அருள்வாக்கு

ஆனந்தம் தரும் அன்பே அழகு
ஜகத்குரு காஞ்சி மகா சுவாமிகள்இங்கே ஒரு முக்கியமான கிதச்டூடிஞூதூடிணஞ் ஞிடூச்தண்ஞு (நிபந்தனை). அதாவது நாம் அனுபவிக்கும் ஆனந்தம் மனோ விகாரத்தில் ஏற்படுகிற சந்தோஷ மாக இல்லாமல் மனசில் சுத்தமான, சாந்தமான இன்பத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறபோதுதான் அதற்குக் காரணபூதமானது அழகாயிருக்கிற தென்று அர்த்தம். குரூரமான காரியங்களையும், ஆபாசமான சிருங்கார சேஷ்டைகளையும் ரொம்பவும் இஷ்டத்தோடு பார்த்து ஒருவன் ஆனந்தம் பெறுகிறானென்பதால் அவை அழ கானவையாகிவிடாது. அழகை அனுபவிக்கிற வனின் மனோநிலை நல்லபடி இருப்பது முக்கியம்.

இன்னொன்று, ஒன்று அழகாத் தெரிகிற தென்பது நமக்கு பயம் தராததாக, துக்கம்

உண்டாக்காததாக, கோபமூட்டாததாக அது இருப்பதைப் பொறுத்தேயிருக்கிறது. ஒரு பெரிய மலைப் பள்ளத்தாக்கு பச்சைப்பசேலென்று விஸ்தாரமாயிருக்கிறது. அல்லது ஓர் அருவி பெரிசாக நாலு தென்னை மர உசரத்தி லிருந்து தடாலென்று கொட்டுகிறது என்றால், அவற்றைத் தள்ளி நின்று பார்க்கும்போதுதான் நமக்கு சௌந்தர்ய ரசானுபாவானந்தம் உண்டாகிறது.

கிட்டே, அந்தப் பள்ளத்தின் விளிம்புக்கே அல்லது அருவி கொட்டு கிற இடத்துக்கே போனால், எங்கே விளிம்பிலிருந்து வழுக்கி விழுந்து விடுவோமோ, அருவி அடித் துக் கொண்டு போவிடுமோ என்றுதான் உள்ளுக்குள்ளே அடித்துக் கொள்கிறது! பயம்! அப்போது ரசிக்கத் தோன்ற வில்லை! ஒரு பாம்பைப் பார்த்தால் வழவழவென்று, தேர்ந்த சைத்ரி கன் எவனோ வர்ணம் குழைத்துப் போட்ட மாதிரி வரி வரியாகப் போட்டுக் கொண்டு, பளபள வென்று அழகாக நெளிந்து நெளிந்து போகிறது.

ஆனாலும் இத்தனை அழகான அந்த ஜந்து வைப் பார்த்து ரசித்துக்கொண்டு நிற்கத் தோன்று கிறதோ? அலறியடித்துக் கொண்டு இந்தண்டை ஓடி வந்துவிடுகிறோம்! ஒரு வரிப் புலி அல்லது சிறுத்தையை எடுத்துக் கொண்டாலும் அதன்

சர்மத்தின் ‘டெக்ஸ்சர்’, அதில் போட்டிருக்கிற ‘டிஸைன்’ ஆகியவற்றின் அழகுக்குக் குறைவே யில்லை. ஆனாலும் நமக்கோ, அது மட்டும் கூண்டிலில்லாமல் திரியட்டும், வயிற்றைத்தான் கலக்குகிறது! உசந்த அபய நிலைக்குப்போன ஒரு சித்தரால்தான் சந்தோஷமாக ‘ஆடு பாம்பே!’ பாட முடிகிறது; மஹா கவியானால் புலியையும் ரசித்து வர்ணித்துப் ‘பொயட்ரி’ எழுதி ஆனந்தப்பட முடிகிறது

நம்மால் முடியாது. பயத்தை உண்டு பண்ணாததாக, எந்தவித ஆபத்திற்கும் இடமில்லாததாக ஒரு வஸ்து இருக்கும்போதுதான் அதன் அழகு நமக்கு அழகாகத் தெரிவது. ஒரு தாமரைப் பூ, ஒரு பூர்ணசந்திரன் இப்படியிருந்தால் வர்ணம், குளிர்ச்சி, மார்தவம் (மென்மை), ரூப அமைப்பு, வாசனை இதுகளின் அழகை ரசிக்கிறோம். மல்லிப் பூ எத்தனை அழகாயிருக்கட்டும், அந்தப் பந்தலில் சுப்பராயன் (பாம்பு) இருக்கிறாரென்றால் ரசிக்கத் தோன்றுகிறதா? ஓட்டம் பிடித்து விடுகிறோம்.

இன்னும் மனுஷ்ய வர்க்கத்தை எடுத்துக் கொண்டால் அங்கே அன்பு இருக்கிற இடத்தில் தான் நமக்கு சௌந்தர்ய ரசானந்தம் ஜாஸ்தி ஏற்படுகிறது. ஒரு பிரபு, முதலாளி ரொம்ப அழகாக இருக்கிறான். ஆனால், அவன் நம்மிடம் கோபமாகக் கத்துகிறான், ஏதாவது ‘விக்டிமைஸ்’ பண்ணிக் கொண்டே இருக்கிறானென்றால் அவனுடைய அழகை ரசித்து ஆனந்தப்பட முடிகிறதா?

ஜட வஸ்துவாக புஷ்பம், சந்த்யா மேகம், பொன்மணி என்றிப்படி இல்லாமல் ஜீவ பிராணி களாக உள்ளவற்றின் விஷயத்தில், அன்பு என்பதை அந்த அழகான பிராணி - மநுஷ்யனோ, மிருகமோ, பக்ஷியோ - காட்டி உறவாடுகிறபோதுதான் அழகைப் பூர்ணமாக நம்மால் ரசிக்க முடிவதாகத் தெரிகிறது.

அன்பாக இல்லாவிட்டால்கூடப் பரவாயில்லை, விரோதமாக, பயப்படுத்துவதாக, அல்லது சோக மாக இல்லாத வரையில் மனுஷ்யர்களின் அழகை ஓரளவு ரசிக்கவே செகிறோம். ஆனாலும் அவர் களே நம்மிடம் அன்பாகவும் இருந்துவிட்டாலோ ஜாஸ்தி ரஸித்து ஸந்தோஷப்படுகிறோம்.

அன்பு ஜாஸ்தியாக ஆக, ரூப அழகைப் பார்ப்பதுகூடக் குறைத்துக்கொண்டே வர ஆரம்பிக் கிறது. அன்பே உருவானவர்களை, அவர்களுடைய ரூபம் எப்படியிருந்தாலும், திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டே இருக்கிறோம் என்றால், அப்போது அன்புதான் அழகு என்று ஆகிவிடுகிறது!

கன்னங்கரேலென்று, பல்லும் பவிஷுமாக ஒரு தாயார்க்காரி இருந்தால்கூட, அவளுடைய குழந்தை அவளை விட்டு யாரிடமும் போக மாட்டேன் என்று பிடித்துக் கொள்கிறது. அசலார் யாராவது ரொம்ப அழகானவர்கள் தூக்க வந்தால் அவர்களிடம் பயந்து கொண்டு வந்து, குரூரமான அம்மாவைத்தான் கட்டிக் கொள்கிறது. காரணம் என்ன? அவளுக்குத் தன்னிடம் உள்ள பெரிய அன்பை

அது தெரிந்து கொண்டிருக்கிறது!

அஷ்டாவக்ரர் எட்டுக் கோணலாக, மஹா குரூபமாக இருந்தார்; அவரை வித்வான்கள் தேடித் தேடிப் போ தரிசனம் பண்ணினார்கள். இன்னும் எத்தனையோ மஹான்கள், ஞானிகள்,

சித்த புருஷர்கள் ரூபத்தைப் பார்த்தால் விகாரமாக அசடு மாதிரி, பயப்படுகிற மாதிரியெல்லாம் இருக்கும். ஆனாலும் தரிசனம், தரிசனம் என்று அவர்களை ஜனங்கள் சூழ்ந்து கொள்கிறார்கள்; திரும்பத் திரும்பப் பார்க்கிறார்கள்; வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார்கள் ஏன்?

அவர்களுடைய அன்புள்ளம், அருளு டைமைதான் காரணம். ‘நாம் திரும்பித் திரும்பி விரும்பிப் பார்க்கும்படியாக இருப்பதுதான் அழகு’ என்ற ஈஞுஞூடிணடிணாடிணிணபடி இவர்கள்தான் அழகு என்று சொல்லவேண்டும். ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்று, இவர்களுடைய உள்ளத்திலிருக் கிற அன்பு சரீரத்தின் அவலக்ஷணங்களையும் மீறி ஏதோ ஓர் அழகை அள்ளிப் பூசிவிடுகிறது என்று அர்த்தம்.

மொத்தத்தில் என்ன ஏற்படுகிறதென்றால், ‘உயிருள்ள ரூபமாக இருக்கிற ஒன்றின் அழகு

அது அன்பாக இருக்க இருக்க ஜாஸ்தியாகிறது; அன்பு ரொம்பவும் முதிர்ச்சி அடைந்திருக்கிற நிலையில் ரூப அழகே எடுபட்டுப் போ அன்புதான் அழகாகத் தெரிகிறது’ என்று

ஆகிறது.

நமக்கு ஒன்றைப் பார்ப்பதில் ஆனந்தம் ஏற்படுவதால்தான் திரும்பத் திரும்பப் பார்க் கிறோம். ஆனந்தத்தை அளிக்க வல்லதில் தலை சிறந்தது அன்புதான். அன்பு தருகிற ஆனந்தத்துக்கு சமமாக எதுவும் இல்லை. இதனால் ஆனந்தத்தைத் தரும் அன்பே அழகாகி விடுகிறது; திரும்பத் திரும்ப ஆசையோடு பார்க்கப் பண்ணுகிறது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :