வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!- படங்கள் : தெய்வாருசிக்கு சில்லி சோயா:

தேவை: சோயா உருண்டைகள் - 20 , தக்காளி ப்யூரி - 1 டீஸ்பூன், இஞ்சி, பச்சைமிளகா விழுது - 1 டீஸ்பூன், கார்ன் ஃப்ளார் - 3 டீஸ்பூன், உப்பு- தேவையானது, மிளகாத் தூள் - 1 டீஸ்பூன், தக்காளி - 1, குடமிளகா - 1, சீரகம்- 1 டீஸ்பூன், உப்பு- தேவையானது, எண்ணெ- பொரிக்கத் தேவையானது.

செமுறை: ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்துக் கொதி வந்ததும் அடுப்பை

அணைத்துவிட்டு, அதில் சோயா சங்ஸ் உருண்டைகளைப் போட்டு மூடிவைக்கவும். 15 நிமிடம் கழித் துப் பார்த்தால் உருண்டைகள் பெரிதாக இருக்கும். இதைக் குளிர்ந்த நீரில் போட்டு அலம்பி, தண்ணீரை வடித்துவைக்கவும். அவற்றைப் பாதியாக நறுக்கிவைக்கவும். இதனுடன் தக்காளி ப்யூரி, இஞ்சி, பச்சை மிளகா விழுது, கார்ன் ஃப்ளார், உப்பு போட்டுப் பிசிறி வைக்கவும். அரை மணி நேரம் கழித்து, ஒரு வாணலியில் எண்ணெ விட்டு அடுப்பில் வைக்கவும். சூடானதும் கலந்து வைத்துள்ள சோயா உருண்டைகளைப் போட்டுப் பொரித்து எடுத்துத் தனியே வைக்கவும். ஒரு கடாயில் சிறிது எண்ணெ விட்டுச் சூடானவுடன் சீரகம் போட்டுப் பொரிந்தவுடன் நறுக்கி வைத்திருக்கும் குடமிளகா, தக்காளித் துண்டுகளைப் போட்டு வதக்கவும். பிறகு பொரித்து வைத்திருக்கும் சோயா உருண்டைகள், மிளகாத் தூள் போட்டு நன்கு கிளறி, 5 நிமிடம் வைத்திருந்து இறக்கி, மல்லித்தழை தூவிப் பரிமாறவும்.‘ஸ்வீட் கார்ன் குருமா’

தேவை: உதிர்த்த ஸ்வீட் கார்ன்-1 கப், வெங்காயம் -2, தக்காளி-2, பச்சைமிள கா-3, இஞ்சி பூண்டு விழுது-1ஸ்பூன், கரம் மசாலா-அரை ஸ்பூன், எண்ணெ, உப்பு-தேவைக்கு, தேங்காப்பால்-2 கப், கொத்துமல்லி-சிறிது

செமுறை: ஸ்வீட் கார்னை குக்கரில் வேகவைக்கவும்.வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாயைப் பொடியாக நறுக்கவும்.வாணலியில் எண்ணெ விட்டு, இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாயை நன்கு வதக்கவும். கரம் மசாலா, ஸ்வீட் கார்ன், உப்பு சேர்த்துக் கொதிக்கவைக்கவும். கடைசியில் தேங் காப்பால் ஊற்றி, ஒரு நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.கொத்துமல்லித்தழை தூவவும். சப்பாத்தி, பூரிக்கு ஏற்ற சுவை யான, சத்தான சைட் டிஷ் இது.

- சம்பத் ராகவன், சென்னைஆரோக்கியத்துக்கு வாழைத்தண்டு சூப்

தேவை: நறுக்கிய வாழைத்தண்டு - 1 கப், நறுக்கிய வெங்காயம் - 1/4 கப், நறுக்கிய தக்காளி -1/4 கப், கார்ன் ஃப்ளார் மாவு - 1 மேசைக்கரண்டி, மிளகுத்தூள், உப்பு - தேவையானவை, எண்ணெ - 2 தேக்கரண்டி, மல்லித் தழை - மேலே அலங்கரிக்க.

செமுறை: ஒரு வாணலியில் எண்ணெ விட்டு அடுப்பில் வைத் துச் சூடானவுடன் நறுக் கிய வெங்காயம், தக் காளி, வாழைத்தண்டைப் போட்டு 2 நிமிடங்கள் வதக்கி, அதை எடுத்து குக்கரில் போட்டு 2 கப் தண்ணீர் விட்டு மூடி அடுப்பில் வைக்கவும். 3 விசில் விட்டு எடுக்கவும். பிரஷர் போனதும் எடுத்து ஒரு வாணலியில் விட்டு அடுப்பில் வைக்கவும். இதனுடன் கார்ன் ஃப்ளார் மாவைத் தண்ணீர் விட்டுக் கரைத்து ஊற்றிக் கொதிக்கவிடவும். தீயைக் குறைத்து வைக்கவும். தேவையான உப்பு போட்டுக் கலக்கிவிடவும். மாவு நன்றாக வெந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும். கலவை கெட்டியானால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். தேவையான மிளகுப் பொடியைப் போட்டுக் கலந்து பரிமாறவும். மேலாக மல்லித்தழை/கார்ன் ஃப்ளேக்ஸ் தூவிப் பரிமாறவும்.

- ஆர். பிருந்தா இரமணி,

மதுரை

Post Comment

Post Comment