பாலினப் பாகுபாடு பெற்றோர் படுத்தும் பாடு!


மாறுவோம்!
நாகலக்ஷ்மி -பெண் சுதந்திரமா? இன்றைய தேதியில் ஆண் சுதந்திரம்தான் கேள்விக்குறியா இருக்கு!"

21ஆம் நூற்றாண்டுல இருக்கோம். இன்னுமா பெண் சுதந்திரம் பறிக்கப் பட்டிருக்குனு கொடி தூக்கிட்டு வர்றீங்க? காலம் மாறிப் போச்சுமா"

விண்ணையும் மண்ணையும் ஆளும் பெண்களைப் பார்த்தா தெரியலையா? நம்ம நாட்டுப் பெண்கள் சுதந்திரத்தைத் தாண்டி நிறையவே சாதிச்சுட்டாங்களே..."

இப்படிப் பல கருத்துகளைக் கடந்து வந்திருப்போம். இவற்றைக் கேட்கும்போது, ஆண் - பெண் பாகுபாடு இல்லாமல் சமநிலைக்கு வந்துவிட்டோம் என்ற நம்பிக்கை ஏற்படும். ஆனால், கொஞ்சம் கூர்மையாகக் கவனித்தால்தான், குழந்தை வளர்ப்பின் தொடக்கத்திலேயே இந்தப் பாகுபாட்டைத் திணிக்கிறார்கள் என்பது புலப்படும். பெற்றோர், சமூகம், ஊடகம் என்று அனைவரும்

சேர்ந்து குழந்தைகளுக்குள் ஏற்படுத்தும் பாலினப் பாகுபாடு குறித்து

மனநல மற்றும் மகப்பேறு ஆலோசகர், டீனா அபிஷேக்கிடம் பேசினோம்.குழந்தைகளுக்கும் உங்களுக்குமான தொடர்பு எப்படி?

அன்றாட வாழ்வில் தினமும் பல கர்ப்பிணிப் பெண்களைச் சந்தித்து, அவர்கள் மகப்பேறு குறித்தும், தாப்பால் கொடுப்பது குறித்தும் ஆலோசனை அளித்து வருகிறேன். இதைப் பற்றிய சரியான விழிப்புணர்வு குறித்து, பெற் றோர்களுடன் கலந்துரையாடி வருகிறேன். வளர்ந்த குழந்தைகளுக்குக் குறிப்பாக பெண் குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய ‘குட் டச் - பேட் டச்’ குறித்தும் பல விரிவுரைகள் அளித்திருக்கிறேன். ரைம்ஸ்/பாடல் மூலமாக இதுபோன்ற விஷயங்களைக் குழந்தைகள் மனதில் பதிய வைத்து வருகிறேன். ஒரு கர்ப்பிணித் தாயின் மனநிலையைப் படிப்பதன் மூலம் கருவில் உள்ள குழந்தையின் மன நிலையும் படிக்கலாம். ஸோ... வளர்ந்த குழந்தைகள் மட்டுமல்ல, கருவில் உள்ள குழந்தைகளுடனும் எனக்குத் தொடர்பு உண்டு.

ஆண் - பெண் பாகுபாடு குறித்த உங்க கருத்து?

இந்த சப்ஜெக்ட்டில் முந்தைய தலைமுறையை விட நாம் முன்னேறி விட்டோம் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், பெண்கள் முற்றிலுமாகச் சுதந்திரம் அடைந்துவிட்டார்களா என்றால், இல்லை என்பதுதான் என் கருத்து. நமக்கே தெரியாமல் நம்மில் விதைக்கப்படும் பாகுபாடுகள் எத்தனையோ...

அப்படி நமக்கே தெரியாமல் நம்மீது திணிக்கப்படும் பாகுபாடுகள் என்னென்ன?

ஒரு குழந்தைக்கு அதன் பத்து வயதுக்குள் நாம் சொல்லிக் கொடுப்பதும், தானாக கவனிக்கும் விஷயங்களும்தான் ஆழ மாகப் பதியும். நல்லதை மட்டுமே கற்றுக்கொடுத்து விதைக்க வேண்டிய இந்தக் காலகட்டத்தில்தான் பாலினப் பாகுபாட்டை மிக எளிதாக நமக்கே தெரியாமல் அவர்களுக்குள் விதைக்கின்றோம். மகப்பேறு ஆலோசனையின்போது எனக்கு ஆண் குழந்தை பிறப்பதற்கு நாங்கள் என்ன செய வேண்டு

மென்று என்னிடமே டிப்ஸ் கேட் பார்கள். இதைக் கேட்கும்போது கோபமும் வேதனையும்தான் ஏற் படும். டெலிவரி முடிந்ததும் உங் களுக்குப் பெண் குழந்தை பிறந்துள் ளது என்று சொன்னாலே, அப் பெண்ணின் குடும்பத்தினர் அனை வருக்கும் முகம் மாறுவதைப் பார்க் கலாம். கருவில் இருக்கும்போதும் சரி, பிறந்த மறுகணத்திலிருந்தும் சரி, தனக்குப் பிறந்திருப்பது ஒரு பெண் குழந்தை என்பது தெரிந்தவுடன் பெற் றோர்களின் கவலையும் பொறுப்பும் கூடுகிறது. பெண் பிள்ளையைப் பெற் றெடுத்தவுடன் அடுத்தது எப்படியாவது ஒரு ஆண் குழந்தையைத்தான் பெற் றெடுத்திட வேண்டும் என்பதில் குறி யாக இருக்கின்றனர். இதுவே ஆண் பிள்ளை என்று தெரிந்தால் இந்தப் பொறுப்பு, பயம், கவலை இது எதுவு மின்றி சந்தோஷம் நிரம்பும். ஒரு குழந்தை பிறப்பிலேயே பாகுபாடு என்ற விதை வெளிப்படையாகவே விதைக்கப்படுகிறதே?

ஆண் குழந்தைக்கு நீல நிறம்தான் பிடிக்கும். பெண் குழந்தைகள் பிங்க் நிறத்தைத்தான் விரும்பும். பெண் குழந்தைகளுக்கு பார்பி பொம்மை தான் பிடிக்கும். வீடியோ கேம்

வைத்து விளையாடுவதுதான் ஆண் பிள்ளைகள்... இப்படிப் பல வரையறை களை நமக்குள் வளர்த்து வைத்திருக் கிறோம். இந்த வரையறைகள் முற்றிலு மாக நாம் உருவாக்கியவை. நீ ஒரு பெண் நீ இப்படித்தான் இருக்க வேண் டும். இதுதான் உனக்குப் பிடிக்க வேண்டும் என்று வார்த்தைகளால்

சொல்லியும் சொல்லாமலும் அவர் களுக்குள் திணிக்கின்றோம்.

டிராக்டர், கார், லாரி போன்ற பொம்மைகள், வீடியோ கேம் என விளையாட ஆசைப்படும் பெண் குழந்தைகள் எத்தனையோ உண்டு. கிட்சன் செட் வைத்து அமைதியாக அடுக்கி விளையாட ஆசைப்படும் ஆண் குழந்தைகளும் உண்டு. எனக்கு பார்பி பொம்மை வேண்டாம், வீடியோ கேம் வேண்டுமென்று ஒரு பெண் குழந்தை கேட்டால், அதெல்லாம் ஆண்கள் விளையாடும் விளையாட்டு. உனக்கு எதுக்கு அதெல்லாம்" என்று கேட்டு அடக்கத்தான் செகிறோம். இதனால் அந்தக் குழந்தைக்கு அந்த வீடியோ கேம் மீதான ஆசையும் ஏக்கமும் இருந்துகொண்டேதான் இருக்கும். இப்படியாக, நாம் செயும் சிறு சிறு வேலைகளிலும் பாலினப் பாகுபாடு இருந்துகொண்டுதான் இருக் கிறது. நீ ஆம்பள சிங்கம்டா. நீ போ இந்த வேலையெல்லாம் செய லாமா?" என்று விளையாட்டாக நாம் சொல்லும் வரிகளால்தான், பிற்காலத்தில் தான் ஒரு ஆண் என்ற ஆதிக்கமும் அகம்பாவமும் அவனுக்குள் வளர் கிறது. இதை விதைப்பதும் நாம்தான்; உசுப்பேற்றி வளர்ப்பதும் நாம்தான்.

‘இதெல்லாம் பெண் குழந்தைகளுக் கான பண்புகள்’ என்று சமூகம் நிர்ணயிக் கும் செயல்பாடுகள் சிறுவயதிலேயே ஆண் குழந்தைகளிடம் தென்பட்டால், இவன் மூன்றாம் பாலினத்தவராக மாறி விட்டானோ என்ற அச்சமும் சந்தேகமும் பெற்றோருக்கு உடன் எழுகிறதே?

குழந்தைகள் தங்களது முதல் ஐந்து வயது வரை தனது அம்மாவையே அதிகம் நேசித்து உற்றுக் கவனிக்

கின்றனர். அதனால் அம்மாவைப் போல் நடப்பது, அம்மாவைப் போல் புடைவை உடுத்துவது, அம்மாவைப் போல் மேக்கப் போட்டுக்கொள்வது என்று தாங்கள் அதிகம் கவனிக்கும் விஷயங்களைச் செது பார்த்து விளையாடுவது சகஜம். தங்களது ஆறாவது வயதிலிருந்து பத்து வயதிற்குள் தங்கள் தந்தையை ஹீரோவாகப் பார்ப்பார்கள். அப்போது அப்பாவைக் கவனித்து அவரைப் போல் நடந்துகொள்வதும் சகஜம். இதனைப் பல பெற்றோர்கள் தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர். ஒரு ஆண் பிள்ளை தன் அம்மாவைக் கவனித்து அவர்களைப் போலவே ரியாக்ட் செதுகொள்வதைப் பார்த்து, தங்கள் பிள்ளைக்கு ஏதோ பிரச்னை என்றும், ஒருவேளை மூன்றாம் பாலினத்தவராக மாறுவதற்கு இது ஒரு அடையாளமோ என்றெல்லாம் யோசித்து பயப்படுபவர்கள் ஏராளம். குழந்தை கள், தாங்கள் அதிகம் கவனிக்கும் விஷயங்களைச் செது பார்ப் பது என்பது மிகச்சாதாரணம். இதற்கும் மூன்றாம் பாலினத்தவராக மாறுவதற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை.

இந்தச் சின்னச் சின்ன பாகுபாடுகள் எதிர்காலத்திலும் தொடர்கிறதா?

ஒரு குழந்தை என்ன படிக்க வேண்டும்? எந்த வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதும் இதே பாலினப் பாகுபாடுதான். ஒரு பெண்பிள்ளை தன் பள்ளிப் படிப்பை முடித் ததும், போலிசாக வேண்டும்; அதற்குப் படிக்கிறேன் என்று பெற்றோரிடம் கேட்டால், இதற்குக் கிடைக்கும் முதல் பதில் ஒரு பெண்ணிற்கு போலிஸ் உத்தியோகமெல்லாம் சரி வராது. உன்னால் முடியாது. அறிவியல், கணிதம் என்று ஏதாவது ஒன் றைப் படித்து முடி! நீ வேலைக்குப் போத்தான் இந்தக் குடும் பத்தைக் காப்பாத்தப் போறியா?" அப்படியே பிற்காலத்தில் வேலைக்குப் போனாலும், இப்போதைக்கு இந்தப் படிப்பு போதும்" என்று அப்பெண்ணை உதாசீனப்படுத்தி அவள் கனவை உடைக்கிறோம். ஒரு பெண்ணின் கனவு, தான் படிக்க நினைக்கும் படிப்பு, தான் பணி புரிய ஆசைப்படும் துறை என எல்லாவற்றையும் நிர்ணயிப்பது அந்தப் பெண்ணின் பெற்றோர் அல்லது இந்தச் சமூகம்தான். பெண்களுக்குத் தனக்கென்ற தனிப் பட்ட கருத்து, ஆசை, கனவு என்பது இருக்கவே கூடாது என் பதைத்தான் இந்தச் சமூகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இதெல்லாம் ஒரு விஷயமா? இதன் மூலம் என்ன பெரிதான பாதிப்பு ஏற்பட்டுவிடப் போகிறது என்று கேட்கும் பெற்றோர் கள், முதலில் மாற வேண்டும். குழந்தைகளை ஆண், பெண் எனப் பிரித்துப் பார்ப்பதற்கு முன், அவர்களை முதலில் குழந்தை யாகப் பாருங்கள். அந்தக் குழந்தையின் விருப்பம் தெரிந்து அதை நிறைவேற்றுங்கள். பாலினப் பாகுபாடுகளைத் தனிப்பட்ட விருப்பங்கள் பண்புகளுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் குழம்ப

வேண்டாமே!

Post Comment

Post Comment