காய்கறி விடுகதைகள்
படங்களே விடைகள்!
1. முருகனின் காதல் மனைவி. இனிய குணத்தாள். யார்?
2. கொங்கு மண்டல ஊர் பெயர் கொண்ட இவள் சுவையானவள். யார்?
3. ஒல்லி உடம்புக்காரி. காரகுணத்
துக்காரி - அது யார்?
4. அழகானவள். தங்கத்தை மதிப் பிடுவதே இவள்தான் - அது யார்?
5. குல்லா போட்டிருப்பான். மற்ற வர்களுக்கு, குல்லா போட மாட்டான். அது யார்?
6. இரக்கம் உள்ளவன்தான். ஆனால், அரித்து விடுவான். அது யார்?
7. அரசனுக்கு உதவாத படை - அது என்ன?
8. இந்தக் காயத்துக்கு மருந்தில்லை. ஆனால், இது பல நோய்களுக்கு மருந்து - அது என்ன?
9. குண்டாக இருப்பாள். குண் டானவர்களுக்கும் இவள் பெயர்தான். அது யார்?
10. அழகான பச்சைக் குடை. வெயிலுக்கும் மழைக்கும் உதவாது. அது என்ன?
11. குத்தும் சட்டை. அணிய முடியாது. ஆனால், சாப்பிடலாம். அது என்ன?
12.சூடிக்கொள்ள முடியாத மண மில்லாத பூக்கள். அவை யாவை?
Post Comment