ஆயிரத்தில் ஒருத்தி


ரியா பாப்பா
ராகவ்குமார் -‘அபியும் நானும்’ தொலைக்காட்சித் தொடரில் நடித்துவரும் குழந்தை ரியா மனோஜை சந் திக்க நொளம்பூரில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்றோம். பாப்பா தூங்குறா. ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க" என்கிறார் ரியா வின் தாயார். இவர் நம்முடன் பேசினார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘ஜூனியர் சூப்பர் ஸ்டார்’ என்ற நிகழ்ச்சிக்கு நேர்முகத் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. தமிழகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக் கான குழந்தைகள் கலந்துகொண்டனர். நம்ம ரியாவிற்கு வாப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அவளோட திறமையை வெளிக்

கொணர ஒரு வாப்புக்காகக் காத்

திருந்தேன். ஜீ தமிழில் பல ஆயிரம் பேரில் ஒருத்தியாக ரியா பாப்பாவும் செலக்ட் ஆனாள். தேவயானி மேடமும் பாக்யராஜ் சாரும் பாராட்டினார்கள். ‘செந்தூரப்பூவே’ சீரியலில் நடிக்க வாப்பு வந்தது. இருபத்தைந்து எபி

சொடுகள் சென்றபின்பு இப்போது ‘அபியும் நானும்’ சீரியலில் நடிக்க வாப்பு கிடைத்

துள்ளது" அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே நம்ம அபி ரியா பாப்பா ஹா அங்கிள் என்று சொல்லி அமர்கிறார்.

ஸ்கூலும் லீவு. ஷூட்டிங் இப்பதான் ஸ்டார்ட் ஆகியிருக்கு. எப்படி பொழுது போச்சு?

அங்கிள் எனக்கு உண்மையில் பொழுதே பத்தலை. டிக் டாக் வீடியோ போட்டேன். இதுக்கே நேரம் சரியா இருந்தது.

அப்ப லீவில் மொபைலும் கையுமாக இருந்திருக்க? சின்ன குழந்தைகள் மொபைல யூஸ் பண்ணலாமா?

ஐயோ அங்கிள் எனக்கு மொபைல் யூஸே பண்ணத்தெரியாது. கன்டென்ட் சொன்னவுடனே நான் போன் முன்னாடி நடிச்சுக் காண்பிப்பேன். என் அப்பா வீடியோ எடுப்பார். ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட என் அப்பாவிடம் மட்டும்தான் போன் இருக்கும்.

ஒகே குட் கேர்ள். ஸ்கூலில் உன் பெஸ்ட் ஃப்ரெண்ட் யாரு?

நான் இப்ப ஒண்ணாவது படிக்கிறேன். கொரோனா லீவில் ஸ்கூலுக்குப் போக முடியாததால புது ஃப்ரெண்ட் யாரும் கிடைக்கல.

ரொம்ப வருத்தமா சொல்றியே?

இல்லை. நாங்க இப்ப இருக்குற நொளம்பூர் வீட்டில முதலில் யாரும் என்கிட்டே ஃப்ரெண்ட் ஆகல. ‘அபியும் நானும்’ சீரியல் வர ஆரம்பித்த பிறகு ‘ஹா நீ அபியும் நானும் சீரியல்ல நடிக்கிற பாப்பாதானே?’ என்று பெரியவங்க, சின்னக் குழந்தைங்க எல்லோரும் ஃப்ரெண்ட் ஆகிட்டாங்க. இப்ப ரியான்ற என் பேரு எனக்கே மறந்து போச்சு. அபினு தான் எல்லாரும் கூப் பிடுறாங்க.

ஷூட்டிங் போனா ஸ்கூல் பாடங்கள் பாதிக் குமே?

நான் இப்ப படிக்கிற ஸ்கூல் லயும் முன்னாடி படிச்ச ஸ்கூல்

லயும் ரொம்ப சப்போர்ட் பண்ணாங்க. ஸ்கூலுக்குப் போகாத நாட்களில் உள்ள பாடத்தை வீட்டுக்கே வந்து சொல்லித் தருவாங்க.

அபி பாப்பாவுக்குப் பிடிச்ச சப்ஜெக்ட் எது?

மேத்ஸ்.

எல்லோருக்கும் வேப்பங்காயாக இருக்கும் கணக்கா பிடிக்கும்?

அதுக்கு என் அப்பாதான் காரணம். புதுவிதமா எனக்குப் புரியற மாதிரி சொல்லித்தருவார். அதனால எனக்கு மேத்ஸ் ஈசியா இருக்கு.

பிடித்த சாமி யாரு?

சா பாபா.

என்ன வேண்டிக்கிட்ட?

எல்லோரும் நல்லா இருக்கணும். எனக்கு நிறைய சான்ஸ் கிடைக்கணும். அப்பா, அம்மா, நான், யாஷி எல்லோரும் நல்லா இருக்கணும்னு வேண்டிக்கிட்டேன்.

எதிர்காலத்தில் நடிப்பா படிப்பா ?

நடிப்புதான். எதிர்காலத்தில் நயன்தாரா போல் நடிகையாக ஆச...

தங்கை யாஷிக்கு விட்டுக் கொடுப்பியா? இல்ல சண்டை போடுவியா?

அங்கிள் எனக்கு எதாவது பொம்மை வாங்கித் தந்தால் யாஷி என்னிடம் அழுது ஆர்ப் பாட்டம் பண்ணி அத வாங்கிக்குவா. முதலில் கொஞ்சம் சண்டை போட்டாலும் அப்புறம் நம்ம தங்கச்சிதானேன்னு விட்டுக் கொடுத்துடுவேன்.

ரியா உனக்கு என்ன உணவு ரொம்பப் பிடிக்கும்?

உடம்புக்கு ஆரோக்கியமான உணவு தவிர தேவையற்ற நொறுக்குத் தீனிகள் சாப்பிட எங்க ரியா பாப்பாவிற்கு ரொம்பப் பிடிக்கும் என இதற்கு ரியாவின் அம்மாவே பதில் தந்து தலையில்

செல்லமாக் கொட்டுகிறார். பத்து வயசு வரைக்

கும் நடிப்பு. பின்பு பதினெட்டு வரை படிப்பு மட்டுமே. அதற்குப் பின்பு ரியா படிப்பா, நடிப்பா என முடிவு செது கொள்ளட்டும்" என்று தீர்மானமாகக் கூறுகிறார் ரியா பாப்பாவின் அம்மா தனலஷ்மி.

Post Comment

Post Comment