறிந்த குடும்பத்தினருக்கு அத்தனை மகிழ்ச்சி. இரண்டு குடும்பங்களும் மன மொத்து இருவரையும் இல்லற வாழ்வில் இணைத்து வைத்தனர்.

செம்மணிக்கு விவசாய வேலைகள் அத்துப் படி. அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செவான். நாற்று பறிப் பது, ஏர் ஓட்டுவது, அறுவடை செவது, கதிர்க்கட்டு தூக்குவது, களத்தில் கதிரடிப்பது, மூட்டை தூக்குவது என்று யாவற்றிலும் திறமை கொண்டிருந்தான். அவனோடு

சேர்ந்து வேலை செவதற்கு ஆட்கள் போட்டி போடுவார்கள்.

அவன் எல்லா வேலையிலும் ஈடுபாடு கொண்டிருப்பதால் வயதானவர்கள் அவனு டன் வேலைக்குச் சென்றால், தங்களுக்கு அதிகம் வேலை தராமல் செது முடிப்பான் என்று கருதுவார்கள்.

அஞ்சலைக்குத் திருமணமான மறு வரு டமே பொன்னி பிறந்துவிட்டாள். அதன் பிறகு நான்கு வருடம் கழித்துத்தான் புவியர சன் பிறந்தான். ஆணொன்று பெண்ணொன்று என அமைந்ததில் அத்தனை பேரானந்தம் இருவருக்கும்.

வாழ்க்கை சீரான நிலையில் சென்று கொண்டிருந்தது. ஒரு வருடத்திற்கு முன்பு சென்ற வெள்ளாமை நேரத்தில் இப்படியொரு துயரம் நடக்குமென்று யார் நினைத்தார்கள்? களத்தில் கண்டு முதல் செயப்பட்ட நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. களத்திலிருந்து நான்கு வயல்களைத் தாண்டி சாலை அமைந்திருந்தது. அங்குதான் மூட்டைகளை ஏற்றிச் செல்லும் வண்டி நின்று கொண் டிருந்தது. களம் வரைக்கும் வண்டி வருவதற்கு வழியில்லை. களத்திலிருந்து மூட்டைகளை ஆட்கள்தான் தலையில் தூக்கிச் செல்ல வேண்டும்.

வேலை செது கொண்டிருந்தோரில் ஆறு பேர் சற்று வயதானவர்கள். அவர்களைப் போக மீதமிருந்த நான்கு பேரும் மாற்று மூட்டை போட்டுத் தூக்கிச் செல்லத் தயாரானார்கள். களத்திலிருந்து மூட்டை தூக்குபவர் வாக்காலைத்

தாண்டி கொண்டு தர வேண்டும். ஆகவே மற்ற மூவரும் வாக்காலுக்கு அந்தப் பக்க மா நின்றுகொண்டார்கள். தவிர மூட்டை தூக்குமிடத்தில் பலமான ஆள் நிற்க வேண் டும். அங்குதான் மூட்டையைக் கீழிருந்து தூக்கித் தலையில் குனிந்தபடி வாகா வாங்க வேண்டும். மற்றவர்களுக்கு இந்தச் சிரம மில்லை. அவர்கள் நேருக்கு நேரா நின்றபடி மூட்டையைத் தலைமாற்றிக் கொள்வதுதான். எல்லாவற்றையும் கணக்கிட்டுத்தான் செம் மணியை அங்கு நிறுத்தியிருந்தார்கள்.

மூட்டைகள் களத்திலிருந்து வண்டிக்குச் சென்று கொண்டேயிருந்தன. செம்மணி இயந்திரம் போல இயங்கி மூட்டையைக் கொண்டு அடுத்த ஆளிடம் தந்து கொண்டிருந் தான். களத்தில் வயதானவர்கள் ஒருபுறம் நின்று தூக்கிவிட்டுக் கொண்டிருந்தார்கள்.

இன்னும் பத்து மூட்டைகள் இருக்கும் நேரத்தில் எதிர்பாராதவிதமா அந்தச் சம் பவம் நடந்தது. மூட்டையைத் தூக்கிக் கொண்டு ஓட்டமும் நடையுமா வாக் காலைத் தாண்டி திரும்பவும் வரப்பில் ஏறும் இடத்தில் கொதகொதவெனச் சேறா ஆகி விட்டிருந்தது. வாக்கால் நீரில் கால் நனைத்த படி ஏறியதில் வழுக்கி நிலைதடுமாறிய செம் மணி அப்படியே குப்புற சாந்தான். தலை பக்கத்திலிருந்த எல்லைக்கல்லில் மோத அவன் தலைமேல் மூட்டை சாந்து கிடந்தது. எதிரே வந்தவன் இதைப் பார்த்து அயோ வென கத்தியபடி ஓட களத்திலிருந்தவர்களும் பதறியபடி ஓடி வந்தார்கள்.

வந்ததும் பதறப் பதற மூட்டையைத் தூக்கி அப்புறப்படுத்த ரத்தவெள்ளத்தில் மூச்சு பேச்சில்லாமல் கிடந்தான் செம்மணி.

ஐயோ செம்மணி..." என்று ஆண்களும் தலையிலடித்துக்கொண்டு அழ, சற்று நேரத் தில் பெரும் கூட்டம் கூடிவிட்டது. செம்மணி யைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார்கள். அங்கு மருத்துவர்கள் கைவிரித் தனர். எல்லாமும் ஒரு கனவைப் போல சற்று நேரத்தில் நடந்து முடிந்திருந்தது.

செதி கேள்விப்பட்டு அஞ்சலை அந்தரத் தில் பறக்கும் காகிதம் போல வந்து சேர்ந் தாள். வயல் தலைமாட்டிலிருந்து செம்மணி யைத் தூக்கி வந்தபோதே ஓடி வந்த அஞ்சலை நிதானமிழந்து அயோவெனச் சாய பக்கத்தி லிருந்த குழியில் மல்லாந்து கிடந்தாள். அவ ளுக்கு காலிலும் கையிலும் பலமான அடி. அருகில் நின்றவர்கள் தூக்கி நிறுத்த கையை அசைக்க முடியாமல் துடித்தாள். கணவன் துக்கத்தில் அவளுக்குத் தன்னைப் பற்றிய நிதானமில்லை. கை சற்று நேர்த்தில் நன்றாக வீக்கம் கண்டுவிட்டது.

செம்மணியை நெருப்புக்கு இரையாகக் கொடுத்துவிட்டு தன் கையை அசைக்க முடி யாமல் தவித்தாள் அஞ்சலை. கை நன்றாக வீக்கம் கண்டிருந்தது. அவளும் பார்க்காத வைத்தியமில்லை. மாவுக்கட்டுப் போட்டு எண்ணெ விட்டதில் முன்பைவிடச் சற்று பரவாயில்லை. எப்படியாயினும் கை முன் போலச் செயல்பட மறுத்தது. உள்ளுக்குள் விண்ணென்று தெறிக்கிறது. கையில் முன் போலத் தெம்பில்லை. இடது கை போயிருந் தாலும் பரவாயில்லை. வலது கை ஆனதில்தான் அவளுக்கு இன்னும் பெருத்த சோகமா ஆகி விட்டது.

சோந்த பந்தங்கள், வந்தவர்கள் போனவர் கள் எல்லாரும் துக்கம் விசாரித்துவிட்டுப் போவிட்டார்கள். இரண்டு சிறு குழந்தை களை வைத்துக்கொண்டு அஞ்சலை தவித்துப் போனாள். இரண்டும் நன்றாகத் தின்று பார்க் கும் வயது. வயல் வேலைக்குப் போகும் நிலையில் உடம்பு இல்லை. எல்லாவற்றையும் யோசித்துப் பார்த்தவளுக்குத்தான் இந்தக் காகறி விற்பனை பிடிபட்டது. காலையில் திருத்துறைப்பூண்டி சென்று சந்தையில் வாங்கி வந்தால் மாலையில் வீட்டிலேயே வியாபாரம் களைகட்டிவிடும். சமயத்திற்குத் தக்க கிழங்கு, சுண்டல் போன்றவற்றையும் செது விற்று வந்தாள்.

பெரிய அளவில் வருமானமில்லையென் றாலும் சாப்பாட்டிற்குச் சிக்கலில்லாமல் இருந்தது. காலையில் சந்தைக்குப் புவியரசன் எழுவதற்குள்ளாகச் செல்ல வேண்டும். இல்லையெனில் பெரும் கலவரம் நடத்தி விடு வான். பொன்னி ஓரளவு சூழலைப் புரிந்து கொண்டாள். அவளிடம் செதியைச்

சோல்லி அவளுக்குத் தின்பண்டங்களைக் கொடுத்துவிட்டுச் செல்லுவாள். மூன்று வீடு தள்ளியிருக்கிற பவுனம்மாள் கர்ப்பிணி என்ப தால் வேலைக்குச் செல்வதில்லை. அவளிட மும் சோல்லி வைத்திருந்தாள். பொன்னியைப் பவுனம்மாள் வீட்டிற்குச் சென்று தம்பியுடன் விளையாடிக் கொண்டிருக்கும்படி அறிவுறுத் தியிருந்தாள். தான் வரும்வரை பத்திரமாகத் தம்பியைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டு மென்று அவளிடம் மன்றாடிச் சோல்லிக் கொண்டிருப்பாள். பவுனம்மாளிடமும் திரும்பத் திரும்ப வலியுறுத்துவாள். திரும்பி வரும்போது பவுனம்மாளுக்குப் பிடித்த பண்டம் வாங்கி வந்து தருவாள்.

பலமான யோசனையில் தலையில்

கைவைத்தபடி உட்கார்ந்திருந்தவளுக்கு மன்னார்குடி செல்லும் பேருந்து வட்டமிட்டு நிற்கையில் கூட்டம் சிட்டுக் குருவிகளெனப் பறந்து பேருந்தை மொத்தது.

அடித்துப் பிடித்து ஏறி கூட்டத்தில் நசுங்கிய படி கோட்டூரில் வந்து இறங்கியபோது அவ ளுக்கு அப்பாடா என்று இருந்தது. விளங் காமல் போன வலது கையை நினைத்து நொந்தபடி பக்கத்திலிருந்த பெண்ணிடம் பையை இடதுபக்க இடுப்பில் தூக்கி வைக்க வேண்டினாள். இடதுகையால் பையை அணைத்தபடி வடக்குத் திசையில் அவள் பறக்கத் தொடங்கினாள்.

இங்கிருந்து அவள் கிராமம் நெருஞ்சினக் குடி இரண்டு கிலோ மீட்டர். நடந்துதான்

சென்றாக வேண்டும். நடையில் அப்படியொரு வேகம். நடக்கிறாளா, ஓடுகிறாளா என்ற குழம்புகிற நிலை. அவள் சென்று கொண் டிருந்தாள். மனத்தில் ஒரு இனம்புரியா படபடப்பு, ஆற்றாமை, பரபரப்பு, பரிதவிப்பு.

உடனே வீடு போச் சேரவேண்டும் என்று மனம் ஆலாத் தவித்தது. நா வறண்டு தொண் டைக்குழியில் சோட்டு ஈரப்பசையில்லை. நடுத்தொண்டையில் கிடுக்கி போட்டதைப் போல இறுக்கி அடைத்தது. மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்கிற்று. தண்ணீர் குடிக்க வேண்டும் போலிருந்தாலும் நிற்க மனமில்லை. தாங்கிக் கொண்டு நடக்க மனம் உந்தித் தள்ளிற்று. அப்போதைக்கு அவளுக்கு எப்போது குழந் தைகளைப் பார்ப்போம் என்பதைத் தவிர வேறு சிந்தனையில்லை.

தெரு முக்கிலேயே பல குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன. அஞ்சலை பதற்றத்துடன் அவர்களை நோக்கினாள். அங்கு தன் குழந்தைகள் இல்லாதது கண்ட அவளுக்கு மேலும் பதற்றம் கூடிற்று.

நேரா பவுனம்மாள் வீட்டிற்குச்

சென்றாள். வீடு அரவமில்லாமல் இருந்தது. அஞ்சலைக்கு அழுகையே வந்துவிட்டது. உடைந்த குரலில் அழைத்தாள்

பவுனம்மா... ஏ, பவுனம்மா..."

எந்தப் பதிலுமில்லை. வீடு திறந்துதான் இருந்தது. திரும்பவும் சற்று சத்தத்தைக் கூட்டி அழைத்தாள். அப்போதுதான் தூக்கத்தி லிருந்த பவுனம்மாள் உடம்பை நெளித்து, யாரு?" என்றாள்.

நான்தான் பவுனு. அஞ்சலையக்கா. எங்க என் புள்ளங்க?" என்றாள்.

இங்கதான்க்கா விளையாடிட்டு இருந்தா பொன்னி. புவிதான் உன்னயக் காணாம அழுதுக்கிட்டு இருந்தான். என்னமோ நல்லா அசதியா போயிட்டு. என்னைய அறியாம கண்ணசந்திட்டன்" என்று விளக்கம் சோல் லிக் கொண்டிருந்தாள் பவுனம்மாள். அஞ்சலை அதற்குமேல் அங்கு நிற்காமல்

சத்தமாகக் கூவினாள்.

ஏ, பொன்னி... ஏ, பொன்னி... அம்மா வந்திட்டண்டி. எங்க இருக்கீங்க?"

அவள் அழுகையினூடே வீட்டை நோக்கி ஓடினாள்.

எந்தப் பதிலுமில்லை. அவள் எதிரே வந்த குழந்தைகளிடமெல்லாம் கேட்டுப் பார்த்தாள். ஒருவரும் பார்க்கவில்லை என்றார்கள். அஞ்சலைக்கு ஆழ்குழாக் கிணற்றில் தவிக் கும் குழந்தையின் நினைவுகள் ஓடின. பதைத்து ஓடியவளுக்கு வீடும் பூட்டிக் கிடந் ததைக் கண்டு தன் குழந்தைகளுக்கு என் னவோ ஆகிவிட்டது என்று பயந்து நடுங்கி அவளின் குலதெவமான மின்னடியானை உச்சரித்துக்கொண்டு கொல்லைப் பக்கமாச் சென்றாள்.

அங்கே புங்கன் மரத்தடியில் பா விரிக்கப் பட்டு புவியரசன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். ஓடி, என் தங்கமே" என்று வாரிக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதாள். அவளுக்கு ஆனந்தமும் துக்கமும் கலந்து கண்ணீரா வடிந்தன. பிறகு பொன்னி எங்கேயென அழுகை விழிகளுடன் எதிரே நோக்கினாள். பொன்னி வாக்கால் ஓரமா இருந்த வேலியைச் சரிசெயும் பணியில் இருந்தாள்.

அம்மா டி.வி. பார்த்தியா? தம்பி மாதிரி ஒரு சின்னப்புள்ள போர் குழாயில விழுந்திட் டாம்மா. அவனைப் பார்க்கவும் எனக்குத் தம்பி ஞாபகமா ஆயிட்டு. இப்ப கோடையில பிரச்னையில்ல. அடுத்த வாரம் தண்ணி தொறந்திட்டா இந்த வாக்கா நிறைய வெள் ளமா வரும். தம்பி போயி அதுல இறங்கிட்டா என்னம்மா பண்றது? அதான் இந்தக் கருவ முள்ளுகளை வெட்டி வாக்கா பக்கமா உள்ள வேலிய அடச்சிப் போட்டுக்கிட்டிருக் கன். அப்பா இருந்தாலும் கவலையில்ல. இப்ப நாமதானம்மா எல்லாத்தையும் செ தாகணும்" பொன்னி கருத்தாப் பேசிக் கொண்டேயிருந்தாள்.

அஞ்சலை தொண்டையடைக்கும் துக்கத் துடன் பொன்னியை இழுத்து நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள். தி

Post Comment

Post Comment