வானவில் பக்கம்...-உருளைக்கிழங்கு

குழிப் பணியாரம்

தேவை: இட்லி மாவு - லீ கிலோ, உருளைக்கிழங்கு - லி கிலோ, வெங்காயம் - பெரியது - 2, பச்சைமிளகாய் - 4, கறிவேப்பிலை, கொத்துமல்லி - தேவையான அளவு, முந்திரி - 10, தேங்காய்த் துருவல் - 50 கிராம், உளுந்து, கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன், சமையல் சோடா, உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.

செய்முறை: இட்லி மாவில் தேவைக்கேற்ப உப்பு, சமையல் சோடா கலந்து வைக்கவும். சூடான வாணலியில் எண்ணெய் ஒரு குழிக்கரண்டி ஊற்றி, உளுந்து, கடலைப்பருப்பு சேர்த்து வதக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், நன்கு பொடித்த முந்திரி சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியபின், தேங்காய்த்துருவலைச் சேர்த்து, கூடவே வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து அதில் சேர்த்துக் கிளறவும். இறுதியாக மஞ்சள் தூள், கொத்துமல்லி, கறிவேப்பிலை

சேர்த்துக் கிளறி, இந்தக் கலவையை மாவுடன் கலக்கவும். பணியாரச் சட்டியினை அடுப்பில்

சூடேற்றி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மாவினை ஊற்றித் திருப்பிப் போட்டு வேகவைத்து எடுத்தால் உருளைக்கிழங்கு குழிப் பணியாரம் தயார்.

- அ. மேகலா, வேலூர்

ரதஸப்தமி

ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் உலகைச் சுற்றிவரும் ஏழாவது நாள் ஸப்தமி. வாசலில் தேர்க்

கோலம் போடுவார்கள். சூரி யனின் ஏழு கதிர்கள் அன்று மட்டும் எருக்க இலை வழி யாக இழுக்கப்பட்டு உடலில் பாய்ந்து உடல் உபாதை களை நீக்குவதாக ஆன்

றோர்கள் கூறுவார்கள்.

- எஸ். வசந்தி, தஞ்சாவூர்

கிழமை மொழிகள்

ஞாயிறு பயணம் நாய் போல அலையச் செய்யும்.

திங்கள் துக்கம் திரும்பிக் கேட்பார்.

செவ்வாய்க்கிழமைக்கு மங்கள வாரம் என்று

பெயரிட்டதுபோல்.

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது.

வியாழன் இரவு பேச்சு விடிந்தால் போச்சு.

வெள்ளிக்கிழமை கலக வாரம்.

சனி வேலை ஸ்திர வேலை.

- பி.தீபா, ஓசூர்

வெள்ளை இரவு

இரவு என்றாலே இருள், கறுப்பு என்பது நாம் அறிந்த உண்மை. ரஷ்யாவிலுள்ள செயின்ட் பீட்டர்ஸ் பார்க்கில் இந்த வெள்ளை இரவைப் பார்க்கலாம். மே மாத இறுதியிலிருந்து ஜூலை மாதத் துவக்கம் வரை இங்கே சூரியன் பின்னிரவு நேரத்தில்தான் அஸ்தமிக்கும். ஆகவே இங்கு இரவே பிரகாசமாகத்தானிருக்கும். அதனால் இந்த இரவை வெள்ளை இரவு என்று அழைக்கின்றனர்.

- கே.சுபாக்கனி, மேலகிருஷ்ணன்புதூர்

நீரிழிவு நோய்க்கான

எளிய மருத்துவம்

நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் பாகற்காய் சூப் வைத்துச் சாப்பிட நாளடைவில் சர்க்கரை நோய் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

முந்திரி மர வேர்ப்பட்டை 30 கிராம் எடுத்து இடித்து மண் சட்டியிலிட்டு 2 லிட்டர் நீர் விட்டுக் காய்ச்சி அரை லிட்டராகச் சுண்டவைத்து காலை, மாலை தவறாமல் 40 நாட்கள் குடித்துவர சர்க்கரை நோய் பூரண குணமாகும்.

நாவல் கொட்டையைச் சேகரித்து நன்றாகக் காயவைத்துத் தூளாக இடித்து வைத்துக்கொண்டு காலை, மாலை வெறும் வயிற்றில் ஒரு சிட்டிகைப் பொடியை வெந்நீரில் சாப்பிட்டுவர சிறுநீரிலுள்ள சர்க்கரை குறையும். அன்றி, 5 நாவல் பழக் கொட்டைகளை எடுத்து ஒரு பாத்திரத்தில் ஒரு தம்ளர் தண்ணீர் விட்டு பாதியாகச் சுண்டக் காய்ச்சி தொடர்ந்து குடித்து வரவும். நோய் குணமாகும்.

மாந்தளிர் ஒரு கைப்பிடியும், மாம்பூ ஒரு கைப் பிடியளவும் எடுத்து நிழலில் உலர்த்தி, இடித்துத் தூள் செய்து வைத்துக்கொண்டு தினமும் காலையில் ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் தூளைப் போட்டுக் கலக்கிக் குடிக்க நீரிழிவு நோய் கட்டுப்படும்.

- ச. லெட்சுமி, செங்கோட்டை

படிச்சுத் தெரிஞ்சுக்கோங்க...

* பழைய மாத்திரைகள், மருந்துகளை வீணாக் காமல் செடிகளுக்குப் போடலாம் என்று சொல் கிறார்கள். இது தவறு. மருந்துகளிலுள்ள ரசாயனக் கலவைகள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் கலந்திருக்கும். இலைகள், செடிகளின் வளர்ச்சியைத் தடுத்து விரைவில் செடி பட்டுவிடும். ஆகவே, பழைய மருந்துகளுக்குப் பதிலாக காய்கறிக் கழிவுகளைப் போடலாம்.

* பாகற்காயின் கசப்பை நீக்கிவிட்டு, பலவித மாகச் சமைத்துச் சாப்பிடுவது தவறு. காயுடன்,

சிறிது வெல்லம் சேர்த்து வதக்கி கசப்பு தெரியாமல் குழந்தைகளும் சாப்பிடும்படி செய்வதுதான்

சிறந்தது. உடலுக்குச் சிறந்த மருந்தான கசப்புத் தன்மையை நீக்கிவிட்டுச் சாப்பிடுவது வெறும் சக்கையைச் சாப்பிடுவதுபோலாகிவிடும்.

- பி.எஸ்.ராமன், சென்னை

போய் வருகிறேன்

ஒரு மாதமாகவே மனது சரியில்லை. பிரியும் நாள் நெருங்குகிறதே! இது தவிர்க்க முடியாதது என்றாலும், வருத்தப்படாமல் இருக்க முடிய வில்லை. ஒவ்வொரு நாள் காலையிலும் தவறாமல் என்னைப் பார்க்கும் வீட்டுத் தலைவி, விடுமுறை கணக் கிடும் பையன், விரத நாள் பார்க்கும் பாட்டி எல்லோரை யும் பிரியும் நாள் வந்துவிட்டது. போய் வருகிறேன்!

இரவே என்னைப் பிரித்து எடுத்துவிட்டனர். ‘கால்படா மல் அலமாரியில் வை!’ என்று எஜமானர் உத்தரவிட்டார். புது காலண்டர் (நாள்காட்டி) என் இடத்தில் அமர்ந்தது... ‘ரொம்பப் பீற்றிக் கொள்ளாதே! உனக்கும் அடுத்த வருடம் இதே கதிதான்!’

- கிருஷ்ணவேணி ரங்கநாதன், சென்னை

Post Comment

Post Comment