குந்தபுரம் கிராமம் ஒரு விசிட்


இருந்தும் இல்லாமலும் தெரிந்தும் தெரியாமலும்
கட்டுரை, படங்கள் : ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு -அரியலூர் மாவட்டம் திருமழபாடி அருகே குந்தபுரம் எனும் கிராமம். சுமார் நூற்றைம்பது வீடுகள் கொண்ட விவசாயக் கிராமம். நாம் அங்கு நேரில் சென்றிருந்தோம்.

ஏழு வயது முதல் பதினேழு வயது வரை உள்ள பெண்களிடம், நாம் அந்தக் கிராமத்துக்கு வந்திருப்பதன் நோக்கம் குறித்துப் பேசினோம். உடனே உற்சாகமாகிப் போனார்கள் அந்தப் பெண் குழந்தைகள். பத்துப் பதினைந்து பெண் குழந்தைகள் மிகுந்த ஆர்வத்துடன் திரண்டு வந்து விட்டனர். வட்டமடித்து அமர்ந்து ஒவ்வொருவராகக் கலந்துரையாடல் போல பேசத் தொடங்கினர். ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி மனோன்மணி, எடுத்த எடுப்பிலேயே கிராமங்களில் கழிவறை வசதிகள் குறித்து புலம்பி மட்டுமல்ல பொங்கித் தீர்த்துவிட்டாள்.

இந்த ஊர்ல நூத்தைம்பது வீடுகள் இருக்கு. இதுல கணக்கெடுத்துப் பாத்திங்கனா இருபது வீடுகள்லதான் கழிவறை வசதிகள் இருக்கு. பன்னிரண்டாயிரம் ரூபா திட்டத்துல ஏதோ கோழி கொடாப்பு சைசுல அரசாங்கமே கழிவறை கட்டித் தருது. மீதி நூத்தி முப்பது வீடுகள்ல கழிவறை வசதி இல்லவே இல்லை. அப்பிடி கழிவறை வசதி இல்லாத வீடுகள்ல எங்க வீடும் ஒண்ணு. அந்த நூத்தி முப்பது வீட்டுப் பெண்கள், ஆண்டாண்டு காலமா போயி வந்தாங்கள்ல, அதே முள்ளுக்காட்டுக்கு தான் இப்பவும் போயி வர்றோம். நைட்டு ஏமம்

சாமத்துல வயித்து வலின்னா நாங்க முள்ளுக்காட்டுப் பக்கம்தான் ஒதுங்கப் போட்டு வரணும். இதே ஊர்ல என்னோட பாட்டியம்மா அவுங்க காலத்துல, நைட்டு நேரத்துல அதே முள்ளுக்காட்டுக்குக் கையில லாந்தர் விளக்கும் இன்னொரு கையில தடிக்குச்சியுமா போட்டு வந்தாங்க. என்னோட அம்மா, கையில டார்ச் லைட்டு எடுத்துட்டுப் போட்டு வந்தாங்க. இப்ப ஆண்ட்ராட் மொபைல்ல டார்ச் லைட்டு வெளிச்சம் வெச்சிட்டு, அதே முள்ளுக்காட்டுக்கு நைட்டு நேரத்துல போட்டு வர்றேன் நானு. கையில இருந்த கருவிகள்தான் மாறியிருக்கு. ஆனா, நைட்டு நேரத் துல நாங்க அந்த முள்ளுக்காட்டுக்குப் போறது மட்டும் இன்னும் மாறவே இல்லே" என்கிறாள் மாற்றத்தை எதிர்நோக்கியுள்ள பதின்மூன்று வயது மனோன்மணி.

எங்க ஊரு பக்கத்து கிராமம். பதினேழு வயசுப் பொண்ணும் முப்பது வயசு ஆணும் லவ் பண்ணி கண்ணாலம் பண்ணிக்கிட்டாங்க. அந்தப் பொண்ணுக்குக் கல்யாண வயசு வரலேன்னு, அந்த விஷயம் போலீஸ் கம்ப்ளைன்ட் ஆடுச்சி. அந்த ஆம்பளையக் கைது பண்ணினாங்க. அரியலூர் மகிளா கோர்ட்டுல கேஸ் நடந்து, இப்ப ரெண்டு வாரத்துக்கு முன்னாடி தீர்ப்பு வந்தது. அந்த ஆளுக்கு பத்து வருஷம் ஜெயில் தண்டனை. இதெல்லாம் பார்த்தா, கல்யாண வயசுங்கறது இன்னதுன்னு ஒரு விழிப்புணர்வு இன்னும் பரவலா வரலன்னு தோணுது" எனக் கூறும் அபியின் வயது பதின்மூன்று. தனது ஐந்து வருட உண்டியல்

சேமிப்புப் பணம் மூவாயிரம், கொரோனா காலத்தில் குந்தபுரம் கிராமம் மற்றும் சுற்று வட்டாரக் கிராம மக்களுக்கு முருங்கை இலை சூப் தயாரித்துத் தருவதற்கென அன்பளிப்பாக வழங்கியவள் இந்த அபி.

அட்சயாவுக்கு வயது பத்து. இப்ப நவீனமா எவ்வளவோ வந்

துடுச்சி. எந்த இடமா இருந்தாலும் சரி, அந்த எடத்துல ஏதேனும் பெண் குழந்தைகளுக்கு மத்தவங்களாலே பிரச்னைன்னா, பெண் குழந்தைகள் பாதுகாப்புக்குன்னு ஒரு அவசர உதவி நெம்பர் இருக்கு. அதாங்க பத்து தொண் ணூத்தி எட்டு. (1098.) அந்த நெம்பருக்கு நீங்க போன் பண்ணி தகவல் சொன்னாப் போதும். காவல் துறை சார்பா உடனே நடவடிக்கை எடுக்குறாங்க. இதுல இன்னொரு விஷயம். தகவல் தந்தவங்க யாருன்னு அதை ரகசியமா வெச்சுக்குது போலீஸ். உண்மையான விஷயத்தைத் தைரியமா துணிச்சலா அந்த நெம்பருக்கு யாரா இருந்தாலும் பயப்படாம தகவல் சொல்லலாம்" என்கிறாள் அட்சயா.

நா படிக்கிறது கருப்பூர்ல இருக் குற அரசினர் மேனிலைப்பள்ளியில. நா ஏழாம் வகுப்பு படிக்கிறேன். கராத்தே மாஸ்டர் ஒருத்தர் வந்து புள்ளைங்களுக்கு ஸ்கூல்லயே கராத்தே கற்றுத் தந்து பயிற்சி வகுப்புகள் நடத்துறாரு. நா ஒரு வருசமா கராத்தே கத்துகிட்டு வர்றேன். பெண் பிள்ளைகள் தற்காப்புக் கலை கத்துக்கிறது ரொம் பவே நல்லது. தனியாளா எங்கே வேணும்னாலும் தைரியமா வெளியிலே போட்டு வரலாம்" எனச் சொல்லி கராத்தேவில் நான்கைந்து ஸ்டெப்புகள் செது காண்பிக்கிறாள் கனிஷ்கா.

கீழக்காவாட்டங்குறிச்சி அரசினர் மேனிலைப் பள்ளியின் ப்ளஸ் டூ மாணவி பவித்ரா. மாதாந்திர பீரியட் நாட்கள்ல என்னைப்போல மாணவி களுக்கெல்லாம் ரொம்பக் கஷ்டம்

சார். ஸ்கூல்ல மூணு மாசத்துக்கு

ஒரு தடவை ஒரு மாணவிக்குனு

சானிடரி நாப்கின் ஆறு பாக்கெட்தான் தர்றாங்க. ஒரு மாசத்துக்கு மூணுன்னா, மூணு மாசத்துக்கு ஒன்பது பாக்கெட் வேணுமா இல்லியா? பத்தலேங்கும்போது நாங்க கடையில காசு கொடுத்துத்தான் வாங்கிக்கிறோம். வசதி இல் லாத வீட்டுப் பொண்ணுங்க என்ன செவாங்க?" எனக் கேட்கிறார் பவித்ரா. அப்பிடி தர்றதுதான் தர்றாங்க. காட்டன் துணிகள் கொண்டு தயாரிக் கப்பட்ட சானிடரி நாப்கின்கள் வாங்கித் தரலாமா இல்லியா? இப்ப சில தனியார் தொண்டு நிறுவனங் கள், சில மகளிர் சுய உதவிக் குழுக்கள் எல்லாம் கூட இந்த காட்டன் துணி நாப்கின்கள் தயாரிக்கத் தொடங்கிட்டாங்க. அரசாங்கமே அவுங்கள்ட்ட இருந்து வாங்கி எங்களுக்குத் தர லாமே" என்று கோரிக்கை வைக்கிறார் பத்தாம் வகுப்பு படிக்கும் தீபிகா.

அந்த வட்டத்தில் இருந்து சட்டென ஒரு பொறி பறக்கிறது.

நா நாலாப்புதான் படிக்கிறேன். எனக்குத் தோணுறதைச் சொல்றேன். மேலே எங்க அக்கா மாருங்க ரெண்டு பேரு சொன்ன பிரச் னைக்கெல்லாம், ஒவ்வொரு ஸ்கூல்ல யும் பெண் குழந்தைகள் பிரச்னைக்குனு அவைகளைக் கண்காணிக்கவும் தீத்து வைக்கவும், ‘பெண் பிள்ளைகள் பாதுகாப்புக் குழு’ ஒண்ணு அமைச்சி செயல் படலாம் இல்லியா?" எனப் புதிய கோரிக்கை வைக்கிறாள் அனுஷ்கா.

பொள்ளாச்சியில் இயங்கி வரும் நாச்சிமுத்து பாலிடெக்னிக் காலேஜில் டிப்ளமோ இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி லலிதாதேவி. அந்த மாணவியின் சொந்த ஊர் கீழக் காவட்டாங்குறிச்சி கிராமம். இப்ப நாம வாழுற உலகம் ஆண்ட்ராட் போன் உலகமா மாறிப் போச்சு சார். அந்த ஆண்ட் ராட் போன்ல, பெண்கள் ஒவ் வொருவரும் ‘காவலன் குˆகு’ என்கிற செயலியை டவுன் லோட் பண்ணி சேமிச்சு வெச்சுக் கணும். அதை டவுன்லோட் பண்ணும்போது அந்தப் பெண்ணோட நெருங்கிய உறவுகள்ல பத்து நபர்களோட தொடர்பு எண்கள் மற்றும் விபரங்களை அது கேட்கும். நம்ம அம்மா அப்பா அண்ணன் தம்பி அக்கா தங்கை அப்புறம் நமக்கு முக்கியமான வங்க தொடர்பு எண்களை அதுல பதிவு செஞ்சு வெச்சிடணும். குறிப்பிட்ட காவலன் செயலியைப் பதிவு செஞ்சு வெச்சுள்ள பெண்ணுக்கு ஏதோ ஓரிடத்துல எந்தவொரு அசம்பாவிதம்னாலும் சரி, அந்தப் பொண்ணு அந்த விசயத்தைக் காவலன் செயலியில பதிவு பண்ணிட்டாப் போதும்.

அடுத்த செகண்டே பக்கத்துல உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கும், அந்தக் குறிப்பிட்ட நெருங்கிய உறவுகள் பத்து நபர்களுக்கும் அந்தத் தகவல் போச் சேர்ந்துடும். அந்தப் பெண் தன்னைத் தற்காத்துக் கொள்ளலாம்," என்கிறாள் லலிதாதேவி.

அந்தக் குக்கிராமத்தில் பெண் பிள்ளைகளில் தன்னை வெகுவாக அலங்கரித்துக் கொண்டு வந்திருந்தவள், எட்டு வயதுச் சிறுமி லோகேஸ்வரி. எண்ணெ தடவி தலை வாரி அதுவும் ரெட்டைப் பின்னல் சடையிட்டு, விழி களுக்கு மை தீட்டி, முகத்

துக்குப் பவுடர் பூசி, நெற்றியில் வண்ணப் பொட்டிட்டு, உதட்டுச் சாயம் பூசி வந்தமர்ந்தவள். அவளது அம்மா ஆசிரியை. அப்பா ராணுவம். இரண்டு ஆண்டுகளாக திருவையாறு நகரில் நடன ஆசிரியை ஒருவரிடம் பரதம் பயிற்சி பெற்று வருபவள். வட்ட மடித்து அமர்ந்திருந்த பெண் பிள்ளைகளின் மன இறுக்கம் தளர்த்திட இது போதுமே. மொபைல் போனில் மார்கழித் திங்கள் அல்லவா... மதி கொஞ்சும் நாளல்லவா?" பாடல் ஒலிக்கத் தொடங்க, சட்டென அபிநயம் பிடித்து மிக அழ காக... மிக அருமையாக ஆடத் தொடங்கி விட்டாள் அந்த எட்டு வயதுச் சிறுமி லோகேஸ்வரி. தி

Post Comment

Post Comment