மும்பை பரபரஆர்.மீனலதா, மும்பை -டாக்டர் அப்துல் கலாம் பூங்கா!

மலாடு பகுதியிலுள்ள அக்ஸா கடற்கரையருகே இருக்கும் மும்பை மாநகராட்சி வனப்பகுதி சீரமைக்கப்பட்டு, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பூங்காவெனப் பெயரிடப்பட்டு, சுற்றுலாத்தலமாக ஆக்கப்பட்டுள்ளது. 2,75,000 சதுர அடி கொண்ட பூங்காவில் 67 வகையான 1,000 மரங்களும், மருத் துவக் குணங்கள் கொண்ட தாவரங்களும் நடப்பட்டுள்ளன. 2 கி.மீ. சுற்றளவில் நடைபாதையும் உண்டு. மார்வே - மட் ஜெட்டி செல்லும் பாதையில் உள்ளது அக்ஸா கடற்கரை.

முதன்முதலாக! (பீரியட் ரூம்)

தானே மாநகராட்சி, வாக்ளே எஸ்டேட் பகுதி யில் வசிக்கும் குடிசைவாழ் பெண்களுக்கென, முதன்முறையாக, பொதுக்கழிவறையில், ‘மாத விடாய் அறையினை’ அமைத்துள்ளது. பெண்கள் சுகாதாரமான முறையில் மாதவிடாயை எதிர்கொள் ளும் வகையில் 24 மணி நேர தண்ணீர், சோப்பு, குப்பைத்தொட்டி, கழிவறை பேப்பர் ரோல்கள் வைக்கப்பட்டு, நறுமணம் வீசும் ஸ்ப்ரே தெளிக்கப் பட்டிருக்கிறது. இந்த அறையின் வெளியே கறுப்பு நிற பெயிண்ட் அடிக்கப்பட்டு அதில் ‘மாதவிடாய் கால சுகாதார விழிப்புணர்வு’ படம் வரையப்பட்டுள்ளது. இதுபோன்று, பிற இடங்களிலும் அமைக் கப்படுமென்று கூறப்பட்டுள்ளது.

வரலாற்று நிகழ்வு!

புனேயிலுள்ள சீரம் இந்தியா நிறுவனம் தயாரித்துள்ள கோவி ஷீல்டு மருந்து குறைவான காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இம் மருந்து நாட்டிலுள்ள முக்கிய பல நகரங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 100 மில்லியன் டோஸ் ஊசி மருந்து, தலா சூ 200/- விலையில் அரசுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. சீரம் இந்தியா நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி இதுகுறித்து, கொரோனா தடுப்பூசி போடும் நிகழ்வு பெருமைக்குரியது; வரலாற்றுச் சிறப்பு மிக்கது" எனக் கூறியுள்ளார்.மகிழ்வான நகரம்

‘இந்திய நகரங்களின் மகிழ்ச்சி குறித்து அறிக்கை 2020’ என்கிற தலைப்பில், கணக் கெடுப்பு 13 நகரங்களில் எடுக்கப்பட்டது. இது வயது, கல்வி, வருமானம், வசதியான வாழ்வு, பொதுத் தேவைகள் ஆகிய பலவற்றை அடிப் படையாகக் கொண்டு நடத்தப்பட்டது. ஆயிரக் கணக்கான பொதுமக்களிடம் சேகரித்த தகவல் கணக்கெடுப்பில், மகாராஷ்டிராவிலுள்ள ‘புனே’ மிக மகிழ்ச்சியான நகரமெனத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது. இந்திய அளவில் பஞ்சாபிலுள்ள லூதியானா நகரம் முதலிடம் பெற்றுள்ளது. மகிழ்ச்சி!முயற்சி புதுசு!

சாதாரணப் பொதுமக்களை ஊக்கப்படுத்தி, போக்குவரத்திற்கு உறுதுணையாக இருக்க, ‘நவி மும்பை’ சாலைப் போக்குவரத்துக் காவல்துறையினர் புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளனர். எப்படி? பொதுமக்களில் சிலர் இத்தகைய போக்குவரத்துப் பணியில் ஈடுபடுவதின் மூலம், சாலை விதிகள் குறித்தும், அதை மதிக்காமல் செல்பவர்கள் பற்றி யும் தெரியவரும். இவர்களைப் பார்த்து மற்றவர் களும் சட்டத்தை மதிப்பார்கள். இதில் பங்கெடுக்க விருப்பமுள்ளவர்கள் டிராபிக் போலிஸ் அலுவல

கத்தைத் தொடர்பு கொள்ளலாம்.ஆன்லைன் ஃப்ரம் ஹாஸ்டல்!

ஐ.ஐ.டி. மும்பை ஹாஸ்டலில் தங்கிப் பயிலும் மாணவ-மாணவிகள் ஊரடங்கு சமயம்

அவரவர்கள் வீடுகளுக்குச் சென்றனர். கிராமங்களில் வசிக்கும் பலருக்கு இன்டர்நெட், மின்சார வசதி சரியாக அமையாத காரணம் ஆன்லைன் வகுப்பு களைத் தொடர இயலவில்லை. இதைக் கேள்விப் பட்ட ஐ.ஐ.டி. நிர்வாகம், அவர்களை ஹாஸ்டலில் இருந்தே ஆன்லைன் வகுப்பைத் தொடரலாம் எனக்கூற, அநேகர் திரும்பி வந்துவிட்டனர். ஒவ்வொருவருக்கும் தனி அறை; இன்டர்நெட், மின்சார வசதி, கேண்டீனிலிருந்து உணவை ரூமுக்கு எடுத்துச்செல்ல ஏற்பாடு எல்லாமே கொடுக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் ஊக்கத்

துடன் செயல்படுகிறார்கள்.பாரம்பரியச் சுற்றுலா!

மும்பை மாநகராட்சித் தலைமையக டூர், சமீபத்தில் மக்களுக்காக அனுமதிக்கப்பட்டது. சத்ரபதி

சிவாஜி மகராஜ் டெர்மினஸ் எதிரே சுற்றுலாப் பயணிகள் செல்ஃபி பாய்ன்ட்டிலிருந்து செல்ஃபி எடுத்துக்கொள்ளலாம். மாநகராட்சிக் கட்டடத்தின் உள்ளே பாரம்பரிய மிக்க குவிமாடம், முற்றம், அரங்கம், மேயர் அறை, மியூஸியம் ஆகியவற்றைக் காணலாம். வார இறுதி நாட்களான சனிக்கிழமை மாலை 4 மற்றும் 5.30 மணி நேரங்களில், தலா 15 பேர்கள் வீதம் 2 முறைகளும், ஞாயிறு காலை 9 மற்றும் 10.30 மணிகளில் இருமுறைகளும் பொதுமக்கள் டூர் செல்ல முடியும். கட்டணம் நபர் ஒன் றுக்கு சூ300/-. வழிகாட்டிகளின் உதவி உண்டு. Book my show.comஇல் முன்பதிவு செய்தல் அவசியம்.குஜராத் டு சென்னை

(ஙடிச் மும்பை)

இந்திய ரெயில்வே, வாராந்திர சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலை (எண் 09120) குஜராத்தில் இருந்து (மும்பை வழியாக) சென்னை செல்வதற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. புதன்கிழமை காலை 9.15க்கு குஜராத் கேவாடியாவிலிருந்து புறப்பட்டு வியாழன் மாலை 4 மணி அளவில் சென்னை எம்.ஜி.ஆர். ரெயில் நிலையத்தை அடையும். இதே போல் ரெயில் எண் 09019 ஞாயிறு இரவு 10.20க்கு சென்னையிலிருந்து கிளம்பி, செவ்வாய் அதிகாலை 3 மணிக்கு கேவாடியாவை அடையும். குறைவான ரெயில் நிலையங்களில் மட்டுமே நிறுத்தப்படுவ தால், 31 மணி நேரப் பயணம்தான். மும்பை வாழ் மக்களுக்கும் உதவியாக இருக்கும்.பெஸ்ட் கட்டுப்பாட்டு அறை!

வடாலா பெஸ்ட் பஸ் டெப்போவில் புதியதாகக் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. பெஸ்ட் பஸ்களின் உள்ளே பொருத்தப்பட்டிருக்கும்

சிசிடிவி கேமரா வழியாக பஸ்கள் செல்லும் இடங்கள், போக்குவரத்து நிலைமை ஆகிய

வற்றைக் கண்காணிக்க இக்கட்டுப்பாட்டு

அறை உதவியாக இருக்கும். மேலும் எமர்ஜென்ஸி, ஈடிண்ச்ண்ணாஞுணூ நேரங்களில் உடனடியாக உதவிக்கரம்

நீட்ட இது பயனுள்ளதாக இருக்கும் என அறிவிக் கப்பட்டுள்ளது. தி

Post Comment

Post Comment