இயற்கை தயாரிப்பில், அழகு பராமரிப்பு...நூர்ஜஹான், அழகுக் கலை நிபுணர் மற்றும் சித்த மருத்துவர் -இன்றைய காலகட்டத்தில் மேக்-அப் என்பது முற்றிலும் வேறு சப்ஜெக்ட். சோப், க்ரீம் (சருமத்தை மிருதுவாக்க ஒன்று, முகப்பொலிவுக்கு ஒன்று)

கண் மை இதெல்லாம் மேக்-அப் லிஸ்டில் இல்லாத அன்றாடம் உபயோகிக்கக் கூடிய

அத்தியாவசியத் தேவையாக மாறிவிட்டது. இப்படி அன்றாடம் உபயோகிக்கக்கூடிய பொருட்களை மட்டுமாவது முற்றிலும் ரசாயனம் கலக்காத இயற்கை மூலிகைகளைக் கொண்டு வீட்டிலேயே தயாரித்துப் பயன்படுத்தினால் என்ன?க்ளிசரின் சோப்

தேவை: க்ளிசரின் சோப் - 100 கிராம்,

அலோவேரா ஜெல் - 5 கிராம், தேங்காய்ப்பால் - 5 கிராம், பேப்பர் கப் - 1.

செய்முறை: சிறிதளவு சோப்பைத் துருவி எடுத்து டபுள் பாய்லரில் மெல்ட் செய்யவும். அதில் அலோவேரா ஜெல், தேங்காய்ப்பால், ஜவ்வாது போன்ற வாசனை திரவியம் ஏதேனும் சேர்த்து நன்கு கலக்கவும். இந்தக் கலவையை பேப்பர் கப்பில் ஊற்றி 2 மணி நேரம் காய வைத்து உபயோகிக்கலாம்.

தினமும் இரு வேளைகளில் இந்த சோப்பை உபயோகிக்கலாம். கருவளையம், முகப்பரு, தோல் வறட்சி போன்றவை நீங்கி, முகம் பொலிவுறும். முகத்தில் ஈரப்பதம் உண்டாகும்.மூலிகை சியக்காய் ஷாம்பூ

தேவை: சியக்காய் - 100 கிராம், வெந்தயம் - 20 கிராம், கடுக்காய் - 20 கிராம், நெல்லிக்காய் - 20 கிராம், பூந்திக்கொட்டை - 50 கிராம், தண்ணீர் - 2 லிட்டர், பன்னீர் ரோஜா - 10 இதழ்கள்.

செய்முறை: மேற்குறிப்பிட்ட பொருட்களை ஒரு இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து, காலையில் இதனை வேக வைக்கவும். நன்கு ஆறியதும் மிக்ஸியில் அரைத்து வடி

கட்டி, அந்தத் தண்ணீரை ஒரு பாட்டிலில் நிரப்பி வைத்துக் கொள்ளவும். வாரம் இரு முறை இந்தத் தண்ணீரைத் தலையில்தேத்துக் குளிக்கலாம்.

இதில் உள்ள பொருட் களின் வீரியம் இளநரையை எளிதில் போக்கும்.

ஃபேஸ் க்ரீம்

தேவை:Bees wax (வெள்ளை நிறத் தேன் மெழுகு) - 10 கிராம், க்ளிசரின் - 5 கிராம், பாதாம் ஆயில் - 2 கிராம், தேங்காய் எண்ணெய் - 2 கிராம், விட்டமின் ஆயில் - 3 கிராம், பப்பாளி + கேரட் ஜூஸ்- 10 மில்லி, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் - 70 மில்லி.

செமுறை: 70 மில்லி சுத்திகரிக்கப்பட்ட

தண்ணீரில் 10 மில்லி பப்பாளி+கேரட் ஜூஸினைக் கலந்து சுடவைக்கவும். நன்கு சூடானதும், மேற் குறிப்பிட்ட பொருட்களை இதே ஆர்டரில் ஒவ்வொன் றாகச் சேர்க்கவும். இதை நன்கு கிளறி, ஆறவிடவும். வெதுவெதுப்பான பதத்திற்கு வந்ததும், ப்ளெண்டர் கொண்டு க்ரீம் பதத்திற்கு ப்ளெண்ட் செதுகொள்ளவும். இதனைத் தயாரித்த மறுநாள் முதல் உபயோகிக்கலாம்.

இதனைத் தினமும் உபயோகித்து வர, மிருதுவான சருமம், சருமப் பொலிவு எனப் பல நல்ல மாற்றங்கள் முகத்தில் உண்டாகும்.மூலிகை ஹேர் பேக்

தேவை: மருதாணி - 100 கிராம், துளசிப் பொடி- 10 கிராம், வேப்பிலைப் பொடி - 10 கிராம், நெல்லிக் காய்ப் பொடி - 10 கிராம், கடுக் காய்ப் பொடி - 10 கிராம், நீலி அவுரிப் பொடி - 10 கிராம், கரி சாலைப் பொடி - 10 கிராம், பாதாம் ஆயில் - 10 கிராம், ஆலிவ் ஆயில் - 20 கிராம், ஆரோ வாட்டர் - 340 மில்லி.

செய்முறை: சூடான தண்ணீரில் மேற்குறிப்பிட்ட பொருட்களைக் கலந்து கொள்ளவும். பேஸ்ட் போன்ற பதத்தில் வந்ததும்,

10 சொட்டு ரோஸ்மேரி எண்ணெ கலந்து கிளறவும். இதனைத் தயார் செத மறுநாள் உபயோகிக்கலாம். தலைமுடி மற்றும் வேர் களில் நன்கு தடவி ஊற வைத்து, பின் மிகக் குறைவான அளவு ஷாம்பூ உபயோகித்துக் குளிக்கலாம். உடல் சூடு உள்ளவர்கள் 1 மணி நேரமும், மற்றவர்கள் அரை மணி நேரமும் ஊறவைக்கவும்.

உடல் சூடு, முடி உதிர்தல், பொடுகு பிரச்னை போன்ற

எண்ணற்ற பிரச்னைகளுக்கு இது ஒரு நல்ல தீர்வு. தி

Post Comment

Post Comment