கடைசிப் பக்கம்

ரம்மி விளையாடலாம் வாங்க!
சுஜாதா தேசிகன்‘தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை விதிக்கும் மசோதாவைப் போன வாரம் தமிழக முதல்வர் தாக்கல் செதார்’ என்ற ஓரமாக வந்த செதியை ஹைவே கும்பகோணம் காபி கடை போலக் கடந்து சென்றிருப்போம்.

இந்தச் செதி முக்கியத்துவம் வாந்தது. ஏன் என்று சொல்லுவதற்கு முன் இருபது வருடங்களுக்கு முன் அமெரிக்காவிற்குச்

சென்ற கதையைக் கொஞ்சம் கேட்க வேண்டும்.

அமெரிக்காவில் சூதாட்ட நகரமான ‘லாஸ் வேகஸ்’க்குச் சென்றேன். காசினோ வில் சூதாடத்தான். நண்பர்கள் பத்து பத்து டாலராக நூறு டாலருக்கு மேல் எடுத்துச் செல்லாதே" என்று எச்சரித்தார்கள்.

சினிமாவில் காண்பிப்பது போலப் புகை மண்டலத்தில், எல்லோர் கையிலும் கோப்பையுடன் அழகிகள் புன்னகையுடன் புடைசூழ எதையோ உருட்டி, அழுத்தி மொத்தப் பணத்தையும் இழந்து விட்டு, கொடுத்த காசுக்கு வேடிக்கை பார்த்துவிட்டுத் திரும்பினேன்.

‘கேம் தியரி’ போன்ற பாடங்களைக்

கல்லூரியில் படித்திருந்தாலும், இழந்த பணத்தை மீட்க முடியுமா என்ற மோகம் உடனே சினிமா தயாரிப்பாளர் போல, என்னை ஆட்கொண்டது. இழந்த பணத்தை அடுத்த ஆட்டத்தில் வெல்லமுடியும் என்று இந்த நினைப்பை ’எச்ட்ஞடூஞுணூ’ண் ஊச்டூடூச்ஞிதூ’ (சூதாட்டக் காரரின் வீழ்ச்சி) என்பார்கள். ‘முயற்சி திருவினை ஆக்கும்’ போன்ற அறிவுரைகள் சூதாட்டத்துக்குச் செல்லாது. துரதிர்ஷ்டத் திற்குப் பிறகு அதிர்ஷ்டம் சூதாட்டத்தில் கிடையாது.

சுலபமாகப் பரிசோதிக்கலாம். ஒரு நாண யத்தைச் சுண்டிவிட்டு பூவா, தலையா என்று பாருங்கள். நினைத்தது வரவில்லை என்றால் இன்னொரு முறை சுண்டிவிடுவீர்கள். நினைத் தது வந்துவிட்டால் மீண்டும் வருகிறதா என்று சுண்டுவீர்கள். தூண்டிலின் கொக்கியில் இருக்கும் இரையை விழுங்க நினைத்து மீன் கள் அந்தக் கொக்கியையே கவ்விக்கொள்வது போலச் சூதாட்டம் என்ற மூதேவி என்ற அழகான உவமையுடன் கூறுகிறார் வள்ளுவர்.

லாக்டவுனில் ‘ஹாட் ஸ்டாரில்’ மஹாபாரத சீரியலைத் தொடர்ந்து பார்த்தேன். ஒவ்வொரு பகுதியிலும் நடுநடுவே ‘வாங்க பழகலாம்’ என்ற சிவாஜி பட வசனம் போல ‘வாங்க ரம்மி விளையாடலாம்’ ஆன்லைனில் சம்பாதி யுங்கள் என்று விளம்பரம் வந்துகொண்டே இருந்தது. சூதாட்டத்தால் நடந்த விபரீதங்கள் தான் மஹாபாரதக் கதையே என்பது நகை முரண்!

2019ல் கோல்ட்மேன் சாக்ஸ் என்ற நிறு வனத்தில் வி.பி.யாக இருந்தவர் ஆன்லைன் சூதாட்டத்தை விளையாட ஆரம்பித்து, படிப் படியாக லட்சங்களை இழந்து அதனால் ஏற் பட்ட கடன்களை அடைக்க நிறுவனத்தில் கையாடல் செது மாட்டிக்கொண்டார். அவர் மோசடி செதது 38 கோடி! இந்தப் பணம் சீனா சென்று சேதாரம் இல்லாமல் அந்த நிறுவனம் மீட்டெடுத்தது என்பது கொசுறு செதி!

லாக்டவுனில் இணையம் உபயோகிப்ப வர்கள் அதிகரித்து, ஆன்லைனில் சூதாட்ட விளையாட்டும் அதிகரித்தது. சிறுவர் முதல் பெரியவர்கள் ஆன்லைன் ரம்மி விளையாட ஆரம்பித்து, ‘சூதாட்டக்காரரின் வீழ்ச்சி’யில் விழுந்தார்கள். பணம் சுரண்டப்பட்டவர்கள் பலர் தப்பு காரியம் அல்லது தற்கொலை செதுகொண்டார்கள்.

‘டிக் டாக் டோ’ (கூடிஞி-ணாச்ஞி-ணாணிஞு) என்று கட்டத்தில் வரிசையாக ’ஙீ’ அல்லது ’ˆ’ போடும் விளையாட்டைப் பள்ளியில் பக்கத் தில் இருக்கும் மாணவனுடன் விளையாடி யிருக்கிறேன் (பார்க்கப் படம்). இந்தச்

சின்னப்புள்ளத்தனமான விளையாட்டை கூகுளில் தேடினால் உங்களை விளையாட அழைக்கும். விளையாடிப் பாருங்கள்.

நீங்கள் அதனுடன் வெல்லுவது மிகக் கடினம். அல்லது முடியாத விஷயம்.

இயந்திரத்துடனும் மனைவியுடனும்

நீங்கள் வெல்ல முடியாது. ஆன்லைன் ரம்மியில் உங்களுடன் புத்திசாலி இயந்திரங் கள் விளையாடுகிறது. அவற்றுடன் நீங்கள் என்றுமே ஜெயிக்க முடியாது. அவை உங்களைத் தோற்கடிக்க புரோகிராம் செயப்பட்டவை.

தமிழக முதல்வர் ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடைவிதிக்கும் மசோதாவின் முக்கியத்துவம் புரிந்திருக்கும். சூதாடினால் புகழ், கல்வி, செல்வம், உணவு, உடை ஆகிய ஐந்தையும் இழப்பான். நான்

சொல்லவில்லை, மீண்டும் வள்ளுவர்

சோல்லுகிறார்.

தி

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :