எங்க நாட்டிலே...பஹ்ரைன்

மாஸ்க்கை மறந்தால் 4000 ரூபாய் அபராதம்!
சீதாபதி ஸ்ரீதர்அரபு நாடுகளில் கெடுபிடிகள் அதிகம் என்றாலும் பஹைரினில் மற்ற நாட்டு மக்கள் இங்கு சந்தோஷமாகவே வாழ்கிறார்கள். காரணம் அரசாங்க விதிமுறைகளை ஒழுங்காகக் கடைப் பிடித்து நாம் உண்டு நம் வேலை உண்டு என இருந்தால் போதும். அடுத்தவர்களுக்குத் தொந் தரவு இல்லாவிட்டால் இந்தியப் பாரம்பரியத்தைச் சுகமாகக் கடைப்பிடிக்கலாம். விடிய விடிய காலை மூன்று நான்கு மணி வரை பளீரென விளக்குகளுடன் இரவு வாழ்க்கை இங்கு. தண்ணீர் கஷ்டம், பவர் கட்? ம்ஹும். படு ஸ்பீடான இன்டர்நெட். வேறென்ன வேண்டும்!

சாலைகளில் நாம் நடந்து போகும்போது ரோந்து போலிசார் நாம் மாஸ்க் அணியாமல் இருந்தால் ஸ்பாட் ஃபைன் 20 தினார் (சுமார் 4000 ரூபா) வசூலிக்கிறார்கள். சாலைகளில் விபத்து என்றால் 999க்கு போன் செதால் அடுத்த 10 நிமிடத்தில் போலிசார் ஆஜர். சுருக்கமாகப் பேசி சட்டென இன்சூரன்ஸுக் கான சான்றிதழை அங்கேயே வழங்கி, விபத்துப் பகுதியை உடனே சரிசெது போக்குவரத்தைச் சீர்செகிறார்கள். சின்ன காயம் என்றாலும் ஆம்புலன்சுடன் வருகிறது போலிஸ்.

கல்யாணமே வைபோகமே

உங்களுக்குத் தெரியுமா? திருமணச்

சுற்றுலா (Destination wedding)எனப்படும் விமரிசையான கல்யாண வைபவங்களுக்குப் புகழ்பெற்ற நாடு பஹ்ரைன். அதாவது 100, 200 பேர் என உறவினர்கள் இங்கு வந்திறங்கி, நம் பாரம்பரியச் சடங்குகளுடன் ஜாம் ஜாம் என கல்யாணம் நடத்தி, தேன்நிலவையும் முடித்து ஊருக்குத் திரும்புவதுதான். 2017-19 இல் மட்டும் 17க்கும் மேற்பட்ட பெரிய இந்தியத் திருமணங்களுக்கு பஹ்ரைன் விருந்தளித் துள்ளது. சுமார் 6,000 இந்தியச் சுற்றுலா விருந்தினர்களைப் பெற்று பஹ்ரைனின் பொருளாதாரத்திற்கு 22 மில்லியன் அமெரிக்க டாலர்களைச் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது.

இந்தத் திட்டத்தை ஆரம்பத்திலிருந்தே பஹ்ரைனுக்கான திருமணச் சுற்றுலாவின் இலக்கு மூலச் சந்தையாக (Source market) இந்தியா உள்ளது என்று பஹ்ரைன் சுற்றுலா மற்றும் கண்காட்சி ஆணையம் சொல்கிறது. உயர்தர ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்டுகள், கல்ஃப் ஏர் வழங்கும் மிகச் சிறந்த இணைப்பு, இலவச விசா வசதி, 200 பேர் என க்ரூப் புக்கிங் என்றால் தனி விமானம், உள்ளூர்

சுற்றுலா வசதி என ஏராளமான வசதிகளுடன் நம்மூர் மகாபலிபுரம் ரிசார்ட்டில் ஏற்பாடு செயும் திருமணத்தை இங்கு நடத்துகிறார்கள். கல்யாண சாஸ்திரிகள் சகிதம் மக்கள் வந் திறங்கி, ஆடல், பாடல் நலங்கு நிகழ்ச்சிகளில் ஆரம்பித்து அரேபியன் குதிரையில் மாப் பிள்ளை அழைப்பு, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, காசி யாத்திரை, பாணிக்கிரகம் வரை தடபுடலாக கல்யாணங்கள் நடக்கின்றன. மொப்பணமும் பஹ்ரைனிய தினாரில் வருகிறதே!

10 நிமிடத்தில் விமான

நிலையத்திலிருந்து வெளியே...

உலகின் பிரபலமான விமான நிலையங் களில் ஒன்று பஹ்ரைன் விமான நிலையம். அதன் விரைவான சேவை மற்றும் வசதி முறைகளைப் பாராட்டாதவரே இல்லை.

முதல் முறையாக பஹ்ரைனில் வந்திறங்கும் எவரும் பாஸ்போர்ட் கட்டுப்பாட்டுப் பகுதி யில் செலவிடும் நேரம் 10 நிமிடங்களுக்கும் குறைவானது என்றால் நம்ப மாட்டீர்கள். மேலும் அடுத்த 10 நிமிடங்களுக்குள் பெட்டி களையும் எடுத்துக்கொண்டு விமான நிலையத் திற்கு வெளியே வந்துவிடலாம். சமீப காலம் வரை ட்ராலி உதவி செயவும் பெட்டிகளை எடுத்து வெளியே வாகன நிறுத்தம் பகுதி வரை கொண்டு வந்து உதவ இலவச சேவை செது வந்தார்கள். தற்போது அச்சேவைக்கு வெறும் ஒரு தினார் (ரூபா 195) மட்டுமே வசூலிக்கிறார்கள். விமான நிலையப் பணி யாளர்களும் சுங்க அதிகாரிகளும் மிகவும் கனிவாகவும் அன்புடனும் பேசுகிறார்கள். சில சமயம் சுங்க அதிகாரிகள் நம் பெட்டி களைச் சோதிப்பதற்காகத் திறக்கச் சொன் னாலும் சிரமத்திற்கு மன்னிப்பு கேட்கிறார் கள். தற்போது இந்த விமான நிலையத்தை யொட்டி புது விமான நிலையமும் கட்டப்பட்டு மேலும் அதிக வசதிகளுடன் புது முனையங் கள்(Terminal) திறக்கப்பட்டுள்ளன.

பஹ்ரைனிலிருந்து உலகத்தின் பல நகரங் களுக்கு விமான இணைப்பு வசதி உண்டு. துபா மற்றும் அபுதாபியிலிருந்து இயக்கப் படும் விமானங்கள் பஹ்ரைன் வழியாக அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா கண்டங்களுக்குத் தினமும்

செல்கின்றன. மேலும் டர்கிஷ்ஏர் (துருக்கி) பஹ்ரைன் வழியாக உலகின் அனைத்து நாடுகளுக்கும் பறப்பதால் விமான கம்பெனி களுக்கிடையேயான போட்டியுடன் கட்டணங் கள் குறைவாக இருக்கின்றன. பஹ்ரைனி லிருந்து துபா, சீனா, ரஷ்யா, ஜியார்ஜியா, அசர்பெஜான், அர்மேனியா போன்ற நாடுகளுக்கும் குறைவான விமானக் கட்டணத்துடன் சுற்றுலா மற்றும் தங்கும் விடுதி போன்ற தொகுப்பு ஒப்பந்த (Package deal) சலுகைகளைத் தவறவிடாமல் இங்குள்ள மக்கள் உலகம் முழுவதும் சுற்றுகிறார்கள். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளி லிருந்து இந்தியா செல்லும் பயணிகள் கல்ஃப் ஏர் அல்லது எதிஹாத் விமானங்கள் மூலம் பயணம் செயும்போது துபா, பஹ்ரைனில் இரண்டு மூன்று நாட்கள் தங்கி உல்லாசமாக ஊரைச் சுற்றிப் பார்த்துவிட்டுச் செல்கிறார்கள்.

ஊ1 கார் பந்தயங்களில்

காசு கொட்டுகிறது

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் ஊ-1 கார் பந்தயப் போட்டி இங்கு நடக்கும் பிரபல மான நிகழ்வு ஆகும். பஹ்ரைன் மக்கள் இந்தக் கவர்ச்சிகரமான நிகழ்வில் அதிக எண்ணிக்கையில் கலந்து கொள்வதுண்டு. உலகப் புகழ்பெற்ற ஃபெராரி, மெக் லாரென், மெர்சிடீஸ் போன்ற கார் கம்பெனி பந்தய வீரர்களை நேரில் காண மக்கள் திரளாக வரு கிறார்கள். பல கோடி டாலர்களால் அமைக்கப் பட்டுள்ள பந்தய மைதானத்தை வண்ண விளக்குகளால் அலங்கரித்து உலகப் புகழ் பெற்ற இசைக் கலைஞர்களின் பாப்பிசை கச்சேரிகள், பஹ்ரைன் கலாசாரக் கலை நிகழ்ச்சிகள் எனப் பெரிய விழாவாக நடத்தப் படும் நிகழ்வு இது. விமான நிலையத்தில் குடி யேற்றம் பகுதி மேலும் விரைந்து செயல்படு வதுடன், கார் பந்தயத்தைக் காண வந்திறங் கும் பயணிகளுக்கு விசா கட்டணமும் வசூ லிப்பதில்லை. அவ்வமயம் நகரம் முழுவதும் திருவிழாக் கோலம் பூண்டிருப்பதுடன் நட்சத் திர ஹோட்டல்கள் ஏராளமான இலவச

சேவைகளை வாரி வழங்குகின்றன. வருடம் ஒரு முறையே நடக்கும் இந்த நிகழ்வு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் முக்கிய மானதாகக் கருதப்படுகிறது.

எங்க ஊரை ஒரு ரவுண்டு வருவோமா?

சுமார் 30 அடி உயர மரம் மிகவும் பழைமை யானது. பஹ்ரைனுக்கு வருகை தரும் உல்லா சப் பயணிகள் அனைவரும் தவறாமல் இந்த வாழ்க்கை மரத்தை(Tree of Life) காண வரு கிறார்கள். சுமார் 400 ஆண்டுகளுக்குமேல் பழைமையான இம்மரம் மனாமாவிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அரேபிய பாலைவனத்தின் தரிசுப் பகுதியில் உள்ளது. ஆண்டுக்கு ஒரு சில நாட்கள் மட்டுமே மழை வரும் இந்நாட்டில் இம்மரம் எவ்வாறு உயிர் வாழ்கிறது என்பது உறுதியாகத் தெரிய வில்லை. இதன் வேர்கள் 50 மீட்டர் ஆழத்தில் உள்ளன. அவை தண்ணீரை அடைய போது மானதாக இருக்கலாம் என்றும், விசித்திரமான நீர் ஆதாரம் இருக்கலாம் என்றும் சொல் கிறார்கள். இம்மரத்திலிருந்து கிடைக்கும் மஞ்சள் பிசின் மெழுகுவர்த்திகள், நறுமணப் பொருட்கள் மற்றும் பசை தயாரிக்கப் பயன் படுகிறது. இம்மரம் ஏராளமாகப் பச்சை இலைகளில் மூடப்பட்டுள்ளது. இதன் வயது மற்றும் இப்பகுதியில் வளரும் ஒரே பெரிய மரம் என்பதால் முக்கிய உள்ளூர் சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 65,000 பேர் இம்மரத்தைக் காண வருகை தருகின்றனர்.

எங்க ஊர்க் கோட்டை

பஹ்ரைன் சர்வதேச விமான நிலையத் திற்கு அருகில் உள்ளது ஆராத் கோட்டை. இது, இரவில் வண்ண விளக்குகளுடன் ஒளிரு கிறது. முஹர்ரக் தீவுப் பகுதியில் உள்ள இக் கோட்டை புராதனச் சுற்றுலா ஸ்தலம் ஆகும். தீவுக்குள் கப்பல்கள் நுழைவதைத் தடுக்க உள்ளூர் மக்களால் 15-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தற்காப்புக் கோட்டை இது.

சதுர வடிவத்துடன் கட்டப்பட்டுள்ள இக் கோட்டையின் ஒவ்வொரு மூலையிலும்

சிறிய அகழியால் சூழப்பட்டுள்ள உருளைக் கோபுரங்கள் உள்ளன. கோட்டையின் மேல் சுவரின் ஒவ்வொரு மூலையிலும் மூக்கு வடிவத் திறப்புகள் உள்ளன. கடல் கற்கள், சுண்ணாம்பு, மணல் மற்றும் பனை மரங்கள் போன்ற அசல் பொருட்களால் விரிவான சீரமைப்பு செயப்பட்டுள்ளது. வரலாற்று கட்டடத்துடன் ஒத்துப்போகாத அல்லது அதன் வரலாற்று மதிப்பைக் குறைக்கும்

சிமென்ட் அல்லது வேறு எந்தப் பொருட்களும் பயன்படுத்தப்படவில்லை.

கடல் மேல் பாலங்கள்

கிங் ஃபஹத் காஸ்வே (King Fahd Causeway) எனும் பிரம்மாண்டமான பாலம் சவுதி அரேபியா மற்றும் பஹ்ரைனை இணைக்கிறது. ஐந்து பாலங்களும் கடல் மட்டத்திலிருந்து உயர்த்திய சாலைகளைக் கொண்ட இந்தப் பாலம் 25 கி.மீ. நீளம் கொண்டது. ஒருபுறம் சவுதியின் அல்கோ பார் நகரமும் மறு முனையம் பஹ்ரைனின் அல்-ஜஸ்ரா பகுதியும் பாலத்தால் இணைகின்றன. சில நாட்களி லிருக்கும் நமது ஸ்டாக் மார்க்கெட் கிராப் போல் பல இடங்களில் உயர்ந்தும் தாழ்ந்து மிருக்கும் இந்தப் பாலத்தின் மத்தியில் உள்ள ஒரு செயற்கைத் தீவுப் பகுதியில் சுங்க மற் றும் குடியேற்ற வசதிகள், ஒரு மசூதி, தோட் டங்கள் மற்றும் துரித உணவகங்கள் உள்ளன. இந்தத் திட்டத்தின் மொத்தக் கட்டுமானச் செலவு சுமார் 6000 கோடி ரூபா.

இங்கு வரும், வசிக்கும் மக்கள் சற்று வினோதமானவர்கள்

கையில் பணம் இருக்கிறதோ, இல்லையோ நாளைப் பற்றிக் கவலைப்படாமல் சோம்ப லான வாழ்க்கையை இனிமையாகக் கழித்து நண்பர்களுடன் அமர்ந்து குப்குப்பென புகை விட்டபடி ஹுக்கா கடைகளிலும், காபி கடை களிலும் டி.வி.யில் கால்பந்தாட்டத்தை ரசிப்பவர்கள்...

பத்து பதினைந்து நண்பர்களுடன் ஹார்ட்லி டேவிட்சன் மோட்டார் பைக் குழு அமைத்து கும்பலாக மோட்டார் பைக்கில் நகரை வலம்வரும் இளைஞர்கள்...

மாலையிலும் வார இறுதியிலும் ஊருக்கு ஒதுக்குப்புறமான கடற்கரையிலோ அல்லது நீண்ட தூரம் படகில் சென்று நடுக்கடலில் பல மணி நேரங்கள் மீன் பிடிக்கும் பெருசுகள்...

லாரி சைசில் இருக்கும் தங்கள் ஃபோர்ட் மற்றும் லெக்சஸ் வண்டிகளை நிறுத்திவிட்டு ரோட்டோர கிரில் கடைகளில் அமர்ந்து கிரில் கோழி இறைச்சி, ஷவர்மா, கரியில் சுட்ட ஆட்டிறைச்சி கபாப் என வெட்டும் குடும்பஸ்தர்கள்...

குடும்பத்துடன் மால்களுக்குச் சென்று ஏராளமான ஷாப்பிங் செது அங்கேயே

சினிப்ளெக்ஸில் பக்கெட்டில் பாப்கார்னுடன் படம் பார்த்து ஃபுட் கோர்ட்டில் உண்டு களிக் கும் மக்கள் எனப் பலதரப்பட்டவர்களைச் சந்திக்கலாம்.

உலகில் குடியிருப்பதற்குப் பாதுகாப்பான நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் முதல் 50 நாடுகளில் பஹ்ரைனும் ஒன்று என்பது குறிப் பிடத்தக்கது. தெரியுமே! இந்தியா எத்தனை யாவது இடம் என நீங்க யோசிப்பது. நம் நாடு 140ஆவது இடமாம். பஹ்ரைன் ரொம்ப அமைதியான நாடு, இனிமையான உள்ளூர் மக்கள், அருமையான வாழ்க்கைத் தரம் அமைத்துக் கொடுத்திருக்கும் அரசாங்கம், சீரான பஹ்ரைன் தினார் - இந்திய ரூபா நாணய மாற்றால் இந்தியாவிற்கு ஏராளமான பணம் அனுப்பும் வாப்புகள் அதிகம்.

சரி, ஆயுசுக்கும் வெளிநாட்டுக்காரர்கள் இங்கேயே இருக்க முடியுமா?

அது முடியாது. 60 வயது எனச் சட்டத்தில் வரம்பு இருந்தாலும் நாம் நல்ல பெயருடன் வேலை செதால் அடுத்து 5, 6 வருடங்கள் வரை விசாவை நீட்டிக்க அரசாங்கத்திற்கு அந்த நிறுவன மேலாண்மை சிபாரிசு செ கிறது. அதற்கு அப்புறம்?

‘சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா?’ன்னு பாடிக்கிட்டே பிளேன் ஏறிடணும்! (முற்றும்)

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :