பெண் குழந்தைகளைக் கொண்டாடுவோம்உஷா ராம்கி -தமிழ் மாநிலப் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தையொட்டி, பெண் குழந்தைகளைக் கொண்டாட நினைத்தோம். ‘குட் லைஃப் சென்டர்’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம், 25 ஆண்டுகளாக, சிறுவர்கள் இல்லத்தை நடத்தி வருகிறது என்று கேள்வியுற்று அங்கு சென்றோம்.

சென்னை தாம்பரத்தில் இருக்கும் இந்த இல்லத்தில், 40 பெண் குழந்தைகள் வசித்து வருகின்றனர். நாம் அங்கு சென்ற சமயம், நிறுவனர்கள்

திரு. பாஸ்கர், திருமதி ரமாபிரபா தம்பதியினர், ரமாவின் சகோதரி, மற்றும் ஆசிரியைகள், பணியாளர்கள் என்று உற்சாகமான பட்டாளம் குழுமியது.

ஹாப்பி வெல்கம்" என்று கத்தி, கைதட்டி

சிறுமிகளின் அமர்க்களமான வரவேற்போடு உள்ளே நுழைந்தோம். ரெட்டைச் சடை, குட்டி ஃப்ராக், கபடமில்லாப் புன்னகை, வாலு குட்டீஸ், மரியாதையாகப் பழகும் பள்ளிச் சிறுமிகள்,

சல்வாரில் புன்னகைக்கும் மாணவிகள் என்று ஒரு பெண்கள் பட்டாளத்தோடு அந்த இடமே

களைகட்டியது.

அளவளாவல்: பிடித்த விஷயங்கள், மகிழ்ச்சி தரும் செயல்கள் பற்றிப் பேசினோம். பிடித்த நடிகரில் ‘தளபதி விஜ’ என்ற பெயரை நான்

சொன்னதும் அவர்களிடமிருந்து வந்த சத்தம், விஜ அவர்களுக்கே கேட்டிருக்கும். இல்லத்

தில் பெரிய திரையில் ‘மாஸ்டர்’ படம் பார்த்தாகி விட்டதாம்.

கொரோனா நேரம் கஷ்டமானது என்று

சொல்றாங்க. குட் லைஃப் சென்டர்ல ஜாலியா இருந்தோம். பொதுவா பசங்க ஸ்கூலுக்குப் போயிட்டு நல்லபடியா வரணும்னு தினமும் காத்திருப்போம். இந்த நேரத்துல, வீட்டுலயே பேசி, விளையாடி, பொழுதுபோக்கினோம்" என்று திருமதி ரமாபிரபா மகிழ்ந்தார். (அவங்கவங்க வீட்டுல ஒண்ணு ரெண்டு பசங்கள வெச்சுக்கிட்டே எப்படா ஸ்கூல் திறக்கும்னு காத்துக்கிட்டு இருக்காங்க. இவங்க என்னன்னா இத்தனை பேரோட... ஜாலியாமாம்)

ஒரு சின்ன கேம்: வெவ்வேறு மிருகங்களைப் போல் கத்தச் சொல்லி, தங்கள் இனத்தைச் சேர்ந்த மற்றவர்களைக் கண்டுபிடித்து ஒன்றாகச் சேரும் முதல் அணிக்கு வெற்றி என்றதும், பக்கம்பக்கமாக ஓடி ஆடி, ஆர்ப்பரித்து விளையாடிய காட்சி மன செல்லாம் மத்தாப்பூவாக மகிழ்ச்சி பொங்கியது.

கருத்து: பறவைகள், மிருகங்கள் இவற்றைவிட உயர்வா கடவுள் நம்மைப் படைச்சிருக்கார். உங்க திறமைகள், தனித்திறன் என்னன்னு தெரிஞ்சுகிட்டு பெரிய ஆளா வரணும். பெண்களுக்கு மரியாதை, பாதுகாப்பு, உரிமை மாதிரியான விஷயங்களுக்காகப் போராட பெரியவங்க இருக்காங்க. உங்க பொறுப்பு என்ன? சமுதாயம் உங்கள மதிக்குற மாதிரி

நடந்துக்கணும்.

சைகை விளையாட்டு: மூணு அணிகளாகப் பிரிச்சுப்போம். ஒவ்வொரு அணியிலிருந்தும் ஒருத்தர் வந்து நான் குடுக்கற திரைப்படத்தின் பேரை சைகைல உங்க அணிக்குப் புரிய வெக்கணும். யார் வரிங்க?" என்றதும் பத்து குட்டீஸ் கை தூக்க, ஐந்து சுட்டீஸ் எழுந்து ஓடியே வந்துவிட்டனர்.

நல்ல உணவு, ஆரோக்கியமான உடல்நிலை,

சுகாதாரமான இல்லம், பாஸ்கர் தம்பதியை அப்பா" அம்மா" என்று அழைக்கும் அன்பு இதெல்லாம் இருக் கும் இடத்தில் உற்சாகத்துக்குக் குறைவே இல்லை.

கருத்து: இவ்வளவு பேருக்கு நடிக்கும் திறமை இருக்குன்னு புரியுது. இந்த விளையாட்டுல

சைகைல புரிய வெக்கற மாதிரி, நிஜ வாழ்க்கை

சைகை மயமா இருந்துதுன்னா ரொம்ப கஷ்டமா இருக்கும் இல்லையா. அதனால மொழியும், வார்த்தைகளும், பேசும் சக்தியும் தந்த கடவுளுக்கு நன்றி சொல்லும் நேரத்துல, சரியான வார்த்தைகளை, சரியான நேரத்துல உபயோகிக்கணும். உதவி வேணும்னாலும், பிரச்னைன்னாலும், தப்பைத் தட்டிக் கேட்கவும் தயங்காம தைரியமா பேசணும். கெட்ட வார்த்தை பேசுறது இப்ப சகஜமா

இருக்கு. அதைத் தவிர்த்து அழகான வார்த்தைகள் பேசுங்க.

கேள்விகளை நான் கேட்க, பதில் அவர் களிடமிருந்து:

யாராவது உங்கிட்ட வந்து, ‘உங்க வீட்டுல உன்னைக் கூட்டிக்கிட்டு வரச் சொன்னாங்க. என் கூட வா’ என்று சொல்கிறார். என்ன செவீங்க?"

நான் வரமாட்டேன். தெரியாதவங்க கூட போகக்கூடாதுன்னு எங்க வீட்டுல சொல்லி

யிருக்காங்க."

நீ தனியா ராத்திரி ஏழு மணிக்கு மேல வெளியில போக வேண்டி வந்தா, என்ன பாதுகாப்பு நடவடிக்கை எடுப்ப?"

கைல மிளகாப் பொடி ஸ்ப்ரே எடுத்துக்கிட்டு போயிடுவேன்."

நாளைக்கு வேலைக்குப் போற எடத்துல ஒரு ஆண் தகாத முறைல நடந்துகிட்டா என்ன செவ?"

பேசிப் பார்ப்பேன், இல்லாட்டி வேலையை விட்டுட்டு வந்துடுவேன்."

கருத்து: தப்பு செயறவங்க அத தைரியமா செயும்போது, தப்பு செய்யாத நாம ஏன் பயந்து ஓடணும். தன்னம்பிக்கையோட நின்னு ஜெயிங்க. உங்க அலுவலகத்துல, பள்ளியில, கல்லூரியில, எங்க தப்பு நடந்தாலும், பெரியவங்ககிட்ட பேசி அவங்க உதவியை வாங்கிக்கணும். அழகான பாதையை உங்களுக்கு யாரும் தரமாட்டாங்க. உங்க பாதையை நீங்க அமைச்சுக்கணும்; நடுவில் வர தடைக்கற்களை தைரியமா விலக்கணும்."

மொழியும் வார்த்தையும்: நான் தமிழ்ல சில வார்த்தைகள் சொல்வேன், நீங்க ஆங்கிலத்துல மொழி பெயர்க்கணும்" என்று சொல்லி, இளம் பெண்களுக்குத் தேவையான ஊக்க வார்த்தைகளை விளையாட்டாக்கினோம். அத்தனைக்கும் சரியான விடைகள் கிடைத்தன.

காலையில் அழகான தொடக்கத்துக்கு புது முயற்சி: இன்னிலேர்ந்து, இந்த மூணு வாசகங்களை அடிக்கடி சொல்லிக்கங்க.

டூ ஐ கேன் பி சக்ஸஸ்ஃபுல்",

டூஐ வான்ட் டு பி ஹாப்பி",

டூஐ வில் பி குட் அண்ட் ஸ்ட்ராங்"

இவையே வெற்றி, மகிழ்ச்சி, நன்மை, தன்னம்பிக்கை என்ற நான்கிற்கான தாரக மந்திரம்.

இனிமே தினமும் காலைல நீங்க

சொல்ற இறைவணக்கத்தோட, இதையும்

சேர்த்துப்போம்" என்று சிறுமிகளிடம்

சொன்னார் ரமா.

மங்கையர் மலர் குழுமம் சார்பில்

சிறுமிகள் அனைவருக்கும் பரிசுப் பொருள்கள் தந்துவிட்டு அவர்களிடமிருந்து விடை பெற்றோம்.

திரு. பாஸ்கர் குட் லைஃப் சென்டரைத் தொடங்கும்போது, முதன்முதலில் ஒரு மாற்றுத்திறன் கொண்ட குழந்தையைக் கண் டெடுத்து வந்தார். சமூக சேவை இவருக்கு வாழ்க்கைப் பயன் ஆனது. ரமாபிரபா என்ற இளம்பெண் இதில் ஈர்க்கப்பட, பாஸ்கருடன் பணியிலும் வாழ்க்கையிலும் இணைந்தார். இன்று நூறுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இரண்டு வெவ்வேறு கட்டடங்களில் வளர்ந்து வருகிறார்கள்.

ஹாஸ்டல்னு சொன்னா பிடிக்காது, இது எங்க குடும்பம், வீடு" என்று அபிமானத்தோடு சொன்னார் ரமா. முந்நூறுக்கும் மேற்பட்ட வர்கள் இங்கு வளர்ந்து வேலையில் சேர்ந்து தங்களால் முடிந்த ஆதரவை, தங்களை வளர்த்த இடத்துக்கு, அளித்து வருகிறார்கள். பதினைந்து பேர் திருமணமாகி மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். நலம் விரும்பிகள், நல்லவர் கள் உதவியோடு சிறப்பா செயல்படுகிறோம்."

ஒரு தொண்டு நிறுவனம் மூலம் இத்

தனை பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பும்

மகிழ்ச்சியும் கிடைக்குதுன்னா, நம்ம வீட்டுல

இருக்குற சிறுமிகளுக்கும், நம்ம அன்றாட வாழ்க்கையில் நம்மைச் சுத்தியிருக்கும்

சிறுமிகளுக்கும் பாதுகாப்பும் மகிழ்ச்சியும், தருவோமா!

பயம் போச்சு!

குரு ஒருவர், இதோ இந்தத் திரவம் இருக்கிறதே, இது எத்தகைய பொருளையும் கரைத்துவிடும் தன்மை கொண்டது என்றபடி, திரவம் நிறைந்த குடுவையை எடுத்து சீடர்களின் முன் வைத்தார். சீடர்கள் அச்சத்தால் தள்ளி அமர்ந்தனர். குரு சொன்னார்.

இதை உங்கள் மேல் தெளிக்கப் போகிறேன். யார் கரையாமல் இருக்கிறார்

களோ அவர்களே சிறந்த சீடன்" என்றார். ஒருவருக்கும் தைரியமில்லை. சிறிது நேரம் கழித்து ஒரு சீடன் மட்டும் தைரியமாய் குடுவையை நோக்கி வந்தான். உனக்கு பயமில்லையா?" என குரு

கேட்டார்.

எல்லாவற்றையும் கரைத்துவிடும் இந்தத் திரவம் இந்தக் குடுவையைக் கரைக்காதது ஏன்? அப்போதே எனக்குப் பாதி பயம் போய் விட்டது. எங்கள் மீது தெளிக்கப் போவதாகச் சொன்னதும் மீதி பயமும் போய்விட்டது" என்றான் சீடன்.

எதையும் யார் சொன்னாலும், உடனே நம்பி விடாமல் ஆராய்ந்து அறியும் திறன் உள்ள அவனையே குரு முதன்மைச் சீடனாகத் தேர்வு செய்தார்.

- மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.

புரியவைத்த யுத்தம்!

வீட்டுப் பாடம் படித்துக் கொண்டிருந்த பையன் தந்தையிடம் வந்து, அப்பா, யுத்தம் எப்படி ஆரம் பிக்கும்?" என்று கேட்டான்.

அதற்கு அவர், அதுவா... வந்து பிரான்சுக்கும் அமெரிக்காவுக்கும் விரோதம் கிடையாது" என்றார்.

மனைவி, பையன் கேட்டதுக்கு நேரடியாகப் பதில் சொல்லாமே ஏன் ஏதேதோ உளறுநீங்க?" என்றாள்.

வாயை மூடு... நானா உளறுகிறேன்... அறிவு கெட்டவளே!"

யாருக்கு அறிவில்லேனு ஊருக்கே தெரியுமே... அன்னிக்கு ஆயிரம் ரூபாயைக் கோட்டை விட்டது யாரு?"

அதிகமாப் பேசினே என்ன நடக்கும் தெரியுமா?"

தட்டுமுட்டுச் சாமான்கள் பறந்தன.

உடனே குறுக்கே வந்து நின்ற மகன் கத்தினான். நிறுத்துங்கள்... நிறுத்துங்கள்... யுத்தம் எப்படி ஆரம் பிக்கிறது என்பது இப்போது எனக்குப் புரிந்துவிட்டது."

- இந்திராணி தங்கவேல், சென்னை

Post Comment

Post Comment