அர்த்தமுடன் அணிவோம்!-ருத்திராட்சம் பற்றிய தகவல்களைப் படித்துவிட்டு அர்த்தமுடன் அணிந்துகொள்வோம்.

வடமொழியில் ருத்திராட்சம் என்ப தற்கு ‘ருத்திரனின் கண்கள்’ என்பதாகப் பொருள் கூறப்படுகிறது. ருத்திரன் என்பது சிவனைக் குறிக் கிறது. ‘எச்ணடிடிணூதண்’ என்ற மரத்தின் பழத்திலிருந்து பெறப்படும் கொட்டைதான் ருத்திராட்சம். இந்த மரங்கள் உலகின் சில பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன. நேப்பாள நாட்டில் விளையும் ருத்திராட்ச மணிகளே தரத்தில் உயர்ந்தவையாகக் கருதப்படுகின்றன. இயற்கையில் ருத்திராட்ச மணி செம்மையும், கருமையும் கலந்தேறிய பழுப்பு நிறத்தில் இருக்கும். கடையில் விற்பனைக்குக் கிடைக்கும் மணிகள் பெரும்பாலும் மெருகேற்றப் பட்டும் சாயமேற்றப்பட்டிருக்கும்.

ருத்திராட்சம் அணிபவரை சிவபெருமான் காப் பாற்றுவார் என்ற நம்பிக்கை. எனவே அனனவரும் கண்டிப்பாக ஐந்து முக ருத்திராட்சம் ஒன்றையாவது அணிய வேண்டும். ருத்திராட்சத்தை யார் வேண்டு மானாலும் அணியலாம். சிறுவர், சிறுமியர் ருத்திராட்சம் அணிவதால் அவர்களின் கல்வித்திறன் அதிகரிக்கிறது. பெண்கள் அணிந்தால் சுமங் கலிகளாக மஞ்சள் குங்குமத்துடன் வாழ்வார்கள் என்ற நம்பிக்கை. அவர்கள் கணவர்களுக்கும் தொழிலில் வெற்றியும் இல்லத்தில் லட்சுமி கடாட்சமும் நிறைந்திருக்கும். ருத்திராட்சம் அணிந்தால், மனமும், உடலும் தூய்மை அடையும். எப்படி மருந்துக்குப் பத்தியம் அவசியமோ, அதேபோல் ருத்திராட்சத்திற்கும் மது அருந்துதல், புகைபிடித்தல், புலால் உண்ணுதல் போன்ற பழக்கங்கள் அறவே கூடாது.

பெண்களின் பெருந்தெய்வ மாக விளங்குபவள் ஆதி பராசக்தி. அவள் ருத்திராட்சம் அணிந்து கொண்டுள்ளாள். எனவே, பெண்கள், அம்பிகை காட்டும் வழியைப் பின்பற்றி ருத்திராட்சம் அணியலாம். இறைவனுக்கு ஒருவர் மீது கருணை இருந்தால் மட்டுமே ருத்திராட்சம் அணியும் பாக்யம் கிடைக்கும்.

ருத்திராட்சத்தின் குறுக்கே அழுத்த மான கோடுகளைக் காணலாம். இதற்குத் தான் முகம் என்று பெயர். ஐந்து கோடுகள் இருந்தால் ஐந்து முகம். ஆறுகோடுகள் இருந்தால் ஆறுமுகம். இப்படியே கணக்கிட வேண் டியதுதான். பகவானின் திருமுகம் ஐந்து, நமச்

சிவாய ஐந்தெழுத்து, பஞ்சபூதங்கள் ஐந்து, நமது கை, கால் விரல்கள் ஐந்து, பலன்கள் ஐந்து. ஆகை யால் ஐந்து முக ருத்திராட்சம் அணிந்து சிவனருள் பெறுவோம்.

- பத்மினி சுரேஷ், கோவை

காளிதேவியை வழிபடும் கொல்கத்தா மக்களுக்கு வியாழக்கிழமை புனித நாள். அன்று பணத்தைப் பெற்றுக்கொள்வார்களே தவிர, யாருக்கும் கொடுக்க மாட்டார்கள். பூஜை நேரத்தில் பெண்கள் சங்கு ஊதும் பழக்கம் இங்கு உண்டு. கோயிலில் இவர்கள் இடப்பக்கமாகச் சுற்றிவருவது வழக்கம்.

- கே.எல். பகவதி, சென்னை

நர்மதை ஜெயந்தி

ஒவ்வொரு வருடமும் நர்மதாபுரத்தில் நர்மதை ஜெயந்தி என, நர்மதையின் அவதார நாள் மிக உற்சாகமாகக் கொண்டாடப் படுகிறது. மாசி மாதம் சுக்ல சப்தமி தினமே நர்மதை ஜெயந்தி தினம். நர்மதையின்

சிறப்பை ஒவ்வொருவரும் அறிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக இன்றைய நாட்களில் அது ஓர் உற்சாகமாக வடிவெடுத்திருக்கிறது. அன்றிரவில் ‘தீப்தான்’ என்ற விளக்கு வழிபாடு கண்கொள்ளாக் காட்சியாகும். ஒன்றோடு ஒன்றாகப் பிணைக்கப்பட்ட நாவாய் எனப்படும் படகுகள் மூலம், நதியின் மத்தியில் மிதக்கும் மண்டபம் ஒன்றை உருவாக்குகின்றனர்.

அப்படகுகளிலிருந்து மெதுவாக நதியில் மிதக்க விடப்படும் தீபங்கள், தொலை

விலிருந்து பார்க்கையில், ஒரு சிறிய ஒளிக்

கோடாய்த் தெரிகின்றன. அருகில் வரவர ஒளி அதிகமாகி ஒளிக்கற்றையாய்க் காட்சி தருகின்றன. மிக அருகில் வந்ததும்தான் அவை சின்னஞ்சிறு விளக்குகள் என்பது தெரியவரும். அப்போது படகு மண்டபம் தீயால் சூழப்பட்டதுபோல் காட்சியளிக்கும். தீபங்களே நதியாய் பிரவகிக்கிறதோ எனும் எண்ணம் நர்மதை ஜெயந்தி, இரவில் நமக்குத் தோன்றாமலிருக்காது. அன்று நர்மதை விக்ரகம் ஒன்று நகரின் வீதிகளில் ஊர்வலமாய் எடுத்துச் செல்லப்படும். பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துவர். நர்மதைதேவிக்கு அன்று செய்யப்படும் அபிஷேகம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. பஞ்சாமிர்தம், நெய், தயிர், தேன் ஆகியவை நைவேத்தியப் பொருட்களாகப் பயன் படுத்தப்படுகின்றன.

- ஆர். சாந்தா, சென்னை

தேங்காய், வாழைப்பழம் இறைவனுக்கு

ஏன் படைக்கிறோம்?

எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு கொட்டை யைப் பூமியில் போட்டால் அது மீண்டும் முளைக்கும். ஆனால், தேங்காயை உடைத்துச் சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது. வாழைப்பழத்தை

உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் அது மீண்டும் முளைப்பதில்லை. பிறவியற்ற முக்தி நிலையை இது உணர்த்து கிறது. இதுபோல் மீண்டும் பிறவாத நிலையைத் தரும்படி இறைவனிடம் வேண்டவே நாம் தேங்காய், வாழைப்பழம் இறைவனுக்குப் படைக்

கிறோம்.

முழுத் தேங்காயில் இருந்துதான் தென்னை முளைக் கும். வாழைமரத்தில் இருந்துதான் வாழைக்கன்று வரும். தேங்காய், வாழைப்பழம் இரண்டுமே விதை, கொட்டை முதலியவற்றில் இருந்து வருவதில்லை. இது மட்டுமல்ல. தேங்காய், வாழைப்பழம் இரண்டும் நமது எச்சில் படா தவை. இவ்வாறு எச்சில்படாத இவற்றை இறைவனுக்கு உகந்தது என்று படைக்கும் மரபினை நமது முன்னோர்கள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

- கீதா வீரப்பன், காஞ்சிபுரம்

உடல் பிணி போக்கும் இடுக்குபிள்ளையார்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் செல்லும் பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். இங் குள்ள கிரிவலப்பாதையில் இடுக்குபிள்ளையார் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.

இதற்குக் காரணம் அக்கோயிலில் உள்ள ஒரு வினோ தக் கட்டடம்தான். குகை போன்ற அமைப்பில் கட்டப்

பட்டுள்ள இந்தக் கட்டடத்தின் இடுக்கில் பெரிய உடல மைப்பைக் கொண்டவர்களும் நுழைந்து வெளியில் வந்துவிடுவார்கள். அந்தக் குகை அமைப்பில் தவழ்ந்துதான் செல்ல முடியும். இவ்வாறு உடலை நெளித்து, வளைத்துப் போகும்பொழுது பக்தர்கள் உடம்பில் இருக்கும் தசைப் பிடிப்புகள், நரம்பு சம்பந்த மான பிரச்னைகள் சரி ஆகி விடுகின்றன.

- ஆர். அஞ்சனாதேவி,

சிதம்பரம்

Post Comment

Post Comment