விவாகரத்துகளைத் தவிர்ப்பது எப்படி?


டி.வி.ராதாகிருஷ்ணன்சாமானியர்கள் எவ்வளவு பேர் குடும்ப வழக்கு மன்றங் களில் விவாகரத்து வேண்டிக் காத்திருக்கிறார்கள் தெரியுமா? இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. இதில் ஆச்சர்யம் என்னவெனில் இவற்றுள் பெரும்பாலானவை பெற்றோர்கள் பார்த்து நடத்திய திருமணங்கள்.

மேலோட்டமாகப் பார்ப்போர், கூட்டுக் குடும்ப முறை அழிந்துவருவதே முக்கியக் காரணம் என்பார்கள். அதனால்தான் தம்பதி யரிடையே சகிப்புத்தன்மை இல்லை என்பார் கள். ஆனால், முக்கியமான காரணம் என்ன என்று பார்த்தோமாயின், பெரும்பாலும் இருபாலினரிடமுமே புரிதல் இல்லாமைதான்.

ஆணாயினும் பெண்ணாயினும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் மணவாழ்வைத் தொடங்குகிறார்கள். அந்த எதிர்பார்ப்பில்

சிறிதளவு குறைந்தாலும் ஏமாற்றமே ஏற்படு கிறது. நாளடைவில் அந்த ஏமாற்றமே ஒருவர் மீது ஒருவருக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது.

திருமணம் - வாழ்க்கை என்பது இரட்டை மாட்டு வண்டிச் சவாரி போல. அதில் ஒரு மாடு அடம்பிடித்து எக்குத்தப்பா ஓடினாலும் வண்டி சீராக, நேராக ஓட முடியாது.

விவாகரத்து கேட்கும் தம்பதிகளுக்கு முதலில் கவுன்சிலிங் கொடுக்கப்படும்.கவுன்சிலர் சொல்லும்போது அதைக் கேட்பது போல பாவனை செவார்களே தவிர அதனால் பெரும் பயன் ஏதும் ஏற்படுவதாகத் தோன்றவில்லை.

அவர்களுக்குக் குழந்தையில்லை என்றால் சரி. ஆனால் குழந்தைகளும் இருந்துவிட்டால் அவர்கள் நிலை?

தா, தந்தையரின் விவாகரத்து குழந்தை களின் படிப்பைப் பெருமளவில் பாதிக் கின்றது.

பதின்ம பருவ வயதில் இருப்பவர்கள் மற்ற வர்களுக்கு மத்தியில் இயல்பாக இருப்பது போல இருந்தாலும், அவர்கள் எப்போதும் ஆழமான அழுத்தத்துடனேயே இருப்பார்கள்.

வாலிப வயதில் உள்ளவர்கள் எல்லாச் செயலிலும் ஒதுங்கியிருப்பார்கள். அவர்கள் நடத்தையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும்.

பெற்றோர் ஒருவர் இல்லாததால் அவர் களுக்குச் சமூகத்தின் மீது உள்ள நம்பிக்கையும் குறையும்.

குழந்தைகள் யாருடன் வளரவேண்டும் என்பதை அறிவியல்படி அணுக முடியாது என்கின்றது நீதிமன்றங்கள். ஒரு திருமண பந்தம் முடியும்போது முதலில் பாதிக்கப் படுவது ஆணோ, பெண்ணோ அல்ல. அந்த உறவில் இருந்து உருவான குழந்தைகள்தான் என்பதை அவர்கள் உணர வேண்டும்.

அந்தக் குழந்தைகள் அம்மாவின் அன்போ, இல்லை அப்பாவின் ஆதரவோ இன்றி வளர் வது மனத்தளவில் அவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.

தவிர்த்து, குழந்தைகள் யாரிடம் வளர வேண்டும் என்பதைக் குழந்தைகளின் நலன் கருதி நீதிமன்றமே முடிவெடுக்கும். அந்தக் குழந்தை யாரிடம் பாதுகாப்பாகவும், வசதி யாகவும் இருக்கிறதோ அதைத் தெரிந்து கொண்டு அந்தக் குடும்பத்தின் பின்னணியை அலசி ஆராந்து தாயிடமோ, தந்தையிடமோ ஒப்படைக்கப்படும். சில வழக்குகளில் குழந்தையின் விருப்பப்படி நடக்கும்.

தாயிடமோ தந்தையிடமோ ஒப்படைக்கப் படும் குழந்தைகளை மற்றவர் அரசியல் அமைப்புச் சட்டம் மற்றும் பாதுகாவலர்கள் மற்றும் வார்ட்ஸ் (Guardians and wards Act)சட்டப்படி(Child access and visitation guidilnes கூறும் விதிகளின்படி சந்தித்துக் கொள்ளலாம்.

இது எல்லாம் தேவையா? விவாகரத்து பெருக என்ன காரணம்? புரிதல் இல்லாமைதான்.

புரிதலில்தான் வாழ்க்கை இன்பமய மாகிறது. அடுத்து விட்டுக்கொடுத்தல் இருக்க வேண்டும். இது பெண்களுக்கு மட்டுமே இருக்க வேண்டும் என எண்ண வேண்டாம்.ஆண்களுக்கும் இருக்க வேண்டும்.

ஆணாதிக்கம் கூடாது. நம்மை நம்பி வந்தவள் அவள். அவளுக்கென ஒரு மனம் இருக்கிறது.அவள் உறவையெல்லாம் விட்டு நம்முடன் ஏற்பட்ட உறவைப் பிரதானமாக்கி நம்முடன் வருகிறாள் என்பதை எல்லாம் உணர்ந்து அவளை நடத்த வேண்டும். அவள் உணர்வு களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்.

பணம் மட்டுமே வாழ்வில் பிரதானமில்லை. பணம் சம்பாதிக்க வேண்டும்தான். ஆனால் வாழ்வில் மகிழ்ச்சியில்லை எனில் எவ்வளவு சம்பாதித்து என்ன பயன்- ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தும்போதுதான் இல்லறம் நல்லறமாகிறது. அதற்கு நம் நேரத்தை குடும் பத்தைக் கவனிப்பதிலும் சற்று ஒதுக்க வேண்டும். மனைவி, மக்களுடன் மாலை நேரத்தை சந்தோஷத்துடன் கழிக்க வேண்டும்.குடும்ப விவகாரங்களில் ஒருவரை ஒருவர் ஆலோசனை கேட்க வேண்டும்.

எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத் தலைவர் எப்போது பார்த்தாலும் பணம்...பணம்... என அலைபவர். தனது இருபது வயது மகளுக்குத் திருமணம் செது வீட்டைவிட்டு அனுப்பிட வேண்டும் என்றார்.

நான் அவரிடம், அவளை நன்கு படிக்க வையுங்கள். திருமணத்திற்கு அவசரம் இல்லை" என்றேன்.

நண்பரோ பிடிவாதமாக இருந்தார். அவர் மனைவியிடம் நான் பேசினேன். அவர், எனக்கும் என் மகள் படிக்க வேண்டும். நல்ல வேலையில் சேர வேண்டும் என்றெல் லாம் ஆசை இருக்கிறது. ஆனால் அவர் வார்த்தைக்கு மறு வார்த்தை நாங்கள் பேசக் கூடாது. அவர் நினைப்பதுதான் எங்க குடும்பத்தில் நடக்கும்" என்றார்.

அந்த அம்மாளின் வாயிலிருந்து சாதாரண மாக அந்த வார்த்தைகள் வந்தாலும், அதில் தோந்திருந்த வேதனையை உணர்ந்தேன்.

ஆணின் துணையின்றிப் பெண்ணும், பெண்ணின்றி ஆணும் வாழ்வது என்பது முடியாதது அல்ல. ஆனால், அது இயற்கைக்கு முரணானது. ஒன்று மட்டும் போதும் என்ப தல்ல. இயற்கை தருவது எல்லாமே இரண்டு இரண்டுதான்.

இன்பம்-துன்பம், நன்மை-தீமை,

பிறப்பு-இறப்பு, சிரிப்பு-அழுகை, இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

அதுபோல இயற்கையின் படைப்பு ஆண்-பெண். இந்த இரண்டின் இணைப்பி லேயே ஒன்று உருவாக முடியும். கணவன், மனைவி என்பது வெறும் உடலின்பத்திற்கு மட்டுமல்ல; உடல் இன்பம் என்பது உடலில் தொடங்கி உடலிலேயே முடிந்துவிடும்.

தூமையான அன்பு மட்டுமே இறுதிவரை துணை இருக்கும். அமைதியான குடும்ப வாழ்க்கை அற்புதமே!

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்

இல்லவள் மாணாக் கடை" (குறள்)

விளக்கம்: நல்ல பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில் எல்லாம் இருக்கும்.அப்படியொரு மனைவி அமையாத வாழ்க்கை யில் எதுவுமே இருக்காது.

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்

புத்தேளிர் வாழும் உலகு" (குறள்)

விளக்கம்: நற்பண்பு பெற்றவனைக்

கணவனாகப் பெற்றால், பெண்களுக்கு இல் வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ்

சிறப்பாக அமையும். சி

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :