கொரோனாவை வென்ற புத்தகக் கண்காட்சி


பொன்.மூர்த்திஉலகமே வியக்கும் அளவுக்கு சென்னையில் மிகப் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது சென்னை புத்தகக் கண்காட்சி. ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் தொடங்கி 13 நாட்களுக்கு எழுத்தாளர்களும் புத்தகப் பிரியர்களும் அலை அலையாக வந்து பார்வையிடுவதும் புத்தகங்களை வாங்குவதும் திருவிழாக் கோலமாகக் காட்சி அளிக்கும்.

இந்தக் கண்காட்சியில் ஆயிரக்கணக்கான பதிப்பகங்கள் கலந்துகொண்டு தங்கள் பல்லாயிரக்கணக்கான புத்தகங்களை மக்கள் பார்வைக்கு வைத்திருக்கும். புத்தகங்கள் கோடிக் கணக்கான தொகையில் விற்பனையாகும். தற்போது கொரோனா அச்சுறுத்தலால் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக ஜனவரி மாதம் நடத்தமுடியாததால், பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஆண்டுதோறும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (கஅகஅகுஐ) இந்தக் கண்காட்சியைச் சிறப்பாக சென்னையில் நடத்துகிறது. தற்போது நடத்தப்படும் 44ஆவது ஆண்டு புத்தகக் கண்காட்சி சென்னை, நந்தனம் ஒ.எம்.சி.ஏ. மைதானத்தில் நடத்த விருக்கிறது. இது குறித்து சங்கத்தின் செயலாளர் நாதம் கீதம் பதிப்பாளர் எஸ்.கே.முருகனிடம் பேசினோம்.முக்கியமான புத்தகத் திருவிழாக்களான நெவேலி, மதுரை, ஈரோடு போன்ற பல் வேறு மாவட்டங்களில் நடத்தப்படும் புத்தகத் திருவிழாக்களில் பல்லாயிரக்கணக்கான நூல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்போம். அதன் மூலம் பதிப்பாளர்களுக்கு 70 கோடி ரூபா அளவுக்கு விற்பனை ஆகும். ஆனால் தற்போது ஓராண்டாகப் புத்தகங்களை வாசகர்களிடம் கொண்டு சேர்க்கமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பதிப்பாளர்கள் கோடிக் கணக்கான ரூபாகள் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் எங்கள் கோரிக்கையை அரசுக்குத் தெரிவித்தோம். அதன்படி தமிழக அரசு கண்காட்சி நடத்த அனுமதி அளித்ததோடு அதற்கான செலவுத் தொகையான 78 லட்சத் தையும் அரசே வழங்க ஒப்புதல் அளித்துள்ளது."

கடந்த ஆண்டைப்போலவே இந்த 44வது புத்தகத் திருவிழாவும் பிரம்மாண்டமாக அமை யுமா?

நிச்சயமாக. கடந்த ஆண்டைப்போலவே தான் இந்த ஆண்டும் மிகச் சிறப்பாகத் திட்ட மிடப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் கண்காட் சியைத் திறந்து தொடங்கிவைப்பதற்கான முயற்சிகளைச் செதுகொண்டிருக்கிறோம்.

இந்தப் புத்தகத் திருவிழா நடத்துவதற்கு இரண்டு விஷயங்கள். கடந்த ஆண்டு 43ஆவது புத்தகக் கண்காட்சியைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் தொடங்கி வைக்கப்பட்டது. அப்போது அவர் அடுத்த ஆண்டு புத்தகத் திருவிழாவுக்கு ரூ.75 லட்சம் தருவதாக அறிவித்தார்கள். அதன்படி

தற்போது ஓராண்டுக்குள் ஆணை பிறப்பிக்கப் பட்டு வழங்கவிருக்கிறார்கள். இந்த

இக்கட்டான நேரத்தில் கண்காட்சி நடத்து வதற்கு வழங்கப்படும் இத்தொகையை மிகப் பெரிய உதவியாகக் கருதுகிறோம். அதன் காரணமாகவே இந்தப் புத்தகக் கண்காட்சி நடத்த முடிகிறது என்றாலும் மிகையில்லை."

ஜனவரி பொங்கல் விடுமுறை நாட்

களில் விற்பனை அதிகரிக்கும். இந்த முறை

அந்த வாப்பு இல்லையே... விற்பனையை

பாதிக்காதா?

பெரும்பாலும் வாசகர்கள் பொங்கல் விடுமுறையில் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குச் சென்றுவிடுவார்கள். அவர்கள் எங்களால் பார்க்க முடியவில்லையே என்று வருத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் இந்தக் கண்காட்சிக்கு வருவார்கள். விற்பனை நிச்சயம் அதிகரிக்கும்."

எவ்வளவு நாட்கள், பதிப்பகங்கள், புத்தகங்கள், வாசகர்கள்? உங்கள் இலக்கு என்ன?

14 நாட்கள் நடைபெறும். காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை கண்காட்சியில் பார்வையிடலாம். 800 அரங்குகள், 500க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள். பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட வாசகர்கள் வருவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. கடந்தாண்டு நடைபெற்ற விற்பனையைப் போல இந்தாண்டும் நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதற்கான ஏற்பாடு களும் வாசகர்களைக் கவரும் வகையில் விளம்பரங்களும் மிகச் சிறப்பாகச் செ யப்பட்டுள்ளன." சி

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :