விருட்சங்களும் அவற்றின் தெய்விகச் சக்திகளும்மாலதி நாராயணன், சென்னை -ஆலமரம்

ஆலமரம் சிவபெருமானின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீகக் குணமுடையவை. இம்மரத்தின் கீழ் அமர்ந்து தியானம் செய்தால் எளிதில் தியானம் கைகூடும். இம்மரத்தின் விழுதுகள் ஆண்மைக் குறைவை நீக்கும்.

அரச மரம்

அரச மரம் பிரம்மாவின் அம்சமாகும். இம் மரத்திலிருந்து வரும் அதிர்வுகள் சாத்வீகக் குண முடையவை. இம்மரத்தின் கீழே தீபம் ஏற்றிவர புத்திர தோஷம் நீங்கும்.

ருத்ராக்ஷ மரம்

சிவபெருமானின் அம்சமான மரம். இதிலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீகக் குணமுடை யவை. ருத்ராக்ஷக் கொட்டையை உடலில் அணிந்துகொண்டால் ரத்தம் சுத்தமாகும். ரத்த அழுத்தம் சீராகும். மனதில் அமைதியும் உண்டாகும்.

துளசி

துளசி விஷ்ணுவின் அம்சமாகும். இதன் மற்றொரு பெயர் பிருந்தா. பிருந்தாவனம் உள்ள இடத்தில் கண்டிப்பாக விஷ்ணு குடியிருப்பார். அதனால் வீடுகளில் முற்றத்தில் துளசி மாடம் அமைக்கப்படுகிறது. துளசிக்குப் பல மருத்துவக் குணங்கள் உண்டு. இதிலிருந்து வெளிப்படும் தெய்விக அதிர்வுகள் பல நோய்களைக் குணப் படுத்தும்.

ஷர்ப்பகந்தி

இம்மரத்தின் அருகில் பாம்புகள் வராது. இம்மரத்தின் குச்சிகளை உடலில் படும்படி

வைத்துக்கொண்டால் பாம்புகள் தீண்டாது.

வேப்ப மரம்

சக்தியின் அம்சம். இம்மரத்தின் அதிர்வுகள் சாத்வீகக் குணமுடையவை. இம்மரத்தைச் சுற்றி மஞ்சள், குங்குமம் பூசி மஞ்சள் ஆடைகளைக் கட்டி மாலை சூடி மரத்தை வலம் வந்து வணங்கி வர சக்தியின் அருள் கிட்டும்.

நெல்லி மரம்

நெல்லி மரம் மகாவிஷ்ணுவின் அம்சமாகும். இம்மரத்தின் அதிர்வுகள் சாத்வீகக் குணமுடையவை. இம்மரத்தின் கீழ் தம்பதிகள் அமர்ந்து அன்னதானம் செய்தால் சகல பாவங்களும் நீங்கும்.

வில்வ மரம்

சிவபெருமானின் அம்சமான வில்வ இலை

களால் சிவனை பூஜித்தால் சகல பாவங்களும் அகலும்.

அசோக மரம்

அசோக மரம் சாத்வீக அதிர்வுகளை வெளிப் படுத்தும்.

புளிய மரம்

புளிய மரம் தீய அதிர்வுகளை வெளியேற்றும். புளிய மரத்தின் நிழல் நோய்களை உண்டாக்கும்.

மாதுளம் மரம்

மாதுளம் மரம் மகாலட்சுமியின் அம்சம். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீகக் குணமுடையவை. இம்மரத்தின் கீழே விளக்கேற்றி தம்பதிகள் வலம்வர தம்பதிகளிடையே அன்யோன்யம் ஏற்படும்.

மாமரம்

மகாலட்சுமியின் அம்சம் மாமரம். இம்மரத்தில் இருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீகக் குணமுடையவை. இதன் காரணத்தினாலேயே எல்லா பூஜைகளிலும் மாவிலை பயன்படுகிறது. துர்நாற்றம், கிருமிகளை அழிக்கும் ஆற்றல் மாவிலைக்கு உண்டு; அதனால்தான் மாவிலைத்

தோரணம் கட்டுகிறோம்.

சந்தன மரம்

சந்தன மரமும் விஷ்ணுவின் அம்சமாகும். சுப காரியங்களிலும் பூஜைகளிலும் சந்தனம் கண்டிப்பாக உபயோகிக்கிறோம். இதிலிருந்து தெய்விக அதிர்வு கள் வெளிப்படுகின்றன. இந்த அதிர்வுகள் மன அமைதியையும் சாத்வீகக் குணத்தையும் கொடுக்கும்.

அத்தி மரம்

அத்தி மரம் தத்தாத்திரேயரின் அம்சமாகும். விஷ்ணு பகவான் இதில் குடியிருப்பார். இம்

மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் அல்லது காந்த அலைகள் சாத்வீகக் குணமுடையவை. மனசாந்தியைக் கொடுக்கக்கூடியவை. இம்மரத்தின் அடியில் அமர்ந்து தியானம் செய்தால் எளிதாகக்

கைகூடும். கேட்டதில் பிடித்தது

கௌசல்யா சுப்ரஜா ராமா - ஏன் ஸ்ரீராமரை மட்டும் பாட

வேண்டும்?

விஸ்வாமித்ர மகரிஷி தாம் செய்யும் யாகங்களைப் பாதுகாக்க ஸ்ரீராம லஷ்மணர்களை தசரதனிடம் இருந்து அழைத்துச் சென்றார் என்பது யாவருக்கும் தெரியும். ஸ்ரீலஷ்மணன் ஸ்ரீராமனுக்குத் தொண்டு செய்வதே குறிக்கோள். யாகசாலை அடைந்து அன்று இரவு தர்ப்பைப் புல்லால் படுக்கை தயார் செய்து உறங்கினார். முனிவர் அதிகாலை எழுந்ததும், ராம, லஷ்மணர்களை எழுப்பும் ஸ்லோகம் இதுதான். ‘கௌசல்யா சுப்ரஜா ராமா பூர்வா சந்தியா ப்ரவர்த்ததே.’ இதில் ஏன் லஷ்மணன் பெயர் இடம்பெறவில்லை என்பதற்கான விளக்கத்தைப் பாருங்கள். லஷ்மணன் ஆதிசேஷன் அவதாரம், அதாவது வைகுண்டத்தில் பகவானுக்குப் படுக்கை யாவார்! படுக்கையை யாராவது எழுப்புவார்களா? ஆகவே, ஸ்ரீராமன் பெயரை மட்டும் விளித்து ஸ்லோகம். லஷ்மணர் தொண்டுக்காகவே இவ்வுலகில் அவதரித்தவர்!

- ஜானகி ரங்கநாதன், சென்னை

Post Comment

Post Comment