இந்தியா ஒளிர்கிறது;இளைஞர்களின் கையில்!தொகுப்பு : ராஜ்மோகன் சுப்ரமண்யம் -திட்டமிடலும் இலக்கும் துல்லியமாக இருந்தால் எதையும் எளிதில் வெல்லமுடியும் என்பதற்கு

உதாரணமாக இருக்கிறார் செல்வி அர்பிதா முரளிதரன். கேரளாவில் கொச்சியில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அர்பிதா, இன்று தேசமே அறிந்த இளம்பெண்! குடியரசு தின அணிவகுப்பில் சென்னை யில் இருந்து என்.சி.சி கப்பல்படைப் பிரிவு சார்பில் பங்கேற்ற அர்பிதா, குடியரசுத் தலைவரின் மதிப்புமிகு தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார். என்.சி.சி. சார்பில் பங்கேற்பு என்பது கொஞ்சம் எளிதில் நிகழக்கூடியதுதான். ஆனால், அதில் தங்கம் வெல்வது என்பது எளிதானது அல்ல. சாமானியரில் ஒருவராக நின்று வென்று வந்திருக்கும் அர்பிதாவின் வெற்றிக்கதையைக் கேட்டோம்.

பிறந்த ஊர் கொச்சி. அங்குதான் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்தேன். அப்பா முரளிதரன் ஹிந்து நாளிதழ் குழுமத்தில் பணியாற்றுகிறார். அம்மா பிந்து குடும்பத்தலைவி. குடும்பத்தில் ஒரே பெண் நான். எனக்குச் சின்ன வயதில் இருந்தே ராணுவத்தில் சேர வேண்டும் என்று ஆசை. அதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்பதே எனது கனவாக இருந்தது. இதற்குக் காரணம் என் அப்பாதான். அவருக்கு ராணுவ அதிகாரியாக வேண்டும் என்ற கனவு இருந்தது. அதற் கான வாப்பு வந்தபோது சில காரணங்களால் தவறிப் போன அவரது ராணுவக் கனவை நினைத்து வருத்தப் படுவார். சில நேரங்களில் இதைப் பற்றிப் பேசும்போது அவர் கண்களில் கண்ணீரையும் பார்த்திருக்கிறேன். அப்பொழுது முடிவு செதேன் அப்பா மிஸ் பண்ண அந்த விஷயத்தை நான் அடையவேண்டும். இதன் மூலம் அப்பாவிற்குப் பெருமை சேர்க்கவேண்டும் என்று. ஒருநாள் இதை அப்பாவிடம் சொன்னபோது, அவருக்கு மகிழ்ச்சி தாங்கமுடியவில்லை. என்னை மேலும் ஊக்கப்படுத்தினார்.

பன்னிரண்டாம் வகுப்பு முடிந்தவுடன் டிகிரி படிப்பை சென்னையில்தான் படிக்கவேண்டும் என்று முடிவு செதேன். குறிப்பாக மகளிர் கிறித்துவ கல்லூரி(ஙிஇஇ). ஏன் என்றால் அங்குதான் மாளவிகா அக்கா படித்துக்கொண்டிருந்தார். அவரும் என்னைப் போன்று என்.சி.சியில் இணைந்து தங்கம் வென்றவர். இங்கு சேர்ந்தால் அவரிடம் வழிமுறைகளைக் கற்று நாமும் சாதிக்கலாம் என்று நம்பினேன். ஏன் எனில் ராணுவத்தில் சேர நீங்கள் என்.சி.சியில் பணியாற்றி இருந்தால் கூடுதல் பலம். தேர்வுகளில் மதிப் பெண்ணும் கிடைக்கும். நான் நினைத்தது போல் நடந்தது. எனக்கு இங்கு சைக்காலஜி யில் இடம் கிடைத்தது. அதேபோன்று என்.சி.சியிலும் இணைந்தேன். ஆஹா! எல்லாம் திட்டமிட்டபடியே செல்கிறதே என்று மனம் சிறகு விரிக்க ஆரம்பித்தது.

கடுமையான திட்டமிடலும், உழைப்பும் இருந்தால் நிச்சயம் நினைத்ததை அடைய முடி யும் என்ற நம்பிக்கை உறுதியானது. ஆனால் சில காலம்தான். என்.சி.சியில் சேர்ந்துவிட்டாலும் ராணுவம் தரும் சிறப்புப் பயிற்சியில் சேரவேண்டும். அந்தச் சிறப்பு அணியில் சேர எனக்கு இடம் கிடைக்கவில்லை. நான் ஃபெயில் ஆகிவிட்டேன். இடையில் கோவிட்- 19 வந்து தேசமே முடங்கியது. எனக்கு உலகமே இருண்டது போல் ஆனது. முயற்சிக்கு எப்படி வேண்டு

மானாலும் தடை வரும். அதை உடைத்து முன்னேறு வதில்தான் வெற்றியின் உண்மைத்தன்மை இருக் கிறது என்றார் அப்பா. இன்னொரு வாப்பு இருக் கிறதா என்று பார்த்தேன். இரண்டாவது வாப்பு இருந்தது. இந்த முறை கடுமையாக உழைத்து நுழைவுத் தேர்வில் வெற்றிபெற்று பயிற்சிக்கு நுழைந்துவிட்டேன். அடுத்தது நடந்தது எல்லாம் இறைவனின் செயல்" என்று மகிழ்ந்தார் அர்பிதா.

பிரதமர் மோடியின் கையால் தங்கப்பதக்கமும் ரோல் ஆப் ஹானரும் வாங்கிய தருணத்தைப்

பற்றி அர்பிதாவிடம் கேட்டோம். இதை எப்படிங்க வார்த்தைகளால் விவரிக்கமுடியும். அவரின் கூர்மை யான கண்களைப் பார்த்தேன். ஒரு கம்பீரமான தந்தைக்குரிய பெருமிதமும் விவேகமும் இருந்தது. விதிப்படி நாங்கள் பேசக்கூடாது. இருப்பினும் தேச உணர்வும் பாச உணர்வும் பெருகிய தருணம் அது. இது அர்பிதாவின் வெற்றி அல்ல. என்னைப் போன்ற எளிய குடும்பத்தில் பிறந்தவர்களுக்குச்

சாதிக்கமுடியும் என்பதை இயற்கை உணர்த்தும் நிகழ்வு" என்றார்.

கல்லூரிப் படிப்பிற்குப் பிறகு ராணுவ அதிகாரி களுக்கான தேர்வு எழுதவிருக்கிறார் அர்பிதா. அதற்கு இந்த முதல் படி உறுதுணையாக இருக்கும்.

இவருடன் சென்னையைச் சேர்ந்த அருண் என்ற மாணவரும் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். அவரிடம் பேசியபோது, என் ஏரியா மடிப்பாக்கம். லயோலாவில் படிக்கிறேன். அடிப்படையில்

நான் ஒரு பாடி பில்டர். ராணுவத்தில் இணைவதற்கு நுழைவாயிலாக இருப்பது என்.சி.சி.தான். என்.சி.சி ட்ரெனிங்கில் சிறந்தது லயோலா என்பதைத் தெரிந்து அங்கு சேர்ந்தேன். தங்கம் வெல்ல

வேண்டும் என்பதுதான் என் இலக்கு. இருப்பினும் வெண்கலம் கிடைத்ததில் பேரானந்தமே. கப்பல் படையின் அதிரடிப்படையில் (–ச்ணூடிணஞு இணிட்ட்ச்ணஞீணி) இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது எனது முக்கிய குறிக்கோள். அதை நோக்கி என் பயணம் தொடரும்" என்கிறார்.

இந்த இருவரின் வெற்றிக்குப் பின்னால் தமிழ்நாடு - புதுச்சேரி என்.சி.சி பயிற்சி அகாதமியின் பங்கு அளப்பரியது. ராணுவ அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்த அமைப்பு, சென்னையில் சுமார்

64 வருடங்களாக இயங்கி வருகிறது. இதன் 47வது கமாண்டி அலுவலராக இருக்கும் கேப்டன் ஷர்மாவிடன் பயிற்சி முறைகளைப் பற்றி உரையாடினோம். ராணுவம் வெறும் பாதுகாப்பிற்கான அமைப்பு அல்ல. அங்கு முழுமையான வாழ்வியலைக் கற்க முடியும். அதைத்தான் இந்தப் பயிற்சி அகாதமி தருகிறது. என்.சி.சியில் மூன்று பிரிவுகள் இருக் கின்றன. தரைப்படை, விமானப் படை மற்றும் கப்பல் படை. இது கப்பல் படைக்கான பயிற்சிப் பிரிவு. தொடர் நீச்சல் பயிற்சி, கடல் பற்றிய அறிவு, கப்பல் பற்றிய தொழில்நுட்பம், உடல் - மனவலிமை, கப்பல் வரைபடம் என ஒரு ராணுவ வீரருக்கு வேண்டிய எல்லா அடிப்படைப் பயிற்சிகளையும் தருகிறோம். இது தவிர சமூகப் பணிகளிலும் ஈடுபடவேண்டும். பொது இடங்களைச் சுத்தம் செவது, புதர்களை அகற்றுவது... இப்படி நிறைய பங்களிப்புகள் இருக்கின்றன. கடந்த ஐந்து வருடமாக சென்னை பயிற்சி மையம் தங்க விருதுகளை வென்று வருகிறது. தமிழ்நாட்டுக் குழந்தை களிடம் ராணுவம் குறித்த விருப்பம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பெண்பிள்ளைகள்

ஆர்வமுடன் வருகின்றனர்" என்றார் உற்சாகமாக.

இந்தியா ஒளிர்கிறது; இளைஞர்களின் கையில்! திட்டமிடலும் இலக்கும் துல்லியமாக இருந்தால் எதையும் எளிதில் வெல்லமுடியும் என்பதற்கு

இந்தியா ஒளிர்கிறது; இளைஞர்களின் கையில்!

Post Comment

Post Comment