‘‘அம்மா... நான் செத்துப் போறேம்மா!’’


உலகை உலுக்கிய ஆதிகுடி சிறுவன் கண்ணீர்! கைகொடுத்த மனிதநேயம்!
எஸ்.பிரேமாவதி, சென்னை -ஆஸ்திரேலியாவின் மிகவும் பழைமையான, பூர்வகுடி இனம் அபோர்ஜினல் இனம். அந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் குவேடன் பெயில்ஸ் குடும்பத்தினர். சிறுவனான குவேடன் குள்ளமாக இருப்பதால் சக சிறுவர்களின் கிண்டலுக்கும்,

கேலிக்கும் உள்ளாகியிருக்கிறான். இதனால் மனமுடைந்துபோன குவேடன் தன் தாயிடம், நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன்" என்று கூறி, தற்கொலை செய்துகொள்ள கயிறோ, கத்தியோ கொடுங்கள் என்று கேட்டுள்ளான்.

அந்தச் சிறுவன் எப்படிப்பட்ட துயரத்தைச் சந்தித்து இருந்தால், தான் தற்கொலை செய்து கொள்வதாகக் கூறியிருப்பான். அவனது இந்த அழுகுரல் அவன் நாட்டில் மட்டுமல்ல, கண்டங்களையும் தாண்டி கடந்த வாரம் முழுவதும் கேட்டுக்கொண்டே யிருந்தது.

தன் மகன் வாழப்பிடிக்காமல் சாகப் போவதாகக் கூறி அழும் ஆறு நிமிட வீடியோவை அந்தத் தாய் சமூக ஊடகத்தில் பகிர்ந்து இருந்தார். அந்தக் காணொளியில், தினம், தினம் இப்படியான கிண்டல்களையும், கேலியையும்தான் என் மகன் எதிர்கொள்கிறான். நீங்கள் கிண்டல் செய்வதால் இதுதான் நடக்கிறது. உங்களது பிள்ளைகளிடம், குடும்பத் தினரிடம், உங்கள் நண்பர்களிடம் தயவுசெய்து சொல்லுங்கள்" என்று கண்டங்களைக் கடந்து சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக் கிறது.

இந்தக் காணொளியைக் கண்ட மக்கள், சிறு வனின் கண்ணீரைத் துடைக்க மனித நேயத்தோடு கரம் கோத்து இருக்கிறார்கள். சக மனிதன் மீதான பாசம், பரிவு, அன்பு மரணித்துவிடவில்லை என்று நிரூபித்து இருக்கிறார்கள்.

அந்தச் சிறுவனை டிஸ்னிலேண்ட் அழைத்துச் செல்வதற்காக நிதி திரட் டும் முயற்சியில் இறங்கினார் அமெரிக்க நடிகர் பிராட் வில்லியம்ஸ். பத்தாயிரம் அமெரிக்க டாலர்கள் திரட்டுவதற்கு இலக்கு வைக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது முப்பது மடங்கு அதிகமாக அதாவது ஏறத்தாழ

3 லட்சம் அமெரிக்க டாலர்கள் குவிந்துள்ளன.

அதே சிறுவனை, ஆஸ்திரேலியாவின் தேசியப் பழங்குடிகளின் ரக்பி அணி, தங்கள் அணிக்குத் தலைமை தாங்க அழைப்பு விடுத்திருந்தது. அழைப்பை ஏற்று மைதானத்திற்கு வந்த குவேடன், அங்கு மக்களின் ஆரவாரத்துடன் அணியின் கேப்டன் ஜோயல்தாம்சனின் கையைப் பிடித்தவாறு வீரர்களை வழிநடத்திச் சென்றான். பின்னர் ரக்பி பந்தைக் கையில் பிடித்தவாறு அணி வீரர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட குவேடன்,

பந்தை நடுவரிடம் கொடுத்தான். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த

குவேடனின் தாய் யாரகா, வாழ்வின் மோசமான நாளைத் தொடர்ந்து, அவன் வாழ்க்கையின் சிறந்த நாளுக்குச் சென்றுள்ளான்" என்று தெரிவித்தார்.

ரக்பி விளையாட்டு வீரர்கள் முதல் திரைப்பட நட்சத்திரங்கள் வரை பலரும் நிதி அளித்து அந்தச்

சிறுவனை உற்சாகப்படுத்தி உள்ளனர்.

Post Comment

Post Comment