தாத்தாவைக் காப்பாற்றிய கொத்துமல்லிச் சாறுமாலதி நாராயணன், சென்னை -அரவக்குறிச்சி பெரியாஸ்பத்திரி வார்டில் சஓர் கிழிந்த துணி போல் படுத்திருந்தார் தாத்தா. வயது 84. நிறைய உழைத்து மெலிந்த தேகம். கல்லீரல் பழுதாகி டாக்டர்கள் கைவிட்ட நிலையில் மரணத்தின் நாட்களை எண்ணிக்கொண்டு

ஆஸ்பத்திரியில்

படுத்திருந்தார் தாத்தா...

இனிமேல் பிழைக்க மாட்டார் என டாக்டர் சொல்லிவிட ஆம்புலன்சில் வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டார். கட்டிலில் மூச்சுவிடக்கூட சிரமப்பட்டுக் கொண்டிருந்த தாத்தாவைப் பார்க்க வந்த உறவினர் பெண் தாத்தாவின் பெண்ணிடம்... ‘என்ன சாப்பிடுகிறார்’ என்று

கேட்க, ‘கூழ்தான் கொடுக்கிறோம். சிறிதுதான் உள்ளே போகிறது. ‘

‘டாக்டர்கள் கைவிட்டு விட்டனர்... எப்படியும்

2, 3 நாட்கள்தான் உயிருடன் இருப்பார் எனச் சொல்லி விட்டனர்’ என்று பதிலளித்தார். உடனே உறவுக்காரப் பெண், நான் ஒரு யோசனை

சொல்கிறேன். இரண்டு நாட்களுக்கு வெறும் கொத்துமல்லிச் சாறு மட்டும் கொடுப்போம். அது கழிவுகளை வெளியேற்றி புது ரத்தத்தை ஊறவைக்கும். எனக்கு நம்பிக்கை உள்ளது. தாத்தா பிழைத்து விடுவார்" என்று தைரியம் சொன்னார்.

அதேபோல்

வீட்டிலேயே கொத்துமல்லிச் சாறு தயார் செய்து இரண்டு நாட்கள் சிறிது, சிறிதாக வாயில் விட்டனர். நடுவில் அவ்வப்போது பழச்சாறு.

இப்படியே இரண்டு நாட்கள் ஓடின! மூன்றாம் நாள் காலை கண்மூடி படுத்திருந்த தாத்தா ஓர் இருமலோடு விழித்துக் கொண்டார்!!!

மறுபடியும் மல்லிச்சாறு... என்ன ஆச்சர்யம் தாத்தா மெல்ல மெல்ல எழுந்து நடமாடி இப்போது தன்

வேலையைத் தானே

செய்து கொள்கிறார்!

அமிர்த பானம் தாத்தாவின் உயிரைக் காப்பாற்றியது.

கொத்துமல்லிச் சாறு செய்யும் விதம்

* நாட்டுக் கொத்துமல்லியை நன்றாக சுத்தம் செய்து சிறிது தேங்காய் சேர்த்து அரைத்து வடிகட்டி தேவை யான அளவு தண்ணீர் + நாட்டுச் சர்க்கரை சேர்த்துப் பருகலாம்.

* கொத்துமல்லிச் சாறுடன் உப்பு + எலுமிச்சைச் சாறு, மிளகு தூள் கலந்தும் அருந்தலாம்.

இதன் பயன்கள்

* தொடர்ந்து இந்தச் சாறுகளை அருந்தினால் மஞ்சள் காமாலை,

கேன்சர் போன்ற கொடிய நோய்களும் குணமாகும்!

* உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும்.

* வயிறு சம்பந்தப்பட்ட வியாதி கள் நீங்கும்.

* கல்லீரலைப் பலப்படுத்தும்.

* பித்தம் சம்பந்தப்பட்ட நோய் கள் தீரும்.

Post Comment

Post Comment