வாசகர் ஜமாய்க்கிறாங்கஇந்திராணி தங்கவேல், சென்னை -ரோஸ் ஃப்ளேவர்டு மில்லடர் ஸ்வீட் பொங்கல்!

தேவை: தினையரிசி - லு கப், பாசிப் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன், வெல்லம் - லு கப், பன்னீர் ரோஜா இதழ் - 1 கப், தண்ணீர் - 4 கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த் தூள் - லீ டீஸ்பூன், முந்திரி, திராட்சை, தேங்காய்ப் பற்கள் - தலா 1 டீஸ்பூன்.

செய்முறை: ரோஜா இதழ்களை சுத்தமான வெள்ளைத் துணியில் கட்டி வெந்நீரில் போட்டு 30 நிமிடம் மூடி வைக்கவும். பின்பு ரோஜா இதழ்களை எடுத்துவிட்டு தண்ணீரை ஆற

வைத்து தனியே வைக்கவும். வெல்லத்தை லீ கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி, அடுப்பில் வைத்துப் பாகு காய்ச்சவும். பாசிப்பருப்பை வெறும் கடாயில் குறைந்த தீயில் பொன்னிறமாக வறுத்து தனியே வைக்கவும். அரிசியைக் கழுவி, பாசிப்பருப்புடன் ரோஜாத் தண்ணீரைச்

சேர்த்து குக்கரில் மூன்று விசில்விட்டு நிறுத்தவும். ஸ்டீம் வெளியேறியவுடன் வெந்த

தினை அரிசி - பருப்பை நன்றாகக் குழைத்துவிட்டு, வெல்லப்பாகு ஊற்றி மிதமான தீயில் வைத்து, ஐந்து நிமிடம் கிளறி அடுப்பை அணைக்கவும். ஒன்றிரண்டாக அரைத்த ரோஜா இதழ், நெய்யில் வறுத்த ஏலக்காய், முந்திரி, திராட்சை, தேங்காய்ப் பற்களை சேர்த்துக் கிளறி சூடாகப் பரிமாறவும்.

மில்லட் டூட்டி ஃப்ரூடி ரைஸ்

தேவை: வரகு - 1 கப் (அல்லது சாமை, குதிரைவாலி ஏதேனும் ஒன்று), டூட்டி ஃப்ரூடி - லீ கப், பால் - 1 கப், ஏலம், கிராம்பு - தலா 2, பட்டை - சிறிய துண்டு, பிரிஞ்சி இலை - 1, நெய் - 3 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவைக்கு.

செய்முறை: வரகரிசியைக் கழுவி வைக்

கவும். குக்கரில் நெய் விட்டுக் காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலம், பிரிஞ்சி இலை போட்டு பொரிய விடவும். பின்னர் பால், ஒரு கப் தண்ணீர், உப்பு சேர்த்து ஒரு கொதி விடவும். பிறகு அரிசி, டூட்டி ஃப்ரூடி சேர்த்து நன்கு கலந்து மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.

வேர்க்கடலைக் குழம்பு

தேவை: பச்சை வேர்க்கடலை - 1 கப், புளி -

சிறிய எலுமிச்சை அளவு, வரமிளகாய் - 3, சாம்பார் பொடி - 3 டீஸ்பூன், கடுகு, வெந்தயம், கடலைப் பருப்பு - தாளிக்க, உப்பு - தேவைக்கேற்ப, பெருங்காயம், கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை: வேர்க்கடலையை அரைமணி நேரம் ஊற வைத்து வேக விடவும். ஒரு பாத்திரத்தில் புளியைக் கரைத்து ஊற்றவும். இதனுடன் உப்பு, சாம்பார் பொடி சேர்த்து வேக வைத்த வேர்க் கடலையைப் போட்டுக் கொதிக்க விடவும். கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, கடலைப் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டுத் தாளித்து, குழம்பில் கொட்டி இறக்கவும்.

சன்னா மசாலா பராத்தா

தேவை: சன்னா - 1 கப், கோதுமை மாவு - 4 கப், பொட்டுக்கடலை மாவு - 4 டேபிள் ஸ்பூன், கொத்துமல்லித் தழை பொடியாக நறுக்கியது - 4 டேபிள் ஸ்பூன், இஞ்சி, பூண்டு

விழுது - 1 ஸ்பூன், கரம் மசாலா, மிளகாய்த் தூள் - தலா லீ டீஸ்பூன், தனியாத் தூள் - லி ஸ்பூன், சீரகத் தூள் - லி ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கு.

செய்முறை: சன்னாவை முதல் நாள் இரவே ஊறவைத்து எடுத்து, குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். அகலமான பேசினில் கோதுமை மாவைச் சேர்த்து தேவையான உப்பு சேர்க்கவும். பிறகு

இதில் அரைத்த சன்னா விழுது, இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், தனியாத் தூள், சீரகத் தூள், பொட்டுக்கடலை மாவு, மல்லித் தழை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். மாவுடன் அனைத்தையும் நன்கு கலந்தபின் சிறிது எண்ணெய், தேவையான நீர் சேர்த்து மாவைக் கலந்து கொள்ளவும்.

பிறகு, சிறிது கனமான சப்பாத்தியாக ஒவ்வொன்றாக இட்டு தோசைக்கல்லில் இருபுறமும் தாராளமாக எண்ணெய் விட்டு, வேக வைத்து எடுத்து வைக்கவும்.

கடலை பக்கோடா

தேவை: வறுத்த வேர்க்கடலை - 100 கிராம், பொட்டுக்கடலை மாவு - 1 கப், அரிசி மாவு - லி கப், கடலை மாவு - லி கப்,பெரிய வெங்காயம் அரிந்தது - 3, இஞ்சி, பூண்டு விழுது -

1 டீஸ்பூன், உடைத்த மிளகு - 1 டீஸ்பூன், சோம்பு - லீ டீஸ்பூன், கறிவேப்பிலை - கைப்பிடி, கொத்துமல்லித்தழை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.

செய்முறை: வறுத்த வேர்க்கடலையை ஒன்றிரண்டாக உடைத்துக்கொள்ளவும். மிளகு

சோம்பை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி, கொத்துமல்லித் தழையைச் சேர்க்கவும். மாவுகளுடன் ஒன்றிரண்டாக உடைத்த வறுத்த வேர்க்கடலை, பொடித்த மிளகு, சோம்பு, உப்பு, வதக்கி வைத்திருக்கும் கலவை, கறி

வேப்பிலை இவற்றைச் சேர்க்கவும். சிறிது தண்ணீர் தெளித்து இறுக்கமாகப் பிசையவும். இதை சிறிது நேரம் ஊறவிட்டு, பிறகு சூடான எண்ணெயில் சிறிது சிறிதாகக் கிள்ளிப்போட்டுப் பொரித்தெடுக்கவும்.

மில்லட் வீகன் ஆம்லெட்

தேவை: கடலை மாவு - லீ கப், தினை மாவு -

லீ கப், அரைக்கீரை - கைப்பிடி அளவு, வெங்காயம், தக்காளி - தலா 1, சிறிய கேரட் - 1, இஞ்சி - சிறிய துண்டு, பச்சைமிளகாய் - 1, சமையல் சோடா -

1 சிட்டிகை அல்லது புளித்த இட்லி மாவு 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை: கீரையைச் சுத்தம் செய்யவும். வெங்கா யம், தக்காளி, கீரை, பச்சைமிளகாயைப் பொடியாக நறுக்கவும். கேரட், இஞ்சியைத் தோல் சீவி துருவிக் கொள்ளவும். கொடுக்கப்பட்டுள்ள பொருள்கள் எல்லா வற்றையும் ஒன்றாகக் கலந்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி, இட்லி மாவு பதத்திற்குக் கரைக்கவும். மாவைச் சூடான தோசைக்கல்லில் ஊத்தப்பம் போல் ஊற்றி, இருபுறமும் எண்ணெய் விட்டு வார்த்தெடுக்கவும். சாப்பாட்டுடன் சூடாகப் பரிமாறி பூண்டு சட்னியுடன் ருசிக்கவும்.

Post Comment

Post Comment