கலக்குதே பாரு கரும்புச் சாறு!



ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி -



* கரும்புச் சாறு அடிக்கடி சாப்பிடுவதால் உங்கள் உடலில் தீங்கு விளைவிக்கும் நச்சுகள் மற்றும் பிற தேவையில்லாத கூறுகளை நீக்கி உடலைத் தூய்மைப்படுத்துவதில் உதவுகிறது.

* உடலில் உள்ள நச்சுத்தன்மை நீங்குவதால் படிப்படியாக உங்கள் எடை குறைய வழி வகுக்கிறது.

* கரும்புச் சாறு என்பதே உடலுக்கு உடனடி ஆற்றலைத் தரும் சிறந்த ஒன்றாகும்.

* உங்களுக்கு மிகவும் தாகமாக இருந்தால் கெமிக்கல் நிறைந்த பானங்களைத் தவிர்த்து, கரும்புச் சாற்றை சாப்பிட்டுப் பாருங்கள். அது உங்களுக்குப் புத்துயிர் அளித்து உங்கள் மனநிலை யைப் புதுப்பிக்கும் தன்மை உடையது.

* அதேபோன்று விட்டமின் சி அதிகமாக

கரும்புச் சாறுகளில் காணப்படுகிறது. இது தொண்டைப் புண், வயிற்றுப்புண் குணமாக

உதவுகிறது.

* கரும்புச் சாறு என்பது வைரஸ்கள் மற்றும் பாக்டீரியா நோய்த் தொற்றுகளைத் தடுக்கக்கூடிய எதிர்ப் பொருட்களின் ஒரு வளமான மூலமாகவும் இருக்கிறது.

* அதேபோன்று உங்கள் தொண்டையில் அரிப்பு அல்லது எரிச்சல் இருப்பதுபோல் உணர்ந்தால், கரும்புச் சாற்றைத் தொடர்ந்து குடித்துவரும்போது அவை மறைந்துவிடும்.

* சிலருக்கு பற்கள் வலிமை இழந்து பற்களின் ஈறுகள் மிகுந்த சேதமடைந்து இருக்கும். இவர்கள் கரும்புச் சாறை தொடர்ந்து சாப்பிடுவதால் பற்களுக்கு வலிமை அளிக்கிறது.

* உடலில் உள்ள நீர்ச்சத்து குறை யாமல் தடுக்கிறது. இதனால் இதயம் மற்றும் நுரையீரலுக்குப் பலம் அளிக் கிறது. வயிற்றுப் புண்களைச் சரிசெய் யும். மலச்சிக்கலைப் போக்குகிறது.

* பொதுவாக உடல் எரிச்சல் என்பது மிகவும் கொடுமையான ஒன்றாகும். இதற்குக் கரும்புச் சாறுடன் தயிர் சேர்த்துச் சாப்பிடுவதன்மூலம் உடலில் ஏற்படும் எரிச்சலைச் சரிசெய்யலாம். இது உடல் சூட்டைக் குறைக்கும் குணமுடையது.

* நமது உடலின் அனைத்து இயக்கங்களையும் மூளைதான் நிர் வாகம் செய்கிறது. அந்த வகையில் கரும்புச் சாறு அருந்துவதன் மூலம் மூளையின் செயல்பாட்டை அதிகரித்து, எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள இது உதவுகிறது.

* கரும்புச் சாறில் உள்ள பொட்டாசியம் உங்கள் வயிற்றில் சமன் செய்ய உதவுவதோடு செரிமானத்துக்கும் உதவுகிறது.

* கல்லீரல் நன்கு செயல்புரிய கரும்புச் சாறு துணை புரிகிறது.

* சிறுநீர் சீராக வெளியாவதில் சிக்கல், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளவர்களுக்கு இது நல்ல தீர்வாக இருக்கும்.

* கரும்பில் உள்ள பாலிஃபீனால் என்னும் இயற்கையான வேதிப்பொருள், ரத்தத் தட்டு அணுக்கள் ஒன்றுக்கொன்று இணைந்து ஏற்படக் கூடிய ரத்த உறைவைத் தடுப்பதுடன் ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் தன்மை கொண்டுள்ளது.

* முக்கியமாக மென்கரும்பு இனிப்பாக இருந்தாலும் இதில் இருக்கும் சுக்ரோஸ் எனும் கூட்டுச் சர்க்கரை உடலில் வளர்சிதை மாற்றம் நடக்கும்பொழுது செயல்புரியும் நொதிகள் காரணமாக ரத்தத்தின் சர்க்கரை அளவை எளிதில் அதிகரிக்கிறது.

* கரும்புச் சாறை கோடையிலும் பருகலாம். எக்காலத்திற்கும் ஏற்றது. இயற்கையான சத்து நிறைந்த கரும்புச் சாறைக் குழந்தைகளுக்கும் கொடுத்துப் பழக்கினால் செயற்கை பானத்தை விரும்ப மாட்டார்கள்.

* கரும்பு என்றாலே இனிக்கும். கரும்பு சாறினால் இவ்வளவு நன்மைகள் இருக்கும்போது விடுவானேன்! தி

Post Comment

Post Comment