விளிம்புநிலை அழகியல்


பொன்ஜி
பி.கே.பிரசாத்பி.கே.பிரசாத் தொழில்முறை புகைப்படக் கலைஞர் அல்ல. முழு நேர ஹாபியாகப் படம் எடுப்பவர். விளிம்புநிலை மக்களை, குறிப்பாக இளம் சிறார்களை, அவர்களது அழகிய வாழ்க்கையை, கலையை, கலாசாரத்தை, வாழ்விடத்தை வளைத்து வளைத்துப் படம்பிடிப்பதில் அலாதிப் பிரியம் கொண்டவர். இவர் ரயில்வே துறையில் அலுவலகக் கண்காணிப்பாளராகப் பணியாற்றினாலும், ஓவு நேரங்களிலும் விடுமுறைக் காலங்களிலும் நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டங்கள் பயணித்து புராதனச் சின்னங்கள், இயற்கைக் காட்சிகளைப் படம்பிடிப்பவர். அதனால்தான் இவர் தம் பெயரை டிராவலிங் மாங்க் ((Travelling Monk & - பயணத் துறவி) என அழைத்து மகிழ்வதில் கொள்ளைப் பிரியம் கொண்டவர். இதுவரை ஆயிரக்கணக்கான போட்டோஸ் எடுத்துள்ளார்.

அண்மையில் பிரெஞ்சு ஆவு நிறுவனம் F. I. P. (French Institute of Pondicherry)சார்பில் நடத்திய போட்டியில் இவரது போட்டோ இரண்டாவது பரிசு பெற்றிருக்கிறது.

நான் புரொஃபஷனல் போட்டோகிராபர் இல்லை. பேரார்வத்தின் காரணமாகத்தான் எளிய மக்களையும் அவர்களது தொழிலிடங்களையும் படம்பிடிக்கிறேன். அவர்களது வாழ்வில் மறைந்து கிடக்கும் அழகியலைப் பார்க்கிறேன். அதைப் படம்பிடிப்பதில் எனக்கு ஒரு மனநிறைவு ஏற்படுகிறது. இந்தப் போட்டிக்கு நண்பர்களின் விருப்பத்தின்பேரில் நான் எடுத்த புகைப்படத்தை ஊ. ஐ. க.க்கு அனுப்பினேன். மாலை நேரத்தில் விவசாயிகள் இருவர் தலையில் சுமையோடு செல்லும் காட்சிப்படம், ‘லேண்ட்ஸ்கேப் அண்ட் பார்மிங்’ என்ற தலைப்பில் பரிசு பெற்றது. மேலும் ஊ.ஐ.க. நடத்திய புதுவை கடற்கரைச்சாலையில் உள்ளூர் உணவுத் திருவிழா கண்காட்சியில் எனது ஆறு போட்டோக்களும் இடம் பெற்றது மகிழ்ச்சியாக இருந்தது" என்றார் பி.கே.பிரசாத்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :