மருந்தாகும் மூலிகைகள்நந்தினி சுப்பிரமணி, இயற்கை மருத்துவர் -மருந்து என்றால் கசக்கும் என்பது பொதுவான கருத்து. அப்படி இல்லாமல் மருந்தை விருப்பப்பட்டு, ருசித்து சாப் பிடும்படி இருக்க வேண்டும் என்று நாம் உண்ணும் உணவே நம் தேகத்தை நோயிலிருந்து காக்கும் மருந்தாகும் படி செதனர் நம் சித்தர்கள். காடு, மலைகளில் மட்டுமே காணப்பட்ட மருத்துவக் குணம் நிறைந்த மூலிகைகளை மக்கள் வாழும் நிலத்தில் பயிரிடச் செதனர். அவற்றின் நற்பயன்களை மக்களுக்கு விளங்கச் செது மூலிகைகளை உணவாகப் பயன்படுத்த பழக்கினர்.

நாம் இன்று விரும்பி உண்ணும் அனைத்து கீரைகள்,

காகனிகள், கொட்டைகள், மசாலாப் பொருட்கள் என

அனைத்துமே மூலிகைகள்தான். நம் விளைநிலங்களிலும்

ஆற்றோரங்களிலும் தாமாகப் படர்ந்து வளரும் சிறு செடி கள், புல் பூண்டு வகைகள், கொடிகள், மரப்பட்டைகள் என அனைத்தையுமே மருந்துகளாகப் பயன்படுத்தும் முறை யினையும் நம் மக்களுக்குப் போதித்தனர். அன்றாடம் ஏற் படும் சிறு சிறு உடல் உபாதைகளை எளிதில் சரி செது கொள்ள, வீட்டு வைத்தியமுறைகளை அனைவருக்கும் கற்பித்தனர், நாட்பட்ட நோகளுக்கும், முற்றிய நிலையில் உள்ள நோகளுக்கும் மட்டுமே வைத்தியரிடம் சென்று மருத்துவம் செதுகொள்ளும் நிலையை ஏற்படுத்தினர். அப் படியாக வந்த உணவுப் பழக்கம்தான் நாம் இன்று சாப்பிடும் புதினா துவையல், அவரைப் பொரியல், கீரை மசியல் என்ற அனைத்து உணவு வகைகளும். நம் தமிழ் மக்கள் சமையலில் கடுகு, மிளகு, சீரகம், மல்லி, பெருங்காயம், வெந்தயம், பட்டை, இலவங்கம், ஏலக்கா, எள்ளு, வேர்க்கடலை, உளுந்து, கேழ்வரகு என்று குறைந்தபட்சம் 20 மூலிகைகளை யாவது அன்றாடம் சமையலில் பயன்படுத்துவர். துளசி, புதினா, கருவேப்பிலை, கொத்துமல்லி, கற்பூரவல்லி, பிரண்டை, முடக்கத்தான் என பல மூலிகைகளை நாம் மருந் தாகப் பயன்படுத்துகிறோம். அவ்வாறாக நமக்கு எளிதாகக் கிடைக்கும் சில மூலிகைகளை எவ்வாறு மருந்தாகவும், உணவாகவும் பயன்படுத்துவது என்பதைப் பார்ப்போம்.

துத்தி இலை: துத்தி இலையை விளக்கெண்ணெ விட்டு வதக்கி மூலத்தின் மீது வைத்துக் கட்ட, மூலம் குணமாகும். துத்தி இலை யைப் பாசிப்பருப்புடன் சேர்த்து

சமைத்து உண்ண, மூலச்சூடு மற்றும் மூலம் குணமாகும்.

தும்பை இலை: தும்பைச்

செடியை நீரில் போட்டு சிறி

தளவு மஞ்சள் சேர்த்துக் கொதிக்க வைத்து ஆவி பிடிக்க சைனஸ் குணமாகும். குளிர்காலத்தில் தும்பை இலையைப் பாசிப்பயறுடன் சேர்த்து உணவாகக் கொள்ள தும்மல், மூக்கடைப்பு நீங்கும்.

கழற்சி: கழற்சிப் பருப்புடன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து அரைத்து கட்டிகளுக்குப் போட அவை பழுத்து உடையும். அல்லது கரைந்து விடும். கழற்சிப் பருப்புடன் மிளகு

சேர்த்து உள்ளுக்கு எடுத்து வர, கொழுப்புக் கட்டிகள் குறையும்.

கடுகு: கடுகினை ஒன்றிரண்டாகப் பொடித்து லீ ஸ்பூன் அளவு நீரில் 2 மணி நேரம் ஊறவைத்து தெளிநீரை மட்டும் அருந்த விக்கல் நீங்கும். அல்லது கொதிக்க வைத்து

வடிகட்டியும் அருந்த விக்கல் தீரும்.

பற்பொடி: நாயுருவியின் வேரைக் காயவைத்து அதனைச் சுட்டு சாம்பலாக்கி பல் தேத்து வர பல்வலி, ஈறுகளில் ரத்தம் வடிதல், பல் ஆட்டம் முதலியவை குணமாகும்.

மாம்பருப்பு: மாம்பழம் மட்டுமின்றி பருப்பும் நமக்குப் பெரும் பயனளிக்கிறது. மாம்பருப்பினைப் பொடி செது வெந்நீரில் குடித்து வர, சீதபேதி எனும் ரத்தப்போக்கு

நீங்கும். கழிச்சலுக்கும் சிறந்த மருந்தாகும். அனைத்து வகை கழிச்சலுக்கும் பயனளிக்கிறது.

திரிபலா: நோ தாக்குவதும் சிகிச்சைக்குப் பிறகு குணமா வதும் இயல்பாக நடக்கும் நிகழ்வு. ஆனால், நோ வராமல் தடுக்கும் காயகல்பமாக திரிபலா சூரணம் பயன்படுகிறது. கடுக்கா, நெல்லிக்கா மற்றும் தான்றிக்காயின் கூட்டுப் பொருளே திரிபலா சூரணமாகும். திரிபலா சூரணம் பசி யின்மை, வயிற்றுப்புண் மற்றும் மலச்சிக்கலுக்கு மருந்தாகிறது.

திரிகடுகு: சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் சம அளவு சேர்ந்ததே திரிகடுகு. திரிகடுகினை தேனுடன் கலந்து உண்ண தலைவலி, சளி மற்றும் சைனஸ் பிரச்னைகள் தீரும். நுரையீரல் செயல்திறன் அதிகரிக்கும். நோத்தடுப்பு மருந்தாகவும் செயல்படும்.

ஒற்றடம்: வாதத்தினால் தோன்றும் மூட்டு வலிகளுக்கு நொச்சி இலை, பழுத்த எருக்கிலை, ஆமணக்கு இலை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது மூன்றிலுமே சிறிது விளக்கெண்ணெ விட்டு வதக்கி துணியில் முடித்து ஒற்றடமிட வலி குறையும்.

Post Comment

Post Comment