அகற்றப்பட வேண்டியது அ.தி.மு.க. அரசு மா.சுப்பிரமணியன்பொன்.மூர்த்தி -ஆளுங்கட்சி செயத் தவறியது என்ன?

அ.தி.மு.க. ஆட்சியைப் பொறுத்த வரை குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகப் பொறுப்பேற்ற கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத் துக்கு அவர் செதது என்ன என்று கேட்டால், ஓரளவு அறிந்தவர்களுக்குக் கூட தெரியும், அவர் தமிழ்நாட்டுக்காக ஒன்றுமே செயவில்லை என்று. அந்தளவுக்குச் செயல்பாட்டில் ஜீரோ மதிப்பிலான அரசாகத்தான் இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக் கிறது. அப்படி அவர்கள் செகிற எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதில் ஏதாவது பணம் பண்ணுவதற்கான வாப்பிருந்தால் மட்டுமே செகிறார்கள் என்பது ஊரறிந்த விஷயம்.

சென்னையைப் போன்ற பெரு நகரங்கள் ஸ்மார்ட் சிட்டி என்கிற வகையில் மத்திய அரசாங்கத்தின் நிதி கொண்ட திட்டங் களைத் தொடங்குகிறார்கள். ஆனால், அப்படிச் செயல்படுத்துகிற எந்தத் திட்டமும் மக்களுக்குப் பயன்தரக்கூடிய திட்டங்களாக இல்லை. குறிப்பாக,

சென்னையைப் பொறுத்தவரை ஏற் கெனவே தி.மு.க. மாநகராட்சி நிர்வாக காலத்தில் போக்குவரத்து நெரிசலைச் சரிசெவதற்கு சென்னை சாலைகளெல்லாம் அகலப்படுத்தப்பட்டன. குறிப்பாக, ஸ்பர்டாங்க் சாலை, அண்ணாநகரில் பல்வேறு தெருக்கள் கிட்டத்தட்ட இருபது அன்றைக்கு சென்னை மாநகரில் பிரதான சாலைகள் அகலப்படுத்தப் பட்டது. ஆனால் இன்றைக்குப் பாருங்கள், எல்லா சாலைகளையும் குறுகலாக்கிவிட்டு நடை பாதைகளைப் பெரிதாக்கிக் கொண்டிருக்கிறார் கள். அசோக் நகர், எம்.ஜி.ஆர். நகர், தியாகராய நகர், உஸ்மான் சாலை போன்ற சாலைகளெல்லாம் மிகச் சிறிய அளவில் குறுக்கி, போக்குவரத்து நெரிசல் என்பது பெரிய அளவில் கூடியிருக்கிறது.

கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில்

சென்னை மாநகராட்சியின் சார்பில் மேம் பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று 15க்கும் மேற்பட்ட மேம்பாலங்கள் கட்டி முடிக்கப் பட்டன. அதற்கு முன்னால் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் மேயராக இருந்தபோது, பத்து மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டன. சிறு

சிறு மேம்பாலங்கள் நூற்றுக்கணக்கானவை கட்டப்பட்டன. ஆனால், அ.தி.மு.க. பொறுப் பேற்ற நாள் முதல் கடந்த பத்தாண்டுகளில் ஒரே ஒரு சிறிய பாலத்துக்குக்கூட இவர்கள் அடிக்கல் நாட்டவில்லை என்பது வருத்தத்துக் குரியது. இதை நான் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோதே சட்டமன்றத்தில் கேட்டேன். அப்போது சட்டமன்றத்தில் அவர் பதிலை

செகரட்ரி அலாவுதின் வாயிலாக ஒரு பதிலைக் கேட்டு எனக்குச் சொன்னார். அது, அ.தி.மு.க. காலத்தில் பாலங்களே கட்டவில்லை என்று உறுப்பினர் சொல்கிறார். கொருக்குப்பேட்டை யில் காக்ரின்பேசின் சாலையில் நான்தான் அண்மையில் ஒரு பாலத்தைத் திறந்துவைத்தேன்" என்று. அப்போது நான் சொன்னேன். இது தி.மு.க. ஆட்சிக் காலத்தில் திட்டமிடப்பட்டது. அப்போது அட்மினிஸ்ட்ரேட்டிவ் பெர்மிஷன் பெறப்பட்டது. அப்போதுதான் அது டெண்டர் விடப்பட்டது. ஒர்க் ஆர்டர் கொடுத்தது, பணி தொடங்கியதும் அப்போதுதான். ஏறத்தாழ எண்பது சதவிகிதப் பணிகள் நிறைவுற்ற பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதன் பிறகு அதை நீங்கள் திறந்ததாகச் சொன்னால் எப்படி? மக்கள் தேவையைக் கருதி பாலம் கட்டி எண்பது

சதவிகிதப் பணிகள் முடித்தவர்களுக்கு அந்தப் பணியின் பலன் சொந்தமா? வெறும் வர்ணம் பூசியவர்கள் அந்தப் பணிக்குச் சொந்தம் கொண்டாடலாமா?" என்று கூறினேன்.

மாநகராட்சி சார்பில் மட்டுமல்ல, நெடுஞ்

சாலைத் துறை சார்பிலும் ஏராளமான மேம்பாலங்கள் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டன. ஆனால், அ.தி.மு.க. காலத்தில் நெடுஞ்சாலைத் துறை சார்பிலும் ஏன் மாநகராட்சித் துறை சார்பிலும் ஒரு சிறிய கால் வா பெட்டக மேம்பாலங்கள்கூட கட்டப்பட வில்லை."

ரூ. 2500 உதவி நிதி, விவசாயக்கடன் தள்ளுபடி வழங்கப்பட்டனவே?

கொரோனா பேரிடர் காலத்தில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் ஏழை எளிய மக்களுக்கும் ஒவ்வொரு உணவு பங்கீட்டுதாரருக் கும் ஐயாயிரம் ரூபா நிவாரணம் வழங்கிட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே வந்தார். ஆனால் மக்கள் மிகவும்

சிரமப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் கொடுக்காமல் தேர்தல் வருகிற நேரத்தில் 2500 ரூபா தந்திருக்கிறார்கள். இருந்தாலும் கூட 2500 ரூபாக்கு மின் கட்டண உயர்வு, பேருந்து கட்டண உயர்வு, பால் கட்டண உயர்வு என்று எல்லா உயர்வுகளையும் படிப்படியாகக் கடந்த நான்கு ஆண்டுகளில் இரண்டு மூன்று மடங்காக உயர்த்தியிருக்கிறார்கள். அதேபோல் பெட்ரோல் உயர்வு மத்திய அரசின் உயர்வு என்று தட்டிக் கழித்துவிட முடியாது. அதில் தமிழக அரசு போடுகிற வரியைக் குறைத்தால் பெட் ரோலின் விலை குறை யும். அதைக் குறைப் பதற்கும் இவர் களுக்கு மனமில்லை. ஒட்டுமொத்தமாக தமிழக மக்களை பாதிக்கச் செகிற எடப்பாடி தலைமையிலான அரசை அகற்றவேண்டும்.

இப்போதுகூட தமிழக விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி செதிருக்கின்றோம் என்கிற ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றார். கடந்த நான்காண்டுகளுக்கு முன்னால் கடன் தள்ளுபடி செயப்பட்டு மீண்டும் இப்போது தள்ளுபடி செயப்படுகிறபோது நான்காண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற விவசாயிகளுக்கான

கூட்டுறவுத் தேர்தலை தி.மு.க. புறக்கணித்தது. அப்போது அ.தி.மு.க.வே எல்லா இடங்களிலும் வெற்றி பெற்றதாக அறிவித்தார்கள். அ.தி.மு.க. கூட்டுறவு நிர்வாகத்தின் கீழ் வந்ததற்குப் பிறகு அவர்கள் கட்சியைச் சேர்ந்தவர்களுக்குத்தான் 99 சதவிகிதம் கடனுதவி வழங்கப்பட்டது. ஆக இந்தக் கடன் தள்ளுபடியினால் பயன் பெறு பவர்கள் முழுக்க முழுக்க அ.தி.மு.க.வினராகத் தான் இருக்கிறார்கள் என்பது இன்றைக்குத் தமிழகத்தில் இருக்கிற ஒட்டுமொத்த விவசாயச் சங்கங்களின் குற்றச்சாட்டு. ஆக எந்த ஒரு பொது விவசாயியும் ஏழை விவசாயியும் இதில் பயன் பெறவில்லை என்பது நிதர்சனமான உண்மை."

அரசுப் பள்ளியில் படித்த மாணவ,

மாணவிகளுக்கு மருத்துவம் படிக்க சீட் வழங்கப்பட்டதே?

கடந்த மூன்று ஆண்டுகளில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்காமல் அதற்கான எந்த

நடவடிக்கையும் எடுக்காமல் நீட் தேர்வை நடத்தினார்கள். அதனால் 13 மாணவ, மாணவியர் மாண்டு போனார்கள். அதன்பிறகு இந்த ஆண்டு சட்டமன்றத்தில் தி.மு.க.வின் எதிர்ப்பைத் தாங்கிக்கொள்ள முடியாமல் கிராமப்புற மாணவர்களுக்கு 10 சதவிகிதம் நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்காமல் ஏழரை சதவிகிதம் என்றார்கள். அந்த ஏழரை சதவிகிதத்தில் 300 மாணவர்கள் பயன் பெற்றிருக்கிறார்கள் என்பதைப் பெரிய

சாதனையாகத் தம்பட்டம் அடித்துக்கொண் டிருக்கிறார்கள். அதே நேரத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் எந்தவிதமான அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் கிராமப்புற மாணவர்களுக்கும் இடம் கிடைக்காமல் 13 பேர் செத்துப்போனார் களே அதற்கு யார் பொறுப்பேற்பது? எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுக் கொள்வாரா?

அதேபோல்தான் தூத்துக்குடியில் 13 பேர் களைக் குறிபார்த்துச் சுட்டார்கள். குறிப்பாக ஒரு ஏழை இளம்பெண் தூத்துக்குடி பாதிப்பை விளக்குகிற வகையில் நிர்வாகத்தை எதிர்த்து முழக்கமிட்டார், பேசினார் என்பதற்காகவே அவர் தொண்டையைப் பார்த்துச் சுட்ட வரலாற்றையெல்லாம் என்றைக்கும் தமிழக மக்கள் மறந்துவிடமாட்டார்கள்.

எனவே அ.தி.மு.க. அரசு செயல்பாடுகள் மக்கள் விரோதச் செயல்பாடுகள். இந்த அரசு தூக்கியெறியப்படவேண்டிய அரசு. குறிப்பாக, எடப்பாடி யாருக்குமே விசுவாசமாக இல்லாதவர். சசிகலாவின் காலில் ஊர்ந்து போ பதவி பெற்றவர் என்பது ஊருக்குத் தெரிந்த உண்மைதானே. ஆனால் அதே எடப்பாடி பழனி

சாமி ஒரு பேட்டியில் சொல்கிறபோது எனக்கு யார் சீட்டு பெற்றுத் தந்தார்கள்? யார் எனக்கு வாக்கு சேகரித்தார்கள் என்கிற பாணியில் பேசியதென்பது ஊர் மக்களே அவரைப் பார்த்து நகைப்புக்குள்ளாக்கிய விஷயம். இப்படித்தான் அவர் நிறைய மாற்றிச் சொல்கிறார். இதுவரை நான் ஒன்பது முறை எடப்பாடியில் வெற்றி பெற்றிருக்கிறேன் என்கிற பொயான

பிரசாரத்தைப் பரப்பிக் கொண்டிருக்கிறார். எடப்பாடியில் அவர் ஒன்பது முறை சட்ட மன்றத்துக்கு நிற்கவே இல்லை.

ஒரு பேட்டியில் ‘என்னைப் பார்க்க வருவோர் போவோரெல்லாம் புத்தகங்களைப் பரிசில் களாகத் தந்திருக்கிறார்கள். புத்தகங்களை அல மாரியில் வைத்து பெரிய நூலகமாக அமைத்திருக் கிறேன். எனது பழக்கமே புத்தகங்கள் படிப்பது தான் என்னுடைய முழு வேலை’ என்றெல்லாம் சொன்னார். அப்போது ஒரு செதியாளர் கேட்டார். ‘தற்போது நீங்கள் படித்த புத்தகம் எது?’ என்று. அதற்குப் பழனிசாமி அரை மணி நேரம் திணறினார். புத்தகத்தின் பெயரைச்

சொல்லவேயில்லை. அதேபோல் கம்ப ராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் என்று சொன்ன தத்துவஞானி எடப்பாடி பழனிசாமி. இப்படிப்பட்டவர் தமிழகத்தை ஆண்டு கொண்டிருப்பது தமிழகத்துக்கு ஏற்பட்டிருக்கிற கேடு என்றே சொல்லலாம்."

சசிகலா வருகை பற்றி...

நான்காண்டுகள் சிறையில் இருந்ததால் தியாகி என்று சொல்கிறார்கள். அந்த நான் காண்டுகள் எதற்காக இருந்தார் என்பதையும் அப்படிச் சொல்பவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். நான்காண்டுகள் தண்டனை, நூறு கோடி ரூபா அபராதம் என்கின்ற அளவில்

சொத்துகளைக் குவித்ததற்காக இந்தியா விலேயே ஒரு முதலமைச்சர் ஏ1 ஆகவும் சசிகலா ஏ2ஆகவும் வழக்குப் போட்டு மிகப் பெரிய தண்டனை பெற்றவர்கள். இவர் தமிழகத்தில் நடமாடுவதற்குக் கூட வெட்கப்பட வேண்டும். அப்படிப்பட்டவர்களுக்குப் பட்டம் சூட்டி கொண்டாடுவதென்பது நல்லவர்களைப் பார்த்து கேலி செவதற்கு ஒப்பாகும்.

சொத்துக் குவிப்பு வழக்கு சம்பந்தப்பட்ட நான்கு பேரில் ஏ3 இளவரசி, ஏ4 சுதாகரன் ஆகியவர்களுடைய சொத்துக்களை அரசு பறிமுதல் செதுகொண்டிருக்கிறது. நானும் கூட கேட்டுக் கொள்வது விரும்புவது, ஏ1, ஏ2வை விட்டுவிடச் சொன்னார்களா உச்ச

நீதிமன்றத்தார்? உச்ச நீதிமன்றம் நான்கு பேர் களுடைய சொத்துக்களையும்தானே பறிமுதல் செயச் சொல்லியிருக்கிறது. ஆனால் ஏ1யும் ஏ2வையும் விட்டுவிட்டு ஏ3, ஏ4னுடைய

சொத்துக்களைப் பறிமுதல் செவதும்

அரசுடைமை ஆக்குவது என்று செதுகொண் டிருக்கிறார்கள். எல்லாம் நாடகம்."

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் செயவிருக்கும் பணிகள் என்னென்ன?

கழகத் தலைவர் ஸ்டாலின் நாங்கள் ஆட்

சிக்கு வந்ததும் மாணவர்கள் பெற்ற கல்லூரிக் கடன்களைத் தள்ளுபடி செயப்படும் என்று அறிவித்திருக்கிறார். விவசாயக் கடன் தள்ளு படி என்று அறிவித்தார். பிறகு இவர்கள் ஏதோ பேருக்குத் தள்ளுபடி அறிவித்திருக்கிறார்கள். விவசாயிகளின் நலன் காக்கும் அரசாக தி.மு.க. அரசு நிச்சயம் இருக்கும். அதேபோல் வங்கி களில் ஐந்து சவரனுக்கும் கீழே நகைக் கடன் பெற்றிருப்பவர்களுக்கு மீட்டுத் தரப்படும் என்கிற அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார். மகளிர் களிடையே அது மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

அதுமட்டுமல்ல, தி.மு.க. தேர் தல் அறிக்கையில் என்ன வெல்லாம் செயவேண்டும் என்று நான் கைந்து பேர் உட்கார்ந்து கொண்டு தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க வில்லை. டி.ஆர்.பாலு தலைமை யிலான ஒரு குழுவைப் போட்டு தமிழகத்தி லிருக்கிற 36 மாவட்டங் களுக்கும் சென்று எல்லா மாவட்டத் திலு மிருக்கிற பொது நலச் சங்கங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போர் நலச் சங்கங்கள், விவசாயச்

சங்கங்கள் என எல்லா தரப்பினர் களிடையேயும் கருத்துகளைக் கேட்டுப் பெற்று அவர்களிடம் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செயவேண்டும் என்று கோரிக்கை மனுக்களைப் பெற்றிருக்கிறார்கள்.

அந்தக் கோரிக்கை மனுக்கள் சீராந்து அதில் எவையெல்லாம் தேர்தல் அறிக்கையில் சேர்க்க

சாத்தியமாக இருக்கும் என்று அறிவாலயத்தில் ஆராயப்பட்டுக் கொண்டிருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு தமிழர்கள் நலன் சார்ந்த விஷயங்கள் தேர்தல் அறிக்கை யில் இடம்பெறும்.

கலைஞர் ஒவ்வொரு தேர்தலிலும் தேர்தல் அறிக்கைகளை பட்ஜெட் நிகழ்வாகவே நிகழ்த்திக் காட்டியவர். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் எல்லா விஷயங்களும் அடுத்தடுத்த ஆண்டுகளில் பட்ஜெட் நிகழ்வுகளாகவே வெளிப்படும் என்பதை நிகழ்த்திக் காட்டியவர். அதேபோல்தான் அவருடைய வழியில் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அதுபோன்ற திட்டங் களைத் தமிழகத்தில் செயல்படுத்துவார்.

இன்னொரு கொடுமை, விவசாயிகளைப் பாதிக்கக்கூடிய மூன்று வேளாண் சட்டங் களை ஆதரிக்கிற ஒரே முதல்வராகப் பழனிசாமி இருக்கிறார். நிச்சயம் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் வேளாண் சட்டங்களை எதிர்க்கிற முதலமைச்சராகக் கழகத் தலைவர்

மு.க.ஸ்டாலின் இருப்பார். விவசாயி களின் பாதுகாவல் அரணாக, அதே போல் சிறுபான்மையினரின் பாதுகாவல் அரணாகக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் இருப்பார்."

அடுத்த வாரம், அ.தி.மு.க.

கொள்கை பரப்புச் செயலாளர்

வைகைச்

செல்வனின் பார்வை...

Post Comment

Post Comment