தாஜ் மகோற்சவம்


விழாவும் விருந்தும்
-அற்புதமாக அலங்கரிக்கப்பட்டிருக்கும் யானைகள் சாலைகளில் வலம் வருகின்றன. அடுத்ததாக ஒட்டகங்களும் அணிவகுத்து வரு கின்றன. பார்க்கும் மக்கள் உற்சாகக் கூக் குரலிடுகிறார்கள். அந்த விலங்குகளும் இதை ரசிப்பதுபோல் அசைந்தபடி செல்கின்றன.

கூடவே ஒலிக்கும் முரசொலி மக்களின் உற்சாகத்தை உச்சத்துக்குக் கொண்டு

செல்கிறது.

கொண்டாட்டம் இதோடு முடியவில்லை. நாட்டுப்புறக் கலைஞர்களும் கைவினைக் கலைஞர்களும் கூட இந்த ஊர்வலத்தில் பங்கேற்று வருகிறார்கள். ஊர்வல வண்டிகளில் இடம்பெறும் அவர்களின் சிறப்பான கைவண் ணங்களைப் பார்த்து பார்வையாளர்கள் அசந்து நிற்கிறார்கள்.

இதெல்லாம் ஆண்டுதோறும் ஆக்ராவில் நடைபெறும் ஒரு பெரும் கொண்டாட்டத்தின் முதல் நாள் வைபவம்தான். ஆக்ராவில் தாஜ் மஹாலைப் பார்ப்பதும் ரசிப்பதும் புதிய விஷய மில்லை. ஆனால், ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 20லிருந்து 27 ஆம் தேதி வரை ஆக்ரா திருவிழாக் களமாக மாறுகிறது. காரணம் அங்கு நடைபெறும் ‘தாஜ் மகோற்சவம்’. இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து மட்டுமல்ல, வெளி நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் அப்போது ஆக்ராவில் சங்கமிப்பது வழக்கமான ஒன்றுதான்.

தாஜ்மஹாலுக்கு மிக அருகில் இருக்கும் ஷில்பகிராம் என்ற இடத்தில்தான் தாஜ் மகோற் சவம் நடைபெறுகிறது. இந்தியாவின் பலவித கலை வடிவங்கள் அந்தப் பத்து நாட்களில் அங்கே விதவிதமாக வெளிப்படுத்தப்படுகின் றன என்பதும் இந்தச் சுற்றுலா கவர்ச்சிக்குக் காரணம். உத்தரப் பிரதேசத்தில் உள்ள

சஹரன்பூரிலிருந்து அற்புதமான மர வேலைப் பாடுகள் நிறைந்த கலைப் பொருட்களை இந்த விழாவில் காணமுடியும். மொராதாபாதிலிருந்து தாமிர உலோகத்தில் உருவான கலைப் பொருட்கள் விழாவுக்கு வந்து சேரும். குர்ஜாவில் இருந்து நீலவண்ணப் பானைகள் கண்களுக்கு விருந்து படைக்கும். வாரணாசி யின் பட்டாடைகள் வலைவிரிக்கும். காஷ்மீர் மற்றும் குஜராத்திலிருந்து விதவிதமான கம்பளங்கள் வந்து சேரும். வடகிழக்கு இந்திய மாநிலங்களிலிருந்து மூங்கில் பொருள்கள் கண்கவரும் வடிவங்களில் இடம்பெறும். தமிழ்நாடு இல்லாமலா? அதன் மர மற்றும் கல் சிற்பங்கள் மனதை மயக்கும்.

மற்றொரு சுவாரசியம், அந்த அற்புதப் பொருள்களில் கணிசமானவை உருவாக்கப் படுவதை நாம் நேரடியாகவே கண்ணாரக் கண்டுகளிக்கலாம். அந்தக் கைவினைக் கலைஞர்களோடு கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளலாம், சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம், மனம் நெகிழ்ந்து பாராட்டலாம். இந்தியாவில் பல பகுதிகளில் இருந்தும் இங்கு வந்து குவியும் நடனக் கலைஞர்களின் நாடோடி நடனங்கள் ஒவ்வொரு நாளும் மேடையேறி நம்மைப் பரவசத்தில் ஆழ்த்தும்.

என்னதான் கண்களுக்கு விருந்து என்று கூறினாலும் நாவிற்கும் விருந்து இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சிதானே! அதுவும் உண்டு இவ்விழாவில். சோளே பட்டூராவிலிருந்து ஹைதராபாத் பிரியாணி வரை பலவித உணவு வகைகளை இங்கு உண்டு மகிழலாம்.

குடும்பங்கள் கூடும் குதூகலம் என்றால் ரங்க ராட்டினத்தில் இருந்து சில விளையாட்டு வேடிக்கைகளை நம் குழந்தைகள் எதிர்பார்ப் பார்கள். அவற்றிற்கும் தாஜ் மகோற்சவத்தில் இடம் உண்டு.

ஆனால், இந்த ஆண்டு டெல்லியில் அதிக அளவில் பரவியுள்ள கொரோனா காரணமாக தாஜ்மஹால் மகோற்சவத்தை ரத்து செதிருக் கிறது. அதை ஏற்பாடு செயும் இந்திய

சுற்றுலாத்துறை. விரைவில் வைரஸை வெற்றி கண்டு மேற்படி விழா குறைவின்றி நடக்கும் நாளை பொதுமக்களும் பங்கேற்கும் கலைஞர் களும் மிகவும் எதிர்பார்க்கிறார்கள். அந்த எதிர் பார்ப்பு விரைவிலேயே நிறைவேறட்டும்.

Post Comment

Post Comment