பிரதமரின் வருகை:அ.தி.மு.க.வுக்கு சிக்னல்!அமிர்தா -தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகை அ.தி.மு.க. கூட்டணிக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைப் பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வருவது உறுதிசெயப்பட்டு அரசு விழாவாக நடத்த, இந்த நிகழ்ச்சியைக் கச்சிதமாக, தங்கள் பிரசாரத்திற்குப் பயன்படுத்திக்கொள்ள அ.தி.மு.க. அரசு முடிவு செது அதைப் பிரமாதமாக நடத்தியும் காட்டியிருக்கிறது.

இது ஓர் அரசு விழாவாக இருந்தாலும் இந்த விழாவில் பிரதமர் என்ன பேசப் போகிறார் என்பது குறித்து பலத்த ஆர்வம் நிலவியது. எதிர்பார்த்தது போலவே, தான் தொடங்கிவைத்த திட்டங்கள் குறித்துப் பேசிய பிரதமர் மோடி, தமிழக மக்களின் கவனத்தைக் கவரும் வகையில் மிக சாமர்த்தியமாகச் சில அரசியல் விஷயங் களையும் தொட்டுக் காட்டினார். அவரது

பேச்சில் தமிழகத்தின் மீது பா.ஜ.க. தனி அக்கறை கொண்டிருப்பதைப் போலவும் நிறைய நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது போலவும் ஒரு பிம்பத்தைக் கட்டமைத்தார்.

நிச்சயமாக இது அரசியல் கூட்டம்தான் என்பதைப்போல, ‘பிரதமர் சாதாரணமாக பேசியதற்கெல்லாம் பெரிய கைதட்டல் எழுந்தது. முதல் நாள் அ.தி.மு.க. கூட்டத்

துக்கு அழைக்கப்பட்டிருந்த மாவட்ட கட்சித் தலைமைகளின் கூட்டத்தில் முடிவு செயப் பட்டிருந்த விஷயம் என்பது புரிந்தது.

ஆனால், பிரதமரின் உரையில் இடம் பெற் றிருந்த சில தகவல்கள் முழுக்கவும் சரியானவை இல்லை. இலங்கையின் வடக்கு - கிழக்கில் தமிழர்களுக்காக 50,000 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டதைப் பற்றி பிரதமர் சுட்டிக் காட்டிப் பேசினார். ‘இது முழுக்க முழுக்க திட்ட மிட்டு, நிதி ஒதுக்கப்பட்டு நடத்தப்பட்டது முந்தைய ஐ.மு.கூ. ஆட்சியில். திட்டத்தை முடித்தது வேண்டுமானால் பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் இருக்கலாம். ஆனால், ஐ.மு.கூ. ஆட்சியில்தான் இதற்கான பணிகள் அனைத்தும் நடந்தன. அதேபோல 2013ல் கட்டி முடிக்கப்பட்ட மருத்துவமனையை 2017ல் திறந்து வைத்திருந் தார். அதுவும் ஐ.மு.கூ. ஆட்சியின் திட்டம்.

ஆவடியில் ராணுவ டாங்க் செவது அறை நூற்றாண்டாக நடக்கும் விஷயம். அவ்வப் போது புதிய மாடல்கள் செயப்படுவதும் அது ராணுவத்தில் இணைவதும் வழக்கமான நடைமுறை. அதைக் கடந்த வருடம் வடிமைத்த வாகனத்தை இப்போது அர்ப்பணித்திருப்பதாகச் சொல்வது என்பது அரசியல்.

தமிழக மீனவர்கள் பாதுகாப்பு குறித்துப் பேசிய பிரதமர், கடந்த ஜனவரி 18ஆம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்ட வர்களுக்கு அனுதாபம் கூட தெரிவிக்கவில்லை.

அதேபோல் கல்லணைக் கால்வா

திட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசிய பிரமதர் நரேந்திர மோடி, அவ்வையாரை மேற்கோள் காட்டி, விவசாயம் குறித்துப் பேசியவர்

விவசாயிகளுக்காக மத்திய அரசு கொண்டு வந்த சட்டங்கள் குறித்தோ, அது தொடர்பாக எழுந்திருக்கும் பெரும் போராட்டங்கள்

குறித்தோ எதுவும் பேசவில்லை.

இந்தக் கூட்டத்தில் ‘தேவேந்திரகுல வேளாளர் கள் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். தென்மாவட்டங்களில் வசிக்கும் 6 - 7 சமூகத்தினரை ஒன்றாக இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரில் அழைக்க வேண்டுமென்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்துவந்த நிலையில், இதனை மத்திய அரசு ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் விரைவில் இந்தக் கோரிக்கை சட்டமாக்கப்படும் என்றும் தெரிவித் தார். இது நிச்சயமாக எதிர்வரும் தேர்தலில் அவர்களைக் கவர செயப்பட்ட அறிவிப்பு.

இப்படி ஏன் பிரதமர் ஓர் அரசுக் கூட்டத்தில் இதனை அரசியல் செய வேண்டியிருந்தது? அதற்கு முக்கிய காரணம் தமிழகத்தில் அண்மை யில் சசிகலா விடுதலை ஏற்படுத்தியிருக்கும் சலசலப்புதான்.

சசிகலா விடுதலைக்கு முன்பு வரை அ.தி.மு.க.வின் தட்பவெட்ப நிலை சீராகவே இருந்தது. அவரின் விடுதலையையொட்டியே அரசியல் வியூகம் சூடுபிடிக்க ஆரம்பித்தது. ஏழு மணி நேரத்தில் வந்து சேரவேண்டிய பயணத்தை 23 மணி நேரமாக்கியதும் சரி, விடுதலை பெற்றுத் திரும்பும் தியாகி போல் பிம்பம் அமைத்ததும் சரி, ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் வாகன அணிவகுப்பு, (இது எல்லாம் பணம் கொடுத்து ஏற்பாடு செதது என்று சொன்னாலும் இது விசுவாச சொந்த சாதி வாக்குகள் என்பதை மறந்துவிடக் கூடாது.) ஜெயலலிதா நினை விடத்தை எடப்பாடி மூடிவிட்டாலும், யாரும் எதிர்பாராத வகையில் ஜெயலலிதாவின் ஆசான் எம்.ஜி. ஆர். வீட்டுக்குச் சென்று அங்கு மரியாதை செலுத்தியதும் சரி, சசிகலா காரில் அ.தி.மு.க. கொடி பயன்படுத்தக்கூடாது என்று சிக்கல் வந்தபோது ‘நான்தானே பயன்படுத்தக் கூடாது என் வட்டச் செயலாளர் வண்டியில் கொடியோடு வருவேன்’ என்று வந்ததும் சரி, அ.தி.மு.க.வினர் அதிர்ந்து போனது நிஜம். எடப்பாடி குழுவுக்குப் புளியைக் கரைக்கத் தொடங்கியது.

இது தேர்தலில் அ.தி.மு.க.வின்

செல்வாக்கைக் குறைக்கும். நாம் உடனடியாக ஏதாவது செது கட்சியின் போக்கை மாற்ற வேண்டும் என்ற தமிழக பா.ஜ.க. விடுத்த

அவசரச் செதியின் விளைவுதான் பிரதமர் பங்கேற்ற இந்த அரசு விழா.

தமிழக பா.ஜ.க.வால் முடிவு செய முடியாத கேள்விகளான அ.தி.மு.க.வின் உறவைத் தவிர்த்து அ.மு.மு.க.வுடன் கூட்டணி அமைக்கலாமா அதில் பன்னீர் செல்வத்தை இணைத்து அவரை முதல்வராக அறிவிக்க லாமா? இதை நேரடியாக முதல்வருடன் பேசியபின் பிரதமர் கட்சிக்கு வழிகாட்ட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தங்கள் தலைமைக்கு வேண்டுகோள் வைத்திருந்தது.

பன்னீர்செல்வத்தின் நிலை

சசிகலா வருகையையொட்டி பன்னீர்செல் வத்தின் அரசியல் செயல்பாட்டில் ராஜதந்திர மாற்றங்கள் நிகழத் தொடங்கியது. தனியாக அவரின் ஆதரவாளர் கொடுத்த பத்திரிகை விளம்பரம் மற்றும் போஸ்டர்களில் முதலில் எடப்பாடி பெயரும் போட்டோவும் நீக்கப்பட்டு தனி தர்பாராக வெளியிடப்பட்டது. அந்த விளம்பரங்களில் வாழும் பரதன் என்ற அடைமொழியும் ஒன்று. அதாவது பரதன். அண்ணன் வரும் வரை நாட்டை ஆட்சி செது மீண்டும் ராமனிடம் ஒப்படைத்ததைப் போல் சசிகலாவின் விசுவாசியாகக் காட்டிக் கொள்ள விரும்பும் பன்னீர்செல்வம் மறைமுகமாக, ‘நானும் பரதன்தான். வாங்க அம்மா, உங்கள்

சார்பில் நான் முதல்வராகயிருப்பேன்’ என்ற தொனி வெளிப்பட்டது. இந்த நிலைப்பாட்டுக்கு பா.ஜ.க.வின் தில்லி தலைமை உதவும் என அவர் நம்பிக்கொண்டிருந்தார்.

ஆனால், நேரு விளையாட்டு அரங்கத்தில் தனது உரையை முடித்த பிரதமர் மோடி, புறப் படுவதற்கு முன்னதாக, அரங்கில் தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறையில் பன்னீர் செல் வத்தைத் தவிர்த்து முதல்வர் பழனிசாமியுடன் தனியாக ஆலோசனை நடத்தியிருப்பதில் பா.ஜ.க.வின் நிலை தெளிவாகிவிட்டது. அவர்கள் பன்னீர்செல்வம் என்ற மண் குதிரையை நம்பித் தேர்தல் ஆற்றில் தயாராக இல்லை.

நிலைமையை உணர்ந்த பன்னீர் செல்வம் மறுநாள் கோவையில் நடந்த கூட்டத்தில் எடப்பாடிதான் நமது முதல்வர் வேட்பாளர் என்பதை அறிவித்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியில் இறங்கிவிட்டார். தன் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள எதையும் தியாகம் செதுவிடும் தலைவர் அவர்.

தேவேந்திரகுல வேளாளர் அறிவிப்பு

இப்போது ஏன்?

பிரதமர் சொல்விளையாட்டில் கலைஞரை வென்று விடுவார்போல் உள்ளது. அவர் பேசும்போது தேவேந்திர என்ற சொல்லும் நரேந்திர என்ற சொல்லுக்கும் எவ்வளவு ஒற்றுமை பாருங்கள் என சிலாகித்து... வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் முறையாக அறிவிப்பு வரும் என உத்தரவாதம் அளித்து விட்டார். தமிழகத்தில் பா.ஜ.க. மேல் சாதியினர் கட்சி அவர்கள் தலித் இனத்தை ஒதுக்கு கிறார்கள் என்ற இமேஜை உடைத்து, நாங்களும் உங்களில் ஒருவர்தான் என்ற எண்ணத்தை வலியுறுத்த கடந்த இரண்டு ஆண்டுகளாக முயற்சி செது கொண்டிருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் தமிழக பா.ஜ.க. விற்கு தலித் இனத் தலைவர், செயற்குழுவில் பல பட்டிய லினத்தவர் எல்லாம். அதன் தொடர் விளைவு

தான் என்றோ அமித்ஷாவிடம் கொடுத்த கோரிக்கைக்கு இப்போது இந்த அறிவிப்பு.

இது வோட்டரசியலில் பலனளிக்குமா?

மோடி தலித்துகளை இந்த அறிவிப்பின் மூலம் கவர்ந்துவிட்டார் என்று தமிழக பா.ஜ.க. மகிழ்ந்தாலும் வெறும் பெயர் மாற்றத்தைத் தவிர வேறு எந்தப் பலனுமில்லாத இந்த அறிவிப்பு அந்தக் குழுவின் அனைத்துப் பிரிவின் வோட்டுகளை ஈர்க்குமா என்பது சந்தேகமே. காரணம் அவர் களில் ஒரு பிரிவினர் தங்களைப் பட்டியலினம் என்று அடையாளப்படுத்துவதை விரும்பவில்லை.

ஆன்மிக அரசியலின் அடுத்த பக்கம்.

பா.ஜ.க.விற்கு ஆன்மிகத் தலைவர்களின் ஆசி உண்டு என்பது உலகம் அறிந்த விஷயம். ஆனால் தமிழ்நாட்டில் சாமியார்கள்கூட சாதி யின் பிரதிநிதியாக இயங்குவதைக் காண முடியும். அது காஞ்சி மடமாகட்டும், வேதாத்ரி மகரிஷி ஆகட்டும், பங்காரு அடிகளார் ஆகட்டும். சாதியின் சாயல் இல்லாமல் இருக்காது. ஆனால் தமிழகத்தில் பா.ஜ.க. உயர் சாதி சாமியார்களைத் தான் கொண்டாடுகிறது என்ற எண்ணம் பரவலா யிருந்தது. அதைச் சரிசெய வன்னியர்கள் அதிகம் கொண்டாடும் சாமியார் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரை பிரதமர் நிகழ்ச்சி முடிந்து திரும்பும்போது வரவழைக்கப்பட்டு சந்தித்திருக் கிறார். இது வன்னியர்களின் வோட்டுக்களை ஈர்க்கும் என தமிழக பா.ஜ.க. தலைவர்கள் நம்புகின்றனர்.

சசிகலாவின் நிலைப்பாடு

சசிகலா என்ற புயலின் மையம் இப்போது அமைதியாக இருக்கிறது. அது நகரும்

திசை, அதன் வேகம் என்பது தேர்தலோடு முடியாது. கொத்துக் கொத்தாக எத்தனை பேர் சசி பக்கம் திரும்புகிறார்கள் என்பதைப் பொறுத்தே எடப்பாடி அ.தி.மு.க. அரசின் ஆயுசு. பணம், பதவி என்ற ஆயுதங்களை எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்று ஜெயலலிதாவிற்கே ட்யூஷன் எடுத்தவர் சசிகலா. வடமாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்த அதே வியூகம் சசிகலாவுக்குத் தெரியாதா என்ன? சிஷ்யன் எடப்பாடியை குரு சசிகலா மிஞ்சுவாரா? காத்திருந்து பார்க்க வேண்டிய காட்சி இது.

மொத்தத்தில் பிரதமர் வருகையினால் தெளிவாகியிருக்கும் விஷயங்கள்:

* பிரதமர் கலந்துகொண்ட அரசு விழாவில் அவருடன் கூட்டணியிலிருக்கும் முக்கிய கட்சிகளான பா.ம.க., தே.மு.தி.க.வின் தலைவர்கள் கலந்துகொள்ளவில்லை. தங்கள் பிரதிநிதிகளை மட்டும் அனுப்பி கூட்டணி உடையலாம் என

சிக்னல் கொடுத்திருக்கிறார்கள்.

* ஊசலாட்டத்தில் இருந்த பன்னீர் செல்வம்- எடப்பாடி உறவு உரசலில் நாங்கள் எடப்பாடி பக்கம்தான் என்று பா.ஜ.க. தலைமை புரிய வைத்து விட்டது. அதன் முதல் வேலையாக

சசிகலாவை நிரந்தரமாக அ.தி.மு.க.விலிருந்து

நீக்க வேலைகள் நடக்கின்றன.

இது தேர்தலில் பா.ஜ.க.விற்குப் பலனளிக் குமா? இதற்குப் பதில் : ‘தமிழக வாக்காளர்கள் புத்திசாலிகள்’. சி

Post Comment

Post Comment