மெலிந்த உடல்;குறைந்த எடை பாதுகாப்பானதா?தாரணி கிருஷ்ணன் -இன்றையத் தேதியில் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைப்பாடு மிகவும் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம். உடல் எடை கூடினால் நாம் அழகாகத் தெரிய மாட்டோம் என்ற மனோபாவம், எல்லோருள்ளும் இருந்து வருகிறது. இதற்காகவே மிகவும் குறைந்த அளவில் சாப்பிடுவது/ சாப்பிடாமலேயே இருப்பது போன்ற செயல்களில் பெண்கள் ஈடுபடுவதை நாம்

சாதாரணமாகவே பார்த்திருப்போம். இதே பழக்கத் தைச் சிறு வயதிலிருந்தே பெண் குழந்தைகளும் கடைபிடித்து வருகின்றனர். தேவையை விட

அதிக உடல் எடை இருந்தால் எப்படிக் குறைக்கலாம் என்பதற்கு டயட் ஃபோலோ செயும் நாம் தேவையான உடல் எடை இல்லையென்றால் என்னென்ன டயட் ஃபாலோ செய வேண்டும் என்பதைத் தெரிந்

துள்ளோமா?

ஒரு மனிதன் சராசரியாக இருக்க வேண்டிய உடல் எடையை விட சுமார் 5 கிலோ குறைவாகவோ அதிகமாகவோ இருந்தால் அது சாதாரணம்

தான். ஆனால், 15 கிலோ உடல் எடை வித்தி யாசப்பட்டால் கண்டிப்பாக அது கவனிக்கப்பட

வேண்டிய ஒன்று. பெண் குழந்தைகள் உடல்

எடை கூடிவிட்டால் அதற்கு தக்க உணவுக்

கட்டுப்பாடுகளை உடனே மேற்கொள்வது

போல உடல் எடை குறைந்தாலும் அதற்

கேற்ற டயட் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

பெண் குழந்தைகளின் ஆரோக்கியம்:

பெண் குழந்தைகள் ஆரோக்கியமாக இருப் பதற்கு குழந்தை கருவில் உள்ளபோதும், பிறந்து சில மாதங்களிலும் அக்குழந்தைக்கேற்ற சத்தான உணவினைக் கொடுத்து வருவது தான் முக்கியம். கருவுற்றிருக்கும்போது தா தன் குழந்தைக்கும்

சேர்த்துச் சாப்பிடுகிறோம் என்பதை மனதில் வைத்துக்கொள்வது அவசியம். வருமுன் காப்போம் என்பது போல, கருவுற்றிருக்கும்போதே தன் குழந்தை ஆரோக்யமாக வளரத் தேவையான உணவுப் பழக்கங்களை அந்தத் தாய் மேற்கொள்ள வேண்டும். தங்கள் உணவில் பொதுவாக எடுத்துக் கொள்ளும் புரதச்சத்து அளவினை விட 10 கிராம் கூடுதல் புரதச்சத்து சேர்த்துக்கொள்ள வேண்டும். அன்றாட உணவில் பால், முட்டை சேர்த்துக் கொள்வது, சரியான உடற்பயிற்சி மேற்கொள்வது இதெல்லாமும் அவசியம்.

டீ, தண்ணீர், பால் போன்றவற்றில் பிஸ்கட் நனைத்துத் தருவது, சாதத்தை மிக்ஸியில் அரைத்து தருவது, சிறிதளவு உணவையே மணிக்கணக்கில் ஊட்டி விடுவது என நாம் அக்குழந்தைக்குத் தவ றான உணவு வழக்கத்தை பழக்கப்படுத்தி வரு கிறோம். குழந்தைகள் கம்மியாகத்தான் சாப்பிடு வார்கள் என்பது தெரிந்தும் தேவையற்றதைக் கொடுத்து வயிற்றை நிரப்புவதை விடுத்து,

கொடுக்கும் சிறிதளவு உணவினைச் சத்துள்ளதாகக் கொடுக்க வேண்டும். குழந்தை பிறந்த 6-18 மாதங்களுக்குள் பால், பழம், முட்டை என எல்லா வகையான உணவையும் (சைவம், அசைவம்) கண்டிப்

பாகக் கொடுத்து பழக்க வேண்டும். காரம், எண்ணெ போன்றவற்றின் அளவைக் குறைத்துக் கொண்டால் போதும். அந்தச் சமயத்தில் அக்

குழந்தை சாப்பிட்டுப் பழகுவதுதான் பிற்காலத்தில் எந்த உணவையும் தவிர்க்காமல் எல்லாவற்றையும் சாப்பிட்டுத் தெம்பாக இருப்பதற்கான அடித்தளம். அதன் பிறகும் இது போன்ற சத்தான உணவினை அன்றாடம் கொடுத்துப் பழக்கினால் குழந்தைக்குத் தானாகவே தேவையான சத்தும் எடையும் கிடைக்கும். இதுவே, சரியான உடல் எடையைத் தக்க வைத்துக் கொள்வதற்கானச் சிறந்த வழி.

முன்பெல்லாம் பெண் குழந்தைகள் பூப்படையும் வயது, 15-17ஆக இருந்தது. ஆனால், இப்போது 10-12 வயதிலேயே பெண் பிள்ளைகள் வயதிற்கு வருகிறார்கள். பொதுவாக மிக ஒல்லியாக, ஊட்டச் சத்து குறைபாடுள்ள பெண் குழந்தைகள் பருவ மடைந்து சில நாட்களில் சரியான எடைக்கு வந்துவிடுவார்கள். இதற்கான காரணம் அவர்களுக்குள் ஏற்படும் ஹார்மோன் மாற்றம் மட்டுமல்ல பருவ மடைந்ததும் அவர்களுக்குத் தரப்படும் சத்தான உணவும்தான். உளுந்து களி, நாட்டு முட்டை போன்ற சத்து மிகுந்த பொருட்களை அதிகம் கொடுப்பதுதான் அக்குழந்தையின் உடல் எடையும், ஆரோக்கியமும் அதிகரிக்கக் காரணம்.

ஊட்டச்சத்துக் குறைபாடுக்கு

என்ன காரணம்?

ஊட்டச்சத்துக் குறைபாடுள்ளப் பெண் குழந்தைகளை இரு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று வறுமை நிலையில் இருப்பவர்கள். உண்ண உணவு இல்லாமல் சரியான ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்காமல் ஒல்லியாக இருக்கும் பெண் குழந்தைகள். மற் றொன்று, பணம் இருந்தும் தேவையானச் சத்தான உணவைச் சாப்பிட முடிந்தும் சாப்பிடாமல் இருந்து உடலைக் கெடுத்துக்கொள்வது. வறுமை நிலையில் இருப்பவர்கள் விலை மதிப்புள்ள சத்தானப் பொருட் களைச் சாப்பிட்டுத்தான் உடல் நலனைக் காக்க வேண்டும் என்பதில்லை. கிடைக்கும் சிறிய வருமானத்திலும் பசிக்காக சிப்ஸ், பிஸ்கட், டீ என வயிற்றை நிறப்பாமல் தேவையான சத்தான மலிவு விலையில் கிடைக்கும் பொருட்கள் எத்தனையோ உண்டு, அதைச் சாப்பிட்டுக் கொள்ளலாம். மற்றவர் கள் எது உடலுக்கு ஆரோக்கியமானது என்பதை அறிந்து சாப்பிட வேண்டும். தேவையற்ற தின்பண் டங்களைத் தவிர்த்தாலே போதும். அதேபோல் அதிக அளவு சர்க்கரை/இனிப்பு, மைதா சேர்த்து உடல் எடையைக் கூட்டும் முயற்சியில் ஈடுபடுவது தவறு. அது தேவையில்லாத கொழுப்புச் சத்தினை அதி கரித்து உடல் உபாதைகளை ஏற்படுத்தும். அதற்குப் பதிலாக சத்தான உணவைச் சாப்பிட்டு உடல் தசை, எலும்புகளை வலுப்படுத்துவது என உடல் எடையை/ஆரோக்கியத்தைக் கூட்ட வேண்டும்.

உடல் எடை அதிகரிக்க, டயட் டிப்ஸ்!

டூ காலையில் டீ - காஃபி தவிர்த்துவிட்டு, இட்லி தோசை, பூரி என காலை டிபனை வழக்

கத்தை விட சிறிது அதிகபடுத்துங்கள். தாராளமாக 4 இட்லிகள் சாப்பிடலாம். இது அதிகம் என்று நினைக்க வேண்டாம்.

டூ 11 மணியளவில் பால்/தயிர் கலந்து சத்து மாவு கஞ்சி, கேப்பங்கூழ் என சத்து மிகுந்த ஆகாரங் கள் சிலவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

டூமதியம், இரவு இரண்டு வேளையும்

சாப்பாடு சாப்பிடுவது நல் லது. அவரவர் வேலைக் கேற்ப மதிய உணவின் அளவு வித்தியாசப்படும். தாராளமாக 2-3 கப் சாதத்தோடு, நிறைய காகறிகள் எடுத்துக்கொள்வது அவசியம். அத்தோடு சுண்டல், பருப்பு, முளைகட்டியப் பயிர் என புரதச்சத்து அதி கம் உள்ள பொருட்களைச் சாப்பிடுவது நல்லது.

டூ அசைவ உணவு எடுத்துக்கொண்டால் காகறி, தயிர்/மோர் எடுத்துக்கொள்ளக் கூடாது என்ற தவறான கருத்து நம்மில் பலரிடையே உண்டு. இது சரியல்ல. எந்த உணவு எடுத்துக் கொண்டாலும் அதனுடன் காகறி, தயிர், மோர் இவற்றை சேர்த்துக்கொண்டால் உடலுக்குக் கூடுதல் பலம் சேர்க்கும்.

டூ எல்லா உணவிலும் எண்ணெ மற்றும் காரத்தின் அளவைக் குறைத்துக்கொண்டால் எளிதாக அதிக உணவு எடுத்துக்கொள்ள முடியும்.

டூ 3-4 மணியளவில் தேவைபட்டால் டீ, காஃபி எடுத்துக்கொள்ளலாம்.

டூ இரவு படுக்கும் முன் கட்டாயம் பாதாம் அல்லது மஞ்சள் கலந்து பால் சாப்பிட வேண்டும்.

டூ ப்ரெட்டுடன் வெண்ணெ/சீஸ் சேர்த்துக் கொள்வது, பன்னீர், நெ தோசை, பரோட்டா போன்ற உணவுகள் உடல் எடையைக் கூட்டும். இவற்றை அடிக்கடி எடுத்துக்கொள்ளாமல் வாரம் ஒரு முறை சிறிதளவு எடுத்துக்கொண்டால்

நல்லது.

Post Comment

Post Comment