‘‘செல்வியக்கா சொன்னா சரியாயிருக்கும்’’சந்திப்பு : மதுரை ஆர்.கணேசன் -‘வாழ்க்கையின் அடிப்படை சுகாதாரம்.

வீட்டுக்கு ஒரு கழிப்பறை அவசியம்’ என்பதை உணர்த்தும் ஒரு பெண்மணியின் செயல்பாடுகளுக்கு மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்

துள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில், மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை சார்பாக ‘தாற்காலிக வட்டார ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றும்’

செல்வி, தூமை இந்தியா திட்டத்தின் கீழ்

களமிறங்கி, கழிப்பறைகள் கட்டுவதற்கு வழிகாட்டு தலையும், விழிப்புணர்வையும் பொதுமக்களிடையே ஏற்படுத்தி வருகிறார்.

செல்விக்கு திருமணமாகிவிட்டது. கணவர் கூலிவேலை செகிறார். ரெண்டு பையன், ஒரு பொண்ணு. படிக்கிறார்கள். தனது குடும்பம் ஏழ்மை நிலைமையில் இருந்தாலும் கழிப்பறைகள் கட்ட உதவிபுரிவதற்காக யாரிடமும் பணமும் கேட்பதில்லை; அப்படிக் கொடுக்க முன்வந்தாலும் தவிர்த்து விடுகிறார்...!

‘நிர்மல் பாரத் திட்டத்தில்’ சுகாதாரத் தூதுவராகத் தொடங்கி தூமைக் காவலர்களுக்கு முன்னோடி ஊக்குவிப்பாளராகத் திகழும் செல்வி, தூமை இந்தியா திட்டத்தில் இணைந்து சேவை யாற்ற, கிராம ஊராட்சிகளுக்குச் சென்று கழிப்பறையின் அவசியம் குறித்து மக்களிடம் எடுத்துரைத்து, வாழும் கிராமத்தை முன்மாதிரி ஊராட்சியாக மாற்றி, ஊர்மக்களிடம் நன்மதிப்பையும் பெற்றிருக்கிறார்.

அதன் பலனாக கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆறா யிரத்துக்கும் மேலான கழிப்பறைகள் கட்டி முடிக்க மேற்பார்வையாளராக இருந்து உதவி புரிந்திருக் கிறார்.

இவரது சேவைகளுக்காக மாவட்ட ஆட்சித்தலைவர் விருதுகள் உள்பட தமிழகம் மற்றும் பீகார் மாநில, பல்வேறு பொது அமைப்புகளிடமிருந்தும் இதுவரை 37 விருதுகள் பெற்றுள்ளார். பின் மத்திய அரசு 2019ல் ‘மகா உத்சவ் விருது’ வழங்கி கௌரவித்தது.

களப்பணியில் இருந்த செல்வியிடம் பேசினோம்...

என்னுடைய சிறுவயது முதலே சமூகசேவையில் ஈடுபட்டு வருகிறேன். கலெக்டர் ஆபீஸ் போனால் மக்களுக்கு யாரைப் போ பார்க்கணும், ஃபார்ம் வாங்கி எங்க என்ன எழுதணும்னு தெரியாது. அவர் களுக்கு உதவி செய்வது மற்றும் ரேஷன் கார்டு, வாக் காளர் அடையாள அட்டை, ஆதார்கார்டு மற்றும் மகளிர் சுய உதவிக்குழு மூலமாக லோன் வாங்கித் தருவது போன்ற உதவிகள் செது வந்தேன்.

அப்புறம்தான் தூமை இந்தியா திட்டத்தின் கீழ் பணிபுரிய ஆர்வம் ஏற்பட்டது. எங்க (சக்கிமங்கலம்) ஊரில் திறந்தவெளியைக் கழிப்பறைகளாகப் பயன் படுத்தியதால் பெண்கள், குழந்தைகள் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள்.

இதைப் பார்த்து இந்த நிலையை மாற்ற வேண் டும்; ‘வீட்டுக்கு ஒரு கழிப்பறை கட்டுங்கள். அரசு 12,000 மானியம் தருவார்கள்’ என்று பொதுமக் களிடம் எடுத்துச் சொன்னேன். முதலில் தயங்கிய கிராம மக்கள் கழிப்பறை அவசியம் பற்றி உணர்ந்து கட்ட ஆரம்பித்தார்கள்.

முதலில் நான் குடியிருக்கும் பகுதியான சக்கி மங்கலம் (எம்.ஜி.ஆர்.நகரில்) உள்ள 160 வீடுகளில் பெரும்பாலான கழிப்பறை இல்லாத வீடுகளுக்கு, கழிப்பறைகள் கட்டுவதற்கு உதவி செதேன்.

அடுத்ததாக பசும்பொன் நகரில் 175 வீடுகள். அங்கு ஒரு வீட்டில்கூட கழிப்பறை இல்லை. விடி யற்காலையில் திறந்தவெளிக்குச் சென்று விட்டு திரும்பும்போது விசில் அடித்து, ‘திறந்த வெளியில் மலம் கழிக்கக்கூடாது. அந்த மலத்திலிருந்து உட் காரும் ஈ நம் வீடுகளுக்கும் வரும். தொற்று நோ ஏற்படும். கர்ப்பிணிப்பெண்களாக இருந்தால் அதி கம் பாதிக்கப்படுவீர்கள், உங்கள் குழந்தைகளுக்கு கொக்கிப்புழு, நாடாப்புழு உருவாகி உடலில் ஊட் டச் சத்துக் குறைபாடு ஏற்படும்’ என்று கூறுவேன்.

நான் சொன்ன இந்தத் தகவல் எல்லாம் மக்கள் கேட்டுக்கொண்டதால், எங்க கிராமத்தைச் சுற்றி யுள்ள மேலூர், வாடிப்பட்டி, திருப்பரங்குன்றம், திருமங்கலம், ஒன்றியங்கள் முழுவதும் எல்லா கிராமங்களிலும் தனிநபர் கழிப்பறை, மற்றும் பொதுக் கழிப்பறை வசதி செயப்பட்டுள்ளது.

மேலும் ஊர்மக்களிடம் உங்களைத் தேடிவருகின்ற தூமைக் காவலர்களுக்கு, ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறேன். எனக்காக ஊர்க்காரர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அரசு அதிகாரிகள் அனைவரும் சப்போர்ட் பண்ணுகிறார்கள்.

ஒரு கிராமத்தில் எல்லா மக்களுக்கும் எல்லா அடிப்படைத் தேவைகளும் கிடைப்பதுதான் ஆரோக்கியமான வாழ்வுக்கு அடித்தளமாகும். அப்படிக் கிடைத்துவிட்டால் முழுமையான சுகா தாரம் கிடைச்ச மாதிரிதான்..!

பெரிய நகரங்களில் உள்ள மக்கள் சுற்றுலா போன்ற இடங்களுக்குச் செல்வதற்குப் பதிலாக, இங்க கிராமப்பகுதிகளுக்கு வரணும். அப்பத்தான் அடிப்படை வசதிகள் என்னென்ன இருக்கின்றன, எப்படி மக்கள் வாழ்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். தெரிந்து கொண்டால் அவர்களும் உதவ முன்வருவார்கள்.

‘கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்று சொல்லுவார்கள். அதுபோல, ‘கழிப்பறை இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது’ என்று நான் சொல்லுவேன்.’

இந்த 2021 வருடம் திருமங்கலம் சுற்றி ஆலம்பட்டி, கரிசல்பட்டி, ராயபாளையம், காமாட்சிபுரம் உள்பட கிட்டத்தட்ட 2432 கழிப்பறைகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. 250 கழிப்பறைகள் கட்டி முடிச்சுட்டோம். தொடர்ந்து வேலை நடக்குது.

எந்த வீட்டுக்குக் கழிப்பறை கட்டப் போகி

றோமோ அந்த வீட்டுக்காரர்களை வைத்தே பணி நடக்கும். மேற்பார்வையிடுவது மட்டும் என் வேலை.

‘எங்க கிராமத்திற்குச் செல்வியக்காவால் நல் லது நடந்திருக்கு. தேவையான கழிப்பறைகள் கிடைத்துள்ளது’ என்று மக்கள் பெருமையாச்

சொல்லுவாங்க. மக்கள் என்னை ‘கழிப்பறை

செல்வியக்கா’ன்னுகூட கூப்பிடுவாங்க... ‘செல்வி யக்கா சொன்னா சரியாயிருக்கும்’னு சொல்வாங்க.

என்னோட சேவையில் நான் திருப்தி அடைகிறேன்னா, அதுக்குக் காரணம் எங்க கிராம

மக்கள்தான்."

Post Comment

Post Comment