தேவதைசிறுகதை : ர.கிருஷ்ணவேணி - ஓவியம் : தமிழ்புத்தகக் கண்காட்சியின் கூட்டத்தில் கரைந்து கொண்டிருந்தேன். அம்மாவுக்கு, ஆன்மிகப் புத்தகங்கள், மனைவிக்கு உலகப் புகழ் பெற்றவர்களின் சரித்திரங்கள், பையனுக்கு, படங்களுடன் இருந்த ராமாயணப் புத்தகம் எல்லாம் கிடைத்தன. கன்னடத்திலிருந்து, மொழி பெயர்க்கப்பட்டு வந்த ஒரு நாவலைத் தேடிக்கொண்டிருந்தேன். கூட்டத்தில் நடக்கச் சிரமமாக இருந்ததால், மனைவியையும், பிள்ளையையும் ஓர் இடத்தில் உட்காரவைத்து

விட்டு, தேடலைத் தொடர்ந்தேன். புத்தகங்களை நேசித்து, தேடி வந்து வாங்குபவர்களைக் கண்டால், நெருங்கின சொந்தங்களைப் பார்ப்பதுபோல பரவசமாக இருந்தது. அதையும் ரசித்துக்கொண்டே நடந்தேன். அந்த ஸ்டாலில் விசாரித்துக்கொண் டிருந்தது... யார்? பதினைந்து வருடங்கள், உடலில் சற்றே நலிவைக் காண்பித்தாலும், குரலில் அதே கம்பீரம். தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளில் இருந்த தெளிவு. ‘சரஸ்வதி மிஸ்...’ அவரேதான் என நொடிகளில் புரிந்தது. நான் ஏறி வந்த ஏணி; என்னைச் செதுக்கின சிற்பி; கட்டுப்பாடுகளை உடைக்கத் தவித்த என்னை அன்பான கட்டுக்

குள் அடைத்தவர். குரலில் மட்டுமே கண்டிப்பைக் காட்டி, அன்பால் அணைத் தவர். காட்டாறாய் ஓடிக்கொண்டிருந் தவனுக்குக் கரை கட்டினவர். என்னை எனக்கே புரியவைத்தவர்.

மிஸ்... என்னைத் தெரியுதா?"

கண்ணாடியைச் சரிப்படுத்திக்கொண்டு, உற்றுப் பார்த்தார். சட்டெனப் புரியாத குழப்பம். நினைவலைகளில் தேடிக் கொண்டிருந்தார்.

யாருன்னு பேர் சொல்லத் தெரியலை. ஆனா, ரொம்பத் தெரிஞ்ச முகமாத்தான்

தோணுது."

பாலா மிஸ். பாலகிருஷ்ணன். எஸ்.வி. ஸ்கூல்ல எட்டாம் கிளாஸ் படிச்சேன். எக்ஸ்கர்ஷன் போனபோது மயக்கம் போட்டு விழுந்தேன். டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போனீங்களே. கையெழுத்து புத்தகத்துல, என்னைக் கதை எழுதச் சொன்னீங்களே..."

புரிந்துகொண்ட மகிழ்ச்சி, குரலில் எதிரொலித்தது.

பாலாவாடா நீ? எத்தனை வருஷம் ஆச்சு உன்னைப் பார்த்து?" பரிவோடு

தோள் தட்டினார்.

இப்ப என்ன பண்ற? எங்க இருக்க?"

விவரமாச் சொல்றேன் மிஸ். வாங்க, அப்படி ஓரமாப் போயிடலாம்."

மிகவும் ஆர்வமாகக் கேட்டுக்கொண்டார். பாஸ்கர், மாணிக்கம், கணபதி என்று எங்கள் குழுவில் இருந்தவர்கள் பெயரைச் சொல்லிக்

கேட்டு மகிழ்ந்தார்.

அது ஒரு கனாக்காலம்; பசுமை நிறைந்த நினைவுகளைப் பேசி மீட்டெடுத்தோம்.

இரண்டும் கெட்டான் வயது. விளைவுகள் அறியாமல் செயலில் இறங்கும் துடிப்பு. ‘நான் ஏன் பதிலுக்குக் கேள்வி கேட்கக்கூடாது?’ என்று

கேட்ட பருவம். என் அப்பாவுக்கு, அடிக்கடி பல ஊர்களுக்கு மாற்றலாகிக் கொண்டே இருக்கும். மொத்தம் மூன்று வருடங்கள் அந்த ஊரில் படித்

தேன். அதில் 2 வருடங்கள் எனக்கு வகுப்பு ஆசிரியையாக சரஸ்வதி மிஸ் இருந்தார். அரசினர் பள்ளி என்றாலும், சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. எங்கள் அணி செய்த வம்புகளுக்கெல்லாம், எங்களை எப்போதோ கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியிருக்க வேண்டும். எப்படித்தான் பொறுத்துப் போனார்களோ!

சரஸ்வதி மிஸ் பாத்ரூம் உள்ளே இருந்தபோது, வெளியிலிருந்து கதவைத் தாழ் போட்டு ஓடின மாணிக்கம், இப்போது பெரிய நிறுவனத்தின் தலைமை அதிகாரி. தொலைக்காட்சிகளில் பேட்டிகள் கொடுக்கிறான். செய்தித்தாள்களில் கட்டுரைகள் எழுதுகிறான். வணிக நிர்வாகத்தில் அவனைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. வகுப்புகள் நடக்கும்போது, பலவித சப்தங்கள் செய்து, சக மாணவர்களின் கவனத்தை ஈர்த்து, பாடம் நடத்தவிடாமல் தொந்தரவு செய்த அந்த மாணிக்கம், பிரபலமான எழுத்தாளரும்கூட.

பெரிய நிறுவனத்தில், வியாபாரப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று கொண்டிருக்கிறேன் நான். போகாத நாடு கிடையாது. அது தந்த அனுபவத்தில், பல மொழிகளில் தேர்ச்சி பெற்றுவிட்டேன். கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க அழைப்பு வந்தவண்ணம் உள்ளது.

எஸ்.வி. பள்ளியில் படித்து, என் அப்பாவுக்கு மாற்றலாகிக் கிளம்பிவிட்டோம். அது சொந்த ஊர் இல்லை என்பதால், யாரிடமும், அதிகம் தொடர்பு இல்லை. காலச்சக்கரம் சுழன்று, புத்தகக் கண்காட்சியில் நின்றது.

வாங்க மிஸ்; என் மனைவியும், பிள்ளையும் வந்திருக்காங்க. ஒரு பக்கமாய் உட்காரச் சொல்லியிருக்கேன். அவங்களைப் பார்த்துட்டு, வெளில போய் சாப்பிடலாம். உங்களோட யாராவது வந்திருக்காங்களா?"

தனியாத்தான் வந்திருக்கேன் பாலா. அசோக் நகர்ல வீடு."

நான் உங்களை டிராப் செய்துடறேன் மிஸ்."

மனைவியை செல்லில் அழைத்தேன்.

விஜி, என் வேலை முடிஞ்சது. நான் ஒரு கெஸ்ட்டைக் கூட்டிட்டு, நீங்க இருக்கற இடத்துக்கு வர்ரேன். அவங்க நம்மளோட டின்னர் சாப்பிடப் போறாங்க."

நான் என்ன புத்தகங்கள் வாங்கியிருக்

கிறேன் என்று பார்த்தார். தான் வாங்

கின புத்தகங்களையும் காட்டினார். இருவரும் மனைவி இருந்த ஸ்டாலுக்கு வந்தோம்.

பரத், இவங்க, என்னோட டீச்சர். வணக்கம் சொல்லு. விஜி இவங்க, நான் எஸ்.வி. ஸ்கூல்ல படிச்சப்போ..."

சரஸ்வதி டீச்சரா?" சட்டென கேட்டாள்.

உன்னோட மிஸ்ஸாப்பா..." விழி விரிய பரத் கேட்டான். கேட்ட கேள்விக்கெல்லாம் தன்மையாகப் பதில் சொன் னான். அருகிலிருந்த ஹோட்டலுக்குச் சென்றோம். தேவையானதைச் சொல்லி வாங்கிச் சாப்பிட்டோம். என் மேற்படிப்பு, வேலை, இந்தக் காலக் கல்விமுறைகள் என்று கேட்டுத் தெரிந்துகொண்டார். நண்பர்களையும் ஃபோனில் அழைத்து குழுவாகப் பேசினோம். பத்து வயது குறைந்ததுபோல இருந்தது. உற்சாகம் கொப்பளித்தது.

நான் ஒரு கால்டாக்சி பிடிச்சு வீட்டுக்குப் போறேன் பாலா."

வேணாம் மிஸ். நீங்க எங்களோட வாங்க. விஜியையும் பரத்தையும் வீட்டுல இறக்கி

விட்டுட்டு, அசோக் நகர் போகலாம்."

தட்டாமல் வந்தார். அவர் குடும்பம் பற்றியும் சொன்னார். ஒரே பொண்ணு. கல்யாணமாகி அமெரிக்காவுல இருக்கா. என் ஹஸ்பெண்ட் போனப்புறம், ‘தனியா இருக்க வேணாம். அங்கயே வந்துடுங்கன்னு’ சொல்றாங்க. ஆனா, எனக்குப் பிடிக்கல. நம்ம நாடு, ஊழல், அழுக்குன்னு சொல்லிட்டு எல்லாரும் ஓடிட்டா, இங்க யாரு இருக்கறது? அதுனால, அவங்களுக்கு உதவி தேவைப் பட்டா, போவேன். கிளம்பி வந்துடுவேன். சும்மா இருக்க முடியாது. மொழிபெயர்ப்பு

வேலைகள் செய்யறேன். பக்கத் துல இருக்கற குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தரேன். எங்களுக்கு ஒரு குரூப் இருக்கு. அடிக்கடி வெளியூர் கிளம்பிப் போவோம். எங்க ஃப்ளாட்டில இருக்கற குழந்தைங்க பேச்சுப் போட்டிக்கு எழுதித் தரச் சொல்வாங்க. மொத்தத்துல, பயனுள்ள பொழுதாப் போகுது. இன்டிபெண்டன்டா இருக்கேன். இது எனக்குப் பிடிச்சிருக்கு."

வீடு வந்தது. விஜியும், பரத்தும் இறங்கிக் கொண்டார்கள். கார் அசோக் நகர் நோக்கி நகர்ந்தது.

என்ன மிஸ், என் பையன், பொண்டாட்டிகிட்ட, என்னைப் பத்திச் சொல்லிக் கலாய்ப்பீங்கன்னு நெனைச்சேன். அதுவும் எங்க குரூப் பண்ணின அமர்க்களம்? சாக்பீஸ் தூக்கிப்போட்டு, சேர்ல பெயின்ட் கொட்டி, ஸ்கூல் முடியறதுக்குள்ள பெல் அடிச்சு... இப்படியெல்லாம் நாமதான் பண்ணினமான்னு இருக்கு. உங்களுக்கு ரொம்பவே சிரமம் கொடுத்திருக்கிறோம் மிஸ். வேற டீச்சரா இருந்தா, நிச்சயம் ஸ்கூல விட்டே அனுப்பியிருப்பாங்க. இப்ப ஒரு சந்தர்ப்பம் கெடைச்சுகூட, நீங்க ஒண்ணுமே சொல்லலையே?"

பாலா, நீங்க நிறைய சேட்டை பண்ணினீங்க. உங்க வயசு அப்பிடி. அதையும் மீறி, பாடம் சொல்லிக் குடுத்தா, கிரகிச்சுக்கற சக்தி இருந்தது. கேள்வி கேட்டுப் புரிஞ்சுக்கற ஆர்வம் இருந்தது. அதுனால, கொஞ்சம் விட்டுப் பிடிச்சேன். இது எல்லா மாணவர்களுக்கும் பொருந்தாது. சில பேர் கடுமையா கண்டிச்சாத்தான் புரிஞ்சுப்பாங்க. பரீட்சை, மார்க் எல்லாம் ஒரு நடைமுறைதான், பழக்கம்தான், உங்களையெல்லாம் கொஞ்சமாவது கட்டுப்படுத்த வச்சிருந்த குச்சி அவ்வளவுதான். இன்னிக்கு நீயும், உன் ஃப்ரெண்ட்ஸும், பெரிய பதவிகள்ல இருக்கீங்க. இதேபோல எத்தனையோ மாணவர்கள். ரொம்பப் பெருமையாவும், சந்தோஷமாகவும் இருக்கு.

நீ இப்ப பாலா இல்லை. மிஸ்டர். பாலகிருஷ்ணன்; ஒரு பொறுப்பான அதிகாரி; அன்பான அப்பா; ஒரு பெண்ணுக்குப் புருஷன். இப்ப போயி ‘உங்க அப்பா புடைவையில இங்க் கொட்டினான். பின் குத்தினான். அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. பின்னால, உன் பிள்ளை ஏதாவது தப்பு செஞ்சா உன்னால கேட்க முடியாது. ‘நீகூட இப்படித் தானே இருந்தே’ன்னு பிள்ளைங்க சொல்லிடும். நாம அதுக்கு இடம் குடுக்கக்கூடாது. இந்த எலெக்ட்ரானிக் யுகத்துல, குடும்பத்த கூட்டிட்டு, புத்தகக் கண்காட்சிக்கு வந்திருக்கியே, அது ஒண்ணே போதும். உன் குடும்பத்த எப்படிப் பராமரிக்க

றோங்கறது தெரிஞ்சுக்கறதுக்கு. நம்மகிட்ட படிச்ச மாண

வர்கள் நல்லா இருக்காங்க, நல்ல வங்களா இருக்காங்க அப்பிடீங் கறது பாக்கறபோது ஒரு டீச்சருக்கு வர்ற சந்தோஷத்த, வார்த்தைகளால சொல்லிப் புரிய வைக்க முடியாது."

பேச வார்த்தைகள் வரவில்லை.

அசோக் நகரில், டீச்சரின் வீடு வந்ததும் இறக்கிவிட்டேன். மிஸ்ஸின் தொலைபேசி எண்ணை

‘தேவதை’ என்ற பெயரில் குறித்துக்கொண்டேன். என் வீட்டை நோக்கி வண்டியைத் திருப்

பினேன். தேவதையிடம் இன்னும் கற்றுக்

கொள்ள வேண்டிய விஷயங்களை மனம் பட்டியல் போட ஆரம்பித்தது.

Post Comment

Post Comment