பத்மஸ்ரீ அனிதாசந்திப்பு : எஸ்.சந்திரமௌலி -இந்த வருடத்து பத்மஸ்ரீ விருதுப் பட்டியலில் ஓர் ஆச்சர்யம் வெளிப்பட்டது. வழக்கம்போல சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்களுடைய பெயர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை. தமிழ்நாட்டில் இருந்து விருது பெற்ற பத்து நபர்களின் பட்டியலில் ஓர் விளையாட்டு வீராங்கனையின் பெயர் இடம் பெற்றிருந்தது. அதுவும் அவர் கூடைப்பந்து விளையாடுபவர்! பெயர்: அனிதா பால்துரை. அது மட்டுமா? தமிழ்நாட்டின் திருநெல்வேலி யைச் சேர்ந்த அவர், பதினெட்டு வருடங்கள் இந்தியப் பெண்கள் கூடைப்பந்து அணியின் கேப்டனாக இருந்திருக்கிறார். மாநில அளவிலும், தேசிய அளவிலும் முப்பதுக்கும் அதிகமான பதக்கங்கள் வென்றிருக்கிறார். கூடுதலாக சர்வதேச அளவில் நான்கு தங்கப் பதக்கங்கள்; இரண்டு வெள்ளிப் பதக்கங்கள். விருதுகளின் மணிமகுடமாக இன்று ‘பத்மஸ்ரீ’. சென்னையில் தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் விளையாட்டுப் பிரிவில் சீஃப் வெல்ஃபேர் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வரும் பத்மஸ்ரீ அனிதாவுக்கு வாழ்த்துச் சொல்லி உரையாடினோம்.

விளையாட்டுப் பின்னணி கொண்ட குடும்பத்தைச்

சேர்ந்தவரா நீங்கள்?

இல்லை. எங்களுக்குச் சொந்த ஊர் நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகில் உள்ள யாகோப்புரம் என்ற சின்ன ஊர். அப்பா பேர் பால்துரை. அம்மா பேர் லலிதா. அப்பா

சென்னையில் தலைமைக் காவலராகப் பணியாற்றியவர். காவலர் குடியிருப்பு சூழலில் வளர்ந்ததால், இயல்பாகவே விளையாட்டில் ஆர்வம் இருந்தது. ஆரம்பத்தில் தடகளப் போட்டிகளில்தான் பங்கேற்றேன். நான் படித்த பள்ளிக்கூட உடற்பயிற்சி ஆசிரியர் சம்பத் சார், என்னை அழைத்து, ‘உன்னுடைய உடல்வாகிற்குக் கூடைப்பந்து விளையாடு!’ என்று ஆலோசனை சொன்னார். கூடைப்பந்து கோர்ட்டில் பந்தை அடித்துக்கொண்டே போ, கூடைக்குள் போட்ட போது, பெரிசாக சாதித்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. அதுதான் என் வாழ்க்கையில் திருப்புமுனைத் தருணம். அதன் பிறகு, சம்பத் சார் ஒரு கூடைப்பந்து பயிற்சியாளர் என்பதால், அவரே எனக்குப் பயிற்சி அளித்தார். அப்போது நான் ஆறாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது, அவர் லேடி சிவசாமி ஸ்கூலுக்கு மாற்றலாகிப் போனார். நானும், என்னுடைய சக கூடைப்பந்து மாணவிகளும் அதே பள்ளியில் சேர்ந்து தொடர்ந்து பயிற்சி பெற்றோம்.

உங்கள் பெற்றோர், உங்களை எந்த அளவுக்கு ஊக்கப்

படுத்தினார்கள்?

‘என் அப்பாவும் சரி, அம்மாவும் சரி ‘உனக்கு எதில் விருப் பமோ அதில் முழுமையாகப் பயிற்சி எடுத்துக் கொள்!’ என்று சுதந்திரம் கொடுத்தார்கள். எங்கள் அணியின் திறமை மேம்பாட்டுக்கு சம்பத் சார் மிகவும்

உதவினார். பள்ளிகளுக்கு இடை யிலான போட்டிகளில் ஆடத் துவங்கி, பதின்மூன்று வயதில் மினி நேஷனல்ஸ் டீமில் இடம்பெற்று விளையாடினேன். ஒவ்வொரு வெற்றியும், அடுத்தடுத்த தளத்துக் குக் கொண்டு சென்றது. அடுத்து யூத் ஜூனியர், யூத் சீனியர், தொடர்ந்து இந்திய ஜூனியர் கூடைப்பந்து அணிகளில் ஆடினேன். தேசிய சீனியர் அணியிலும் இடம் பிடித்தேன். ஜூனியர் அணியில் நான் விளையாடிக்கொண்டிருந்த சமயத்தில், என் திறமையைக் கவனித்துவிட்டு, சீனியர்களுக்

கான கேம்பில் இடம்பெறச் செதார்கள். அடுத்து, அப்படியே சீனியர் அணியில் என்னைச் சேர்த்துக் கொண்டார்கள்.

பத்தொன்பது வயதில், எப்படி இந்தியக் கூடைப் பந்து அணியின் கேப்டன் ஆனீர்கள்?

இளம் வயதில், அனுபவம் நிறைந்த சீனியர் வீராங்கனைகளோடு விளையாடியது எனக்கு நல்லதொரு அனுபவத்தைக் கொடுத்தது. நிறைய புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடிந்தது. ஒன்பது சீனியர் ஆசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துகொண்டு ஆடிய முதல் இந்திய விளையாட்டு வீராங்கனை நான்தான். 2003ல், விளையாட்டுக்கான ஒதுக்கீட்டின் கீழ் எனக்கு தென்னிந்திய ரயில்வேயில் வேலையும் கிடைத்தது.

ஒரு கூடைப்பந்து வீராங்கனையாக உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு தருணம் எது?

ஆசிய சாம்பியன்ஷிப், காமன் வெல்த் விளை யாட்டுப் போட்டி என்று சர்வதேச அளவில் பல போட்டிகளில் பங்கெடுத்து, முழுத் திறமையையும் வெளிப்படுத்தினாலும், தங்கப்பதக்கம், வெள்ளிப்பதக்கம் ஜெயித்தாலும், 2011ஆம் வருஷம் சீனாவில் நடந்த ஆசிய பீச் கேம்ஸ் போட்டியில், இறுதிப் போட்டியில் சீன அணியை வென்று தங்கப்பதக்கம் பெற்றது என் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான ஒரு தருணம். அது வழக்கமான கூடைப்பந்து போட்டி போல இல்லை; அணிக்கு மூன்று பேர் தான். சீனாவில், சீன அணியை ஜெயித்து, பதக்கம் அணிந்துகொண்டு, நம் நாட்டு தேசிய கீதம்

ஒலித்த தருணம் எனக்கு ஆயுசுக்கும் மறக்காது.

கூடைப்பந்து பக்கமே வந்திருக்க வேண்டாமோ என்று எப்போதாவது நினைத்தது உண்டா?

சின்ன வயதில் நான் கூடைப்பந்து ஆடத் துவங்கியபோது, ‘விளையாடினா உடம்பு

கறுத்துப் போயிடும்! ஆம்பிளைத்தனம் வந்திடும்‘ என்றெல்லாம் சொல்லி பயமுறுத்தினார்கள். ஆனால், நான் அதற்கெல்லாம் முக்கியத்துவம் தரவில்லை. கூடைப்பந்து வீராங்கனையாக இந்திய அணியில் இடம்பெற்று, தேசிய அளவிலும்,

சர்வதேச அளவிலும் பல பதக்கங்களை வென்ற போதிலும், எனக்கென்று தனிப்பட்ட முறையில் எந்த ஒரு அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்ற வருத்தம் எனக்கு பல வருடங்களாக இருந்ததுண்டு. எட்டு ஆண்டுகளாக, தமிழக அரசும் சரி, கூடைப் பந்து சங்கமும் சரி என் பெயரைத் தொடர்ந்து

அர்ஜுனா விருதுக்குப் பரிந்துரை செதார்கள். ஆனால், எனக்கு அர்ஜுனா விருது கிடைக்கவில்லை. அப்போதெல்லாம், எனக்கு, ‘ஒரு டீம் விளையாட்டில் நாம் இருப்பதால்தான் நமக்கு தனிப்பட்ட முறையில் அங்கீகாரம் எதுவும் கிடைக்கவில்லை. ஒரு அதலெட்டாகவோ, செஸ் போன்ற தனி நபர் விளையாட்டு வீராங்கனையாக இருந்திருந்தாலோ நமக்கு எப்போதோ விருது கிடைத்திருக்கும்’ என்று பல சமயங்களில் தோன்றியதுண்டு. ஆனால், அர்ஜுனா விருதைவிட அதிகம் மதிப்புடைய பத்மஸ்ரீ விருது எனக்கு இப்போது கொடுக்கப்பட்டுள்ளது. அது என் வருத்தத்தைப் போக்கிவிட்டது.

திருமணம், குழந்தை என்ற தடைகளையெல்லாம் தாண்டி எப்படி உங்களால் தொடர்ந்து கூடைப்பந்தில் சாதிக்க முடிந்தது?

திருமணத்துக்கு முன் என் பெற்றோர்களின் ஊக்குவிப்பு, என் பயிற்சியாளர் சம்பத் சாரின் முனைப்பு இவைதான் எனக்கு உற்சாக டானிக். திருமணத்துக்குப் பின், காவல் துறையில் சி.பி.சி.ஐ.டி.யில் பணியாற்றும் என் கணவர், கார்த்திக் பிரபாகரன், அவருடைய பெற்றோர்கள், தெற்கு ரயில்வே நிர்வாகம் என எல்லோரும் எனக்கு மிகுந்த ஊக்கமளித்து வருகிறார்கள். இன்னும்

சொல்லப்போனால், எனக்கு கல்யாணம் ஆகி மூன்றாவது நாளே தேசியப் பயிற்சி முகாமுக்குப் போகவேண்டி இருந்தது. எங்களுக்கு மகன் பிறந்தபோதும், அவர்தான் ‘இன்னும் நீ சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு. தொடர்ந்து பயிற்சி செ! விளையாடு!’ என்று ஊக்கம் அளித்தார். நான் இந்திய அணியில் ஆடத் துவங்கியபோது, ஆசிய அளவில் இந்திய அணி 11வது இடத்தில் இருந்தது. நான் கேப்டன் ஆகி, தொடர்ந்து விளையாடினேன். 2017ல் ஆசிய அளவில் 5வது இடத்துக்கு வந்தது இந்தியா. அதில் எனக்கு ரொம்பப் பெருமை! தி

Post Comment

Post Comment