மாஸ்டர் அடித்த ஒரே கல்லில் இரண்டு மாங்காய்...



மீரான் -



தளபதி விஜயின் ‘மாஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 16 நாட் களிலேயே அமேசான் பிரைமில் வெளி யாகிவிட்டது. வெளியாகி 50 நாட்களுக்குப் பிறகு ‘மாஸ்டர்’ திரைப்படம் ஓ.டி.டி.யில் வெளி யாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 16 நாட்களிலேயே அமேசான் பிரைமில் வெளியாகி உள்ளது.

கடந்த ஜனவரி 13ம் தேதி பொங்கல் பண்டிகையை கொரோனா காலத்தில் தியேட்டருக்குக் குடும்பமாகப் போகத் தயங்கியவர்களும் தற்போது அமேசான் பிரைமில் வெளியாகி உள்ள ‘மாஸ்டர்’ திரைப்படத்தைக் குடும்பமாக உட்கார்ந்து பார்த்து வருகின்றனர். ‘மாஸ்டர்’ ஓ.டி.டி. தளத்தில் வெளியானாலும் தியேட்டரில் ஹவுஸ்ஃபுல்லாகவே ஓடும் என்றும், தளபதி விஜ ஒரே கல்லில் இரண்டு மாங்கா அடித்துள்ளார். பிப்ரவரி ஒன்று முதல் 100

சதவிகித இருக்கைகளுக்கு தியேட்டர்களில் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், திரையரங்குகளிலும் ‘மாஸ்டர்’ படம் வசூலைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், திரையரங்குகள் இயல்பு நிலை மைக்குத் திரும்பும் வாப்பு வந்துவிட்டது என்று நம்பிய உரிமையாளர்களை, OTT என்ற இந்த மாய வலை சற்றுக் கலங்க வைக்கிறது.

சூர்யாவின் சூரரைப்போற்று தொடங்கி, க.பெ. ரணசிங்கம், மூக்குத்தி அம்மன் என படங்கள் வரிசைகட்டி ஓ.டி.டி.யில் இறங்கின.

மாஸ்டரின் முழு பயனை அறுவடை செவதற்குள்ளேயே, ஓ.டி.டி.க்குச்

சென்றுள்ளது திரையரங்கு உரிமையாளர் களுக்குச் சற்று ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் அளித்துள்ளது.

ஏற்கெனவே திரையுலகில் தயாரிப்பாளர் கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமை யாளர்களுக்குள் கருத்து வேறுபாடு நிலவி வர, இந்த விஷயமும் ஓ.டி.டி.க்குச் சாதகமாக அமைந்துவிட்டது என்று கூறப்படுகிறது.

விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமை யாளர்கள் இடையேயான பிரச்னையில்

சினிமா தயாரிப்பாளர்கள் ஓ.டி.டி. பக்கம் போவிட்டால், பல தியேட்டர்களின் நிலைமை மிகவும் மோசமாகிவிடும் என்பது சினிமா விமர்சகர்களின் பார்வையாக உள்ளது.

பல சிக்கல்கள் இருப்பதால், மாறுபட்ட ஸ்ட்ரேடஜியைத் திரைத்துறைக்குள் கொண்டு வருவதற்கான சரியான நேரம் இதுதான் என்ப தையும் அவர்கள் உணர்ந்திருக்கின்றனர்.

டிக்கெட் கட்டணம் தொடங்கி பல விஷயங்களில் உரிய வழிமுறைகளை வகுத்து திரையரங்குகளின் எதிர்காலம் காக்கப் படுமா? என்பதுதான் திரைத்துறையினரின் இன்றைய கவலை. சி

Post Comment

Post Comment