எழுதத் தூண்டும் சௌமா விருது!


P. சந்துருநூல்கள் என்பது ஒரு இனத்தின் கலா

சாரத்தை, பண்பாட்டை, வாழ்க்கை முறையை, தொன்மத்தைக் காக்கும் ஆவணம் மட்டுமல்ல, அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் கல்வெட்டும்கூட.

அதை எழுதிய எழுத்தாளனை வாழும்போதே கௌரவிக்க வேண்டும், பாராட்ட வேண்டும், மக்களிடம் அந்த எழுத்தைக் கொண்டு

சேர்க்க வேண்டும். அந்தப் பணியை ஒரு எழுத்தாளன் செய முடியாது. அதை ஒரு இலக்கிய அமைப்புதான் செய முடியும், இலக்கியப் புரவலர்தான் நிறைவேற்ற முடி யும். அப்படியான பணி எழுத்து நிகரானது எனலாம்.

அப்படியான ஒரு நிகழ்வு திருச்சி, மணப்பாறையில் சமீபத்தில் சௌமா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை வெகு சிறப்பாக நிகழ்த்தியது. விழா ஒருங்கிணைப்பாளர்களாக முனைவர் கவிஞர் தமிழ்மணவாளன் மற்றும் கோ.நவமணி சுந்தரராஜ் செயல்பட்டனர். இந்தப் பதிவு அதுகுறித்தானதுதான்.

ஒருங்கிணைப்பாளர் முனைவர் தமிழ்மண வாளனிடம் இந்த விழா குறித்துக் கேட்டபோது, சென்ற ஆண்டு நிகழ்த்தியது போலவே இந்த முறையும் முகநூலில் சௌமா விருதுக்கு அறிவிப்பைச் செது நூல்களை அனுப்பக் கோரி னோம். நூற்றுக்கணக்கான நூல்கள் வந்து குவிந் தன. அதிலிருந்து முதல் கட்ட, இரண்டாம் கட்ட மாக நூல்களைத் தேர்வு செதோம். ஒரு சில அமைப்பில் நிலவும் குழு அரசியல் குறிப்பிட்ட நவீன இலக்கிய நூல்களுக்கு மட்டும் பரிசு என்று இல்லாமல் இலக்கியத்தின் எல்லா வகைப்பாட்டி லிருந்தும் நூல்களைத் தேர்வு செதோம்.

15 படைப்பாளிகளுக்குத் தலா

ஐந்தாயிரம் பரிசு. விழாவுக்கு வந்து போக பயணச் செலவுக்கு ஆயிரம், தங்குவதற்கு ஓட்டல் அறை என எல்லா ஏற்பாடும் செதோம். விழாவில் அவரவர் உருவம் பொறித்த கேடயம், பொன்னாடை, தலையில் கிரீடம் வைத்து அவரின் நூல் பற்றிய அறிக்கை வாசிப்பு இப்படியாக விழா ஏற்பாடு நடந்தது" என்றார்.

இருநூறுக்கு மேற்பட்ட பொதுமக்கள் கல்யாண மண்டபத்தில் குழுமிய நிகழ்வில் இயக்குநரும் எழுத்தாளருமான பாரதி கிருஷ்ணகுமார் வெற்றி பெற்றவர் களை வாழ்த்திச் சிறப்புரை நிகழ்த்தினார். வந்திருந்த ரசிக வாசகர்களுக்கு இரவு உணவுடன் கூடிய

விழா.

இவ்வளவு பொருட்செலவில் ஒரு இலக்கிய விழா தேவையா? இந்தக் கொண்டாட்டம் ஏன்? என்று திருச்சி மணப்பாறை, லஷ்மி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளரும் லயன் கிளப்பின் மாவட்ட கவர்னராகவும் சௌமா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளையின் நிறுவனருமாகவும் செயல் புரிந்து வருபவர் சௌமா ராஜரத்தினத்திடம் கேட்டபோது,

முதலில் வாழும்போதே ஒரு எழுத்தாளன் கௌரவிக்கப்பட வேண்டும் என்பதே முதல் குறிக் கோள். நான் எழுத்தாளன் அல்ல. ஆனால் சிறந்த

வாசகன். இலக்கியத்தின் தேவை அறிந்தவன். அதனால் போட்டிக்கு வந்த நூல்களை எங்கள் பள்ளி மாணவர் கள் படிக்கும் வகையில் அதை நூலகத்தில் வைத்து அந்த நூல்கள் குறித்து அவர்களிடம்

சொல்கிறோம். படிக்கத் தூண்டு கிறோம்.

மேலும் படைப்பாளி களுக்கு மட்டு மல்லாது, இந்த ஆண்டு இலக்கி யத்தில் சேவையாற்றும் நான்கு ஆளுமைகளுக்கு மதிப்புறு விருது வழங்கி அவர்கள் பணியைச்

சிறப்பித்தோம்.

சொல் அதுவே செயல் என்பது எப்படி சரியோ, அதே போல் சொல்லைக் கொண்டாடும் செயலும் முக்கியம் இது. வருடந்தோறும் தொடரும். அடுத்த வருடம் இன்னும் நிறைய பேர் போட்டியில் கலந்துகொள்ள வேண்டும், பரிசுபெற வேண்டும்.

கம்பனுக்கு - சடையப்ப வள்ளல், அவ்வைக்கு - அதியமான் போல், இப்படி இன்றைய இலக்கிய வாதிகளுக்கு இப்படியான புரவலர்களும் அமைப்பு களும் அவசியம். நல்ல இலக்கியத்தின் பொருட்டு இதைப் பாராட்டுவோம். சி

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :