மீண்டு வந்த மாதவி!கட்டுரை : டாக்டர் ஜெயஸ்ரீ சர்மா - படம் : பிள்ளைகுட் ஈவினிங் சாம்பியன்" என்று வாழ்த்திய குழந்தைகளைத் திரும்பிப் பார்த்துப் புன்னகையுடன், குட் ஈவினிங் ஃப்யூச்சர் சாம்பியன்ஸ்" என்று கூறிவிட்டு காரிலிருந்து இறங்கி வீல் சேருக்கு மாறும் மாதவி லதா, ஒரு நீச்சல் சாம்பியன். பன்னாட்டு வங்கியில் பொறுப்பான பதவியில் இருக்கிறார்.

இந்திய அளவில் மாற்றுத்திறனாளி களுக்கான நீச்சல் போட்டியில் மூன்று முறை தங்கம் வென்றவர். தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளி நீச்சல் வீரர்களுக்கான அமைப்பையும் நடத்துகிறார். இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான வீல்சேர் கூடைப்பந்து அமைப்பையும் தொடங்கி நிர்வகித்து வருகிறார். தன்னுடைய

சொந்த உழைப்பில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பை வாங்கி பெற்றோருடன்

வசித்து வருகிறார்.

50 சதவிகிதத்திற்கும் குறைவான அளவு நுரையீரல், வேலை செதாலும் மனதாலும் உடலாலும் உழைத்துக் கொண்டே இருக்கும் இந்தச் சாதனை யாளரின் இளமைக் காலம் சவால்கள் நிறைந்தது.

ஐந்து குழந்தைகளில் கடைசியாகப் பிறந்த அழகுக் குழந்தையான மாதவி லதாவுக்கு ஏழு மாதங்கள் ஆனபோது கடும் காச்சல் வந்ததாம். சிகிச்சைக்காக தெலங்கானா மாவட்டத்தில் உள்ள ஒரு

சிறிய கிராமத்தில் இருந்து நகரத்துக்கு அழைத்துச் செல்லும்போது அங்கு பஸ் ஸ்டிரைக், போராட்டம். என்ன செவ தென்று தெரியாமல் தவிக்கின்றனர் அரசுப் பள்ளி ஆசிரியர்களான பெற்றோர்.

நான்கு நாட்களுக்குப் பிறகு காச்சல் மருந்துக்குக் கட்டுப் படாமல் போக, குண்டூரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் குழந்தையைக் கொண்டு சேர்த்தபொழுதுதான் அது போலியோ என்றும் குழந்தைக்கு வலது கை தவிர மற்ற பாகங்கள் அனைத்தும் செயல்படாது என்றும் தெரியவருகிறது.

அழும்போதுகூட சத்தம் எழாத அளவுக்குக் குழந்தையின் உடலில் உள்ள அனைத்து தசைகளும் பாதிக்கப்பட்டன. படிப் படியாக கைகளில் ஓரளவு பலம் மீண்டாலும் இடுப்புக்குக் கீழே குழந்தையின் உடல் துவண்டு கிடந்தது. எட்டு மாதத்தில் தவழும் குழந்தை 18 வயதிலும் தவழத்தான் போகிறது என்று அந்தப் பெற் றோருக்கு அப்போது தெரியாது. ஏழு வயது முதலே சில பயிற்சிகளும் பிரேசஸ் (ஆணூச்ஞிஞுண்) எனப்படும் சாதனங்

களும் சில அறுவை சிகிச்சை களையும் மேற்கொண் டாலும் எதுவும் பலனளிக்க வில்லை.

ஆனாலும் மாதவி லதா இன்று ஒரு சாம்பியன். எப்படி சாத்தியமானது? அவரிடமே கேட்டோம்.

பள்ளி, கல்லூரிப் படிப்பு காலங்கள் எப்படி இருந்தன?

பத்தாம் வகுப்பு வரை நான் பிறந்த ஊரிலேயே பள்ளி என்பதால் படிப்பதற்கு எளிதாக இருந்தது.

படிப்பில் குறிப்பாக கணிதத் தில் மிகவும் ஆர்வமாக இருந்த தால், வீட்டில் இருந்தே படிக்க ஆரம்பித்தேன். நண்பர்களின் உதவியுடன் பன்னிரண்டாம் வகுப்பை முடித்தேன். அதே வேகத்தில் எம்.எஸ்சி. கணிதம் வரை படித்து முடித்தேன்."

வீட்டில் நேரத்தை எப்படிச் செலவிட்டீர்கள்?

ஏழு வயதிலிருந்தே நிறைய புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தேன். பள்ளிக்குச் செல்வதை நிறுத் திய பதினைந்து வயதிலிருந்தே, குழந்தைகளுக்கு வீட்டில் ட்யூஷன், முக்கியமாக கணிதம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன். அதன்மூலம் பலரையும் சந்திக்கும் வாப்பை ஏற்படுத்திக் கொண்டேன். அது எனக்கு நிறைய திருப்தியையும் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுத்தது.

தா மொழி தெலுங்கு என்பதால் தெலுங்கில் ‘வேமன சதகம், சுமதி சதகம்’ ஏதேனும் ஒரு பாட லைத் தினமும் படிப்பது, முக்கியமான நடப்புச் செதிகளைப் படிப்பது என்று, என்னுடைய டியூஷன் பாடங்களை மட்டுமல்லாது பொது விஷயங்களையும் கற்றுக் கொடுக்கும் ஒரு இடமானது என் வீடு."

பணியில் சேர்ந்தது எப்படி?

ஒரு வேலைக்குச் செல்லவேண்டும், நிரந்தர வருமானம் வேண்டும் என்கிற எண்ணம் மனதில் இருந்துகொண்டே இருந்தது. எல்.ஐ.சி. மற்றும் வங்கிகளுக்கான பரீட்சைகளை எழுதினேன். பாஸ் செதாலும் உடல் பலவீனத்தைக் காரணம் கூறி எனக்கு வேலை மறுக்கப்பட்டது. பரீட்சை எழுதச்

செல்லும்பொழுது ஐந்தாவது மாடியில் பரீட்சைக் கான ஹால் இருந்தது. என் தந்தை ஐந்து மாடிகள் என்னைத் தூக்கிச் சென்றார். அதை மறக்க முடியாது. மிகுந்த போராட்டங்களுக்குப் பிறகு எனக்கு வங்கியில் வேலை கிடைத்தது. பிறகு வாக்கர், வீல்சேர், எனக்கென வடிவமைக்கப்பட்ட

ஸ்கூட்டர், பிறகு கார் என்று ஒவ்வொன்றாகப் பயின்று இயங்குவது எளிதானது."

எதிர்கொண்ட சிக்கல்?

சென்னையில் பன்னாட்டு வங்கியில் வேலை கிடைத்தபோது எனக்கு வயது முப்பத்தைந்தைத் தாண்டியிருந்தது. திடீரென்று உடலெங்கும் தாங்க முடியாத வலி. முன்பு போல அலுவலகத்தில் உட் கார்ந்து வேலை செய முடியவில்லை. என்ன வென்று மருத்துவர்களை அணுகியபோது, போலியோவினால் உண்டான தாக்கத்தில் முது கெலும்பு நுரையீரலை 50 சதவிகிதம் வரை அழுத்தி விட்டது. உடற்பயிற்சிகள் செயாததால் தசைகள் வலுவிழந்துவிட்டன. ஒன்றும் செவதற்கில்லை. காலம் கடந்துவிட்டது. இனி உங்கள் வாழ்க்கை சில மாதங்கள் மட்டுமே என்று கூறிவிட்டார்கள்.

அப்போது என்னிடம் டியூஷன் பயின்ற ஆனந்தஜோதி, ஒரு இயன்முறை பயிற்சியாளரை (கடதூண்டிணிணாடஞுணூச்ணீடிண்ணா) எனக்கு அறிமுகப்படுத்தினார். ஹைட்ரோதெரபி என்று நீருக்குள் செயும் பயிற்சிகள் மூலம் ஓரளவு இந்தப் பிரச்னையைச் சரிசெய முடியும் என்று அறிந்துகொண்டேன். சிறிது

சிறிதாக அந்தப் பயிற்சியைச் செய ஆரம்பித்த பிறகு, வலி நன்றாகக் குறைய ஆரம்பித்தது. உட் கார்ந்து வேலை செய முடிந்தது."

சாம்பியன் ஆனது எப்படி?

நிலத்தில் மானாக நடக்கமுடியாத நான் நீருக்குள் மீனாகத் துள்ளிக் குதிக்க ஆரம்பித்தேன். மெதுமெதுவாக நீச்சல் எனக்குக் கைவந்தது. நீச்சல் பயிற்சியாளர்கள் மூலம் பலவிதமான நீச்சல் பயிற்சிகளை லாகவமாகப் பயின்றேன். வங்கிகளுக்கு இடையே நடந்த விளையாட்டுப் போட்டிகளில்

நீச்சல் பிரிவில் கலந்துகொண்டு பலருடைய கவனத் தையும் ஈர்த்து பிறகு இந்திய அளவில்

நீச்சல் பிரிவில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றேன். வீல்சேர் பேஸ்கட் பால் அணி ஆரம்பிக்கப்பட்டபோது அதில் இணைந்து கொண்டேன். பல வெளிநாடுகளுக்கும் செல்லும் வாப்பு கிடைத்தது. இப்பொழுது மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் பெடரேஷன் அமைப்பை உருவாக்கி நடத்திக்கொண்டிருக் கிறேன்."

புடைவை, தங்கம், திருமணம் இவற்றில் விருப்பம்?

புடைவை கட்டிக்கொள்ள வேண்டும் என்று ஆசையாக இருந்தது. ஓரிருமுறை கட்டிக்கொண்டு இருக்கிறேன். தங்கத்தின் மீது அலாதி ஆசை. அத னால் நிறைய போட்டிகளில் கலந்துகொண்டு தங்கப் பதக்கங்களை வாங்கிக் குவித்துக் கொண் டிருக்கிறேன்.

திருமணம் என்ற முடிவை எடுப்பதற்கு மிகப் பெரிய தைரியம் வேண்டும் என்று நினைக்கிறேன். திருமணம் என்பதே ஒரு லாட்டரி போலத் தோன்றுகிறது.

பொருளாதார ரீதியாக யாரையும் சார்ந்து வாழக் கூடாது, தா, தந்தையைக் காப்பாற்ற வேண்டும், நம்மைப் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வாப்பு கள் என்னென்ன உள்ளது என்பதை எடுத்துச்

சொல்ல வேண்டும். இதுவே என் லட்சியங்கள். ‘எஸ் வி கேன்’ என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் உதவுகிறேன். இரண்டு மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு ஆசிரியராக இருக்கிறார்கள்."

மறக்க முடியாத சம்பவம்?

18 வயது வரை என் தந்தையும் சகோதரிகளும் பள்ளிக்கு மட்டுமல்லாது, திருமணங்களுக்கும் திருவிழாக்களுக்கும் எங்கு சென்றாலும் என்னைத் தூக்கிக்கொண்டு சென்றதை மறக்கமுடியாது. அதே போல் முதல்முறையாக நீச்சல் போட்டியில் கலந்துகொண்டபோது, ‘ஊக்கம் மிகுந்த விளையாட்டு வீரர்’ என்று ஒரு புதிய பதக்கத்தை உருவாக்கி

எனக்குக் கொடுத்து அனைவரும் கொண்டாடியதை வாழ்க்கையில் மறக்கமுடியாது.

போட்டிகளுக்காக வெளிநாடு சென்றபோது கடலில் நீச்சல் அடித்தது மிகவும் பிடித்தமானது. அதையும் மறக்கமுடியாது."

அறிவாற்றல் போட்டி

பாலமுருகன் என்ற இளைஞன், மகரிஷி ஒருவரிடம் புதிய மாணவனாகச் சேர்ந்தான். அறிவிலும், அடக்கத் திலும் சிறந்த அவனை மகரிஷி மிகவும் நேசித்தார். அதைக் கண்ட மூத்த மாணவர்கள் பொறாமைப்பட்டனர். பாலமுருகனைப் பற்றி அடிக்கடி கோள் மூட்டினர். அதற்கு முடிவு கட்ட விரும்பினார் மகரிஷி.

ஒருநாள், ‘அன்புச் செல்வங்களே, உங்கள் அறி வாற்றலுக்குப் போட்டி வைக்கப் போகிறேன்" என்றார் மகரிஷி. மாணவர்கள் போட்டிக்குத் தயாராயினர்.

அவர்களின் முன்னால் ஒரே வடிவம், வண்ணம், அளவில் மூன்று பொம்மைகள் வைக்கப்பட்டன. இதில் சிறந்தது எது என்று விளக்குபவரே என் வாரிசு" என்றார் மகரிஷி.

மாணவர்கள் ஒவ்வொருவராக ஆய்வு செய்தனர்.

சிறந்த பொம்மை எது என்று சொல்ல முடியாமல் மூத்த மாணவர்கள் தோல்வியை ஒப்புக்கொண்டனர்.

கடைசியாக பாலமுருகன் வந்தான். அவன் மெல்லிய நீண்ட கம்பி ஒன்றைக் கையில் எடுத்தான். முதல் பொம்மையின் காதில் நுழைத்தான். அதன் மறு காது வழியாகக் கம்பி வந்தது. இரண்டாவது பொம்மையின் காதில் நுழைத்தபோது, வாய் வழியே வெளியானது. மூன்றாவது பொம்மையின் காதில் நுழைத்தபோது, கம்பி தொண்டைக்குள் போனது. மூன்றாவது பொம்மையே

சிறந்தது எனத் தெரிவித்த பாலமுருகன் அதற்கான காரணத்தைக் கூறினான்.

கேட்பதை ஒரே காதில் வாங்கி மறு காதில் விடுவது முதல் ரகம். இரண்டாவது ரகம் கேட்டதை அப்படியே சொல்லுமே தவிர, அதை உள்வாங்கி தன்னைத் திருத்திக் கொள்ளாது. மூன்றாவது ரகம், கேட்டதை ஜீரணித்து தன் வாழ்வைச் சீர்செய்யும் தன்மை கொண்டது. எனவே, மூன்றாவது பொம்மையே தரத்தில் சிறந்தது" என்றான் பாலமுருகன்.

பொறாமைப்பட்ட மாணவர்கள் வாயடைத்து நின்றனர்.

- ருக்குமணி, சிதம்பரம்.

Post Comment

Post Comment