பாலியல் குற்றங்களுக்கு தூக்குத் தண்டனை உண்டா?நேர்காணல் : சேலம் சுபா -பெண்களுக்கு பலவித திட்டங் களை வகுத்து அவர்களின் வாழ்வில் ஏற்றத்தைத் தந்த நமது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நினைவைப் போற்றும் விதமாக இப்போதைய நமது அரசு அவரின் பிறந்த நாளை (பிப்ரவரி 24) மாநிலப் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்துள்ளது.

இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட பெண்களுக்கான பாதுகாப்பு தமிழகத்தில் அதிக

மென்றாலும், அவ்வப்போது நிகழும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்களும் வன்கொடுமைகளும் மரணங்களும் நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வேதனையில் தள்ளுகின்றன. செதிகளின் மூலமாக நாம் அறிந்த சம்பவங்கள் குறைவே. நாம் அறியாமல் தினம் எங்கோ ஓர் இடத்தில் இதுபோன்ற பாலியல் கொடுமைகள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

இதுபோன்ற சம்பவங்களில் காவல்துறை யினரால் கைது செயப்படும் நபர்கள் தகுந்த

சாட்சியங்கள் இன்றியும் செல்வாக்கு மிக்கவர்களின் சிபாரிசினாலும் தண்டனை பெறாமல் வெளியே வருவதையும் காண்கிறோம். ஒரு சம்பவத்தைக் கேட்கும்போது மட்டும் உள்ளம் கொதித்து படுபாவி அவனையெல்லாம் தூக்கில் போடணும் என்று கொதிக்கும் நாம், நாளடைவில் அடுத்த குழந்தை பாதிக்கப்பட்ட செதியைக் கேட்கும்வரை அந்தச் சம்பவத்தை மறந்தும் விடுகிறோம்.

மனசாட்சியின்றி அப்பாவிப் பிஞ்சுகளை சீரழிக் கும் கயவர்களைத் தூக்கில் போட சட்டத்தில் இடம் உண்டா? அல்லது இதற்கான வேறு தண்

டனைகள் என்ன ? ஒரு குழந்தை பாதிக்கப்பட்டால் என்ன செய வேண்டும் சட்டப்படி? இதுபோன்ற கேள்விகள் நம் மனதில் எழ அதற்கான விடைகளைத் தர சென்னை உயர் நீதிமன்றத்

திலும் சேலம் நீதிமன்றத்திலும் வழக்குகளை நிகழ்த்திவரும் சேலத்தின் வழக்கறிஞரான

ஆர். நதியாவை அணுகினோம்.

பெண்கள் சம்பந்தப்பட்ட குடும்பநல வழக்குகளைத் திறமையாகக் கையாண்டு வரும் இவர் பெண்குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்களைக் கண்டு ஒரு வழக்கறிஞராக மட்டுமின்றி, ஒரு பெண்ணாகவும் சினம் கொள்கிறார்.

கண்டிப்பாக பெண்குழந்தை மீதான பாலியல் குற்றம் ஒருவர் மீது சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டால் சட்ட விதி களுக்கு உட்பட்டு உச்சக்கட்ட தண்

டனையாக தூக்குத்தண்டனை விதிக்க முடியும் என்றவர், அடுத்தடுத்து நம் கேள்விகளுக்கான பதில்களைத் தந்தார்.

ஒரு குழந்தை பாலியல்ரீதியாக பாதிக்கப்பட்டால் பெற்றோர் உடனே என்ன செய வேண்டும் ?

தவறு நிகழ்ந்ததை அறிந்தவுடன் முதலில் அந்தப் பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் சென்று புகார் அளிக்க வேண்டும். அல்லது

சைல்டு ஹெல்ப் லைன் அமைப்பைச் சார்ந்தவர்களை அணுகி விஷயத்தைத் தெரிவித்தால் அவர்கள் தக்க நடவடிக்கை எடுக்க உதவுவார்கள். அக்குழந்தைக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சையும் மனநலம்

சார்ந்த ஆலோசனையும் உடனடியாக வழங்கப்பட வேண்டும்."

பெண்குழந்தைகளின் பாதுகாப்புக்கான சட்டமும் அதன் விதிகளும் என்ன?

குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டமே போக்சோ. 2012 ஆம் ஆண்டில் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. கணூணிணாஞுஞிணாடிணிண ˆஞூ இடடிடூஞீணூஞுண ஊணூணிட் குஞுதுதச்டூ ˆஞூஞூஞுணஞிஞுண் ( கˆஇகுˆ அஞிணா 2012 )

இந்தச் சட்டம் பாலியல்ரீதியான வன்கொடுமை களுக்கு ஆளாகும் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்காகவும் 16 வயதிற்குட்பட்ட ஆண் குழந்தைகளுக்காகவும் இயற்றப்பட்டது. குழந்தை கள் மீதான பாலியல் குற்றத்தைப் பதிவு செது அதற்குரிய தண்டனை பெற்றுத்தர இந்தச் சட்டம் உதவும். இந்தச் சட்டத்தின்படி பாதிக்கப்பட்ட குழந்தையின் மனநலம் கருதி வெளிப்படையான விசாரணையைத் தவிர்த்து ரகசியமாகவே

விசாரணை மேற்கொள்ளப்படும். தேவைப்பட்டால் காவலர்கள் காவல் சீருடையின்றி புகார் அளித்த குழந்தையின் வீட்டுக்கு நேரில் சென்று விசாரிக்கலாம். மேலும் குற்றவாளியின் முன்னே குழந்தையை விசாரிக்கக் கூடாது.

ஒரு குற்றம் நிகழ்ந்து புகார் தந்தவுடன் காவல்

துறை தங்கள் விசாரணையைத் துவங்கி விடுவார்கள். மற்ற குற்றங்கள் போல் எப்.ஐ.ஆர் பதிவுக்குப் பின்தான் விசாரிக்கவேண்டும் எனும் கட்டாயம் இல்லை. அதேபோல் எவ்விதக் காரணமும் காட்டி விசாரணையைத் தள்ளிப்போட்டு காலதாமதம் செவதையும் சட்டம் அனுமதிக்கவில்லை. புகார் எடுக்கும் காவல் துறையினர் தங்களின் காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதி இல்லை என்பது போன்ற காரணங்களைக் கூறாமல் புகார் வந்தவுடன் விசாரணை மேற்கொள்ள வேண்டும். புகார் வந்தவுடன் காலதாமதமின்றி உடனடியாக குற்றம் சுமத்தப்பட்டவரை விசாரிக்கும் காவல் துறை, மூன்று மாதத்திற்குள் விசாரணையை முடிக்க வேண்டும். தண்டனையையும் வழங்கவேண்டும்."

அப்படி என்றால் நிறைய வழக்குகளில் பல வருடங்களாகியும் வழக்கு முடிக்கப்படாமல் உள்ளதே ?

இப்படிப்பட்ட குற்றங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் மனஉறுதியுடன் பின் வாங்காமல் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தரும் நோக்குடன் போராடவேண்டும். ஆனால் பெரும் பாலான பெற்றோர் பெண் பிள்ளையாயிற்றே நாளை இவள் வாழ்க்கை என்ன ஆவது? எனும் அச்சத்துடன் அல்லது உறவுகளின் நெருக்கடி அல்லது வறுமை போன்ற காரணங்களால் வழக்குகளைத் தொடர்ந்து சந்திக்க முடியாமல் கைவிடு கிறார்கள். இதன் காரணமாகவும் வழக்குகள்

நீண்டுகொண்டே போகலாம்."

என்ன மாதிரியான பாலியல் கொடுமைகளுக்குப் புகார் அளிக்க சட்டத்தில் இடமுண்டு?

குழந்தைகள் பாலியல் வன்முறைக்குத் தூண்டப்பட்டாலும் சரி, உட்படுத்தப்பட்டாலும் சரி, குற்றவாளியை இந்தச் சட்டத்தில் கைது செயலாம். எளிதில் பெயில் கிடைக்காது. பாலியல் ரீதியான சைகையோ, பேசுவதோ, தொலைபேசியிலோ, அலைபேசியிலோ, மின்னஞ்சல் மூலமாகவோ தொந்தரவு தருவதும் இந்தச் சட்டத்தின்படி தண்டிக்க வேண்டிய குற்றங்களாகும். ஆகவே இதற்கும் தாராளமாக புகார் அளிக்கலாம். இன்னும் சொல்லப்போனால் குழந்தைகளைப் பாலியல் காரணமாக அடிப்

பதும் திட்டுவதும் கூட தண்டனைக்குரிய செயல் களாகும்."

என்ன மாதிரியான தண்டனைகள் கிடைக்கும் ?

தற்போது மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட அவசரச் சட்டத்தின் மூலம் 12 வயதுக்குள் உட்பட்ட குழந்தை பாலியல்ரீதியாக பாதிக்கப்படும்போது மரண தண்டனை வழங்கப்படும். 16 வயதுக்

குட்பட்ட பெண் குழந்தைகள் பாலியல்ரீதியாக பாதிக்கப்படும்போது குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்படும். 18 வயதுக்கு மேல் உள்ள பெண் பிள்ளைகளும் 16 வயதுக்கு மேல் உள்ள ஆண் பிள்ளைகளும் பாலியல் ரீதியாக பாதிக்கப்படும்போது குற்றவாளிகள் இந்தியத் தண்

டனைச் சட்டத்தின்கீழ் தண்டிக்கப்படுவார்கள்."

பெண் குழந்தைகள் பாதுகாப்புக்காக உங்களின் ஆலோசனை ?

பெற்றோரின் கண்காணிப்பில் அன்புடன் வளர்க்கப்பட வேண்டும். ‘குட் டச்’ ‘பேட் டச்’ என்று குழந்தைகளுக்கு ஓரளவு விபரம் தெரிந்தவுடன்

சொல்லித் தரவேண்டும். முக்கியமாக உடலில் ஆடைகள் மறைக்கும் பாகங்களையும் கன்னம், உதடு, மார்பகங்கள், தொடைகள் போன்ற உடல் பாகங்களையும் தொட யாரையும் அனுமதிக்கக் கூடாது என்பதைக் கண்டிப்பாகச் சொல்லித்தர வேண் டும். குழந்தைகள் செல்லும் இடங்களையும் பழ கும் மனிதர்களையும் கண்காணிக்க வேண்டும். தங் களுக்கு நேரும் பாலியல் கொடுமைகளைத் தங்களி டம் பகிர்ந்துகொள்ளும் துணிவை நம்பிக்கையை பெற்றோர் பிள்ளைகளுக்குத் தரவேண்டும்.

ஒரு தவறு நடந்தால் அதை மறைக்காமல் வெளியே சொல்லும் துணிவை ஒவ்வொரு பெற் றோரும் பெறவேண்டும்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம். மனசாட்சி யற்ற கயவர்களுக்கு சட்டத்தின்கீழ் கட்டாயம் தண்டனை கிடைக்கும் பாதிக்கப்பட்டவர்களே துணிந்து நில்லுங்கள் சட்டப்படி போராட உங்களுக்குத் துணையாக நாங்கள் இருக்கிறோம்."

நம்பிக்கை அளித்த நதியாவுக்கு நன்றிகள்

சொல்லி விடைபெற்றோம்.

Post Comment

Post Comment