சமூகக் கட்டமைப்பு செல்லாது;புதிய சிந்தனைகள் மட்டுமே தீர்வு!சல்மா -உலகப் புகழ்பெற்ற பெண்ணியவாதி

சைமன் தி பொலிவார்

என்பவர் கூற்று மிகப் பிரபலமானது...

ஆண் பிறக்கிறான். பெண்

உருவாக்கப்படுகிறாள்."

பூமியில் பெண், ஆண், மூன்றாம் பாலினம் என மூவகையான பாலினங்கள் உண்டு. ஒவ்வொரு பாலினத்தையும் ஒவ்வொரு வகையான கட்டமைப் புக்குள் இந்தச் சமூகம் நிலை நிறுத்திவிடுகிறது.

ஆண் வீரமானவன், ஆளுமைத்திறன். கொண் டவன். பெண் பலவீனமானவள், மென்மையானவள், ஆளுமைத்திறனற்றவள்... இப்படிப் பல்வேறுவிதமான கருத்தியல்களால் கட்டப்பட்டுத்தான் இந்தச் சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

சமூகம் காலம் காலமாகக் கட்டமைத்து விட்ட இந்த பிம்பங்களை ஆணும் பெண்ணும் பல காலங் களாக, மூளையில் சுமக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஒரு குழந்தை பிறந்ததுமே இந்தக் கட்டமைப்பை உருவாக்க, குடும்பமும் சமூகமும் தொடங்கி விடுகிறது.

பெண் அடக்கவொடுக்கமாக இருக்க வேண்டும், பொறுப்பாக இருக்க வேண்டும், குடும்பத்திற்கு நல்ல பெயரைப் பெற்றுத் தர வேண்டும், குடும்ப கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டும்... இப்படிப் பலவிதமான தீர்க்கமான கருத்துக்களைச்

சொல்லியே அவளது உளவியல் கட்டமைக் கப்படுகிறது. அவள் அதனை இயல்பாகவே ஏற்கும் மனநிலைக்கும் தயாராகிறாள்.

பிறகு அவள் அதற்கேற்ப தன்னைத் தகவமைத் துக் கொள்கிற நிலைக்குத் தள்ளப்படுகிறாள்.

தனக்கான உரிமைகள் மறுக்கப்படும்போது

இயல்பாகவே வரவேண்டிய கோபம் கூட வரா

மல் அவள் அதனை எதிர்த்துக் கேள்வி கேட்பதில்லை. அவளது உளவியல் தன்னைப் பலவீனமானவள், தகுதி அற்றவள் என நம்பத் துவங்குகிறது.

அவள் எவ்வளவு படித்திருந்தாலும் தன்னை வீட்டுப் பிராணியாகவே நம்பத் தொடங்குவதால், வீட்டின் பொறுப்புகளை அவள் தனது தோள்களில் ஏற்றிக்கொள்வதோடு, ஆணைச் சார்ந்து இயங்குவதை வசதியாக ஏற்றுக்கொள்கிறாள்.

அதோடு தன் உடல் சார்ந்த அதீத பயமும், வெளியில் நடக்கும் வன்முறையும் வெளி உலகிட மிருந்து ஒரு விலகலை உருவாக்கி விடுகிறது. இங்கே அவள் உடல்திறன் முடக்கப்படுகிறது.

உடைகளின் வழியேயும், அவள் தனது

அடிபணிதலைப் பறைசாற்றிக் கொள்கிற நிலைக்குத் தள்ளப்படுகிறாள்.

குடும்ப கௌரவத்தின் கட்டமைப்பை, பெண் தான் தாங்கிப்பிடிக்கக் கூடியவள் என்கிற வலுவான எண்ணமும், பெற்றோர் மீதான முழு அன்பையும் பொறுப்பையும் கொண்டவளாக ஆணைவிட, பெண்தான் எப்போதும் முன்னிறுத்தப்படுகிறாள். இது உணர்வுரீதியான பிளாக்மெயில் என்றே சொல்லலாம். அவள் இந்த உணர்வுபூர்வமான மனநிலைக்குள் சிக்கிக்கொள்வதனால் தனது திருமண வாழ்வில் கூட தனக்கான தேர்வை, விருப்பத்தை நிகழ்த்த அவள் முயல்வதில்லை.

ஆணைவிட பெண்ணுக்கு அறிவுத்திறன் குறைவு என்கிற பழமொழிகள், ஒரு பெண் தனக் கான அறிவுத்திறனை நிறுவ அனுமதிப்பதில்லை. பெண்புத்தி பின்புத்தி என்பது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு வழக்கு மொழி.

அதனாலேயே பெண்ணுக்கான அறிவார்ந்த தளத்திற்கான சூழல் உருவாக்கித்தரப்படுவதில்லை. குடும்ப அமைப்பிற்குள் பெண்களின் புத்திசாலித் தனம் உரிய மரியாதையோ அங்கீகாரமோ இல்லாமல் அர்த்தம் இழக்கும் நிலை இருக்கிறது.

அரசும் அதன் அமைப்பு களும் தங்கள் வழியே அவளுக்கான உரிமைகளைப் பாதுகாப்புகளைத் தருவதற் காக உருவாக்கும் சட்டங்கள் கூட பெரும்பாலும் பாராளு மன்றத்தில் அவளது குறைவான பிரதிநிதித்துவத்தின் வழியே விவாதிக்கப்பட்டு, சட்டங்களாக உருவாக்கப்பட்டு, வெறும் சட்டங் களாகவே நின்றுவிடுகின்றன.

சமீபத்தில் பெண்கள், பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதையும் அதற்கான கடுமையான சட்ட வரையறையையும் உருவாக்கியதை

உதாரணமாகச் சொல்லலாம்.

வரதட்சணை கேட்பதும் கொடுப்பதும் குற்றம் எனச்

சட்டம் இருக்கிறது. அதன் பயன் என்னவாக இருக்கிறது? பலன் தரக்கூடியதாக இருக்கிறதா?

பெண்களுக்கான பாலியல் வன்முறைக்கு எதிராகப் பல்வேறு சட்டங்கள் உண்டு. அவை நிஜமாகவே பெண்களைப் பாதுகாக்கிறதா என்றால், இல்லை. பாதிக்கப்பட்ட பெண் களுக்கு உடனடி நீதி கிடைக் கிறதா என்று பார்த்தோமென் றால் அங்கும் நாம் உருவாக்

கிய சட்டங்கள் தோற்றுக்

கொண்டிருப்பதைக் காண

முடிகிறது.

சமீபத்தில் பொள்ளாச்சியில் ஒரு பெண், எனக்கு சில ஆண் கள் பாலியல் தொல்லை தந் தார்கள். அவர்கள் மீது நட

வடிக்கை எடுங்கள்" என்று ஒரு புகாரை காவல்

துறையிடம் அளித்தார்.

அந்தக் காவல்துறை அதிகாரி உடனடியாக பிரஸ் மீட் வைத்து புகார் தந்த பெண்ணின் பெயர், முகவரி, கல்லூரிப் படிப்பு என அனைத்தையும் பகிரங்கமாகச் சொன்னார்.

நீதிமன்றத் தீர்ப்பானது, பாதிக்கப்பட்ட, புகார் தந்த பெண்ணின் பெயரை வெளியிடக்கூடாது என்று சொல்கிறது. ஆனால், இங்கே நீதிமன்றத் தீர்ப்பை மீறி நடந்தது. இதனால் இனி எந்த ஒரு பெண்ணும் புகாரளிக்க இயலாத சூழல், மிரட்டல் வேறு விடப்

படுகிறது.

ஆக, பெண்களைப் பாதுகாக்க, சட்டங்கள் போது

மானதாகவும் இல்லை; இருக்கும் அரசுக் கட்டமைப்

பும் சட்டங்களை முறை

யாக நடைமுறைப்படுத்

துவதுமில்லை எனும்போது, இப்போது ‘பிப்ரவரி 24, பெண்

கள் பாதுகாப்பு தினம்’ என்கிற அறிவிப்பின் மீது நம்பிக்கை ஏற்பட மறுக்

கிறது.

சமூகத்தில் பெண்ணிற்கான தடைகள் பல்வேறு வகையில் உருவாக்கப்பட்டிருந்தாலும், அனைத்திற்கும் மிக அடிப்படையாக இருப்பது சமூக உளவியல் கட்டமைப்புதான். அதுவே அத்தனை வீழ்ச்சிக்கும் பிரதானமாக இருக்கிறது.

அந்தக் கட்டமைப்பின் வேர்களை அசைத்துப் பிடுங்கி எறிவதும், புதிதான சிந்தனைகளை, மாற் றுக்கருத்துகளை, உரையாடல்களை உருவாக்கு

வதும்தான் நிஜத்தில் பெண்ணைப் பாதுகாக்க உதவுமே தவிர வேறேதுமில்லை.

அதில்லாமல் பெண்ணை சக மனுஷியாக நடத்த நமது சமூகத்திற்குக் கற்றுத்தந்தால் போதும் என நினைக்கிறேன்.

Post Comment

Post Comment