புண்ணிய பலனை அதிகரிக்கும் மாசி மகம்!மாலதி நாராயணன், சென்னை -உலகில் இருக்கும் எல்லாத் தலங்களுக்கும் பீஜமாக அதாவது தோற்றுவாயாக இருப்பது கும்பகோணம். ஊழி காலத்தின் இறுதியில் சிருஷ்டி பீஜங்கள் அனைத்தும் ஒரு குடத்தில் தங்கின. அந்தக் குடம் தங்கிய இடமே கும்ப

கோணம். கும்பகோணத்தை, சர்வேஸ்வரரான ஈஸ்வரனே உருவாக்கினார்.

இங்கு மாசி மகம் மிகவும் விசேஷம். இங் குள்ள மகாமகக் குளத்தில் நீராடினால் செய்த பாவங்கள் அனைத்தும் தீரும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகாமகம் மிக மிகச் சிறப்பு வாய்ந்தது. மகாமகத்தன்று கங்கை முதலான நவநதிகளும் சிவபெருமானுடன் தீர்த்தமாட வருவதாக ஐதீகம்.

ஒவ்வொரு ஆண்டும் சூரியன் கும்ப ராசியில் இருக்கும்பொழுது மாசி மாதம் நடக்கும். அப்பொழுது பௌர்ணமி நாளில் மக நட்சத்திரத்துடன் கூடிய நேரத்தில் நடைபெறும் விழா மாசி மகம். இதுவே 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை விசேஷமாக வருவது மகாமகம்.

இந்நாட்களில் இங்குள்ள மகாமகக் குளத்தில் நீராடி, இறைவனை பூஜித்து நம்மால் முடிந்த தானங்களை ஏழை எளியவர்களுக்குச் செய்தால், சகல பாவங்களும் தீர்ந்து சௌபாக் கியங்கள் கிடைக்கும்!

மாசிமக தீர்த்த மற்ற தலங்கள்

கும்பகோணம் அருகில் உள்ள வலங்கைமான் சாலையில் 2 கி.மீ. தொலைவில் உள்ளது திருநல்லூர். இங்குள்ள சிவன் கோயிலில் உள்ளவர் பஞ்சவர்னேஸ்வரர். இவர் ஒரே நாளில் ஆறு நாழிக்கு ஒருமுறை அதாவது ஐந்துமுறை நிறம் மாறுவதால் இவருக்கு பஞ்சவர்னேஸ்வரர் என்ற பெயர். இத்தலத்தில் கோயிலுக்கு முன்னால் உள்ள குளம் சப்தசாகர தீர்த்தம். இந்தக் குளத்தில் மாசி மகத்தன்று

நீராடி (12 முறை) 12 முறை வலம் வருவது இங்கு விசேஷம்.

ஸ்ரீமுஷ்ணம்: மூலவர் பூவராகப் பெருமாள். இத்தலத்தில் மாசி மாதம் பிரம்மோற்சவம் மிகவும் விசேஷம். அருகில் உள்ள தைக்கால் என்ற கிராமத்திற்குப் பூவராக சுவாமி தீர்த்த வாரிக்கு எழுந்தருளுவார். முகமதியர்கள் அதிகம் வாழும் இக்கிராமத்தில் ஊர்வலமாக பெருமாள் செல்லும்பொழுது கிராமவாசிகள் சீர்வரிசையுடனும், மேளதாளங்களுடனும், சுவாமியை எதிர்கொண்டு அழைத்து, பட்டு, பீதாம்பரம், மாலைகள் சாற்றி, சர்க்கரை, பழம், நிவேதனம் செய்வார்கள். பிறகு தீர்த்தவாரி நடக்கும். மாசிமகத்தன்று விசேஷமாக நடக்கும்.

தில்லை நடராஜர்: தில்லை சிதம்பரம் நடராஜர் உற்சவராக தேரில் திருவீதிக்கு மாசி மகத்தன்று எழுந்தருளி தீர்த்தவாரி நடக்கும். மிகவும் விசேஷமான மாசி மக தீர்த்தவாரி.

கஞ்சனூர்: நவகிரகங்களில் சுக்கிரனுக்கு உரிய தலம். கஞ்சனூரில் காவிரி நதி உத்தரவாகினியாகப் பாய்கிறது. இக்கோயிலில் முன்பு மாசி மகத்தன்று பிரம்மோற்சவம் நடைபெற்று வந்தது. இப்பொழுது தீர்த்தவாரித் திருவிழா மட்டும் நடக்கிறது. இந்தத் தீர்த்தவாரித் திருவிழாவில் கலந்துகொண்டால் காசியில் கங்கைக் கரையில் குளித்ததைவிடப் புண்ணிய பலன் அதிகம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருப்பாம்புரம்: இங்கு மாசி மகம் நாக தோஷத்தைப் போக்கும் என்பார்கள். நாகராஜனான ஆதிசேஷனால் இறைவன் வழிபட்டார். எட்டு நாகங்கள் இறைவனை இத்தலத்தில் வழிபட்டு எல்லாப் பேறுகளையும் பெற்றன என்று புராணங்கள் சொல்கின்றன.

இங்கு மாசிமகப் பெருவிழா விசேஷம். மாசி

மகத்தன்று திரும்பாம்புரமுடைய மகாதேவரைத்

தரிசிப்பதும், தீர்த்தவாரியில் பங்கேற்பதும், சேஷ தீர்த்தத்தில் நீராடுவதும் நாகதோஷ நிவர்த்திக்கு வழி செய்யும்.

திருக்குவளை: சப்தவிடங்கள் ஸ்தலங்களுள் ஒன்

றான இங்கு பிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம்,

அகத்தியர் தீர்த்தம், விநாயகத் தீர்த்தம், சந்திரத் தீர்த்தம் முதலானவை பிரசித்தம். இங்கு மாசி மகத்தன்று நெல் மகோற்சவ விழா விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அன்று இறைவனை வழிபட்டால் சகல சௌபாக்கியங் களும் கிடைக்கும்.

Post Comment

Post Comment