இவர் வித்தியாசமானவர்!-இவர் வித்தியாசமானவர்!

திரிபுரா மாநிலத்தில் சந்திரபுரி எனும் கிராமத்தில் உள்ள நமிதா

கோஷ் என்ற பழங்குடிப் பெண்ணைக் காண பத்திரிகையாளர்கள் படை யெடுக்கின்றனர். 46 வயதான நமிதா அப்படி என்ன செய்தார்? இவருக்கு குழந்தைகளும், குரங்குகளும் ஒன்று. வேற்றுமை இல்லாமல் குரங்கு

குட்டிக்கும் தாய்ப்பால் ஊட்டுகிறார்.

பசி எடுத்துவிட்டால், குட்டிக் குரங்கு ஓடிவந்து, நமிதாவின் மேலா டையைத் தூக்கி பால் குடிக்க ஆரம் பித்துவிடும். மனித உடம்பில் குரங்கு வாய் வைத்தாலே ‘ராபீஸ்’ தொற்றி விடும் என்று நாம் பயந்தாலும், அதை எல்லாம் நம்பத் தயாராக இல்லை நமிதா.

- ஐவண்ணம் ரகுபதி, போளூர்

உலகத்திலேயே பெரிய கரன்சி நோட்டு இரண்டாம் ஜார் நிக்கலர் மன்னர் வெளியிட்ட ஐநூறு ரூபாய் நோட்டுதான்.

27ஙீ12.5 செ.மீ. வெளியிட்ட ஆண்டு 1912.

உலகத்திலேயே சிறிய கரன்சி நோட்டு ஹாங்காங் அரசு வெளியிட்ட 1 சென்ட் மதிப்புள்ள நோட்டுதான். ஆண்டு 1988. அது ஒரே பக்கத்தில் அச்சாகிய நோட்டு. அடுத்த பக்கம் வெற்றிட மாகவே இருந்தது.

பண நோட்டுகளில் வரிசை எண்கள் அச்சாகியிருக்கும். வரிசை எண்களே இல்லாத கரன்சி நோட்டுகளையும் வெளியிட்டிருக் கிறார்கள்.

1940-45 உலகப் பெரும்போரின்போது ஜப்பான் கைப்பற்றிக் கொண்ட நாடுகளில் ஏற்பட்ட ராணுவ ஆட்சி, வரிசை எண் இல்லாத கரன்சி நோட்டுகளை வெளியிட்டது.

- ஆர். ஜெயலட்சுமி, திருநெல்வேலி

தீயணைப்பு வீரர்கள் பயன் படுத்தும் காலணிகள், கையுறைகள், ஹெல்மெட் ஆகியவை ஆஸ்பெஸ்டாஸ் இழைகளால் ஆனவை. ஆஸ்பெஸ்டாஸ் நெருப் பில் எரியாது. மின்சாரத்தைக் கடத் தாது. 2000 முதல் 3000 சென்டி

கிரேடு வரை வெப்பத்தைத் தாங்கக் கூடியது.

- கே. சுபாக்கனி, மேலகிருஷ்ணன்புதூர்

ஜப்பான் நாட்டில் ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலி யுறுத்த ஊர்வலத்தை இரவிலேயே நடத்துகிறார்கள். வேலைக்குக் குந்தகம் ஏற்படாமலும் போக்கு வரத்துத் தடைகளால் பொதுமக்களுக்குச் சிரமம் ஏற்

படாமலும் இருக்க இப்படி ஊர்வலத்தை இரவில் வைத்துக் கொள்கிறார்கள்.

- டி. நிர்மலா தேவி, மதுரை

Post Comment

Post Comment