சகுனம் பார்க்காதீர்!சிறுகதை : சுந்தரவதனம் - ஓவியம் : லலிதாசந்திரிகா ஆபீஸிற்குள் நுழைந்ததும்

வரவேற்பறையில் தொங்கிய விநாயகர் படத்திற்கு முன் அசையாமல் நின்று இரண்டு கைகளாலும் கன்னத்தில் தட்டியவாறே கண்மூடி பிரார்த்தனை செய்தாள்.

பிறகு வரவேற்பு மேஜையில் அமர்ந்திருந்த காவ்யாவிற்கு ‘குட்மார்னிங் மேம்’ என்று சொல்லி விட்டு தன் வருகையைக் வைிரல்களைப் பதிப்பதன் மூலம் பதிவுசெய்தாள்.

மெயின் ஹாலுக்குள் நுழைந்து தனது கேபின் பிரிவிற்குச் சென்று தனது கேபினில் நுழைவதற்கு முன் மீண்டும் மௌனமாகப் பிரார்த்தனை செய்துவிட்டு மேஜை மீது தனது தோளில் தொங்கிய மதிய டிபன், தண்ணீர் பாட்டில், ஐ.டி. கார்டு, பர்ஸ் இத் யாதிகள் அடங்கிய தோள் பையை இறக்கி வைத்தாள்.

தனது மேஜை இழுப்பறையிலிருந்து துணி ஒன்றை எடுத்து தனது கணினியைக் கவனமாகத் துடைத்துச் சுத்தம் செய்தாள். கணினியை ‘ஆன்’ செய்து தனது ‘பாஸ்

வேர்டை’யும் கணினிக்குச் சமர்ப்பித்தாள்.

இப்போது தன் அடுத்த கேபினிலிருந்த சரண்யாவைப் பார்த்து, குட்மார்னிங் சரண்யா, இன்றைக்கு என்ன புராஜெக்ட்? நீயும் இப்போதுதான் வந்தது போலத் தெரிகின்றது" என்று சொன்னாள். நம்முடைய சி.இ.ஓ. இன்னும் ஒன்றும் சொல்லவில்லை. ரெயின்போ கம்பெனி புராஜெக்டா? அல்லது பேபி கார்மெண்ட்ஸ் புராஜெக்டா? இரண்டில் எதை எடுப்பது என்று சொல்லவில்லை. சொல்லட்டும், ஆரம்பிக்கலாம்."

அப்புறம் என்ன நியூஸ்? உங்கள்

சித்தப்பா ஏதாவது பேசினாரா? வேறு அலையன்ஸ் ஏதாவது வந்ததா?" சரண்யா மெல்லிய குரலில் கனிவும், அனுதாபமும் கலந்த வார்த்தைகளாகத்தான் கேட்டாள்.

சந்திரிகா ஆழ்ந்த பெருமூச்சு விட்டவாறே, ‘இல்லை’ என்ற அர்த்தம் தொனிக்கத் தலையை மட்டும் இடம் வலமாக ஆட்டினாள்.

இரண்டு சிநேகிதிகளும் தங்கள் சொந்தப் பிரச்னையைப் பற்றிப் பேசுகிறோம் என்பதை மற்றவர்கள் அறியாதவண்ணம் எச்சரிக்கையோடு நடந்து கொண்டார்கள்.

அடுத்த முப்பது செகண்டுகளில் கணினியில் இவர்களுக்கான ஆணை திரையில் வந்து விட்டது. சரி அப்புறம் பேசலாம்" என்று சொல்லிவிட்டு பணியைத் தொடங்கினார்கள்.

சந்திரிகாவிற்கு வயது முப்பத்தாறைத் தொட்டு விட்டது. அவள் பி.இ. மூன்றாம் ஆண்டு படிக்கும்போதே தாயார் இறந்துவிட்டாள். அதே ஆண்டில் அவளது அப்பாவும் வேலையிலிருந்து ரிடையர்டாகி விட்டார். வீட்டில் சமையல் வேலைக்கு ஊரிலிருந்து ஒரு பாட்டி வந்திருந்தாள். பி.இ. படித்து, பெரிய ஐ.டி. கம்பெனியில் வேலைக்கு சந்திரிகா சேர்ந்தது முதலே வரன் பார்க்க ஆரம்பித்தார்கள். எத்தனையோ வரன்கள் வந்தன. ஜாதகப் பரி வர்த்தனைகள் தீவிர ஜாதக அலசல்கள் தொடர்ந்தன. ஒரே ராசியில் வந்த ஜாதகம் எந்தப் பொருத்தமும் இல்லாத ஜாதகம், ஒரே கோத்திரம் என்று முதல் கட்டப் பரீட்சைகளுக்குப் பிறகு குடும்பப் பின்புலம், சீர்வரிசை பற்றிய மறைமுகமான

கேள்வி பதில்கள் என்று இரண் டாம் கட்டத் தேர்வுகள். இதையும் தாண்டி இரண்டே இரண்டு மாப்பிள்ளை வீட்டார் மட்டுமே பெண் பார்க்க வந்தார்கள். அவர்களுக்கு இவளது மாநிறமும், அமைதியான முகப்பாங்கும் போதுமானதாக இல்லை போலும். நிராகரிப்புதான். இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளில் சந்திரிகாவின் கடவுள் பக்தியும், குத்து விளக்குப் பூஜை பங்கேற்பும், சகுனங்களில் நம்பிக்கையும் வளர்ந்து கொண்டே போயின.

அவளது அப்பாவும் சராசரி மனிதர்தான். உணர்ச்சிவசப்படுவதும், அறிவுபூர்வமான சிந்தனையுமாக அல்லாடிக் கொண்டிருந்தவர். பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின்,

ஆயிரம் நிலவே வா"

இளைய நிலா பொழிகிறது"

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே" என்ற எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இனிய பாடல் களை விரும்பிக் கேட்டுக் கொண்டிருக்கும் போது எந்தக் கவலையும் மனதை விட்டுப் பறந்துவிடும் என்று மனம் கசிந்து சொல்லுவார். அவரும் பல திருமண புரோக்கர்களைப் பார்த்து மகள் ஜாதகத் தைக் கொடுத்து பெரும் முயற்சிகள் செய்யத்தான் செய்தார். சந்திரிகாவுக்கு வயது கூடிவிட்டதால் வரன்கள் அதிகம் வரவில்லை.

கடைசியாக ஹைதராபாத்தில் வேலை பார்க்கும் வரன் ஜாதகப் பொருத்தம் விசேஷ மாக இல்லை என்றாலும் மற்ற விஷயங்கள் இணக்க மாக இருந்ததால் பெண் பார்க்க வருவதாகச் சொல்லி அனுப்பி னார்கள்.

அந்த நாளும்

வந்தது. முருகன்

கோயிலில் வைத்துப் பெண் பார்க்கலாம் என்று முடிவு செய்து முருகன் கோயிலுக்குத் தன் அப்பா மற்றும் சமையல்காரப் பாட்டி,

தோழி சரண்யா ஆகியோருடன் வந்தாள். நால்வரும் அர்த்த மண்டபத்திற்கு வெளிப்பிராகாரத்தில் நின்று கொண்டிருந்தார்கள்.

மாப்பிள்ளையுடன் தாயார், தகப்பனார் மற்றும் சகோதர, சகோதரியுடன் மாப்பிள்ளை வீட்டார்

வந்திருந்தார்கள். மாப்பிள்ளையின் மைத்துனர் முகத்தில் திருப்தி தெரிந்தது. அவரது மனைவி மற்றும் மாமியாருடன் கலந்து பேசிக் கொண் டிருந்தார்.

சந்திரிகாவின் தகப்பனார், நீ என்னம்மா நினைக்கிறாய், உன் சம்மதம்தான் முக்கியம்" என்று கேட்டார்.

சந்திரிகாவின் விதி விளையாடத் தொடங்கியது. சரண்யாவின் கையைப் பிடித்துக் கொண்டு

சன்னிதிக்குச் சென்றாள். சரண்யாவுக்குத் தோழி என்ன செய்யப் போகிறாள் என்று ஊகிக்க முடியவில்லை. அதிர்ச்சியும், திகிலும் கலந்த குரலில், என்ன சந்திரிகா, என்ன சொல்லணும், சரி என்று சொல்லுடி" என்று கெஞ்சினாள். சந்திரிகா பதில் பேசவில்லை.

தீபத் தட்டு கொண்டு வந்த அர்ச்சகரிடம், சுவாமி மங்கல காரியம் பூக்கட்டி வைத்துச் சொல்லுங்கள்" என்று இரண்டு பத்து ரூபாய்

நோட்டுக்களைத் தட்டில் வைத்தாள். அர்ச்சகர் மலர்ந்த முகமாக, அதுக்கென்னம்மா, பாத்துட்டாப் போச்சு" என்று சொல்லிக்கொண்டே பக்கத்திலிருந்த வாழை இலையில் இரண்டு துண்டு

களை எடுத்து ஒன்றில் சிவப்பு அரளிப் பூவும், இன்னொன்றில் வெள்ளை நிறத்தில் மல்லிகைப்பூவும் வைத்து மடித்துப் பூ கட்டும் நாரினால் கட்டினார்.

இரண்டு பொட்டலங்களையும் சாமியின்

பாதத்தில் வைத்துக் கண்ணை மூடி ஸ்தோத்திரம் சொன்னார். இரண்டு பொட்டலங்களையும் கையில் எடுத்துக் கொண்டு வந்து வரிசையில் நின்றவர்களில் ஒரு பத்து வயதுப் பெண் குழந்தையிடம் தட்டில் இருந்த பொட்டலங்களைக் காண்பித்து, இதுல ஒரு பூ எடுத்துக் கொடு குழந்தே" என்று சொன்னார்.

குழந்தை ஒரு பொட்டலத்தை எடுத்து அவர் கையில் கொடுத்தது. அர்ச்சகர் அதை வாங்கிப் பொட்டலத்தைப் பிரித்தார். உள்ளே சிவப்பு அரளிப் பூ இருந்தது. அர்ச்சகர் சந்திரிகாவிடம், இந்தாம்மா உத்தரவு கிடைத்ததா?" என்று சிவப்பு அரளியைக் கொடுத்தார்.

சந்திரிகாவின் ரியாக்ஷன் சரண்யாவே எதிர்பார்க்கவில்லை. சரண்யாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டு, கடவுள் உத்தரவு கொடுக்கவில்லையே. சரண்யா, நான் எவ்வளவு நாள் எத்தனை ஆயிரம் தடவை இந்தச் சாமியை கும்பிட்டுக் கொண்டே இருக்கிறேன். எனக்கு நல்லதுதான் சாமி சொல்லும் என்று நினைச்சாலும் என்னால் தாங்க முடியலையே" என்று கண்ணீர் பெருகச் சொன்னாள்.

சரண்யாவிற்குக் கோபம்தான் வந்தது. முட்டாள்தனமாக நடந்துட்டு இப்ப அழுது என்ன பிரயோஜனம்? இந்த வயசுக்கு மேல உங்கப்பா எங்க இருந்து மாப்பிள்ளை கொண்டு வருவாரு? யோசிக்க மாட்டியா?"

கைநீட்டி அடிக்காத குறைதான். ஆனாலும் நடந்தது நடந்து விட்டது. மாப்பிள்ளை வீட்டாருக்கு இந்த முடிவு தெரியவந்ததும் அவர்கள் ஏமாற்றத்துடனே புறப்பட்டுப் போனார்கள்.

அவர்கள் புறப்பட்டுப் போய்விட்டார்கள் என்று பாட்டி வந்து சொன்ன பிறகு, சந்திரிகாவும், சரண்யாவும் வெளியில் வந்து ஆட்டோவில் வீட்டுக்கு வந்து சேர்ந்

தார்கள். அப்பாவுக்குத்தான் பெரும்

அதிர்ச்சி. ராத்திரி சாப்பிடாமல் படுத்

தார். அடுத்த நாள் காலையில் சாதாரண மாகவே எழுந்தார். எப்போதும் போலவே இருந்தார். ஆனாலும், ஒரு வாரம் கழிந்ததும் ஒருநாள் ராத்திரி படுத்தவர் காலையில் எழுந்திருக்கவில்லை.

சந்திரிகாவுக்குத் தாங்க முடியாத துக்கம். எப்போதுமே சகுனத்தில் அவளுக்கு நம்பிக்கை அதிகம். வீட்டிலிருந்து பஸ் ஸ்டாப்புக்கு வரும் போதே இன்றைக்குத் தெருவில் கறுப்பு நாய் வந்தால் நல்ல செய்தி வரும் என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டே வருவாள். கறுப்பு நாய் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி பஸ் வந்ததும் ஏறி உட்கார்ந்தால் கறுப்பு நாயும், அது கொண்டு வராத நல்ல செய்தியும் மறந்து விடும். சிறுமியாக இருக்கும்போது நடுவிரலையும், ஆள்காட்டி விரலையும் நீட்டிக் கொண்டு ஏதாவது ஒரு விரலைத் தொடும்படி வகுப்பில் பக்கத்தில் உட்கார்ந்திருந்த மீனா ஆரம்பித்து வைத்த

பழக்கம்.

என்றைக்காவது ஒருநாள் இரண்டு பேர் சீட்டில் முதலில் இவள் உட்கார்ந்தாள் என்றால் மனசு அடுத்த பந்தயப் போட்டிக்கு ஏற்பாடு செய்துவிடும். நமக்கு அடுத்த சீட்டில் உட்காரப் போவது சேலை கட்டிய பெண்மணியா அல்லது சுடிதார் போட்ட பெண்ணா என்று ‘ஒத்தையா? ரெட் டையா?’தான்.

இதெல்லாம் வேண்டாம். இதனால் எந்தப் பயனும் இல்லை என்று அறிவு அவ்வப்போது இடித்துச் சொன்னாலும், இந்தப் பழக்கம் அவளை விட்டுப் போகவில்லை.

இப்போது வாழ்க்கையின் முக்கியமான நேரத்தில் தேவை யில்லாமல் பூக்கட்டி வைத்துச்

சோதனை செய்து நெஞ்சில் வலி யைக் கூட்டிக் கொண்டதுதான் அவளாலும் தாங்க முடியவில்லை.

ஒன்றுவிட்ட ஒரு சித்தப்பா மட்டும் அப்பாவின் காரியத்திற்கு வந்தவர், கவலைப்படாதே சித் தப்பா இருக்கேன்மா உங்க அப்பா வுக்குப் பதிலா நான் வரன் பார்த்து ஏற்பாடு செய்யறேன்" என்று சரண்யாவும் பக்கத்தில் இருக்கும்போதே சொல்லி விட்டுப் போனார்.

ஒன்றிரண்டு வரன்களும் விசாரித்ததாகச் சொன்னார். சரண்யாவின் மாமனார், மாமியாரும் கூட பழகிய நண்பர்களிடம் வரன் இருக்கிறதா என்று விசாரிக்

கத்தான் செய்தார்கள். சினேகிதியின் நல்வாழ்வில் உள்ள அக்கறையால் தான் சரண்யா கேள்வி கேட்டாள்.

இந்தச் சிந்தனையெல்லாம் கணினி முன்பு அமர்ந்து வேலை செய்யும்போது வருவதில்லை. ஆனாலும், வேலை முடித்து வீடு திரும்பியதும் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுக்கும்போது தன்னுடைய தவறான முடிவுதான் அப்பாவின் மரணத்திற்குக் காரணமாகிவிட்டதோ என்ற குற்ற உணர்வே அவளை உறுத்தியது. நான் அப்படிச் செய் திருக்கக்கூடாது என்று வாய் விட்டே புலம்பவும் செய்தாள். அன்று இரவு அப்பாவின் மியூசிக்

சிஸ்டத்தில் பாட்டுக் கேட்கலாம் என்று சுவிட்ச் ஆன் செய்தாள். முதல் பாடல்...

மணமாலையும் மஞ்சளும் சூடி

புதுக்கோலத்தில் நீ வரும்போது"

என்று கீதம் ஒலித்தது. சந்திரிகாவின் மனத்தில் அப்பாவே தன்னை ஆசிர்வதிப்பது போன்று மகிழ்ச்சி பிறந்தது. அடுத்த நாள் சந்திரிகாவுக்கு ஒரு புதிய மகிழ்ச்சியான செய்தி கிடைத்தது. அவளது அப்பா பெயருக்கு வந்த கடிதத்தில் ஹைதராபாத் மாப்பிள்ளையின் தகப்பனார், உங்கள் மகளுக்கு இன்னும் கல்யாணம் ஆகாமல் இருந்தால் தெரியப் படுத்துங்கள். அடுத்த வாரம் சென்னை வரு

கிறோம். திருமணத்தை நிச்சயம் செய்து

விடுவோம்." தி

Post Comment

Post Comment