சிவப்புக் கம்பளம் விரித்து பெண் சிசுவை வரவேற்போம்!சா.கா.பாரதிராஜா, செங்கல்பட்டு -இன்று செதித்தாளைப் புரட்டுகிறேன். பல செதிகளுக்கு மத்தியில் ஒரு செதி கண்ணில் பட்டு மனதைச் சுண்டி இழுத்தது.

தமிழகம் முழுவதும் 54439 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. கொரோனா தாக்கம் காரண மாக அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ள தால், அங்கன்வாடி பணியாளர்கள் குழந்தைகளின் வீடுகளுக்குச் சென்று அவர்தம் எடை குறித்த கணக்கெடுப்புப் பணியை மேற்கொண்டனர். தமிழகம் முழுவதும் எடுக்கப்பட்ட கணக்கெடுப் பில், 15807 குழந்தைகள் எடை குறைவாக இருப்ப தாக ஆவில் தெரியவந்துள்ளது. 4100 குழந்தைகள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல அறிவுறுத்தப் பட்டிருக்கின்றனர். மீதமுள்ள குழந்தைகளுக்கு பால், முட்டை, கீரை போன்ற சத்தான உணவுப் பொருள் களை அளிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

* * *

குழந்தை பிறப்பிற்கான பிரசவ வலி உண்டான தும், உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு

செல்கின்றனர். (இப்பொழுதெல்லாம் விஞ்ஞானம் எப்படியாவது தாயையும் சேயையும் காப்பாற்றி விடுகிறது). பிரசவத்தின்போது, உறவினர்களுக்கு எழும் ஐயங்கள் பொதுவாக மூன்றுதான். பிறந்தது ஆணா, பெண்ணா? சுகப் பிரசவமா, சிசேரியனா? குழந்தையின் எடை என்ன? என்ற மூன்று கேள்வி களுக்கான விடைகள் அவர்களுக்கான மகிழ்ச்சியின் எல்லையைத் தீர்மானிக்கின்றன.

குடும்பங்களில் பெண்களின் கல்வித்தரம் உயர்ந்து விட்டதாக மார்தட்டிக் கொள்ளும் நாம், வீட்டில் என்னென்ன நடக்கிறது என்பதைச் சற்று உற்று நோக்க வேண்டும்.

எல்லாவற்றிலும் ‘லேடிஸ் ஃபர்ஸ்ட்’ என்று

சொல்லும் நாம், ஒரு சந்ததி பிறக்கும்போது, ஒரு உயிர் கருவறையிலிருந்து வெளி உலகிற்குத் தலைகாட்டும்போது, கேட்கும் கேள்வியில் கூட, நமது விருப்பத்தைத்தானே முதலில் வைக்கிறோம். ஆணா, பெண்ணா என்று கேட்கிறோம். ஆண் என்றால் முகம் முழுமையாக மலர்ச்சியடைவதும், அதுவே பெண் என்றால், அத்தகைய மலர்ச்சி சற்றுக் குறைந்து காணப்படுவதும் சகஜமாக உள்ளது.

பெண்ணியம் பேசும் இவ்வுலகம் அவள் பிறக்கும்போது அவளுக்காகச் சிவப்புக் கம்பளம் விரிக்கிறதா? விரித்தாலும், சற்று வருத்தத்துடனே விரிக்கிறது.

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் தனது

மனைவியை இரண்டாவது பிரசவத்திற்காக

மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

அவர்களை அங்கு சந்தித்தபோது, கேள்வி கேட்டேன். இரண்டாவது குழந்தைக்கான உங்களின் எதிர் பார்ப்பு என்ன?" அவர்களிருவரும் சிறிதும் தயங்காமல் பதில் அளித்தனர். முதல் குழந்தை ஆணாகப் பிறந்ததால், இரண்டாவது குழந்தை ஆணாகப் பிறந்தாலும் பரவாயில்லை. பெண்ணாகப் பிறந்தாலும் பரவாயில்லை" என்று.

முதல் குழந்தை ஆணாகப் பிறந்ததால், இரண்டாவது குழந்தைக்கு உடிணாடஞுணூ, ணிணூ என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர். பெண்ணாகப் பிறந்தால் மகிழ்ச்சி. ஆணாகப் பிறந்தாலும் கவலை யில்லை என்ற மனநிலையிலேயே இருந்தனர். இது அவர்களின் மனநிலை மட்டுமல்ல; பெரும்பாலான வர்களின் மனநிலையும் கூட.

இதுவே, முதல் குழந்தை பெண்ணாகப் பிறந்தால், பெற்றோரின் மனதுக்குள் சிறு கவலை தொற்றிக்கொள்கிறது. பின் நாளடைவில், அந்தக் குழந்தை தவழ, பேச ஆரம்பிக்கும்போதுதான் அந்தக் கவலை அகலும்.

எனினும் இரண்டாவது குழந்தையின் மேல், ஒட்டுமொத்த குடும்பமே எதிர்பார்க்கிறது. முதல் குழந்தை பெண்ணாகப் பிறந்ததால், இரண்டாவது குழந்தை ஆணாகப் பிறக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து விடுகிறது. கடவுளிடம் வேண்டுதல் விண்ணப்பங்களும் கொட்டி விடுகின்றன. விரதங்கள் அதிகரித்து, வரம் வேண்டி வேண்டுதல் தொடர்கிறது.

ஆணையும், பெண்ணையும் சரிசமமாகப் பார்க்கும் மனநிலை அந்தக் குழந்தை கருவிலிருக்கும் போதே வர வேண்டும். நல்ல வேளை, விஞ்ஞானம் உணர்த்தி விட்டது. பிறப்பது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அதற்கான முழு காரணம் ஆணையே சாரும். அதற்குக் காரணம் பெண்ணல்ல. ஆணின் குரோமோசோம்களே பாலினத்தை நிர்ணயிக்கின்றன.

ஆண் வாரிசு வேண்டுமென்பதற்காக, ஓர் ஆண் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் மணக்கலாம் என்ற நிலை இருந்தது. ஆனால், அதற்கு அவன்தான் காரணம் என்பதை இன்று அறிவியல் உணர்த்திவிட்டது.

மனிதர்களே! நம் எண்ணத்தில் இன்னமும் வேண்டும் மாற்றங்கள். இன்று பெண்கள் சாதிக்காத துறைகள் இல்லை.

பட்டங்கள் ஆள்வதும்

சட்டங்கள் செவதும்

பாரினில் பெண்கள்

நிகழ்த்த வந்தோம்

என்ற பாரதியின் வரிகளுக் கேற்ப, பெண்கள் ஆண்களுக்கு நிகராக அல்ல, அவர்களை விட, உயர்வாகவே உள்ளனர்.

என்னதான், நாகரிகம் வளர்ந் தாலும் இன்னமும் நமது மனநிலை மாற

வேண்டும். பிறக்கும் குழந்தை ஆணாக இருக்க வேண்டும் என்று காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, மேரி மாதா என்று நமக்குப் பிடித்த கடவுளரிடம் வேண்டுபவர்களே, நீங்கள் வேண்டுவது யாரிடமென்று சற்றே யோசி

யுங்கள்!

கர்நாடக சங்கீதம் காப்பாற்றியது!

மதுரை ராயல் டாக்கீஸார் ‘சுதர்சன்’ என்ற படம் தயாரிக்கத் திட்டமிட்டிருந்தார்கள். அதில் கதாநாயகனாக நடிக்க அந்தக் கால பிரபல நடிகர் பி.யூ. சின்னப்பாவை ஏற்பாடு செய்திருந்தார்கள். அவரைப் போலவே சொந்தக் குரலில் பாடி நடிக்கத் தெரிந்த ஒரு நடிகையை அவர்கள் தேடிக் கொண்டிருந்தபோது, மதுரையில் இருந்து எம்.எல்.வசந்தகுமாரியைச் சந்தித்துக் கதாநாயகியாக நடிக்க சம்மதிக்கச் செய்தார்கள். கதாநாயகிக்கு உரிய மேக்-அப் போட்டுக்கொண்டு கேமராவின் அருகில் வந்து நின்ற வசந்தகுமாரிக்கு வசனங்களைச் சரிவர பேசி நடிக்க முடிய வில்லை. பல ரீடேக்குகள் எடுத்தும் எதிர்பார்த்தபடி பேச வராததால் படத் திலிருந்து அவரை நீக்கிவிட்டார்கள். தன் சினிமா பிரவேசம் இப்படி ஆகிவிட்டதே என்று வசந்த குமாரி வருத்தப்படாமல் சொன்னார்: ‘சினிமாவில் நடிப்பதைவிட கர்நாடக சங்கீதம் பாடிப் புகழ் பெறவே நான் விரும்

பினேன். நல்லவேளை எனக்குச் சரியாக வசனம் பேசி நடிக்க வரவில்லை! சினிமா நடிகை ஆகாமல் கர்நாடக சங்கீதம் என்னைக் காப்பாற்றிவிட்டது" என்றார் சிரித்துக்கொண்டே.

- போளூர் ஆர். பஞ்சவர்ணம்

Post Comment

Post Comment